Type Here to Get Search Results !

JC VBS 2018 Song Lyrics Tamil | எல்லாவற்றிலும் சுகமாயிரு | Sunday School Kids Songs Lyrics | ஞாயிறு பள்ளி பாடல்கள் | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
JC VBS 2018

கருப்பொருள்:
எல்லாவற்றிலும் சுகமாயிரு 
(3 யோவான் 2)


பாடல் வரிகள்

பாடல் 1
G/135/4/4
Hey தம்பி How are you?
Hey தங்கை How are you?

நலமா நலமா நீ நலமா?
உன் ஆத்துமா சுகம் தானா? (2)

உன் ஆவி ஆத்துமா சரீரத்திலே
சுகம் தரவே இயேசு அழைக்கிறார் (2)
ஓடிவா ஓடிவா நீ எல்லாவற்றிலும் சுகமாயிரு – 2
பாடல் ஆசிரியர்: Bro. S. ஈஸ்டர் ஞானராஜ்


பாடல் 2
Fm/120/4/4
என் ஆத்துமா எப்படி இருக்கின்றதோ
என் வாழ்வும் அப்படியே இருந்திடுமே (2)
இயேசு தங்கும் இதயத்தில்
இன்பம் என்றும் இணைந்திடுமே (2)
அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல – முழு
வாழவிலும் தெரிந்திடுமே (2)
லல்லாலால…. லல்லாலால
பாடல் ஆசிரியர்: Bro. J. டேவிட் சாமுவேல்


பாடல் 3
Bb/95/4/4
உள்ளத்தில் இயேசு வந்தாலே
பாவம் சாபம் எல்லாம் நீங்கிவிடும்
ஆத்துமாவில் பரிசுத்தம் வந்தால்
உள்வாழ்வு சுகமாய் மாறிவிடும் – என் (2)

என் முழு உள்ளம் என் முழு ஆத்துமா
என் முழு பெலன் என் முழு மனம்
எல்லாமே சுகமாய் மாறிவிடும் – 2 (2)
பாடல் ஆசிரியர்: Bro. G.P. இராஜா


பாடல் 4
Dm/85/Balad
என்னை எனக்கு காட்டி
என் தவறை உணர்த்தி காட்டி
என் நிலமையை மாற்றும் இயேசுவே
உம் இரத்தத்தாலே என்னைக் கழுவுமே (2)

ஆத்துமாவை நஷ்டப்படுத்தினேன்
நீர் காட்டிடும் வாழ்வை மறந்துபோனேன் (2)

அர்ப்பணித்தேன் என்னை ஏற்றுக்கொள்ளும்
உள் வாழ்வில் சுகம் பெற்று வாழ்ந்திடுவேன் (2)
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு


பாடல் 5
Gm/145/Biola
சுகமான வாழ்வு சமாதான வாழ்வு – 2
என் ஆத்துமாவில் எப்போதும் சுகமான வாழ்வு
என் ஆத்துமாவில் எப்போதும் சமாதான வாழ்வு (2)

பாவ மன்னிப்பை அருளினாரே இயேசு
பரிசுத்த வாழ்வை தந்தாரே இயேசு (2)

லாலலல்லா லாலலல்லா – 2
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு


பாடல் 6
G/180/4/4
If there is no Jesus
There is no Peace
If you know Jesus
You will know peace (2)

Know -2 Jesus Christ – get
Peace – 2 everywhere (2)
Peace be with you everyday – 2
பாடல் ஆசிரியர்: Bro. S. ஈஸ்டர் ஞானராஜ்


பாடல் 7
Em/145/Biola
மாறிப்போச்சு மாறிப்போச்சு – என்
உள்ளமெல்லாம் மாறிப்போச்சு
மாறிப்போச்சு மாறிப்போச்சு – என்
சரீரமெல்லாம் மாறிப்போச்சு (2)

சிக்கன்குனியா மாறிப்போச்சு
டெங்குகாய்ச்சல் மாறிப்போச்சு
பாவ வாழ்வு பறந்துபோச்சு
பழைய வாழ்வு மறந்து போச்சு

எல்லாமே மாறிப்போச்சு – என்
இயேசுவின் இரத்தத்தாலே மாறிப்போச்சு (2)
பாடல் ஆசிரியர்: Bro. G.P. இராஜா


பாடல் 8
D/120/4/4
குஷ்டரோகம் பிடித்த நாகமான்
சிறுபெண்ணின் வார்த்தையைக் கேட்டு

சென்றார் எலிசாவைத் தேடியே
பெற்றார் சுகம் சுகமே (2)
அவர் வாழ்க்கையில் அற்புதமே – 2

தொட்டு சுகம் பெற நினைத்தாரே
வார்த்தையினால் சுகம் கிடைத்ததே (2)
மெய்யான தேவனை அறிந்தாரே
அவரிடம் அன்பு வைத்தாரே – நம் (2)
பாடல் ஆசிரியர்: Bro. S. ஈஸ்டர் ஞானராஜ்


பாடல் 9
Fm/100/4/4
நேசிக்க வேண்டும் நான் நேசிக்க வேண்டும்
மற்றவர்களை நேசிக்க வேண்டும் (2)
ஒரு ஆட்டை நேசித்த நல்ல மேய்ப்பனைப் போலவே
வேலைக்காரனை நேசித்த 100-க்கு அதிபதி போலவே (2)
என் நேசமும் பிறரோடு வேண்டுமே
எந்நாளுமே சுகம் பெற்று வாழவே (2)
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு


பாடல் 10
A/125/Fusion
உன்னைப்போல் பிறரையும் நேசி என்று
நம் இயேசு சொன்னாரே (2)
மாற்றுத் திறன் உள்ளவரை நேசிப்பவர் எத்தனை (2)
தன் வேலைக்காரனை நேசித்தார் நூற்றுக்கு அதிபதி
அவர் விசுவாசத்தை மெச்சினார் பரலோக அதிபதி (2)
முதல் அன்பை கர்த்தருக்கே தந்திடுவேன்
என்னைப்போல் பிறரையும் நேசிப்பேனே (2)
பாடல் ஆசிரியர்: Bro. J. டேவிட் சாமுவேல்


பாடல் 11
Bm/130/Biola
டம் டம் டம் டம் தாளம் கொட்டி
ப்பபர பப்பர பாட்டு பாடி
இயேசுவுக்கு சலாம் போடுவோம் – அவரை
எக்காளம் ஊதி துதித்திடுவோம் (2)

ஆலயத்திற்குள் உண்மையாய் சென்றிடுவோம்
வேதத்தை சுமந்து உற்சாகமாய் சென்றிடுவோம் (2)
சத்தியத்தில் என்றும் நடந்திடுவோம் -2
    - டம் டம் தாளம்

ஆலயத்திற்காய் உண்மையாய் உழைத்திடுவோம்
வார்த்தையில் சுகத்தை என்றென்றும் பெற்றிடுவோம் (2)
சாட்சியாய் என்றென்றும் வாழ்ந்திடுவோம் – 2
    - டம் டம் தாளம்
பாடல் ஆசிரியர்: Bro. G.P. இராஜா


பாடல் 12
D/85/Rock & Roll
ஆலயம் செல்வேன் பரிசுத்தமாய் செல்வேன் – 2
ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை ஆராதிப்பேன் – 2

மனமகிழ்ச்சி தந்திடும் ஆராதனை
புதுவாழ்வு தந்திடும் ஆராதனை (2)
வேதத்தை கற்றிடும் வேளை நம்மை
ஜெபத்தில் இணைக்கும் வேளை (2)

அகமகிழ்ந்து நாம் ஆராதிப்போம்
ஆவியோடும் உன்மையோடும் ஆராதிப்போம் (2)
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு


பாடல் 13
Bm/130/Dandia
உலகைப் பார்க்க இருக்குது Google - இந்த
உள்ளத்தைப் பார்க்க இருப்பதோ Bible – உன் (2)
அனுதினம் படித்தால் நம்மைப் பற்றி தெரியும் – உலகில்
நடந்திட பாதை அழகாக / தெளிவாக தெரியும் (2)
இது கர்த்தரின் வார்த்தை
இயேசு கிறிஸ்துவின் வார்த்தை (2)
மனதின் இருளைப் போக்கிடுமே – இதைப்
படித்து ஜெயிப்போம் வாழ்வினிலே (2)
பாடல் ஆசிரியர்: Bro. J. டேவிட் சாமுவேல்


பாடல் 14
A/90/4/4
வசனமே சத்தியம் – உலகில் – 4
வசனம் நம்மை விடுதலையாக்குமே – 2

வசனத்தை அனுப்பி இயேசு நமக்கு
சுகம் கொடுப்பாரே இயேசு – 2 (2)

வசனத்துக்கு காத்திரு – தேவ – 4
இரட்சிப்புக்கு நம் ஆத்துமா தவிக்கிறதே – தேவ - 2

அதிகாலையில் எழுந்திடுவோம்
வசனத்துக்கு காத்திருப்போம் – அவர் (2)
பாடல் ஆசிரியர்: Bro. தயாநிதி பேசிங்கர்


பாடல் 15
D/85/4/4
குஷ்டரோகி பத்து பேருங்க இயேசுவை தேடி போனாங்க – 2
இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும் என்றாங்க – 2
மனதுருகி சுகம் அளிக்க ஆரோக்கியமாய் போனாங்க – இயேசு - 2
ஒரே ஒரு மனிதர் மட்டும் நன்றி சொல்லி போனாருங்க – 2
சுகம் பெற்ற நாம் நன்றி சொல்ல ஆலயம் போவோங்க
ஆலயம் சென்று காணிக்கை செலுத்தி ஆசீர்வாதம் அடைவோங்க
பாடல் ஆசிரியர்: Sis. S. சாராள் சாலமோன்


பாடல் 16
Dm/100/4/4
எத்தனையோ நன்மைகளை
இயேசு எனக்கு செய்திட்டார்
இத்தரையில் நன்றியோடே
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவேன் (2)
என் பணமும் பொருளும் திறமையும்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிப்பேன் (2)
என்னை முழுவதுமாய் காணிக்கையாக்கினேன் கர்த்தருக்கே – 2
பாடல் ஆசிரியர்: Bro. J. டேவிட் சாமுவேல்


பாடல் 17
Am/100/4/4
வாழ்ந்து காட்டு தம்பி வாழ்ந்து காட்டிடு
வாழ்ந்து காட்டு தங்கை வாழ்ந்து காட்டிடு

என்றென்றும் சுகமாய் வாழ்ந்து காட்டிடு
சாட்சியாக இயேசுவுக்காய் வாழ்ந்து காட்டிடு (2)
மாற்றம் மாற்றம் மாற்றம்
பூமியில் செய்வோம் புது மாற்றம் (2)
இயேசு தரும் மாற்றம்
நம் வாழ்வில் புது மாற்றம் (2)
எல்லாருக்கும் நற்செய்தி சொல்லிடுவோம்
பூமியிலே சுகத்தை தந்திடுவோம் (2)
பாடல் ஆசிரியர்: Bro. G.P. இராஜா


பாடல் 18
Gm/95/4/4
ஓஹோ ஓஹோ…. ஓ…. ஓ….. – 2
துடுப்ப கொஞ்சம் வேகம் போட்டு
பயணம் போவோங்க – நாம
ஜீவக்கரையில் சேர்ப்போமுங்க (2)
பரிசுத்தர் இயேசுவை எல்லோருக்கும் சொல்வோமுங்க
பார் எங்கும் அவர் நாமம் விரைவாக கொண்டு செல்வோமுங்க (2)
    - ஓஹோ ஓஹோ … ஓ…. ஓ – 3
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு



பாடல் 19
G/140/4/4
பரிசுத்தர் கூட்டத்தோடு நானும் பாடுவேன்
பரிசுத்தராம் உம்மையே என்றும் வாழ்த்துவேன் (2)
அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவேன்
வற்றாத நீரூற்றாய் வாழ்ந்து மகிழ்வேன் (2)
ஹையா – 4 ஹையா ரே – 2 ஹோ – 2
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு


பாடல் 20
Am/95/4/4
கர்த்தரையே நீ தேடு
அவரையே நோக்கி ஓடு (2)
இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்படு
தினம் அவரின் வழிகளிலே நடந்திடு (2)
இயேசு தருவார் உனக்கொரு வீடு
சுகம் அனைத்தும் நிறைவான நாடு (2)
அதுதான் பரலோக வீடு
அதையே அனுதினம் நாடு (2)
பாடல் ஆசிரியர்: Bro. J. டேவிட் சாமுவேல்


பாடல் 21
Dm/105/4/4
பட்டம் போல நானும் பறந்திடுவேன்
படகை போல நானும் மிதந்திடுவேன் (2)
பாவம் என்னும் கடலில் நான் மூழ்கிபோகமாட்டேன்
படைத்தவரின் கரத்தைவிட்டு விலகி போயிடமாட்டேன் (2)
வார்த்தையிலே தினம் நிலைத்திடுவேன்
அவருக்குள்ளே நான் வளர்ந்திடுவேன் (2)
உண்மையான சுகத்தை தினம் பெற்றிடுவேன் – 2
பாடல் ஆசிரியர்: Bro. N. சர்மா பிரபு


பாடல் 22
A/90/4/4
தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான் – 2
தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான
இருதயத்தை நீர் புறக்கணியீர் (2)
தாவீதை போல் நானும்
நொறுங்குண்ட நிலையில் இருந்தேனே (2)
நொறுங்குண்ட வாழ்க்கையில்
மீண்டும் காப்பவர் என் இயேசு ஒருவரே (2)
பாடல் ஆசிரியர்: Bro. பெஞ்சமின்


பாடல் 23
ஆசரியர் பாடல்
Dm/135/2/4
எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவில் சுகமடைவோம்
எல்லாவற்றிலும் நாம் சுகத்துடன் மகிழ்ந்திடுவோம் (2)
எல்லாவற்றிலும் நாம் மகிழ்வுடன் செயல்படுவோம்
எல்லாவற்றிலும் நாம் இயேசுவை உயர்த்திடுவோம் (2)
    அல்லேலூயா …. அல்லேலூயா – 4

1. இயேசுவின் அன்பினை அனுபவிப்போம்
இயேசுவில் முழுமையாய் அன்புகூர்வோம் (2)
இயேசுவை உண்மையாய் ஆராதிப்போம்
இயேசுவின் உண்மையில் சுகமடைவோம் (2)
    அல்லேலூயா…. அல்லேலூயா – 4

2. ஆரோக்கிய வாழ்வுடன் சாட்சி சொல்வோம்
ஆண்டவர் இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் (2)
என்றென்றும் இயேசுவுடன் வாழ்ந்திடவே
என்றென்றும் உழைத்தே சுகமடைவோம் (2)
    அல்லேலூயா…. அல்லேலூயா – 4

3. அடுத்த நம் தலைமுறை சுகமடைய – முழு
அன்புடன் இயேசுவையே கூறிடுவோம் (2)
நானிலம் சுகவாழ்வில் நிலைத்திடவே
நாமும் சோர்வின்றி உழைத்திடுவோம் (2)
    அல்லேலூயா…. அல்லேலூயா – 4
பாடல் ஆசிரியர்: அருட்திரு. ஆ. டேவிட் ஜெபராஜ்


பாடல் 24
நாட்டியப் பாடல்
அனைத்திலும் சுகமாக வாழ்ந்திடவே
ஆண்டவர் இயேசு நம்மை அழைக்கின்றாரே
குற்றங்கள் மிகுந்திடும் உலகத்திலே
குற்றமில்லா இயேசு நம்மை அழைக்கின்றாரே

1. ஆத்தும சுகத்தை அருளிடவே
சரீர சுகத்தையும் கொடுத்திடவே (2)
அன்பிற்காய் ஏங்கிடும் உலகத்திலே
அன்போடு வாழ்ந்திட அழக்கின்றாரே – 2
    - அனைத்திலும்

2. மாய்மாலம் நிறைந்திட்ட உலகத்திலே
கர்த்தரின் சாட்சியாக வாழ்ந்திடவே (2)
பாரங்கள் யாவையும் தொலைத்திடவே
பரலோக வாழ்வு தந்து அழைக்கின்றாரே – 2
    - அனைத்திலும்
பாடல் ஆசிரியர்: Bro. J. டேவிட் சாமுவேல்


எங்களுக்காக ஜெபியுங்கள்
அருள்பெருந்திரு. Rt.Rev. Dr. M. ஜோசப் (பேராயம் – தலைவர்)

அருள்திரு. A. டேவிட் ஜெபராஜ் (இயக்குநர்)

திரு. T. டேனியல் (சிறார் இணை இயக்குநர்)
திரு. A. ஜோசப் பால்சிங் (வாலிபர் இணை இயக்குநர்)

திரு. S. ஜான்
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. R. இம்மானுவேல்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஹோசன்னா
திரு. R. தீமோத்தேயு
திரு. P. ஜான் கிரேட் செல்வம்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திரு. G. ஆண்ஹோ
திரு. J. ஜான் அருண் பிரசாத்
திரு. V. ஆசீர்வாதம்
திரு. L. எபினேசர்
திருமதி. J. வனிதா சர்மா
திரு. T. ரிச்சர்டு
திரு. E. பென் ஆஸ்வால்டு ராஜா

முழு நேர தன்னார்வலர்கள்
திரு. J. ரூபன்
திரு். A. தேவேந்திரகுமார்
திரு. P. ஜான்சன்
திரு. A. தாமஸ் டேனியல் ராஜ்
திரு. M. தாவீது ராஜா

தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Phone: 0452-2328224
Cell: 9443388224

E-mail: csidmrjcm@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.