Type Here to Get Search Results !

Exodus Two 2 Bible Questions with Answers Tamil | யாத்திராகமம் இரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Two (2)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. மோசே எந்த கோத்திரத்தை சார்ந்தவன்?
அ) யூதா
ஆ) பென்யமீன்
இ) லேவி
Answer: இ) லேவி
    (யாத்திராகமம் 2:1)

02. மோசேயின் தாய் மோசேயை எத்தனை நாள் ஒளித்து வைத்தாள்?
அ) மூன்று நாள்
ஆ) மூன்று மாதம்
இ) மூன்று வருஷம்
Answer: ஆ) மூன்று மாதம்
    (யாத்திராகமம் 2:2)

03. மோசேயை அதின் தாய் எந்த பெட்டியில் வளர்த்தி, நதியோரமாய் வைத்தாள்?
அ) நாணற்பெட்டி
ஆ) சீத்திம் மரப் பெட்டி
இ) கேதுருமரப் பெட்டி
Answer: நாணற்பெட்டி
    (யாத்திராகமம் 2:3)

04. மோசேக்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி, மோசேயை தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது யார்?
அ) மோசேயின் தாய்
ஆ) பார்வோனின் குமாரத்தி
இ) மோசேயின் தமக்கை
Answer: இ) மோசேயின் தமக்கை
    (யாத்திராகமம் 2:4)

05. மோசேயை வளர்ப்பதற்காக மோசேயின் தாய்க்கு சம்பளம் கொடுத்தது யார்?
அ) பார்வோன்
ஆ) பார்வோனின் குமாரத்தி
இ) ரெகுவேல்
Answer: ஆ) பார்வோனின் குமாரத்தி
    (யாத்திராகமம் 2:9)

06. பார்வோனின் குமாரத்தி ஜலத்தினின்று எடுத்த குழந்தைக்கு என்ன பெயர் வைத்தாள்?
அ) மோசே
ஆ) ரெகுவேல்
இ) கெர்சோன்
Answer: அ) மோசே
    (யாத்திராகமம் 2:10)

07. எகிப்தியனை வெட்டி அவனை மணலிலே புதைத்துப்போட்டது யார்?
அ) மோசே
ஆ) ரெகுவேல்
இ) பார்வோன்
Answer: அ) மோசே
    (யாத்திராகமம் 2:12)

08. மோசே எகிப்தியனை கொன்று போட்டதால், மோசேயை கொலை செய்ய நினைத்தது யார்?
அ) ரெகுவேல்
ஆ) பார்வோன்
இ) கெர்சோன்
Answer: ஆ) பார்வோன்
    (யாத்திராகமம் 2:15)

09. மீதியான் தேசத்து ஆசாரியனின் குமாரத்திகள் எத்தனை பேர்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஏழு
Answer: இ) ஏழு
    (யாத்திராகமம் 2:16)

10. மீதியான் தேசத்தில் இருந்த ஆசாரியன் பெயர் என்ன?
அ) மோசே
ஆ) கொர்சோன்
இ) ரெகுவேல்
Answer: இ) ரெகுவேல்
    (யாத்திராகமம் 2:16,18)

11. ரெகுவேலின் குமாரத்திகளுக்கு துணை நின்று, அவர்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டியது யார்?
அ) மோசே
ஆ) கொர்சோன்
இ) பார்வோன்
Answer: மோசே
    (யாத்திராகமம் 2:17)

12. "நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன" என்று கேட்டது யார்?
அ) மோசே
ஆ) ரெகுவேல்
இ) பார்வோன்
Answer: இ) ரெகுவேல்
    (யாத்திராகமம் 2:18)

13. சிப்போராள் யாருடைய மனைவி?
அ) மோசே
ஆ) பார்வோன்
இ) ஆரோன்
Answer: அ) மோசே
    (யாத்திராகமம் 2:21)

14. நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி மோசே தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
அ) ஆரோன்
ஆ) கெர்சோன்
இ) ரெகுவேல்
Answer: ஆ) கெர்சோன்
    (யாத்திராகமம் 2:22)

15. இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சைக் கண்டு தேவன் யாரோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்?
அ) ஆபிரகாம்
ஆ) ஈசாக்கு
இ) யாக்கோபு
Answer: அ) ஆபிரகாம் ஆ) ஈசாக்கு இ) யாக்கோபு
    (யாத்திராகமம் 2:24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.