Type Here to Get Search Results !

கடை நாணய ஐக்கியத்தின் கூட்டு வழிபாட்டு முறை - 2023 | last coin order of service tamil | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
ஆலடிபட்டி குருசேகரம்
கடை நாணய ஐக்கியத்தின் கூட்டு வழிபாட்டு முறை - 2023


1. ஆரம்ப ஜெபம்:

2. ஆரம்ப பாடல்:

3. ஆராதனை முறை
ஆராதனை நடத்துபவர்: அன்புள்ள படைப்பாளரே, மழையை அனுப்புவதன் மூலம் நீர் பூமியைப் பராமரித்து அதைச் செழிப்புள்ளதாக்கி, நல்ல வளமான விளைச்சலைத் தருகிறீர். தேவரீர் அருளும் விளைச்சல் எத்தனை அருமையானது!

சபையார்: உம்முடைய படைப்புகள் அனைத்தும் களிகூறுகின்றன. நிலத்தைப் பண்படுத்தி, விதைத்து அதன் பலனை அறுவடை செய்யும்போது, உம்முடைய படைப்புகள் அனைத்தும் மகிழ்ந்து பாடுகின்றன.

ஆராதனை நடத்துபவர்: நீரோடைகளையும், ஆறுகளையும் தூய்மையாகப் பாதுகாக்கும்போதும், ஏரிகள் மற்றும் கடல்களின் தூய்மையைப் பேணும்போதும்.

சபையார்: உம்முடைய படைப்புகள் அனைத்தும் மகிழ்ந்து பாடுகின்றன.

ஆராதனை நடத்துபவர்: நிலம் மற்றும் நீர்ப்பரப்புகளைப் பாதுகாப்பது தங்கள் கடமையென உணர்ந்து, சகோதர சகோதரிகளாக நாம் ஒரு குடும்பம் என்று அடையாளம் கண்டு கொள்ளும்போது.

சபையார்: எங்கள் வாழ்நாளெல்லாம் எங்களை ஆசீர்வதித்து வந்தபடியால் உம்முடைய படைப்புகள் அனைத்தும் மகிழ்ந்து பாடுகின்றன.

ஆராதனை நடத்துபவர்: எங்களுடைய வாழ்நாள் முழுவதும் தேவரீர் எங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து வருவதை நினைக்கும்போது.

சபையார்: உம்முடைய படைப்புகள் அனைத்தும் மகிழ்ந்து களிகூறுகின்றன்.


4. தற்கால பூமியின் நிலைப் பற்றி சில குறிப்புகள்


5. ஜெபம் பண்ணக்கடவோம்:
ஆராதனை நடத்துபவர்: நமது காடுகளைத் தீயிட்டுக் கொளுத்துவதின் மூலம் உயிரினங்களை நாம் அழிக்கிறோம். புகையினால் தூய்மையான நீர்நிலைகளை நச்சுத்தன்மையுடையதாக்குவதுடன், நம் பிள்ளைகளைக் கழிவுநீரைப் பயன்படுத்தச் செய்கிறோம். நச்சுத் தன்மையையும், தொற்று வியாதிகளையும் கொண்டு வரும் கிருமிகளையும் சுதந்தரிக்கும்படி செய்து நம் சந்ததியினரையும் அழிவுக்கு நேராக நடத்துகின்றோம்.

சபையார்: கர்த்தாவே, எங்கள்மேல்கிருபையாயிரும்.

ஆராதனை நடத்துபவர்: கர்த்தாவே, இயற்கைப் பேரழிவுகளை அலட்சியம் செய்வதன் மூலம் உம்மையே அலட்சியம் செய்கிறோம். இயற்கையை சீராகப் பராமரிக்காத குற்றத்திற்காக நாங்கள் மனம் வருந்துகிறோம்.

சபையார்: நாங்கள் உம்முடைய திருச்சபையாகிய சரீரத்தின் அங்கங்களாக இருந்தபோதிலும், இயற்கையின் பாதுகாப்பை நோக்காது, எங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்தால் போதுமென்ற தன்னலநோக்கோடு, பர நேரங்களில் அமைதி காக்கிறோம். கர்த்தாவே, எல்லா உயிரினங்களுக்கும் நீதியும் மெய்யான பாதுகாப்பும் கிடைக்கும் இடமான புதிய வானமும், புதிய பூமியும் உருவாக்க காத்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் மீது கிருபையாயிரும்.


6. வேதபாடம்:
பழைய ஏற்பாடு : ஆதியாகமம் 2:1-17
நிரூபபப்பாடம் : ரோமர் 8:18-25
நற்செய்தி வாக்கியம் : மத்தேயு 13:44-55

சங்கீதம் 37:1-24


7. அப்போஸ்தலர் விசுவாச பிரமாணம்:
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன்.

அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டுப் பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறோம். ஆமென்.


8. சிறப்புப் பாடல்:

9. அருளுரை: பூமியை பராமரிப்பது…. நமது அழைப்பு”

10. அறிவிப்புகள்:

11. காணிக்கை பாடல்:

12. காணிக்கை ஜெபம்:


13. கடைநாணய ஐக்கியத்தின் வரலாற்றைப் பகிர்தல்:
கடை நாணய ஐக்கிய வரலாறு
கடைநாணய ஐக்கியம் என்பது நீதி, சமாதானம், ஒப்புரவாகுதல் என்பவைகளுக்காக செய்யும் விண்ணப்பத்தை வலியுறுத்தும் ஒருமைப்பாட்டின் இயக்கமாகும்.

இந்தியாவைச் சேர்ந்த சகோதரி சாந்தி சாலமோன் அவர்களுக்குக் கர்த்தர் அருளின தரிசனத்தால் உருவானதுதான் இந்த கடை நாணய ஐக்கியம். இரண்டவாது உலகப்போருக்குப் பின்னர் செப்டம்பர் 1956-ல வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏழு பெண்கள் கொண்ட “பசுபிக் மிஷன் குழு“ என்ற பெண்கள் குழு ஆசியாவின் பல நாடுகளில் பயணித்து பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிராஸ்பிட்டேரியன் திருச்சபையின் சார்பாக டாக்டர். மார்கிரெட் ஷெனன் அம்மையாரால் இப்பணி துவக்கப்பட்டது. இக்குழுவில் ஒருவரான நமது சாந்தி சாலமோன் அம்மையாருக்கு கொரியா நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே குழுவின் பிற உருப்பினர் கொரியா செல்ல, திருமதி சாந்தி சாலமோன் மட்டும் தனித்து பலிப்பைன்ஸ் நாட்டில் தங்கிவிட்டார்கள். அங்கு இருக்கும்போது இர்ணடு காரியங்களை குறித்து சிந்தித்தார்கள்.

1. பிளவுப்பட்ட இந்த உலகில் ஒப்புரவாகுதலின் அவசியம்.
2. வீட்டை விட்டு வெளியேறாத பெண்களுக்கும், அகில உலக ஐக்கியத்தில் பங்கு பெறும் உணர்வு
இச்சிந்தனைகளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் பெண்களோடு இரண்டு காசு காணிக்கை போட்ட விதவையை பற்றி தியானிக்கையில் எழுந்த கருத்துச் சிந்தனைதான் ”கடைநாய ஐக்கியம்“.

அவர்கள் குழுவினர் மீண்டும் அவர்களுடன் வந்து சேர்ந்தபோது, ஜெபம் மட்டுமே நாட்டின் எல்லைகளையும் தாண்டி மாற்றத்தைதக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்தினார்கள். ஆசியாவின் பெண்களுக்கும் அமெரிக்க பிராஸ்பிடீரியன் திருச்சபை பெண்களுக்கும் ஒரு சவாலாக அவர்கள் செய்தி அமைந்தது. நீதி, சமாதானம், ஒப்புரவாகுதல் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஊழியம் பெண்களின் முயற்சியால்,, அவர்களாலேயே உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்கள். அது ஒரு கிறிஸ்தவ ஜெபத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பெண்ணும் இணைந்து செயல்படக்கூடிய ஒரு திட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பொருளாதார நிலையில் வேறுபட்ட எத்தரப்பினரும் இத்திட்டத்தில் இணையவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போதும், தங்கள் நாட்டுப் பணத்தில் சிறிய நாணம் எதுவோ (Least Coin) அதை தனியாக ஒரு உண்டியலில் சேர்க்க வேண்டும். நாடு, இனம், மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி, கிறிஸ்தவ விசுவாசத்தில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த, இந்த திட்டம் ஊக்குவிக்கும் என்று நம்பினார்கள். அவர்கள் அருட்பணி குழுவின் அங்கத்தினர் யாவரும் இக்கருத்தை முழுமனதுடன் அங்கீகரித்தனர்.

கடை நாணய ஐக்கியம், அது துவங்கப்பட்ட ஆசிய கண்டத்தில் மட்டுமல்ல, உலகமனைத்தும் எல்லா கண்டங்களிலுள்ள பெண்களால் அங்கீகரிக்கப்பட்டது. 1966-ல் கடை நாணய ஐக்கியத்தின் பத்தாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டபோது, 24 நாடுகளின் பெண்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1980-ல் வெள்ளி விழா அனுசரிக்கப்பட்ட போது 75 நாடுகள் இந்த ஐக்கியத்தில் இணைந்திருந்தனர். 1980-ல் 80 நாடுகளின் பெண்கள் இணைந்து 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாடினர். 2006-ல் 50வது ஆண்டை ”ஆரம்பத்தை நினைவுகூர்ந்து, வரும்கால தரிசனத்தோடு, ஜுபிலியை கொண்டாடுகிறோம்“ என்ற தலைப்பில் அனுசரித்தோம். அடுத்துவரும் 50 ஆண்டுகளில் ”புவியைப் பாதுகாப்பது…. நமது அழைப்பு“ என்ற பொறுப்பை உணர்ந்து செயற்பட்டு வருகிறோம். இந்த ஆண்டிலும், “எங்ககளைச் சீர்படுத்தும், எங்கள் புவியைச் சீர்படுத்தும்“ என்ற கருப்பொருளில் ஆசரிக்கிறோம்.


14. மன்றாட்டு ஜெபம்
ஆராதனை நடத்துபவர்: ஆளுகையின் தேவனே, அனைத்து மக்களின் தேவனே!

சபையார்: எல்லா உயிரினங்களின் ஜீவன் நீரே; புவியை நிரப்பும் ஆற்றல் நீரே; உயிரினங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் மூலமும் நீரே.

ஆராதனை நடத்துபவர்: காயப்பட்டவை அல்லது உடைக்கப்பட்டவை எதுவாயினும் அவற்றைச் சீர்படுத்தும் உந்துசக்தி நீரே!

சபையார்: படைப்புகள் அனைத்தும் விடுதலையாக்கக் கூடிய சரியான பாதையை உம்மிலே கண்டுகொள்கிறோம். புவி முழுவதும் பாடுகிற ஆனந்தப் பாடலும், இப்பொதும் எப்பொழுதும் விடுதலையளிக்கும் உத்தரவாதமும் நீரே! ஆமென்.


15. அர்ப்பணிப்பிற்கு அழைப்பு:
ஆராதனை நடத்துபவர்: நாம் இயேசு கிறிஸ்துவின் உறவுகளாக கடவுளின் நல்வரங்களைப் பெற்றிருக்கிறோம்.

சபையார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நடைமுறைப்படுத்தும்படியாக உலகிற்கு உப்பாக வாழவும், நீதி நியாத்தைத் தேடவும், சமாதானத்தை உண்டுபண்ணவும், இயற்கையைப் பாதுகாக்கவும், ஜீவனைக் கண்டடையவும், நம்முடைய வீட்டிற்கும், அயலகத்தாரிடத்திற்கும், பணியிடங்களுக்கும் புறப்பட்டுச் செல்கிறோம்.

ஆராதனை நடத்துபவர்: அன்புள்ள ஆண்டவரே, எங்கள் வாழ்நாளில் நாங்கள் கடினமான பகுதிகளைக் கடந்து வந்து புதிதாக்கப்படவும், சரியான வழியை அறிந்து கொள்ளவும் ஜெபிக்கிறோம்.

சபையார்: எங்கள் வாழ்நாளில் விசாலமான பாதையை அமைக்க முயன்று, நாங்கள் நடக்க வேண்டிய பாதையைத் தொலைத்துவிட்டோம்.

ஆராதனை நடத்துபவர்: ஆண்டவரே, எங்களுக்குரிய பாதையிலே எங்களை வழிநடத்தும்.

சபையார்: இயற்கையின் வேகத்திற்கேற்ப நாங்கள் எளிமையாக நடந்து புவியின் அன்பை எங்கள் நடையில் உணரத்தக்கதான இடத்திற்கு எங்களை நடத்தும்.

ஆராதனை நடத்துபவர்: எங்கள் இதயங்களில் படைப்பின் இயக்கத்தை உணரும்படியாய் படிப்படியாக எங்களை நடத்தும்.

சபையார்: நாங்கள் பயணிக்கும் பாதையில் இயற்கையின் அரவணைப்பை உணரக்கூடிய இடத்திற்கு நேராய் எங்களை நடத்தும்.

ஆராதனை நடத்துபவர்: ஆண்டவரே, எங்கள் வாழ்க்கை பயணத்தில், எங்களை மகிழ்சி நிறைந்த பொதுவான பாதையில் வழிநடத்தும்.

சபையார்: கடவுளின் அனைத்துப் படைப்புகளோடும் கொண்டுள்ள உறவில் புதிய வழிகளை அறிவதையும், புதிய வாழ்வை வாழ்வதையும் கற்றுக் கொள்வோம். தற்போது நமக்கு இருக்கின்ற ஒரே வாசஸ்தலமான இந்த பூமியைப் பராமரிப்பதும், மீட்டெடுப்பதும் மட்டுமே நமது ஒரே அழைப்பு. கடவுளின் படைப்பு அனைத்திற்கும், நம் ஒவ்வொருவருக்கும் இடையேயும் நாம் கிறிஸ்துவாக வாழ வேண்டும் என்பதைக் காட்டிய இயேசுவின் நாமத்தில், ஆமென்.

எல்லாரும்: நன்றி ஆண்டவரே. ஆமென்.

16. நிறைவு ஜெபமும், ஆசீர்வாதமும்

17. நிறைவு பாடல்:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.