Type Here to Get Search Results !

JC VBS 2019 Song Lyrics | வழிபடுவோம் வாழ்ந்து காட்டுவோம் | விடுமுறை வேதாகம பள்ளி பாடல்கள் | Sunday School Christian Kids Songs Tamil | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
8-வது JC VBS பாடல்கள் 2019

தலைப்பு:
வழிபடுவோம் வாழ்ந்து காட்டுவோம் (சங்கீதம் 100)


பாடல்  1
4/4/Gm/120
எல்லா புகழுக்கும் உரியவரே
இருப்பவராக இருப்பவரே (2)

நேற்றும் இன்றும் என்றென்றுமே மாறாதவரே
எப்போதும் என்னோடு இருப்பவரே (2)

உம்மை வழிபடுவேன் வாழ்த்திடுவேன்
உமக்காய் நான் என்றென்றும் வாழ்ந்து காட்டுவேன் (2)
பாடல் ஆசிரியர்: அருள்திரு. S. பிரபுதாஸ்


பாடல் - 2:
Biola/Cm/140
வழிபடுவேன் இயேசுவை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் நன்றியால் போற்றிடுவேன் (2)

ஒன்றுமில்லாமல் இந்த பூமியில் அலைந்தேன்
ஆசீர்வதித்து என்னை பெருகச் செய்வார் (2)

பூமி அனைத்திற்கும் ஆண்டவர் – அவர்
பூமியை எனக்கு சொந்தமாகத் தந்தார் (2)

ஏல் எல்லோகே இஸ்ரவேல் (4)
பாடல் ஆசிரியர்: திருமதி. K. கிரேஸி


பாடல் - 3:
4/4 Rock /F/75
சுற்றுகின்ற பூமி உம்மை துதிக்குதே
உம் பெருமை என்றும் சொல்லி மகிழுதே (2)

வானம் பூமி யாவும் உம்மை பாடுதே
உம் மகிமை என்றும் சொல்லி மகிழுதே (2)

குட்டி சுட்டி தம்பி / தங்கை அவரை போற்றிடு
இயேசு இயேசு என்று போற்றித் துதித்திடு (2)
    லல லல லா…..

பாடல் ஆசிரியர்: திருமதி. ஹேமா ஞானசுகந்தி


பாடல் – 4:
4/4/A/160
People on the Earth
Raise your voices to high
All on the Earth
In GOD you shall rejoice (2)

Singing songs of Joy – to
Everlasting GOD on High (2)
பாடல் ஆசிரியர்: திரு. D. ஜான் ஃபிரடெரிக்


பாடல் – 5:
Biola/Gm/145
மே… மே… மே… மே… மே… மே… (2)

நான் தான் 100 நான் தான் 100
பாவ வழியில பாதை தடுமாறி
துள்ளி துள்ளி, தள்ளி தள்ளி
காணாம போன கடைக்குட்டி நானு (2)

மேய்ப்பன் இயேசு தேடி வந்தாரு
துள்ளிய என்னை அள்ளி அணைச்சாரு (2)

இரத்தத்தாலே மீட்டு புதுவாழ்வு தந்தாரு
நூத்துக்கு நூறு நான் சரியானேனே
இரட்சகர் இயேசுவின் பின்செல்வேனே (2)

மே… மே… மோ… மே… மே… மே… (2)

பாடல் ஆசிரியர்: திருமதி. P. ரூபவதி


பாடல் – 6:
4/4 Ballad/Bm/90
பிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உண்டாக்கினீரே
உருவாக்கப்பட்ட ஆதாமைப்போல நான் பாவம் செய்தேனே

உம்மிடத்தில் என்னை ஒப்படைக்கிறேன்
பாவங்கள் மன்னியும் அன்பு இயேசுவே (2)

புது வாழ்வு தந்து புது சிருஷ்டியாக என்னை மாற்றுமே – 2
என்னை மாற்றுமே….
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


 
பாடல் – 7:
4/4 Pop /F/115
கோழிக்குஞ்சுகளை கொள்ளையடிக்க
பாய்ந்து வருது பருந்து
கோழி தன் குஞ்சுகளை மூடிக்கொண்டு
காக்குது பருந்திடமிருந்து (2)

இயேசு என்னை எல்லா தீமையிலிருந்தும் காக்கின்றார்
வாழ்நாளெல்லாம் கரம் பிடித்து என்னை நடத்துகின்றார் (2)
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் – 8:
4/4 Latin / Am / 108
Google வழியும் சரியில்ல
ரோட்டுல வழியும் சரியில்ல (2)

உம் வழியை எனக்கு காட்டும்
உம் பாதையை எனக்கு போதியும் (2)

உம் சத்தியத்தில் என்னை நடத்தும்
உம் வார்த்தையே என்னை காக்கும் (2)

உம் கரம்பிடித்து என்னை நடத்திடும்
உம் வழியிலே நான் பின்செல்லுவேன் (2)

வாழ்த்துவேன் உம்மை வழிபடுவேன்
துதிப்பேன் உம்மையே துதித்திடுவேன் (2)
பாடல் ஆசிரியர்: அருள்திரு. G.P.இராஜா


பாடல் - 9:
4/4 Thavil / F / 110
கர்த்தர் நல்லவர்
அவர் என்றும் நல்லவர்
அவரை நம்பிடு நீ – 2 (2)

நல்லவர் மேலும் தீயவர் மேலும்
இரக்கம் உள்ளவர்
தீயவரை மாற்றிடவே கிருபை தருபவர் (2)

கர்த்தர் நல்லவர்
அவர் என்றும் நல்லவர் (2)
பாடல் ஆசிரியர்: திரு. S. ஈஸ்டர் ஞானராஜ்


பாடல் - 10:
Biola ? Em / 140
ஒளிதந்து வழிநடத்தும் கர்த்தர் நல்லவர்
நாமும் வாழ உலகைப் படைத்த கர்த்தர் நல்லவர் (2)

தேவைகள் அனைத்தும் தந்திடும் கர்த்தர் நல்லவர்
தேற்றியே அனைத்தும் காத்திடும் கர்த்தர் நல்லவர் (2)

மனுஷனுக்காக உசுரத் (உயிரைத்) தந்த இயேசு நல்லவர் – 2

இயேசுவினால் மன்னிப்பு தந்த கர்த்தர் நல்லவர்
நேற்றும் நல்லவர் இன்றும் நல்லவர் என்றும் நல்லவர் (2)
(இந்த) மனுஷனுக்காக உசுரத் தந்த இயேசு நல்லவர் – 2
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் - 11:
4/4 Ballad / C / 90
ஆஹா ஹ… ஆலயம் செல்வேன்
லா… லா… லா… ஆலயம் செல்வேன்

ஆலயத்தை அசட்டை பண்ணாமல்
ஆலயத்தில் சேட்டை பண்ணாமல் (2)
ஆண்டவரைத் துதிப்பேன் அல்லேலூயா பாடுவேன் – 2
ஆஹா ஹா… ஆலயம் செல்வேன்
லா… லா… லா… ஆலயம் செல்வேன்

கருத்தோடு வேதம் படிப்பேன்
ஊக்கமாய் ஜெபம் செய்வேன் (2)
ஆண்டவரைத் துதிப்பேன் அல்லேலூயா பாடுவேன் – 2
ஆஹா ஹா… ஆலயம் செல்வேன்
பாடல் ஆசிரியர்: திரு. S. ஈஸ்டர் ஞானராஜ்


பாடல் – 12:
4/4/Em/130
போலோ போலோ சச்சா போலோ – 2

உண்மையுள்ள ஆண்டவரு
உன்னோடு இருக்கிறாரு (2)
போலோ போலோ சச்சா போலோ – 2
சலோ சலோ... சாலோ… சாலோ... – 2
வேதம் காட்டும் பாதையில சாலோ சாலோ – 2

உண்மையாக வாழ்ந்திடுவாய்
உயர்வை நீயும் பெற்றிடுவாய் (2)

போலோ போலோ சச்சா போலோ 2
சலோ சலோ… சாலோ… சாலோ… - 2
பாடல் ஆசிரியர்: திருமதி. J. வனிதா சர்மா




பாடல் - 13:
4/4/G/110
நல்ல நிலத்தில் விழுந்த விதை பயிராகுமே
என் மனதில் உம் வசனம் என்றும் செழித்து வளருமே (2)

வேத வசனம் தினமும் கற்றிடுவேன்
தேவன் தரும் ஞானம் பெற்றிடுவேன் (2)

உணர்வுள்ள வாழ்க்கை வாழுவேன்
நூறு மடங்கு பலன் கொடுத்திடுவேன் (2)

தந்தன தானே… தானானே தந்தன தானே …. – 2
பாடல் ஆசிரியர்: திரு. S. ஈஸ்டர் ஞானராஜ்





பாடல் - 14:
4/4/G/100
வளர்ந்திடு! வளர்ந்திடு! தம்பியே / தங்கையே
அறிவில் வளர்ந்திடு – தம்பியே / தங்கையே (2)

எந்த அறிவில் வளர்ந்திட நான்?
Maths - ஆ, Physics - ஆ, Chemistry - ஆ, Biology - ஆ,
Mm Hm (2) More then that (2)

கர்த்தரை அறியும் அறிவினிலே
வளர்ந்திட வேண்டும் தம்பி / தங்கை (2)

வேதத்தை நன்றாய் வாசித்திடு
வசனத்தை நன்றாய் படித்திடு
மேன்மை கிடைத்திடுமே
நூறு மடங்கு பலனும் கிடைத்திடுமே (2)
பாடல் ஆசிரியர்: திருமதி. ஜாய் சார்லஸ்


பாடல் – 15:
6/8/C/110
ஜிக்கு புக்கு (3) ஜிக்கு ஜிக்கு சா 2- (2)
ஆலயம் செல்வேன் மனமகிழ்வுடனே – 2
ஆலயத்திற்குள் தேவமகிமையை உணர்ந்திடுவேனே – 2

ஜிக்கு புக்கு (3) ஜிக்கு ஜிக்கு சா (2) - 2
அர்ப்பணித்து நானும் ஆராதனை செய்வேன் - 2
ஆலயத்திற்காய் உண்மையாக உழைத்திடுவேனே – 2

ஆலயம் நானும் சென்றிடுவேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் (2)
பாடல் ஆசிரியர்: திருமதி. J. வனிதா சர்மா



பாடல் - 16:
4/4 Disco / Bm 128
அசதியாய் அல்ல ஆர்வமாக
வெறுப்பாய் அல்ல பொறுப்பாக (2)
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரை நாம் சோவிப்போம் (2)
கருத்தோடும் கவனத்தோடும்
கர்த்தருக்காய் நாம் உழைத்திடுவோம் (2)

இயேசுவை என்றும் பறைசாற்றுவோம் – 2
பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்



பாடல் - 17:
4/4/Am/150
கொடுப்பது தான் சந்தோஷமே
கொடுப்பதினால் குறைவில்லையே (2)

நேரத்தை கொடுத்திடு தாலந்தை கொடுத்திடு
அன்பின் மிகுதியினால் எல்லாமே – கொடுத்திடு (2)

பெருக்கவே கேட்கிறாரே
கொடுத்திட்டால் பெருக்கிடுவாய்
சமப்படுத்தவே கேட்கிறாரே
கொடுத்திடு சமநிலையே
    - நேரத்தை கொடுத்திடு
பாடல் ஆசிரியர்: அருள்திரு. A. பீட்டர் ஜோசப்


பாடல் - 18:
4/4 Rock & Roll / Dm/150
நன்றிகள் ஆயிரம் கூறிடுவேன்
ஸ்தோத்திரம் என்றுமே சொல்லிடுவேன் (2)
நன்மைகள் செய்திடும் கர்த்தருக்கே (2)

போற்றி துதிக்கின்றேன் – என்னை
அர்ப்பணம் செய்கின்றேன் (2)

முழு உள்ளம் கொடுக்கின்றேன் கர்த்தருக்கே
முழுவதும் என்னையே தருகிறேன் (2)
பாடல் ஆசிரியர்: திரு. S. ஈஸ்டர் ஞானராஜ்

பாடல் - 19:
பலன் உண்டு தம்பி பலன் உண்டு தங்கை
பரலோகில் நிச்சயம் பரிசு உண்டு (2)

சோர்ந்திடாமல் ஓடிடு
இலக்கை / இயேசுவை நோக்கி ஓடிடு (2)

அவருக்காய் என்றும் உழைத்திடு
நிச்சயம் பரிசுண்டு பெற்றிடு (2)

பப்பப்பாபா….. பப்பப்பாபா ……. (2)
பாடல் ஆசிரியர்: திரு. S. ஈஸ்டர் ஞானராஜ்


பாடல் – 20
4/4 Latin / Dm / 130
இயேசுவுக்காய் வாழும்போது
பரிசு நிச்சயம் கிடைத்திடுமே
பரிசுத்தமாய் வாழும்போது
புது பெயரும் நமக்கு கிடைத்திடுமே (2)

முயன்றிடுவோம் பெலன் அடைவோம்
பரலோக வாழ்வை நாம் பெற்றிடுவோம்
வென்றிடுவோம் நாம் வென்றிடுவோம்
ஜீவ கிரீடத்தை வென்றிடுவோம் (2)
பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு


பாடல் – 21
4/4Bb/100
O Taste and see that
Our GOD is good! (2)

Blessed is the man
Who trust in HIM (2)

O Taste and see that
Our LORD is good (2)

Blessed is the man
Who fears HIM (2)

பாடல் ஆசிரியர்: திரு. S. ஈஸ்டர் ஞானராஜ்



பாடல் – 22
ஆசிரியர் பாடல்
4/4/E/127
வழிபடுவோம் நாம் வாழ்ந்து காட்டுவோம்
வாழ்வின் அனைத்தையும் அர்ப்பணிப்போம் (2)
வாழ்வளிக்கும் இயேசுவின் சாட்சிகளாய்
வாழ்ந்திடுவோம் நாம் வாழந்து காட்டுவோம் (2)
வழிபடுவோம் நாம் வாழ்ந்து காட்டுவோம்
நம் வழிபாடு வாழ்வாய் மாறட்டுமே (2)

1. உண்மையானவரை நாம் வழிபடுவோம் – நம்மை
உருவாக்கின கர்த்தரையே வழிபடுவோம் (2)
வழிநடத்தும் இறைவனை உயர்த்திடுவோம்
வாய்மையான இயேசுவை போற்றிடுவோம் (2)
    - வழிபடுவோம்

2. உணர்வுடனும் நன்றி உணர்வுடனும்
உண்மையாய் வாழ்ந்து காட்டிடுவோம் (2)
மகிழ்வுடன் நாம் இயேசுவை காண்பிக்கவே
மாமன்னர் இயேசுவில் வாழ்ந்து காட்டுவோம் (2)
    - வழிபடுவோம்
பாடல் ஆசிரியர்: அருள்திரு. A. டேவிட் ஜெபராஜ்


பாடல் – 23
நாட்டியப் பாடல்
4/4/Dm/95
அனைத்தையும் படைத்து
ஆசியை அருளும்
இறைவனை (இயேசுவையே) என்றும் வழிபடுவோம்
ஈந்தாரே தம்மையே
என்றென்றும் நமக்காய்
ஏசுவுக்காய் என்றும் வாழ்ந்திடுவோம்

உலகின் குடிகளே ஒன்றாய் வழிபடுவோம்
ஊக்கமாய் உண்மையாய் வழிபடுவோம்
என்றும் வழிநடத்தும் இயேசுவை வழிபடுவோம்
ஏகமாய் போற்றி நல்லவரை வழிபடுவோம்
ஐயமின்றி உண்மையோரை வழிபடுவோம் (2)

ஒருமன உணர்வோடு வாழ்ந்திடுவோமே
ஓங்கிய மகிழ்ச்சியோடு வாழ்ந்திடுவோம்
ஔதாரிய (உதாரத்துவமான) நன்றியோடு வாழ்ந்திடுவோமே
அஃதையான (ஓர் அரசனான) இயேசுவுக்காய் வாழந்திடுவோமே
வழிபடுவோம் வாழ்ந்திடுவோம் (2)

பாடல் ஆசிரியர்: அருள்திரு. A. டேவிட் ஜெபராஜ்


இளையோர் திருச்சபையைப் பற்றி:
அருட்பெருந்திரு. முனைவர். M. ஜோசப் (பேராயர் – தலைவர்)

அருள்திரு. A. வினோலின் காலேப் (இயக்குநர்)

திரு. T. டேனியல் (சிறார் இணை இயக்குநர்)
திரு. A. ஜோசப் பால்சிங் (வாலிப இணை இயக்குநர்)


இளையோர் திருச்சபையின் முழுநேரப்பணியாளர்கள்:
திரு. S. ஜான்
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஹோசன்னா
திரு. R. தீமோத்தேயு
திரு. P. ஜான் கிரேட் செல்வராஜ்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திரு. G. ஆண்றோ
திரு. J. ஜான் அருள் பிரசாத்
திரு. L. எபினேசர்
திருமதி. J. வனிதா சர்மா
திரு. T. ரிச்சர்டு
திரு. E. பொன் ஆஸ்வால்ட் ராஜா
திரு. J. சாம் ஜெபத்துரை
திருமதி. K. கிரேஸி
திருமதி. D. எமிமா கிரேட் செல்வராஜ்

முழு நேர தன்னார்வலர்கள்:
திரு. A. தாமஸ் டேனியல் ராஜ்
திரு. M. தாவீது ராஜா
திரு. J. வினோத் குமார்

தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Phone: 0452-2568224
Cell: 9600990783

E-mail: csidmrjcm@gmail.com 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.