மேலான அன்பு
=============
உள்ளத்தைத் தொடும் வாலிபரின் கதை
18 வயது நிறைந்த வாலிபத் தம்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிகமான சிகரெட், குடி பழக்கங்கள் காரணமாக சரீரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். தாங்க முடியாத வேதனைகளுடன் மருத்துமனையில் நாட்களைக் கழித்தார். மருத்துவர்களும் போராடினார்கள். இறுதியில் அவர் உடலுக்கு மாற்று இரத்தம் வேண்டும் என்று கூறிவிட்டனர். அங்கு கூடியிருந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர இரத்தம் கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. நேரம் கடந்து கொண்டே இருக்கிறது.
அப்பொழுது அங்கு நெஞ்சம் பதைக்க ஓடிவந்த அவரது தாய் மருத்துவரின் தேவையை அறிந்து, ஐயா எவ்வளவு இரத்தம் வேண்டுமானாலும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். என்னைப் பற்றிக் கவலையில்லை, என் மகன் பிழைத்தால் போதும் என்று கெஞ்சினாள். அந்த தாயின் இரத்தம் உயிருக்கு போராடின மகனுக்கு வாழ்வளித்தது.
உன் நிலைமை:
என் அன்பு சகோதரனே! இப்படிப்பட்ட பாவ பழக்க வழக்கங்கள் உனக்கும் இருக்கிறதா? சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லையே, குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்று கலங்குகிறீர்களா? அது உங்களையும் உங்கள் குடும்பத்தையும சீரழித்துக் கொண்டிருக்கிறதா? இந்த பாவப்பழக்கத்தால் எவ்வளவோ, அவமானங்கள், வேதனைகள் சுமந்துக் கொண்டு ஒரு பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா? தாயின் அன்பிலும் மேலானது இயேசுவின் அன்பு.
தீர்வு:
வேதம் சொல்லுகிறது: இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது (எபிரெயர் 9:22) உனக்காக உன் பாவங்களுக்காக பாவ மன்னிப்பை கொடுத்து, உனக்கு வாழ்வளிக்க வேண்டும் என்பதற்காக இயேசு உன் பாவங்களையெல்லாம் சிலுவையில் சுமந்து உனக்காக இரத்தம் சிந்தினார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7). இயேசு: நம்மிடத்தில் அன்பு கூர்ந்ததினாலே அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தார் (மத்தேயு 20:28) சகோதரனே உன் பாவங்களை நீ அறிக்கையிட்டால், பாவங்களை உனக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி உன்னை சுத்திகரிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் உனக்காக இயேசு தன்னையே சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தார்.
உன் பாவங்கள் எவ்வளவாக இருந்தாலும் இன்றே இப்போதே இயேசுவினிடத்தில் அறிக்கையிட்டு என் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவே! என் பாவங்களுக்காகவும், பாவ செயல்களுக்காகவும் நான் மனம் வருந்துகிறேன். என்னையும் என் குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிற இந்தக் கொடிய பாவ பழக்கத்திலிருந்து எனக்கு விடுதலையைத் தாரும் என்று கேளுங்கள். உங்களுக்காக தன் இரத்தத்தையும், ஜீவனையும் கொடுத்தவர் உங்களை வாழவைப்பார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். (யோவான் 16:20)
தொடர்புக்கு,
வல்லமையுள்ள இயேசு ஊழியங்கள்,
57/29, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை. – 600 078.
செல்: 9382157309
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.