Type Here to Get Search Results !

September Convention 2023 Song Lyrics | Tamil Christian Worship Songs | செம்டம்பர் கன்வென்ஷன் பாடல்கள் | Jesus Sam

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோவான் 15:7)
தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
183-வது செப்டம்பர் கன்வென்ஷன் – 2023
கருப்பொருள்: நிலைத்திருத்தல்


பாடல் 1
பேராயப் பாடல்
மதுரை முகவை பேராயமாம்
எங்கள் பேராயம்
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திடும்
எங்கள் பேராயம்
புதிய தரிசனமும் அதிக கரிசனையும்
தாங்கி நிற்கும் தன்மை கொண்ட
சிறந்த பேராயம் – அதுவே
எங்கள் பேராயம்

1. ஆறு மாவட்டம் கொண்டது எங்கள் பேராயம்
பல்வேறு சமுதாயத்தினரை கொண்ட பேராயம்
சமுதாய இன்னலைத் தீர்க்கும் பேராயம்
நிலம், மலை, கடலைச் சார்ந்தது எங்கள் பேராயம்
மதுரையைத் தலைமை இடமாகக் கொண்ட பேராயம்
தாய்மொழியாம் தமிழை வளர்த்தது எங்கள் பேராயம்
அமெரிக்கன் மிஷனிரிகளால் உருவான பேராயம்
இது சிறந்த பேராயம் எங்கள் பேராயம்

2. இறையியல் கல்லூரியைக் கொண்ட பேராயம்
இறைவார்த்தைக்கு முதலிடம் கொடுக்கும் பேராயம்
பல் மருத்துவமனை உள்ள எங்கள் பேராயம்
தொழில் பட்டப்பயிற்சித் தந்தது எங்கள் பேராயம்
சிறப்பு கல்வி நிறுவனத்தை வளர்த்த பேராயம்
கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையைக் கொண்ட பேராயம்
பாம்பன் என்னும் தீவைக்கொண்டது எங்கள் பேராயம்
இது சிறந்த பேராயம் எங்கள் பேராயம்
    (பாடல், பண், இசை: திரு. ஆப்ரி)


பாடல் 2
செம்பொருள் பாடல்
பல்லவி
நீங்கள என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும்
நிலைத்திருந்தால் கேட்பதெல்லாம் நடக்கும் என்றார் இயேசு

அனுபல்லவி
இயேசுவில் நிலைத்திருப்போம் இறை வார்த்தையில்
நிலைத்திருப்போம் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட
அனுதினம் அவரில் நிலைத்திருப்போம்
    - நீங்கள்

சரணங்கள்
1. ஆண்டவரின் உடன்படிக்கையில் உறுதியாவோம்
அழைக்கப்பட்ட அழைப்பிலே நிலைத்திருப்போம்
இறை வேண்டலில் தரித்திருப்போம்
இறைவனின் இனிய சீடராவோம்
    - நீங்கள் என்னிலும்

2. கர்த்தருடன் உறவில் இன்னும் நெருங்கிடுவோம்
கற்றுக்கொண்ட சத்தியத்தில் நிலைத்திருப்போம்
நம்பிக்கையில் வேர்கொள்ளுவோம்
நற்செய்தி பாரெங்கும் பறைசாற்றுவோம்
    - நீங்கள் என்னிலும்

3. திருச்சபையின் ஐக்கியத்தில் வலுப்பெறுவோம்
தினம் தினம் ஈகையில் நாம் வளர்ந்திடுவோம்
அன்பாய் இணைந்து வேற்றுமை களைவோம்
அழியாத அவர் வார்த்தை நிறைவேற்றுவோம்
    - நீங்கள்

பாடல் 3
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்


பாடல் 4
திராட்சைக் கொடியே திராட்சைக் கொடியே
திராட்சை செடியில் நிலைத்திரு
திருச்சபையே திருமறையில்
திடமாக நிலைத்திரு

1. இயேசு உன்னை நேசிக்கிறார் – அவர்
அன்பினில் நிலைத்திருப்போம்
வேத வசனம் கைக்கொண்டு
உறுதியாய் நிலைத்திருப்போம் (2)
அவரில் நிலைத்திருந்தால்
பிதா நம்மில் மகிமைப்படுவார் (2)

மெய்யான திராட்சைச் செடி இயேசுவே – அவரில்
நிலைத்திருக்கும் கொடிகள் நாம் தானே


2. இறைவனின் அரசு மலர்ந்திடட்டும்
இந்த பூமியிலே
இறைத்திட்டம் நம்மில் நிறைவேற
நம்மை அர்ப்பணிப்போம் (2)
எளியவர் நம்பிக்கை ஒருநாளும் வீண் போகாது
எளியர் என்றும் மறக்கப் படுவதில்லை (2)

மெய்யான திராட்சைச் செடி இயேசுவே – அவரில்
நிலைத்திருக்கும் கொடிகள் நாம் தானே (2)



பாடல் 5
மெய்யான திராட்சைச் செடி இயேசு தேவா
பிதா தோட்டக்காரர் நாங்கள் கொடிகள்
கனி என்னில் காண தேவன் காத்திருக்கிறார்

1. கனி தரா கொடியெல்லாம் வெட்டப்படுமே
கனி தரும் கொடியெல்லாம் சுத்தமாகுமே (2)
உம்மில் நாங்களும் எம்மில் கர்த்தரும் நிலைத்திருந்து
என்றென்றைக்கும் கனி கொடுப்போம் (2)

2. நான் பிதாவின் கற்பனைகள் கைக்கொள்வது போல்
நீயும் என் கற்பனைகளை கைக்கொள் என்றீரே (2)
உங்கள் சந்தோஷம் நிறைவாகிட
இவைகளெல்லாம் உங்களுக்குச்
சொன்னேன் என்றீரே (2)

3. நான் உங்களில் அன்பாய் என்றும் இருப்பதுபோல்
நீங்களும் அன்பாகவே இருங்கள் என்றீரே (2)
சினேகிதருக்காய் ஜீவனைத் தரும்
அன்பிலும் மேலான அன்பு
ஒன்றும் இல்லையே (2)


பாடல் 6
கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி
என்றும் நினைத்து துதிபாடுவோம்
கிறிஸ்துவின் சாட்சியாய்
ஒன்று கூடி கொண்டாடுவோம்

1. உயர்ந்தவனில்லை தாழ்ந்தவனில்லை
ஜாதிகள் இல்லை இனபேதமும் இல்லை
கிறிஸ்துவின் பாதையில்
கிறிஸ்துவின் அன்பில்
தடைகளை உடைத்தெறிவோம்
திருச்சபையை வளர்த்திடுவோம்

2. துயருற்றோரையும் நலிவுற்றோரையும்
சிறைப்பட்டோரையும் பாவகறைபட்டோரையும்
மேன்மை எடுத்து
மேன்மையை படுத்த
தடைகளை உடைத்தெறிவோம்
திருச்சபையை வளர்த்திடுவோம்
    (பாடல், பண், திரு. ஆப்ரி)


பாடல் 7
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய்
பூமியெல்லம் நிரம்பிடுவாய் – 2 இந்த
திருச்சபையே நீ வேரூன்றுவாய்

1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்தவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்

4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

5. நானே உங்கள் தேவன்
நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்

தந்தன தானே தந்தன தானே தனந்நானே னா… – 2
தந்தன தந்நானே தந்தன தந்நானே தானானே தன நானனே


பாடல் 8
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே

1. மகா பரிசுத்த ஸதலத்தினில்
கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே

2. முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே

3. சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே


பாடல் 9
உம்மை ஆராப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் (2)

1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர்சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே (2)
    - என் நாட்கள்

2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடரச் செய்து
என்னை மீண்டும் நடக்க வைத்தீரே (2)
    - என் நாட்கள்

3. பாவி என்றென்னை தள்ளிடாமல்
அன்போடு அனைத்துக் கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துக்கொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே (2)
    - என் நாட்கள்


பாடல் 10
கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
போற்றிப் பாடு அல்லேலூயா
துதித்துப் பாடு அல்லேலூயா
களித்துப் பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

1. வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

3. தாழ்வில் நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
    அல்லேலூயா – 18

 


பாடல் 11
உங்களை எனக்கெனத் தெரிந்துகொண்டேன்
உலகினில் உங்களைப் பிரித்தெடுத்தேன்

உன்னதத் திட்டத்தை நிறைவேற்றிட
உங்களை நான் தெரிந்துகொண்டேன் (2)
உங்களை நான் தெரிந்துகொண்டேன்
உங்களை நான் தெரிந்துகொண்டேன்

1. பரிசுத்த வாழ்வினைத் தந்தவர் நான்
பரலோக தரிசனம் அளித்தவர் நான் (2)
பந்தயப் பொருளின் இலக்கையே வைத்து
பந்தியில் சேர்ந்திட அழைத்தவர் நான்

2. ஆத்தும தரிசனம் தந்தவர் நான்
ஆதாயம் செய்திட பணித்தவர் நான் (2)
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்து
ஆவியின் அச்சாரம் ஈந்தவர் நான்

3. இந்திய தேசத்தை தந்தவர் நான்
தேவையை உணர்ந்திட வைத்தவர் நான் (2)
திறப்பிலே நின்றிட அழைத்தவர் நான்
திறந்த ஓர் வாசலைக் கொடுத்தவர் நான்


பாடல் 12
1. தேவா உம் கரத்தில் என்னையும்
முத்திரை மோதிரமாய் கண்டீர் (2)
தேசம் எங்கும் சுவிசேஷம் சொல்ல
நேசமாய் என்னையும் தெரிந்து கொண்டீர் (2)

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
பயந்து நிற்பேனோ கலங்கிடுவேனோ (2)
இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர்
இருக்கிறார் என்னுடன் முன்செல்வேனே

2. தேவா என் பெயர் சொல்லி அழைத்தீரே – உம்
நீதியின் கரத்தால் தாங்கிடுமே (2)
ஆவியின் வல்லமை அனுதினம் தந்து
செயல்வீரனாய் என்னை மாற்றிடுமே (2)

3. தேவா என் வாழ்நாள் முழுவதும்
திருச்சபை நாட்டிட உழைத்திடுவேன் (2)
அறியாதோர் இயேசுவை அறிந்திடவே
சுவிசேஷ நற்பணி செய்திடுவேன் (2)


பாடல் 13
அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான்
அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயிரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே (2)

1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் (2)
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்களும் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்
    - யெகோவாயீரெ

2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே (2)
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே
    - யெகோவாயீரே


பாடல் 14
என்னைத் தெரிந்து கொண்ட என் நேசரே
பெயர் சொல்லி அழைத்த என் மேய்ப்பரே (2)
உம் கரத்தில் என்னையே தருகிறேன்
உம் சித்தம் போல் பயன்படுத்தும் (2)
இதோ வருகிறேன் என்னைத் தருகிறேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே

1. உம் அன்பின் ஆழத்தை அறிந்திட
விரும்பியே நான் வந்து நிற்கிறேன் (2)
கல்லான இதயத்தை மாற்றிடும்
கல்வாரி அன்பினால் கழுவிடும் (2)

2. உம் அன்பின் ஆவியை ஊற்றுமே
வரங்களினால் என்னை நிரப்பிடுமே – உம் (2)
வழியில் என்றுமே ஜீவிப்பேன் – முழு
மனதாய் உம்மை சேவிப்பேன் (2)

3. உம் அன்பின் ஊழியம் செய்திட
என்னுடன் இருப்பேன் என்றீரே – முழு
பாரதம் உம்மை அறிந்திட
பாதத்தில் வீழ்ந்தே ஜெபிக்கிறேன்



பாடல் 15
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் (2)
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் – 2
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் (2)
துதிப்போரை கைவிட மாட்டார் – 2

1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
    - தொடர்ந்து

2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விலாது
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்
    - தொடர்ந்து


பாடல் 16
இது செட்டைகளை விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)
உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)

மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்

1. என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனது (2)
உன்னதரின் மகிமை உன்மேல் உதித்ததால்
சிரகடித்து பயந்திடுவேன் (2)

2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது (2)
உன்னதரின் மகிமை என் மேல் உதித்ததால்
சிறகடித்து பயந்திடுவேன் (2)

3. யேசபேலின் சத்தம் ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்து போனது (2)
உன்னதரின் சத்தம் எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் (2)


பாடல் 17
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2)

1. காலை மாலை எல்லா வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கித் தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது
என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை
மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே


பாடல் 18
கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை (7) கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை (7) கிருபையால்…

2. நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை
கிருபை (7) கிருபையால்….

3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை (7) கிருபையால்…

4. வல்லமையை அளித்ததும் உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை
கிருபை (7) கிருபையால்….

5. கிருபையை கொண்டாடுகின்றோம்
தேவ கிருபையை கொண்டாடுகின்றோம்
கிருபை (7) கிருபையால்…


பாடல் 19
வானத்தின் பலகணிகள் திறந்து
இடங்கொள்ளாமற் போகும் மட்டும்
உங்கள் மேல் ஆசீர்வாதத்தை
வருஷிக்கமாட்டேனோ வென்றீர்

அல்லேலூயா அல்லேலூயா – 2
ஆசீர்வாத மழையை
எங்கள் மேல் ஊற்றும் – 2

1. கர்த்தருக்கு பயப்படும் சிறியோர் பெரியோரை
அவரே என்றும் ஆசீர்வதிப்பார்
அவர் சந்ததி பூமியில் பலத்திருக்கும்
செம்மையானவரின் வம்சம் செழிக்கும்
உம் கரத்தை என் மேல் வையும்
என் மேல் வைத்து காத்து கொள்ளும்
நீதிமானின் சிரசின் மேல் ஆசீர்வாதம் தங்குமே

2. உந்தன் ஆசீர் எண்ணற்றதே
நிறைவான ஆசீர் ஏராளம்
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
எந்தன் எல்லையை பெரிதாக்கிடும்
தீங்கு இன்றி காத்துக் கொள்ளும்
உந்தன் ஆசீர் என்றும் தாரும்
கர்த்தரின் ஆசீர்வாதம் ஐஸ்வரியம் தரும்
    (பாடல், பன், திரு. ஆப்ரி)


பாடல் 20
இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்
இதிலும் வளர்ச்சியானவைகளைக் காண்பாய்
என்றுரைத்த கர்த்தரே எந்தன் வாழ்வின் நித்தியரே
துதியும் கனமும் நித்தமும் உங்களுக்கே

1. கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்
நாமும் அதிலே மகிழ்ந்து களிகூர்வோம்
பெரிதானவைகளை நீரே செய்தீரே
உமக்கு நிகரானவர் யார்?
நீரே என்றும் நிகரானவரே

2. வானம் பூமி படைத்த என் தேவன்
உலக சிருஷ்டி கர்த்தரும் நீரே
பரலோக தேவனே பரமனின் ராஜனே
என்றென்றும் துதிக்கிறோம் ஐயா
நன்றியோடு துதிக்கிறோம் ஐயா
(பாடல், பண், திரு. ஆப்ரி ரூஸ்வெல்ட்)



பாடல் 21
தேவனே உம்மை நான் நம்புகிறேன்
என் சத்தம் கேட்டு இரங்கிடுமே
விசுவாசமே சந்தோஷமே
இன்றைய உலகில் என் நம்பிக்கையே

1. உன் சுய புத்தியின் மேல் சாயாமல்
கர்த்தரில் நம்பிக்கையாய் இருங்கள்
உன் வழிகளெல்லாம் அவரை நினை
உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்

2. பரிசுத்த ஆவியின் பலத்தினாலே
நம்பிக்கையில் நாம் பெருகும்படி
சந்தோஷம் சமாதானம் அனைத்திலுமே
நம்பிக்கையின் தேவன் நிரப்பிடுவார்

3. தேவனே நமது இரட்சிப்பாமே
பயப்படாமல் நாம் நம்பிடுவோமே
யெகோவா என் பெலன் கீதமுமே
என்றென்றும் உலகில் என் இரட்சகரே


பாடல் 22
பலங்கொண்டு திடமனதாயிரு
திகையாதே கலங்காதே
நீ போகும் இடமெல்லாம்
உன் தேவனாகிய
கர்த்தர் உன்னோடிருக்கிறார்

உன்னோடிருப்பேன் என்றவர்
உன்னோடென்றும் இருக்கிறார்

1. உன் கால் நிற்கும் இடத்தை
உனக்கு தந்தவர்
உன் வாழ்நாளின் எதிர்ப்பை
தகர்த்து எறிந்தவர்

2. உன்னை விட்டு விலகார்
உன்னை என்றும் கைவிடார்
வாக்கு மாறாத தேவன்
வாக்கின்படி நடந்தால்

3. கர்த்தரின் பிரமானம்
கவனமாய் கைக்கொண்டு
வலது இடப்புறமும் விலகாமல் நடந்தால்
(பாடல், பண்: திரு. லேட். ரூஸ்வெல்ட்)


பாடல் 23
எல்லையில்லா ஆசீர்வாதங்கள்
என் வாழ்வில் அருளினீர்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
துதி கனம் உமக்கே
அல்லேலூயா -3 ஆமென் – 2

1. என்னை ஆசீர்வதித்து
எல்லையை பெரிதாக்கினீர
தீங்கு துக்கப்படுத்தாமல்
விலக்கியே காத்திடும்

2. இஸ்ரவேலின் தேவனே
உமது கரத்தினாலே
என்னோடே கூட இருந்து
விலக்கியே காத்திடும்
    (பாடல், பண்: திரு. ஆப்ரி ரூஸ்வெல்ட்)


பாடல் 24
1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்
போற்றும், போற்றும் தெய்வ குமாரனைப் போற்றும்
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்

2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கிப் பாரினில் ஜென்மித்தார்
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலை திறந்தார்
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா
அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி,
வல்லநாதா, கருணை நாயகா

3. போற்றும், போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்
போற்றும், போற்றும் மீட்பர் மகத்துவமாக
ஆட்சி செய்வார் நித்திய காலமும்
ஏசு ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்


பாடல் 25
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்
    - உம் பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்
    - உம் பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்
    - உம் பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேடிற்றிடுதே
    - உம் பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கிக் களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர்
    - உம் பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன்
    - உம் பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன்
    - உம் பாதம்


பாடல் 26
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்கு
ஸ்தோத்திரம் புகழ்ச்சி நித்திய கீர்த்தனம் என்றும்

அந்தம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினா்ர் அருள் முடி
சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி

1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பாவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரு
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்

கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்
துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்
    – சுந்தரப்

2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லவரன் எனத்துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்

கொண்டாடுங்கள் அவர் பதம் தேடிட வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்
    - சுந்தரப்

3. சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்
உயர்ந்து வாழ தீயோன்

பயந்து தாழ மிக நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்
நயந்தான் என்றும்
    - சுந்தரப்


பாடல் 27
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை

3. அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாத உன் ஆண்டவரை

4. வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய


பாடல் 28
நீங்கள் என்னிலும்
என் வார்த்தை உங்களிலும்
நிலைத்திருந்தால்
நீங்கள் கேட்டுக்கொள்வதேதுவோ
அது உங்களுக்கு செய்யப்படும்

1. கர்த்தா உமது வசனம் என்றும்
வானங்களில் நிலைத்திருக்கும்
நீங்கள் என் உபதேசத்தில்
நிலைத்திருந்தால் மெய் சீஷராவீர்கள்

2. தீமையை விட்டு நன்மையை செய்
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்
ஒருவன் என்னிலும் நிலைத்திருந்தால்
அவனே மிகுந்த நல் கனிகொடுப்பான்
    (பாடல், பண், இசை: திரு. ஆப்ரி)

நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். (2 கொரிந்தியர் 14:15)

வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை. எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. (சங்கீதம் 9:18)

அனைவருக்கும் அனைத்தும்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.