Type Here to Get Search Results !

Exodus One 1 Bible Questions & Answers | யாத்திராகமம் 1 கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter One (1)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============


01. யாக்கோபுடனே எகிப்துக்கு போன யாக்கோபின் குமாரர் எத்தனை பேர்?
A) பத்து
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: B) பதினொன்று
    (யாத்திராகமம் 1:1-4)

02. எகிப்துக்கு போன யாக்கோபின் கர்ப்பப்பிறப்புகள் மொத்தம் எத்தனை பேர்?
A) முப்பது
B) ஐம்பது
C) எழுபது
Answer: C) எழுபது
    (யாத்திராகமம் 1:5)

03. எகிப்தியரை பார்க்கிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாயிருந்தது யார்?
A) ஏதோமியர்
B) இஸ்ரவேல் புத்திரர்
C) கானானியர்
Answer: B) இஸ்ரவேல் புத்திரர்
    (யாத்திராகமம் 1:9)

04. இஸ்ரவேல் புத்திரரை சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு அவர்கள் மேல் யாரை வைத்தார்கள்?
A) போர்ச்சேவகர்
B) விசாரணைக்காரர்
C) படைத் தலைவன்
Answer: B) விசாரணைக்காரர்
    (யாத்திராகமம் 1:11)

05. பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலை பட்டணங்களை யாருக்காக கட்டப்பட்டது?
A) யோசேப்பு
B) இஸ்ரவேல் புத்திரர்
C) பார்வோன்
Answer: C) பார்வோன்
    (யாத்திராகமம் 1:11)

06. எவ்வளவு ஒடுக்கினாலும் அவ்வளவாய் பலுகிப் பெருகியது யார்?
A) எகிப்தியர்
B) இஸ்ரவேல் புத்திரர்
C) எமோரியர்
Answer: B) இஸ்ரவேல் புத்திரர்
    (யாத்திராகமம் 1:12)

07. இஸ்ரவேல் புத்திரரை எகிப்தியர் என்ன வேலை செய்ய வைத்தார்கள்?
A) சாந்து செய்யும் வேலை
B) செங்கல் செய்யும் வேலை
C) வயலில் செய்யும் வேலை
Answer: A) சாந்து செய்யும் வேலை
    B) செங்கல் செய்யும் வேலை
    C) வயலில் செய்யும் வேலை
    (யாத்திராகமம் 1:14)

08. எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரருக்கு எதை கசப்பாக்கினார்கள்?
A) ஜீவன்
B) தண்ணீர்
C) அப்பம்
Answer: A) ஜீவன்
    (யாத்திராகமம் 1:14)

09. எபிரெய மருத்துவச்சிகளின் பெயர் என்ன?
A) பூவாள்
B) சிப்பிராள்
C) அன்னாள்
Answer: A) பூவாள்
    B) சிப்பிராள்
    (யாத்திராகமம் 1:15)

10. சிப்பிராள், பூவாளிடம் அழைத்து எபிரெய ஆண் குழந்தைகளை கொலை செய்ய சொன்னது யார்?
A) மோசே
B) விசாரணைக்காரன்
C) எகிப்தின் ராஜா
Answer: C) எகிப்தின் ராஜா
    (யாத்திராகமம் 1:15,16)

11. சிப்பிராள், பூவாய் யாருக்கு பயந்து இருந்தார்கள்?
A) மோசே
B) எகிப்தின் ராஜா
C) தேவன்
Answer: C) தேவன்
    (யாத்திராகமம் 1:17)

12. "நீங்கள் ஆண் பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன?" என்று யார்? யாரிடம் கேட்டது?
A) மோசே - மருத்துவச்சிகள்
B) விசாரணைக்காரன் - மருத்துவச்சிகள்
C) எகிப்தின் ராஜா - மருத்துச்சிகள்
Answer: C) எகிப்தின் ராஜா - மருத்துவச்சிகள்
    (யாத்திராகமம் 1:18)

13. எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளை போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள் என்றது யார்?
A) மோசே
B) எகிப்தின் ராஜா
C) மருத்துவச்சிகள்
Answer: C) மருத்துவச்சிகள்
    (யாத்திராகமம் 1: 19)

14. எபிரெய மருத்துவச்சிகளின் குடும்பங்களை தழைக்கும்படி செய்தது யார்?
A) தேவன்
B) எகிப்தின் ராஜா
C) மோசே
Answer: A) தேவன்
    (யாத்திராகமம் 1:21)

15. எபிரெயரில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட கட்டளை பிறப்பித்தது யார்?
A) தேவன்
B) பார்வோன்
C) மோசே
Answer: B) பார்வோன்
    (யாத்திராகமம் 1:22)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.