Type Here to Get Search Results !

JC VBS 2017 Songs lyrics | Sunday School Christian Song | மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே | விடுமுறை வேதாகம பள்ளி பாடல்கள் | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
JC VBS 2017

கருப்பொருள்:
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே (லூக்கா 15:32)


பாடல் வரிகள்

பாடல் 1
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே - எப்பொழுதும்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே (2)
என் வாழ்நாள் முழுவதிலும் - நான்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே (2)

இயேசுவை அறிந்து கொள்வேன்
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன் (2)
அவர் வழியில் என்றும் நடந்திடுவேன்
மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவேன் (2)


பாடல் 2
வா நீயும் வா 
உன்னைத் தா உன்னையே தா
என்றும் மாறா இயேசுவிடம் (2)
என்றும் உன்னை நேசிக்கும் இயேசுவிடம் - 2

உன்னைத் தந்திட்டால் - நீ
உன்னைத் தந்திட்டால்
நிரந்தரமான மகிழ்ச்சி என்றும் நிச்சயமே - 2 (2)


பாடல் 3
தையாரே தையாரே தையரத்தையா
ஒய்யாரே ஒய்யாரே ஒய்யரஒய்யா
அறிந்துகொண்டேன் நான் அறிந்து கொண்டேன் 
புரிந்து கொண்டேன் நான் புரிந்துகொண்டேன்

புத்தம் புது வாழ்க்கையை எனக்குத் தந்தார்
நான் புரிந்து கொண்டேன்
நித்தம் நித்தம் இரட்சிப்பை இயேசு தந்தார்
நான் அறிந்து கொண்டேன் (2)
சந்தோஷமாய் துதித்துப் பாடுவேன் - நான் 
மகிழ்ச்சியோடு துள்ளி ஆடுவேன் - 2 (2)

தையாரே தையாரே தையரத்தையா
ஒய்யாரே ஒய்யாரே ஒய்யரஒய்யா (2)


பாடல் 4
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் (2)
என் பாவம் போக்க என் குற்றம் நீக்க
எனக்காக மரித்தார் 
எனக்காக உயிர்த்திட்டார் 

இதை நான் உணர்ந்திட்டேன்
அகமகிழ்ந்து என்னை அர்ப்பணிக்கிறேன் (2)
ஆண்டவா என்னை ஏற்றக்கொள்ளுமே - 2


பாடல் 5
சந்தோஷமாய் இருப்போம்
சந்தோஷமாய் இருப்போம் 
இயேசுவுக்குள் நாம் என்றும் இருந்திட்டால்
இயேசுவுக்குள் நாம் என்றும் வாழ்ந்திட்டால்  (2)
இயேசுவுவோடு நாம் என்றும் இணைந்திருந்தால்
சந்தோஷமாய் எப்போதும் நாம் இருப்போம் (2)
லல்லல்லாலலா லலலலாலலா..







எங்களுக்காக ஜெபியுங்கள்
அருள்பெருந்திரு. Rt.Rev. Dr. M. ஜோசப் (பேராயம் – தலைவர்)

அருள்திரு. அ. டேவிட் ஜெபராஜ் – இயக்குநர்

திரு. T. டேனியல் (சிறார் இணை இயக்குநர்)
திரு. A. ஜோசப் பால்சிங் (வாலிபர் இணை இயக்குநர்)

திரு. S. ஜான்
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. R. இம்மானுவேல்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஓசன்னா
திரு. A. தீமோத்தேயு
திரு. P. ஜான் கிரேட் செல்வம்
திரு. S. இராக்லாந்து ராபின்சன்
திரு. T. சைமன்
திருமதி. N. சாந்தி சைமன்
திரு. M. ராஜ்குமார்
திரு. S. அஜய் நிர்மல்
திரு. G. காட்பிஃரே கிராஸ்பெல்
திரு. G. ஆண்ஹோ
திரு. J. ஜான் அருண் பிரசாத்

தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Phone: 0452-2328224
Cell: 9443388224

E-mail: csidmrjcm@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.