Type Here to Get Search Results !

new testament bible quiz questions with answers in tamil | matthew mark luke john acts | புதிய ஏற்பாடு கேள்விகளும் பதில்களும் | Jesus Sam

===============
New Testament Bible Quiz Questions With Answers in Tamil
புதிய ஏற்பாடு கேள்விகளும் பதில்களும்
Matthew, Mark, Luke, John, Acts
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர்
=================

1. கோடிட்ட இடத்தை நிரப்புக
==================
1. ஓய்வு நாள் ____________ உண்டாக்கப்பட்டது.
Answer: மனுஷனுக்காக
    மாற்கு 2:27

2. மனுஷகுமாரன் ____________ இரட்சிக்க வந்தார்.
Answer: கெட்டுப்போனதை
    மத்தேயு 18:11

3. தேவனுடைய ____________ குமாரன் விசுவாசியாதவன் மேல் ____________ .
Answer: 1) ஒரேபேரான 2) ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாவான்
யோவான் 3:18

4. மரியாளின் புருஷன் ____________ , எனவே அவர் மரியாளை அவமானப்படுத்தவில்லை.
Answer: நீதிமான்
    மத்தேயு 1:19

5. பேசுகிறவர் நீங்கள் அல்ல ____________ பேசுகிறவர்.
Answer: பிதாவின் ஆவியானவர்
    மத்தேயு 10:20

6. ____________ அவர்களுக்குள்ளே வேர் கொள்ளாததினால் கொஞ்சகாலம் மாத்திரம் ____________ சோதனைக்காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.
Answer: (1) கற்பாறையின் மேல் விதைக்கப்பட்டவர்கள்
                (2) விசுவாசித்து
    லூக்கா 8:13

7. ____________ அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
Answer: ஆசாரியர்களில்
    அப்போஸ்தலர் 6:7

1.8. ____________ அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் ____________ பட்டார்கள்.
Answer: (1) வேதத்தை (2) சபிக்கப்பட்டவர்கள்
    யோவான் 7:49

9. அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள் ____________ .
Answer: நியாயசாஸ்திரிகள்
    லூக்கா 11:52

10. நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் ____________ உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
Answer: குற்றமற்ற மனச்சாட்சி
    அப்போஸ்தலர் 24:16


2. பொருத்துக
==============
1. அசுத்த ஆவிகள் = நீர் தேவனுடைய குமாரன்
    மாற்கு 3:11

2. சமாரியர் = கிறிஸ்துவாகிய உலகரட்சகர்
    யோவான் 4:40,42

3. எத்தியோப்பியன் = இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்
    அப்போஸ்தலர் 8:27,37

4. சீமோன் = நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாhரனாகிய கிறிஸ்து
    மத்தேயு 16:16

5. அசுத்த ஆவியுள்ள மனுஷன் = நீர் தேவனுடைய பரிசுத்தர்
    மாற்கு 1:23,24

6. சிமியோன் = புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி
    லூக்கா 2:25

7. படவில் உள்ளவர்கள் = மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்
    மத்தேயு 14:33

8. நூற்றுக் அதிபதி = மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்.
    மாற்கு 15:39

9. நாத்தான் வேல் = நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா.
    யோவான் 1:49

10. லேகியோன் = இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே.
    மாற்கு 5:7,9


3. சரியா? தவறா?
==============
3.1. மறுஜென்மம் உண்டு என்கிறது வேதம்.
Answer: சரி
    மத்தேயு 19:28


3.2. உபவாசத்தினாலும் ஜெபத்தினாலும் பிசாசுகளைத் துரத்த முடியும்.
Answer: சரி
    மத்தேயு 17:21

3.3. இயேசு வளர்ந்த ஊரார் அவரின் உபதேசத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அவர் மேல் விசுவாசமாயிருந்தார்கள்.
Answer: தவறு
    மத்தேயு 13: 54, 57

3.4. எலியா பஞ்சகாலத்தில் அனுப்பட்பட்டது சரெப்தா ஊர் விதவையிடம்.
Answer: சரி
    லூக்கா 4:26

3.5. இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் மலையைப் பெயர்த்து சமுத்திரத்தில் தள்ளலாம்.
Answer: சரி
    மாற்கு 11:23

3.6. தாவீதின் சந்ததியிலே தேவன் தமது வார்த்தையின்; படியே இரட்சகராக இயேசுவை எழும்பப் பண்ணினார்.
Answer: சரி
    அப்போஸ்தலர் 13:24,25

3.7. தம்முடைய வார்த்தையினாலே பராக்கிரமம் செய்தார்.
Answer: தவறு
    லூக்கா 1:51


3.8. வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் இது கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தை.
Answer: சரி
    அப்போஸ்தலர் 20:35

3.9. தேவனுடைய கிருபை உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனியைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
Answer: தவறு
    மத்தேயு 21:43

3.10. நான் உங்களை சிநேகிதர் என்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
Answer: சரி
    யோவான் 15:15


4. நடந்தது எங்கே?
(சம்பவம் நடந்த இடத்தின் பெயர் மிகச் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்)
==================
4.1. பரிசேயர் வானத்திலிருந்து அடையாளம் கேட்டு இயேசு அடையாளம் தராத சம்பவம்.
Answer: மக்தலாவின் எல்லை
    மத்தேயு 15:39
    மத்தேயு 16:1
Answer: தல்மனூத்தாவின் எல்லை
    மாற்கு 8:10,11
இந்த இரண்டு பதில்களில் மாற்கு 8:10,11 இந்த விடையே மிகவும் சரியானதாகும். ஏனென்றால் மத்தேயு சுவிசேஷத்தில் பரிசேயரும் சதுசேயரும் வருகிறார்கள், மாற்கு சுவிசேஷத்தில் பரிசேயர் மட்டுமே வருகிறார்கள். நமக்கு கேள்வியில் இருப்பது பரிசேயர் மட்டுமே.

4.2. உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறது இல்லையா? ஏன வரிவசூலிப்போர் பேதுருவிடம் கேட்ட சம்பவம்.
Answer: கப்பர்நகூம்
    மத்தேயு 17:24

4.3. கர்த்தர் ஆபிரகாமிடம் "நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா" என்றது எந்த நாட்டிலிருக்கும் போது.
Answer: மெசொப்பொத்தாமியா
    அப்போஸ்தலர் 7:2,3

4.4. இயேசு கைம்பெண்ணின் மகனை உயிரோடு எழுப்பிய சம்பவம்.
Answer: நாயீன்
    லூக்கா 7:11,12

4.5. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.
Answer: யூதேயாவின் வனாந்தரம்
    மத்தேயு 3:1,15

4.6. இயேசு கொன்னைவாய் செவிடனை குணப்படுத்திய சம்பவம்.
Answer: கலிலேயா கடல் அருகே
    மாற்கு 7:31,32

4.7. 153 பெரியமீன்கள் கிடைக்கும்படி இயேசு செய்த கடல்.
Answer: திபேரியா கடற்கரை
    யோவான் 21:1,11

4.8. சீஷர்கள் ஆவியின் ஏவுதலால் பவுலை எருசலேமுக்குப் போகவேண்டாம் எனத் தடுத்த சம்பவம்.
Answer: தீரு பட்டணத்தின் கரை
    அப்போஸ்தலர் 21:3,4

4.9. இயேசு சீஷர்களிலிருந்து 12 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அப்போஸ்தலர் எனப்பெயரிட்ட இடம் எது?
Answer: மலையின் மேல்
    லூக்கா 6:12,13

4.10. மரியாள் இயேசுவின் பாதத்தில் நளதம் பு+சிய சம்பவம்..
Answer: பெத்தானியா, லாசருவின் வீடு
    யோவான் 12:1,3


5. வசனங்கள் இங்கே விடைகளோ பழைய ஏற்பாட்டில் (இதற்கு ஒப்பான பழைய ஏற்பாடு வசனங்களை எழுதவும்)
===================
5.1. கேள்வி: மத்தேயு 2:15
ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது,
Answer: ஓசியா 11:1
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.

5.2. கேள்வி: அப்போஸ்தலர் 2: 17
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனம் அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.
Answer: யோவேல் 2:11
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். ஆப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்;.

5.3. கேள்வி:  மாற்கு 15:34
ஒன்பதாம் மணி நேரத்திலே, இயேசு: ஏலோயீ! ஏலோயீ! லுhமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்மாம்.
Answer: சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும் நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

5.4. கேள்வி:  மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புற்ப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Answer: உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை எனக்கு உணர்த்தம்படிக்கு, நீயும் உன் பிதாக்களுக்கு அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷத்தார்.

5.5. கேள்வி: யோவான் 19:23
23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள். அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுகக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
Answer: சங்கீதம் 22:18
என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.

5.6. கேள்வி: லூக்கா 22:37
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப் பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.
Answer: ஏசாயா 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்தினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

5.7. கேள்வி: அப்போஸ்தலர் 3:22
மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார். ஆவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
Answer: உபாகமம் 18:15
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீரு;க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார். அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

5.8. கேள்வி: மாற்கு 1:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசியின் ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்:
Answer: ஏசாயா 40: 3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பதையைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும்,

5.9. கேள்வி: யோவான் 1:17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
Answer: யாத்திராகமம் 34: 4, 6
4. அப்பொழுது மோசே முந்தின கற்பலககைளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து. அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
6. கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர். கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
(அல்லது)
Answer: உபாகமம் 33:4
மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான். அது யாக்கோபின் சபைக்குச் சுதந்தரமாயிற்று.

5.10. கேள்வி: லூக்கா 23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
Answer: சங்கீதம் 31: 5
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். சத்தியபரனாகிய் கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.


6. யார்? யாரிடம் சொன்னது?
================
6.1. "வேலை செய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே."
Answer: ஜெப ஆலயத் தலைவன் ஜனங்களிடம் சொன்னது
    லூக்கா 13:14

6.2."இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள்."
Answer: கர்த்தருடைய தூதன் அப்போஸ்தலர்களிடம் சொன்னது
    அப்போஸ்தலர் 18-20

6.3. "அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்."
Answer: இயேசு கிறிஸ்து யு+தர்களிடம் சொன்னது.
    யோவான் 8:48,49,50

6.4. "உன் பாவங்கள் போகக் கழுவப்படு"
Answer: அனனியா பவுலிடம் சொன்னது
அப்போஸ்தலர் 22:12,13,16

6.5. "நீர் சொன்னது சத்தியம்"
Answer: வேதபாரகன் இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது
    மாற்கு 12:29,32

6.6. "நீர் என்னை விட்டுப் போகவேண்டும்"
Answer: சீமோன் பேதுரு இயேசுகிறிஸ்துவிடம் சொன்னது.
    லூக்கா 5:8

6.7. "அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள்"
Answer: இயேசு கிறிஸ்து பிதாவிடம் சொன்னது
    யோவான் 17:1,2,9

6.8. "நீ பயப்படாமல் பேசு"
Answer: கர்த்தர் பவுலிடம் சொன்னது
    அப்போஸ்தலர் 18:9

6.9. "அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்"
Answer: இயேசு கிறிஸ்து நியாயசாஸ்திரியிடம் சொன்னது.
    லூக்கா 10:25,28

6.10. "நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள்"
Answer: இயேசு கிறிஸ்து பேதுரு, யோவான், யாக்கோபிடம் சொன்னது.
    மாற்கு 14:32,33,34


7. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
===============
7.1. ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் யார்?
Answer: ஆசாரியர்கள்
மத்தேயு 12:5

7.2. புறம்பே இருக்கிறவர்களுக்கு தேவனுடைய ராஜ்ஜியத்தின் இரகசியங்களை இயேசு எதன் மூலம் சொன்னார்?
Answer: உவமைகளாக
    மாற்கு 4:11

7.3. யாரின் நிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக சந்தோஷமுண்டாயிருக்கிறது என்றார் இயேசு?
Answer: மனந்திரும்புகிற ஓரே பாவியின் நிதிமித்தம்
    லூக்கா 15:10

7.4. இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டினவனைக் குறித்து யார்? யாருடைய வாக்கினால் முன்னறிவித்தார்?
Answer: (1) யூதாஸ்காரியோத்தைக்குறித்து
    (2) தாவீதின் வாக்கினால்
    அப்போஸ்தலர் 1:16

7.5. காணாமல் போன ஆடுகள் என்று இயேசு குறிப்பிட்டது யாரை?
Answer: இஸ்ரவேலின் வீட்டார்
    மத்தேயு 15:24

7.6. இரண்டு மரியாள்களிடம் இயேசு உயிர்த்தெழுந்தப்பின் பேசிய முதல் வார்த்தை என்ன?
Answer: வாழ்க
    மத்தேயு 28:1,9

7.7. யார் என்னிடத்தில் வருகிறான் என்றார் இயேசு?
Answer: பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன்
    யோவான் 6:45

7.8. லசேயபட்டணத்துக்கு அருகே உள்ள துறைமுகத்தின் பெயர் என்ன?
Answer: நல்ல துறைமுகம்
    அப்போஸ்தலர் 27:8

7.9. பிதாவும் தானும் யாரிடத்தில் வந்து வாசம் பண்ணுவோம் என்றார் இயேசு?
Answer: இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பாயிருக்கிறவனிடத்தில்
    யோவான் 14:23

7.10. திகைத்துப் பயத்துடனே இயேசுவுக்கு பின் சென்றவர்கள் யார்?
Answer: சீஷர்கள் (பன்னிருவர்)
    மாற்கு 10:32


8. ஓரிரு வாக்கியங்களில் விடையளி
==============
8.1. மோசேயும், எலியாவும் இயேசுவுடன் எதைக் குறித்துச் சம்பாஷனை பண்ணினார்கள்?
Answer: இயேசுவுக்கு எருசலேமில் நிறைவேறப்போகிற மரணத்தைக் குறித்து மோசேயும் எலியாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
    லூக்கா 9:30,31

8.2. கொர்நேலியுவைப் பற்றி பேதுருவிடம் அவர் அனுப்பிய ஆட்கள் கூறிய (கொர்நேலியுவின்) பண்புகள் யாவை?
Answer: 1) நீதிமான்
    2) தேவனுக்கு பயந்தவன்
    3) யூத ஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவர்
    அப்போஸ்தலர் 10:22

8.3. இயேசுவுக்கடுத்த விஷேசங்களை பவுல் எவைகளிலிருந்து பேசினார்? ஏதைக் குறித்து சாட்சிகொடுத்து விஸ்தரித்தார்?
Answer: 1) மோசேயின் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களில் இருந்து இயேசுவுக்கடுத்த விஷேசங்களை பவுல் பேசினார்.
    2) பவுல் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து சாட்சி கொடுத்தார்.
    அப்போஸ்தலர் 28:23

8.4. வேதபாரகரும் பரிசேயரும் செய்யாமல் விட்டுவிட்டதாகவும் அதை விடாதிருக்கும்படியும் இயேசு கூறியது எவைகள்?
Answer: நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் வேதபாரகர் பரிசேயர் விட்டுவிட்டார்கள். அதை நாம் விட்டுவிடாதிருக்க வேண்டும்.
    மத்தேயு 23:23

8.5. கர்த்தர் 11 பேருடன் கூட எவைகளை நடப்பித்து, எவைகளினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்?
Answer: கர்த்தர் 11 பேருடன் கூட கிரியைகளை நடப்பித்து, அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.
    மாற்கு 16:20

8.6. எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை எதற்கு அனுப்புவார்?
Answer: தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலும் உள்ளவர்களை கூட்டிச் சேர்க்க.
    மத்தேயு 24:31

8.7. புறஜாதியாருக்கும் நமக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி தேவன் செய்ததாக பேதுரு கூறுவது என்ன?
Answer: விசுவாசத்தினாலே புறஜாதியாருடைய இருதயத்தை தேவன் சுத்தமாக்கி நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்.
    அப்போஸ்தலர் 15:9

8.8. ஏரோது யோவானின் யோசனைப்படி அநேக காரியங்களை செய்தது ஏன்?
Answer: யோவான் நீதியும், பரிசுத்தமுமுள்ளவனென்று அறிந்து, யோவானுக்கு பயந்ததினால் ஏரோது யோவானின் யோசனைப்படி அநேக காரியங்களை செய்து வந்தான்.
    மாற்கு 6:20

8.9. இயேசு எவைகளில் அதிகமதிகமாய் வளர்ந்தார்?
Answer: ஞானம், வளர்த்தி, தேவகிருபை, மனுஷர் தயவு
    லூக்கா 2: 52

8.10. உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு செய்தது என்ன?
Answer: கல்லரையைவிட்டு எழுந்து, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்கு காணப்பட்டார்கள்.
    மத்தேயு 27: 52, 53


9. இணை கேள்விகளுக்கு விடையளி:
===================
9.1. (அ) கானா ஊரில் இயேசு செய்த முதல் அற்புதம் என்ன?
Answer: தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்.
    யோவான் 2:9,11

(ஆ) புதிய ஏற்பாட்டில் இயேசு செய்ததாக முதலில் எழுதப்பட்டுள்ள அற்புதம் என்ன?
Answer: கானா ஊர் கல்யாண வீட்டில் இயேசு தண்;ணீரை திராட்சைரசமாக மாற்றினார்.
    யோவான் 2:9,11


9.2. (அ) இயேசு கண்களில் உமிழ்ந்து குணப்படுத்தியது யாரை?
Answer: குருடன்
    மாற்கு 8: 23

(ஆ) இயேசு உழிழ்ந்து நாவைத் தொட்டுக் குணப்படுத்தியது யாரை?
Answer: கொன்னைவாயுடைய செவிடன்
    மாற்கு 7:32,33,35


9.3. (அ) "ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றது யார்?
Answer: சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரி
    யோவான் 4:8,19

(ஆ) "நீர் தீர்க்கதரிசி" என்றது யார்?
Answer: சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரி
    யோவான் 4:8,19


9.4. (அ) இயேசு "மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்றது யாரிடம்?
Answer: திமிர்வாதக்காரனிடம்
    மத்தேயு 9:2


(ஆ) இயேசு "மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றது யாரிடம்?
Answer: பனிரெண்டு வருட பெரும்பாடுள்ள ஸ்திரி
    மத்தேயு 9:20,22
    லூக்கா 8: 43, 48


9.5 "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாய் இருக்கிறேன்" என்ற சத்தம்
(அ) வானத்திலிருந்து உண்டாகி உரைத்தது எப்போது?
Answer: இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த போது, ஜலத்திலிருந்து கரையேறினபோது.ஃ
    மத்தேயு 3:16,17

(ஆ) மேகத்திலிருந்து உண்டானது எப்போது?
Answer: இயேசு கிறிஸ்து ஒரு மலையில் மறுரூபமானபோது
    மத்தேயு 17:1,2,5



10. நம் வாழ்வுககு சில படிப்பினைகள் (இப்பகுதியிலிருந்து)
===============
10.1.__________ஆகிய திரளான கூட்டத்தார் ஒரே __________ ஒரே __________ உள்ளவர்களாயிருந்தார்கள்.
Answer: 1) விசுவாசிகளாகிய
    2) இருதயமும்
    3) மனமும்
அப்போஸ்தலர் 4: 32

10.2. __________ உள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் __________ படுவான்.
Answer: 1) விசுவாசம்
    2) இரட்சிக்கப்படுவான்
மாற்கு 16: 16

10.3. இயேசு தனித்து __________ பண்ண ஒரு மலையின் மேல் ஏறி __________ இருந்தார்.
Answer: (1) ஜெபம் (2) தனிமையாய் (அ) சாயங்காலமானபோ அங்கே தனிமையாய்
    மத்தேயு 14: 23

10.4. __________ ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு __________ உண்டு.
Answer: (1) வேதவாக்கியங்களை (2) நித்தியஜீவன்
    யோவான் 5: 39

10.5. உன்னிடத்தில் __________ வாங்க விரும்புகிறவனுக்கு __________ .
Answer: (1) கடன் (2) முகங்கோணாதே
    மத்தேயு 5:42

10.6. __________ பண்ணி அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட __________ அவர்களை ஒப்புவித்தார்கள்.
Answer: (1) உபவாசித்து ஜெபம்பண்ணி (2) கர்த்தருக்கு
    அப்போஸ்தலர் 14:23

10.7. உங்கள் பிதா __________ உள்ளவராயிருக்கிறது போல நீங்களும் __________ உள்ளவர்களாய் இருங்கள்.
Answer: (1) பூரண சற்குணம்
    (2) பூரண சற்குணம்
மத்தேயு 5: 48

10.8. __________ சுவிசேஷம் __________ படுகிறது.
Answer: (1) தரித்திரருக்கு
    (2) பிரசங்கிக்க
லூக்கா 7:22

10.9. சபைகள் __________ பெற்று, __________ விருத்தியடைந்து, கர்த்தருக்குப் __________ நடந்து பெருகின.
Answer: (1) சமாதானம்
    (2) பக்தி
    (3) பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும்
அப்போஸ்தலர் 9:31

10.10. ஆண்டவரே உம்முடைய __________ பிசாசுகளும் எங்களுக்கு __________
Answer: (1) நாமத்தினாலே
    (2) கீழ்ப்படிகிறது
லூக்கா 10:17

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.