============
The Guiding Star
வழிகாட்டும் நட்சத்திரம்
============
ஒரு நாத்திகன் (கடவுள் இல்லை என்ற கொள்ளையுடையவன்) அமெரிக்காவில் வாழ்ந்து வந்தான். மிகவும் செல்வந்தனான அவன் உலகில் உள்ள முக்கிய நாடுகளை சுற்றிப் பார்க்க விரும்பி, உலகில் அநேக நாடுகளை பார்த்து ரசித்து மகிழ்ச்சியாய் இருந்தான்.
பல நாடுகளை சுற்றிப் பார்த்த அந்த நாத்திகன் இஸ்ரேல் (Isreal) நாட்டைப் பார்க்க விரும்பி எருசலேம் நகரத்தில் ஒரு ஹோட்டலில் (Hotel) தங்கியிருந்தான். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை (Tourist) அங்குள்ள வழிகாட்டிகள் (Guides) பல இடங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த குறிப்பிட்ட நாத்திகனை ”ஒரு வழிகாட்டி” அவன் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து எருசலேம் பட்டணத்தில் முக்கியமான, சரித்திர பூர்வமான இடங்களை காண்பிக்க அழைத்தான். இவனோ கோபமடைந்து வர மறுத்தான். ஆனால் இந்த வழிகாட்டி ஒரு கிறிஸ்தவனாக இருந்தபடியால் அவனை வெறுக்காமல் தொடர்ந்து பல முறை வற்புறுத்தினதினால் அவன் வர சம்மதித்தான்.
அந்த வழிகாட்டி இயேசு நாதர் வாழ்ந்த நாட்களின் முக்கிய இடங்களையும், அற்புதங்களையும், அதிசயங்கள் செய்த இடங்களையும் குறிப்பாக கொல்கதா (Golgathe) என்கிற மலை அடிவாரத்தில் இயேசு சர்வலோக மக்களின் பாவங்களுக்காக “பிரஜாபதியாக“ சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு மரித்தார் என்றும், மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்றும் அவர் உனக்காகவும் மரித்தார் என்றும், கிறிஸ்தவ வழிகாட்டி கூறினபொழுது, நாத்திகன் பாவ உணர்வடைந்து, கண்களில் கண்ணீர் வடிய அந்த மலை அடிவாரத்தில் மனம் மாறி இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக, வாழ்வின் வழிகாட்டும் தெய்வமாக ஏற்றுக் கொண்டார்.
இதை வாசிக்கும் என் அன்பு நண்பரே தாயிலும் மேலான அன்பைப் பற்றி வேதத்தில் (Bible) இப்படியாக வாசிக்கிறோம்.
“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை“ (யோவான் 15:13)
ஆகவே, உனக்காக மரித்த இயேசுவை கடவுளாக விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் உம் வாழ்விலும் மனஅமைதி, சமாதானம், சுகம், மகிழ்ச்சி, பாவ விடுதலை, நித்திய வாழ்வு போன்ற ஆசீர்வாதங்களை உமக்கும் அருளுவார். உம் வாழ்வின் வழிகாட்டும் தெய்வமாகவும், நட்சத்திரமாகவும் (Guiding Star) இருப்பார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
குறிப்பு:
நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ள விரும்பினால் கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
இப்பிரதியை எழுதியவர்
Rev. A. வின்சென் தாமஸ்
முகவரி
7/236, முகப்பேர் மேற்கு,
சென்னை. – 600 037
தொடர்புக்கு
9444251941
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.