தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்
செம்டம்பர் கன்வெஷன்
பாடல் போட்டி பாடல்கள்
ஒப்படைத்தலின் ஆண்டு – 2024
தலைப்பு: இறை உறவுக்கு ஒப்படைப்பு
ஆலடிபட்டி குருசேகரம்
என்னையே உமக்காக படைக்கிறேன்
உறவில் கலந்து
உறையினில் உறைந்து
உணர்வென எழுந்து
உயிரோடு இணைந்து
உறையினில் உறைந்து
உணர்வென எழுந்து
உயிரோடு இணைந்து
– இறைவா
1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன் – உடை
இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன்
விழுந்தவரை தூக்கிடுவேன் – இங்கு
நலிந்தவரின் கரம் பிடிப்பேன்
இதுவே நின்மறை உறவன்றோ
– இறைவா
2. உள்ளதை கொடுப்பதில் இன்பம் என்ன – உன்
உள்ளத்தை கொடுப்பதே இன்பம் என்றீர்
பலியை அல்ல இரக்கத்தையே – என்னில்
விரும்புகின்ற இறை உறவே
உம்மைப்போல நானும் உருவாகிட
இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன்
விழுந்தவரை தூக்கிடுவேன் – இங்கு
நலிந்தவரின் கரம் பிடிப்பேன்
இதுவே நின்மறை உறவன்றோ
– இறைவா
2. உள்ளதை கொடுப்பதில் இன்பம் என்ன – உன்
உள்ளத்தை கொடுப்பதே இன்பம் என்றீர்
பலியை அல்ல இரக்கத்தையே – என்னில்
விரும்புகின்ற இறை உறவே
உம்மைப்போல நானும் உருவாகிட
- இறைவா
===============
Lyrics: Dr. G. David (Ph.d Tamil)
Original Song:
Original Song:
ஒப்படைத்தலின் ஆண்டு – 2024
தலைப்பு: இறை உறவுக்கு ஒப்படைப்பு
காரியாபட்டி குருசேகரம்
ஒப்படைப்போம் இயேசுவுக்காகநம்ம (எங்க) சி.எஸ்.ஐ மாநாட்டிலே (2)
நம் வாழ்வை ஒப்புவித்தால்
நம் (இயேசு) காரியங்கள் வாய்க்கச் செய்வார் (2)
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி
நாங்க செய்வோம் எப்போதும் நீதி (2)
ஒப்படைப்போம் ஐயா
ஒப்படைப்போம் அம்மா
ஒப்படைப்போம் இயேசுவுக்காக
நம்ம சி.எஸ்.ஐ மாநாட்டிலே
1. நம் அவயம் உபயோகிக்க
தம் அவயம் தந்து மீட்டார் (2)
உச்சிதங்களை அவருக்குக் கொடுத்தால்
உன்னதருடன் என்றும் வாழலாம் (2)
ஒப்படைப்போம் இயேசுவுக்காக
நம்ம சி.எஸ்.ஐ மாநாட்டிலே
2. நன்மை செய்வோம் ஒப்புரவாவோம்
அருட்பணிக்காய் அர்ப்பணிப்போம் (2)
ஆன்ம அருவடை நமது இலட்சியம்
அழியா ஜீவன் நமக்கு நிச்சயம் (2)
ஒப்படைப்போம் ஐயா
ஒப்படைப்போம் அம்மா
ஒப்படைப்போம் இயேசுவுக்காக
நம்ம (எங்க) சி.எஸ்.ஐ மாநாட்டிலே (2)
===============
Lyrics: Dr. G. David (Ph.d Tamil)
Original Song: Had of God என் மேல
Original Song: Had of God என் மேல
நிலைத்திருங்கள் - 2023
ஆலடிபட்டி குருசேகரம்
நிலைத்திட அழைத்திடும் தேவன்
அவர் நிரந்தரமானவர் (2)
நம் (சி.எஸ்.ஐ) சபையை உயர்த்துவார்
அதை மேன்மைப்படுத்துவார் (2)
- நிலைத்திட அழைத்திடும்
1) கர்த்தரே நமது திராட்சைச் செடி
அவரின் கொடி நாம் அன்றோ (2)
வானவர் இயேசுவில் நிலைத்திருந்தால்
வாழாக்காமல் நம்மை தலையாக்குவார்
வார்த்தையில் என்றும் நிலைத்திருந்தால்
வாழாக்காமல் நம்மை தலையாக்குவார்
- நம் சபையை உயர்த்துவார்
2) சீர்திருத்தத் திருச்சபை விசுவாசியே
உன் நோக்கத்தை உணராயோ (2)
ஆவியில் உண்மையாய் நிலைத்திருந்தால்
ஆத்தும ஆதாயம் செய்திடலாம்
அன்பிலே என்றும் நிலைத்திருந்தால்
ஆத்தும ஆதாயம் செய்திடலாம்
- நம் சபையை உயர்த்துார்
===============
Lyrics: Dr. G. David (Ph.d Tamil)
Original Song: பேர் சொல்லி சொல்லி அழைத்த
காண்பாய் - 2022
ஆலடிபட்டி குருசேகரம்
கண்காணா அதிசயங்கள்காண நீ வா என் நண்பனேகண்வென்சன் 182 (One Eight Two)
கணிந்தக் கொடையினை கண்டவா
பிதாவைக் கண்டோம் இயேசுவை பார்த்தோம்
ஆவியை உணர்ந்தோம் ஐக்கியம் கொண்டோம்
அறுவடை சேனை அதிசயம் காண்போம்
சி.எஸ்.ஐ நாமே சி.எஸ்.ஐ
1) காண இயலாத மக்களின் கண்கள்
கர்த்தன் இயேசுவை தரிசிக்க வேண்டும்
மரித்த சடலங்கள் மதுரை வீதியில்
மறுபடி ஜனனம் பெற்றிட வேண்டும்
2) கடின இதயங்கள் கரைந்திடச் செய்யும்
கல்வாரி அன்பினைக் கண்டிட வேண்டும்
காண்பாய் இதிலும் பெரியவை என்ற
கர்த்தன் வாக்கு இன்று வாய்த்திட வேண்டும்
===============
Lyrics: Dr. G. David (Ph.d Tamil)
Original Song: கண்காக தொலைதூர
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.