Type Here to Get Search Results !

JC VBS 2021 Song List | தலைப்பு: அதிகமாய் | விடுமுறை வேதாகம பள்ளி பாடல் வரிகள் | Vocation Bible School Song Lyrics | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி

JC VBS – 2021
தலைப்பு: அதிகமாய்
பாடல் வரிகள்

பாடல் 1:
சாலமோன் போல் மிகச் சரியானதை
நானும் கேட்பேனே நானும் கேட்பேனே (2)

சர்வ வல்லவரிடம் நான் கேட்டால்
கேட்டதையும் தேவையனைத்தும்
அள்ளிஅள்ளி அதிகமாய்க் கொடுப்பார்
துள்ளிதுள்ளி நானும் மகிழ்வேன் – 2 (2)



பாடல் 2:
ஜாலி ஜாலிதான் ரொம்ப / எனக்கு
ஜாலி ஜாலிதான்

இயேசுவை முதலில் தேடுவேனே
எல்லாம் கூடக் கிடைத்திடுமே (2)

அவர்ஆளுகை அதிகம் தேடுவேனே
எல்லாம் கூடக் கிடைத்திடுமே (2)

ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாலிதான் ஆஹே – 2
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாலிதான் ஆஹோ – 2



பாடல் 3:
செல்லமான மாமா கொஞ்சம் குள்ளமான மாமா -2

சகேயுவை யாருமே தேடவில்லை
சகேயுவோ இயேசுவைத் தேடினாரே (2)

கண்டுகொண்டார் இயேசுவை
பெற்றுக் கொண்டார் இரட்சிப்பை (2)

தேடிடுவேன் இயேசுவை
பெற்றிருவேன் இரட்சிப்பை (2)



பாடல் 4:
இயேசுவைக் காண ஆசை
இயேசுவைக் காண வாஞ்சை

தேடினேன் நான் தேடினேன்
கண்டடைந்தேனே – இயேசுவை (2)

அதிக முயற்சி அதிக வெற்றி தருமே – 2

இயேசுவினால் எல்லாம் மாறுமே – ஓ
இயேசுவினால் என்னுள்ளம் மாறியதே (2)



பாடல் 5:
Sorry Jesus Sorry Jesus
இரங்கிடும் எனக்கு இரங்கிடும் (2)

என்னை உயர்வாய் நினைத்தேனே
பிறரை தாழ்வாய் மதித்தேனே
இரங்கிடும் எனக்கு இரங்கிடும் -2 (2)

Sorry Jesus Sorry Jesus
இரங்கிடும் எனக்கு இரங்கிடும் (2)

அதிகமாய் தாழ்த்துவேன் என்னையும்
அர்ப்பணிப்பேன் உம்மிடம் என்னையும் (2)
இரங்கிடும் எனக்கு இரங்கிடும் – 2



பாடல் 6:
தில்லாலங்கடியோ ஐலேசா தில்லாலங்கடியோ – 2
கடல்மீது பயணம் போறோம் தில்லாலங்கடியோ
கதை கேட்டே செல்லப் போறோம் தில்லாலங்கடியோ (2)

ஆயக்காரனா பரிசேயனா - 2
அதிக இரக்கம் பெற்றவர் யார் தில்லாலங்கடியோ

ஆனமட்டும் தாழ்த்தினவர் இரக்கம் பெற்றாரே
ஆக நீயும் உன்னை தாழ்த்தி அதிகம் பெற்றிடு (2)

தில்லாலங்கடியோ ஐலேசா தில்லாலங்கடியோ – 4


பாடல் 7:
துள்ளி துள்ளி ஆடுவேன்
கரங்கள் தட்டிப் பாடுவேன் (2)

இயேசு என்னை மன்னித்ததால் சந்தோஷம்
அவரால் முற்றும் நீங்கியதே என் தோசம்
லலலலலல……… ரப்ப்பா……… அல்லேலூயா (3)


பாடல் 8:
மன்னிப்பு பெற்றிடவே மணமணக்கும்
நறுமனதைலம் ஊற்றினாள் (2)

மணக்குதே வீடெங்கும் மணக்குதே
மணக்குதே மன்னிப்பின் மனமகிழ்ச்சியால் (2)

இயேசுவிடம் பாவத்தை அறிக்கை செய்வேன்
மன்னிப்பின் மனமகிழ்ச்சி அடைந்திடுவேன் (2)

வீசிடுவேன் நறுமணம் உலகெங்கிலும் – 2

சசகரிநிரிச……… கபபமகரிச - 2


பாடல் 9:
இயேசுவின் அன்பு என்னையும் நேசிக்கும்
இயேசுவின் அன்பு உன்னையும் நேசிக்கும்
இயேசுவின் அன்பு நம்மையும் நேசிக்கும்
இயேசுவின் அன்பு தந்தது புதுவாழ்வு (2)

ஏழை இல்ல பணக்காரர் இல்ல
வெற்றி இல்ல தோல்வி இல்ல (2)

இயேசுவின் அன்பு எல்லாருக்கும் இருக்கு – 2
பிரித்திடும் ஏற்றத்தாழ்வு நமக்கெதுக்கு – 2



பாடல் – 10
கழுகைப்போல பறந்து மானைப்போல ஓடி
மயிலைப்போல ஆடிடுவேன் (2)

என்னைத் தேடி வந்து சிலுவையில் மரித்து – 2
உயிரோடு என்னில் வாழும் இயேசு இருப்பதால் – 2

என் சுயத்தை ஒழித்து, என் சிலுவை எடுத்து
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவேன் (2)

ஏற்றத்தாழ்வை வெறுத்து, எல்லோரையும் ஏற்று – 2
இறைப்பணி என்றென்றும் செய்திடுவேன் – 2


பாடல் - 11:
ஆண்டவர் சொன்ன சொல்லக் கேட்டா
கிடைக்கும் உனக்கு அதிகம்
நீ கேளு பேதுருவிடம் அதையும் – 2 (2)

ஆண்டவர் சொல்லக் கேட்க தினமும்
படிக்கனும் நீ பைபிள் – 2

அதில நடக்கனும் உன் வாழ்க்கைல
அப்போ கிடைச்சிடும் உனக்கு அதிகம் (2)
- ஆண்டவர்


பாடல் 12:
வேதப்புத்தகம் (4)
இதைப் படிக்கும் நபரோடு
இயேசு ஆண்டவர் பேசும் புத்தகம் (2)

அவர் சத்தம் கேட்டு
இறை சித்தம் செய்து
அதிகமாய்ப் பெற்றிட
ஆர்வமாக வாழ்ந்திட (2)

வழிகாட்டுமே இந்த வேதப்புத்தகம் – 2


பாடல் - 13
முயலைப்போல குதித்திடுவேன்
மதிலை நானும் தாண்டிடுவேன் (2)

கழுகைப்போல பறந்திடுவேன்
கர்த்தரின் இரக்கம் பெற்றிடுவேன் (2)

விசுவாச ஜெபத்தால்
விலையில்லா இரக்கம் (2)

கானானிய பெண் போல
கர்த்தரிடம் பெற்றிடுவேனே (2)
- முயலைப்போல

பாடல் - 14:
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு வண்டி
வேகமாய்ப் போகுது ரயில்வண்டி (2)

இயேசு நம்மில் வந்திடவே
தொடர்ந்து நம்மில் இருந்திடவே
ஜெப வாழ்வு பெருகணுமே - 2 (2)

இன்னும் இயேசுவை நம்பனுமே
அதிகமாய் இயேசுவை நம்பனுமே (2)


பாடல் - 15:
கொடுத்திடு கொடுத்திடு இயேசுவுக்கு
பெற்றிடு பெற்றிடு பாராட்டை (2)

தந்திடு தந்திடு உன்னையே
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு இயேசுவிலே (2)

ஏழைப் பெண் போல
எல்லாம் தருவேனே
என்னில் இயேசு மகிழ்ந்திட
எல்லாம் தருவேனே (2)



பாடல் - 16:
கர்த்தருக்குக் காணிக்கை
களிப்புடன் கொடுப்பேனே
எல்லாம் தந்தவர் – என்
இயேசு தானே (2)

அதிகம் பெற்றேனே
அதிகம் கொடுப்பேன்
கஷ்டப்படுவோருக்கம்
கர்த்தரின் பணிக்கும் (2)
- கர்த்தருக்கு


பாடல் - 17:
டம்டும் டம்டும் (2) டம்டம் (3)
இயேசுவை அறிவித்திடு
நற்சாட்சி பகிர்ந்திடு (2)

உலகில் இயேசுவை சொல்லிடவே
பாவ இருளை நீக்கிடவே (2)

ஒளியாய் நீயும் வாழ்ந்திடவே
உன்னைப் படைத்தார் அறிந்திடு (2)
- டம்டும்



பாடல் - 18:
நான் கடவுளின்
கைவேலைப்பாடு (2)

நல்ல நல்ல செயல்கள்
செய்திடவே படைக்கப்பட்டேன் கிறிஸ்துவுக்குள் (2)
- நான்
நல்ல நல்ல செயல்களில்
நடந்திடவே படைக்கப்பட்டேன் கிறிஸ்துவுக்குள் (2)
- நான்


பாடல் - 19:
கிறிஸ்துவுக்காக மரித்திட ஆயத்தமா – அதை
உணராதவருக்கு பரலோகம் கிடைக்குமா? (2)

என்னில் நான் சிறுகவேண்டும் – பாரில்
இயேசு என்னும் பெருக வேண்டும் (2)

கொடுப்பேன் கர்த்தருக்கே முதன்மை
பெறுவேன் அவரிடம் மேன்மை (2)



பாடல் - 20:
நீர் என்னிலும் நான் உம்மிலும்
நீடித்து நிலைத்திடவே
நான் சிறுகவும் நீ பெருகவும்
உண்மையாய் உழைத்திடவே (2)

உம் ஆளுகைக்காய் என்னையே அர்ப்பணிக்கிறேன்
உம் மேன்மைக்காய் என்னையே கொடுக்கிறேன்
என்னில் வாழும் என் இயேசுவே – 2


பாடல் – 21
கொண்ட சேவல் கத்துது
குறிலும் தானே கூவுது
பூக்கள் எல்லாம் மணம் வீசுது (2)
படைத்தவரின் பாங்கை / மகிமை சொல்லுது

நானும் பாடல் பாடிடுவேன்
நாளும் கூடி ஆடிடுவேன் (2)

இந்த JC VBS-ல் கற்றதை
இயேசு எனக்குச் செய்ததை (2)

எங்கும் சொல்லி மகிழ்ந்திடுவேன் (2)
- லாலலலலல்லா…….


ஆசிரியர் பாடல்
பாடல் – 22

என்னை ஏன் தெரிந்தெடுத்தீர்
என் இயேசுவே
என் இயேசுவே
உம் பணி நான் செய்யவே (2)
- என்னை

1. முன்னாள் லேகியோனே நான்
மாறா ஆயக்காரன் சகேயுபோல் (2)
தினம் உம்மைக் காயப்படுத்தி
வாழ்ந்தேனே இருந்தாலும் (2)
- என்னை

2. நிறைவாய்க் கனி கொடுக்க
நித்தம் ஜெபிக்க யோவானைப்போல் (2)
உயிர் கொடுக்க மறுத்து நான்
வாழ்ந்தேனே இருந்தாலும் (2)
- என்னை

3. அர்ப்பணிப்பேன் – என்னையே
அளவில்லா உம் அன்பு முன் (2)
உறுதியாய் கரம்பற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன் (2)
- என்னை




இளையோர் திருச்சபையைப் பற்றி:
அருட்பெருந்திரு. முனைவர். M. ஜோசப் (பேராயர் – தலைவர்)
அருள்திரு. A. வினோலின் காலேப் (இயக்குநர்)

திரு. T. டேனியல் (சிறார் இணை இயக்குநர்)
திரு. A. ஜோசப் பால்சிங் (வாலிப இணை இயக்குநர்)

இளையோர் திருச்சபையின் முழுநேரப்பணியாளர்கள்:
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஹோசன்னா
திரு. P. ஜான் கிரேட் செல்வராஜ்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திருமதி. J. வனிதா சர்மா
திருமதி. K. கிரேஸி
திருமதி. D. எமிமா கிரேட் செல்வராஜ்
திரு. J. பிரின்ஸ் கிளாட்ஸன்

தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

E-mail: csidmrjcm@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.