நீங்கள் கெட்டுப்போவது அவர் சித்தம் அல்ல
================
சகோதரனே! சகோதரியே!
உங்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாகி நீங்கள் தவித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு இந்த பிரதியின் மூலம் ஓர் நற்செய்தி அறிவிக்கிறேன். உங்களுக்கு எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். நான் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் வாழ்த்துதல் சொல்கிறாரே என்று ஒருவேலை நீங்கள் நினைக்கலாம்.
கிறிஸ்துமஸ் செய்தி அது தான் யோவான் 3:16 “கடவுள் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, இயேசுவைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. இவ்வுலகத்தை தேவன் நேசித்ததினால் ஒருவனும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய இயேசு மனிதனாய் அவதரித்து பிறந்து சிலுவையில் மாண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் பரமண்டலத்துக்கு ஏறி, அங்கு வீற்றிருக்கிறார். ஒரு நாள் திரும்பி வரப்போகிறார். யார் அவரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை அவர் பிள்ளைகளாகும்படி சுதந்திரம் கொடுத்திருக்கிறார். யோவான் 1:12 “அவருடைய நாமத்தின்மேல் விசுாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்”. உங்களுக்கு இந்த புது வாழ்வு வேண்டுமா? அவருடைய பிள்ளைகளாக மாறினால் உங்கள் பாவங்களை கழுவி புது வாழ்வு கொடுப்பார். நிச்சயம் நீங்கள் கெட்டுப்போவதில்லை.
இதை குறித்து மேலும் அறிய விரும்பினாலும், உங்களுக்கு உபவாசித்து ஜெபம் செய்ய வேண்டுமென்றாலும், கீழ் காணும் முகவரியில் அல்லது தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
எழுதியவர்,
Rt.Rev. Dr. மனோ தானியேல்
குறிப்பு:
தூய வேதாகமம் மாற்கு 16:15-ன் அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டம் ஷரத் 25-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள மதச்சுதந்திரத்தின் அடிப்படையிலும் இந்த கைப்பிரதி பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. எவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, நயம் காட்டியோ, மோசடியான முறையிலோ மதம் மாற்றுவது இக்கைப்பிரதியின் நோக்கமல்ல.
For Further Contact / Prayer
Phone: 044-2644 9213
044-2660 3503
044-4355 2402
Email: pilgrimtract@gmail.com
“It is not His will that you perish’
Pilgrim Tract Society
P.O. Box No. 1010, Kilpuk, Chennai. 600 010
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.