Type Here to Get Search Results !

John Bible Quiz Question in Tamil | வேதாகம புதையல வேட்டை முத்தெடுக்கவா | யோவான் சுவிசேஷம் கேள்விகள் | Jesus Sam

=========================
வேதாகம புதையல வேட்டை
முத்தெடுக்கவா – 2023
வேதபபகுதி: யோவான் நற்செய்தி
=========================
I. பின்வருபவற்றை சரியாக பொருத்துக. (மதிப்பெண் 12)
1. நான் உயர்த்தப்பட்டிருக்கும்போது = அ. அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்

2. சத்தியமாவது என்ன = ஆ. ஆண்டவரே விசுவாசிக்கிறேன்

3. வழியை நாங்கள் எப்படி அறிவோம் = இ. உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட

4. நசரேயனாகிய இயேசு = ஈ. ஆண்டவரே இப்பொழுது….

5. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு = உ. முடிந்தது

6. தேவனுக்கேற்ற கிரியை = ஊ. அவர் அனுப்பினவரை விசுவாசிப்பது

7. வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் = எ. கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவர்

8. என் வேளை இன்னம் வரவில்லை = ஏ. எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்

9. தாகமாயிருக்கிறேன் = ஐ. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்

10. உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் = ஒ. நான் தான்

11. ஒரே பேரானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாக இருந்தது = ஓ. நான்… ஒரு குற்றமும் காணேன்

12. கல்லை எடுத்துப்போடுங்கள் = ஔ. என் ஆண்டவரே! என் தேவனே!



II. சரியான விடையினைத் தேர்வு செய்து எழுதுக. (மதிப்பெண: 14)
1. இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ----------- என யோவான்ஸ்நானகன் அறிவித்தார்.
    அ) குமாரன்
    ஆ) ஆட்டுக்குட்டி
    இ) வார்த்தை
    ஈ) சுவாசம்

2. கானாவூர் கலியாணத்தில் தண்ணீர் கொள்ளத்தக்க கற்சாடிகள் இயேசுவால் அதிசயமாகத் திராட்சரமாக நிரப்பப்பட்டன.
    அ) மூன்று
    ஆ) எட்டு
    இ) ஆறு
    ஈ) ஐந்து

3. இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்த போது, யூதர்கள் இந்த ஆலயத்தை கட்ட -------------- வருஷம் சென்றதே என்றனர்
    அ) முப்பத்து ஆறு வருஷம்
    ஆ) நாற்பத்து ஆறு வருஷம்
    இ) எழுபத்து ஆறு வருஷம்
    ஈ) எண்பத்து ஆறு வருஷம்

4. பிதாவைத் தொழுது கொள்கிறவர்கள் ------------ உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்று இயேசு சமாரியா ஸ்தீரீயிடம் கூறினார்.
    அ) பரிசுத்தத்தோடும்
    ஆ) வார்த்தையோடும்
    இ) மகிழ்ச்சியோடும்
    ஈ) ஆவியோடும்

5. எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருந்த குளத்தில் --------------- வருஷம் வியாதி கொண்டிருந்த மனுஷன் இருந்தான்.
    அ) இருபத்து எட்டு வருஷம்
    ஆ) இருபத்து ஆறு வருஷம்
    இ) முப்பத்து எட்டு வருஷம்
    ஈ) முப்பத்து ஆறு வருஷம்

6. வாற்கோதுமை அப்பங்களையும் ---------------- மீன்களையும் கொண்டு இயேசு ஐயாயிரம் பேரைப்போஷித்தார்.
    அ) ஐந்து அப்பம், இரண்டு மீன்
    ஆ) ஏழு அப்பம், மூன்று மீன்
    இ) இரண்டு அப்பம், ஐந்து மீன்
    ஈ) மூன்று அப்பம், ஆறு மீன்

7. எருசலேம் தேவாலயப் -------------------- பண்டிகையின்போது நீர் கிறிஸ்துவினால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்று யூதர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.
    அ) சீட்டு
    ஆ) கூடாரப்
    இ) ஒளி
    ஈ) பிரதிஷ்டை

8. மரணத்திலிருந்து லாசரு உயிர்த்தெழுந்த பின்பு இயேசு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய ------------- என்னப்பட்ட ஊருக்குப் போய், அங்கே தம்முடைய சீஷருடனே கூடத் தங்கியிந்தார்.
    அ) சாலீம்
    ஆ) எப்பிராயீம்
    இ) கெதரோன்
    ஈ) எப்ரோன்

9. இயேசுவைக் கைது செய்தபோது, சீமோன் பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். அவன் பெயர் ----------------- .
    அ) ரூபஸ்
    ஆ) மல்குஸ்
    இ) ரெஸ்து
    ஈ) காயு

10. “நான் தாகமாயிருக்கிறேன்“ என்று இயேசு கூறிய பிறகு கடற்காளானைக் காடியிலே தோய்த்து ---------------- தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக் கொடுத்தார்கள்.
    அ) மிருது செடி
    ஆ) நச்சுச் செடி
    இ) ஈசோப்பு
    ஈ) மருதோன்றி

11. யூதர்களின் -------------- நாளில் இயேசுவின் சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டது.
    அ) ஓய்வு நாளில்
    ஆ) பண்டிகை நாளில்
    இ) வாரத்தின் முதல் நாளில்
    ஈ) வாரத்தின் கடைசி நாளில்

12. இயேசுவின் தாயாருடைய சகோதரியின் கணவன் --------------- .
    அ) சீலா
    ஆ) கிலெயோப்பா
    இ) பர்னபாஸ்
    ஈ) மாற்கு

13. போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி சிரசின் மேல் வைத்து ------------------- அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்.
    அ) சிவப்பு
    ஆ) ஊதா
    இ) வெண்மை
    ஈ) நீலம்

14. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அற்புதமாகப் பிடிக்கப்பட்ட மீன்களின் எண்ணிக்கை -------------
    அ) நூற்று நாற்பத்து மூன்று
    ஆ) நூற்று இருபத்து மூன்று
    இ) நூற்று ஐம்பத்து மூன்று
    ஈ) நூற்று முப்பத்து மூன்று



III. கோடிட்ட இடத்தை நிரப்புக (மதிப்பெண் 14)
1. --------------------- என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

2. ------------------- நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உ்ண்டாகக் கூடுமோ என்றான்.

3. இயேசு சமாரியா ஸ்திரீயை சந்தித்த ஊர் -------------------

4. -------------- என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருந்தது.

5. -------------- கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்கள்.

6. ----------- அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்.

7. யூதர்கள் இயேசுவிடம் (இவர்) -------------------- எங்கள் பிதா என்றார்கள்.

8. --------------- என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம்.

9. லாசருவின் ஊர் -----------------

10. ------------------ பண்டிகைக்கு முன்பு இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவினார்.

11. பிதாவைக் காண்பியும் என்று இயேசுவிடம் கேட்ட சீஷன் ------------ .

12. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடமாகிய கபாலஸ்தலம் என்பதற்கு எபிரெய பாஷையில் ------------------------ .

13. அடக்கம்பண்ண இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்ட யோசேப்பின் ஊர் ----------------- .

14. கல்லறையில் இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் -------- என்றாள்.


IV. குறுக்கெழுத்துப் புதிர்
1. குளத்தின் அருகில் இருந்த வியாதிஸ்தனை (முடவனை) இயேசு சகப்படுத்திய நாள்.

2. கானாவூர் கலியானத்திற்குப் பின்பு இயேசு சென்ற ஊர்.

3. யூதர்கள் இயேசுவையல்ல ------------------- விடுதலை பண்ண வேண்டும் என்று விரும்பினார்கள்.

4. பிலாத்து ---------- என்று சொல்லப்பட்ட இடத்திலே நியாயசனத்தின் மேல் உட்கார்ந்தான்.

5. ஜனங்களுக்காக இயேசு மரிப்பது நலம் என்ற தீர்க்கதரினசமாக உரைத்த பிரதான ஆசாரியன்.

6. -------------------- -ன் போது, “உபதேசம் என்னுடையதாய் இல்லை“ என்று இயேசு கூறினார்.

7. --------------- என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தமாம்.

8. பிலிப்பு, அந்திரேயா, பேதுரு என்பவர்களுடைய ஊர்.

9. இயேசு உயிர்த் தெழுந்த பின்பு முதலாவது தரிசித்தவள் ------------------ மரியாள்

10. பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட --------------

11. -------------- தீர்க்கதரிசி சொன்னபடியே நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்.

12. இயேசு பரிசேயன் ----------------- வை ----------------------- இஸ்ரவேலின் போதகன் என்று அழைத்தார்.

13. பேதுருவின் மறுதலிப்பை அடையாளப்படுத்திய பறவை

14. சாலிம் ஊருக்கச் சமீபமான ----------- என்னும் இடத்தில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்தார்



V. மனன வசனம் (மதிப்பெண் 30) (நீதிமொழிகள்)
A - மத்திபருக்கு மட்டும் (விடுபட்ட வசனங்களை எழுதவும்)
1. என் மகனே நீ ----------------- நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு ---------- அழைத்து ---------------------- அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

2. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்: ------------------ அவர் கேடகமாயிருக்கிறார். ------------------ சகல நல்வழிகளையும் அறிந்து கொள்வாய். அறிவை உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

3. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை. ------------------ பாதைகளைக் காத்துக் கொள்வாயாக, ---------- பூமியிலே ------------ உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ ------------------- அறுப்புண்டு போவார்கள்.

4. என் மகனே --------- மறவாதே: ------------- நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, ------------------- அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் ------------------- .

5. ------------- சாயமல் உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, ---------------- நீ உன்னை ஞானியென்று எண்ணாதே: ---------- கர்த்தரை கனம்பண்ணு. ------------------ என் மகனே ----------------- அற்பமாக எண்ணாதே.

6. என் மகனே, ----------- அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், -------------- அப்பொழுது நீ ---------------- நீ --------------------- படுக்கும்போது ----------------- உன் நித்திரை இன்பமாய் இருக்கும். ------------------ உன் கால் ------------- காப்பார்.

7. ---------- அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே, ------------- நினையாதே. ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க, ---------------- அவனோடே வழக்காடாதே.

8. ------------- பொறாமை கொள்ளாதே ----------------- அவர் ஆசீர்வதிக்கிறார் ------- ஞானவான்கள் ------------- .

B. முதியோருக்கு மட்டும் (சங்கீதம் 71:1-10)



VI. பொது வினா
1. யோவான் நற்செய்தி நூலில் மனிதனாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்ற உண்மையை யோவான் எவ்வாறு விளக்கியுள்ளார்?

2. இயேசுவை உங்கள் ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? (ஆம்/இல்லை)
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.