Type Here to Get Search Results !

பயப்பட வேண்டாம் | Don't be afraid! | விசுவாச ஜெபக் கைப்பிரதிக் கழகம் | Jesus Sam

பயப்பட வேண்டாம்!
=============

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் இளவயதில் அடிக்கடி என்னிடத்தில் வந்து கதறி அழுவான். எனக்காகப் பிரார்த்தனை செய் என்று வருந்திக் கேட்டுக்கொள்வான். காரணத்தைக் கேட்டால் எனக்கு பயமாக இருக்கிறது; நெஞ்சு படப்படப்பாக இருக்கிறது. மூச்சுத் திணறுகிறது; மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று உரைப்பான். தொடர்ந்து அவனிடத்தில் நான் பேசும் பொழுது அவனுடைய வாழ்க்கையில் அவனைக் கட்டிப் போட்டிருக்கும் முக்கியமான ஒரு காரியம் பயம் என்று தெரிய வந்தது. குழந்தையிலிருந்து வயது முதிர்ந்தவர் வரை பயம் என்பது ஒரு இயல்பான காரியமாயிருக்கிறது. இந்த பயமானது மனிதனுக்கு மனஉளைச்சலைக் கொடுப்பது மட்டுமன்றி வியாதிக்குள்ளாகவும் வழி நடத்துகிறதாயிருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயங்களிலே பல வகை உண்டு. இருட்டைக் கண்டு பயம், இரைச்சலைக் கண்டு பயம், பாம்பைக் குறித்த பயம், பேய் பிசாசைக் குறித்த பயம், செய்வினையைக் குறித்த பயம், எதிர்காலத்தைக் குறித்த பயம் என வகை வகையாக மனிதனை பயம் ஆட்டிப்படைக்கின்றது. வாழ்க்கையில் முன்னேற இப்பயம் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இது எங்கிருந்து வருகின்றது? மனித வர்க்கத்திற்கு எதிரி ஒருவன் உள்ளான்; அவன் தான் சத்தான்; அவன் மனித வர்க்கத்தை அழிக்க தீவிரம் கொண்டு பல செயல்பாடுகளிலே ஈடுபடுகின்றான்; அவற்றில் முக்கியமானது மனிதர்களிடையே பயத்தைக் கொண்டு வருவது.

இப்படி பயத்தினால் நீர் ஒருவேளை கட்டுண்டு இருப்பீரானால் கவலை வேண்டாம். உங்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 09:30 மணியிலிருந்து 04:00 மணி வரை எங்கள் ஜெபக்குழு உபவாசித்து (விரதமிருந்து) ஜெபிக்க காத்திருக்கிறார்கள். உங்கள் தேவைகளையும், பிரார்த்தனைக் குறிப்புகளையும், உங்களுடைய முகவரியுடன் அனுப்பினால் நாங்கள் உங்களுக்குப் பிரார்த்தனை செய்வதோடு அல்லாமல் வேறு சில புத்தகங்களையும், கைப்பிரதிகளையும் அனுப்பி வைப்போம்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரன்
மனோ தானியேல்

குறிப்பு:
தூய வேதாகமம் மாற்கு 16:15-ன் அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டம் ஷரத் 25-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள மதச்சுதந்திரத்தின் அடிப்படையிலும் இந்த கைப்பிரதி பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. எவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, நயம் காட்டியோ, மோசடியான முறையிலோ மதம் மாற்றுவது இக்கைப்பிரதியின் நோக்கமல்ல.

மேலும் விவரங்களுக்கும் ஜெப உதவிக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
விசுவாச ஜெபக் கைப்பிரதிக் கழகம்
அஞ்சல் பெட்டி எண். 1010.
சென்னை 600 010

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.