உனக்கான காதல் கடிதம்!
நண்பரே! உம்மை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதாகும். ஆயினும் நான் இதை அவசியம் சொல்லத்தான் வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். இதை நான் சொல்லாமல் விட்டுவிட்டால், அதைப்போல் கொடுமை எதுவும் இராது. இதை நம்பி ஏற்றுக்கொள்ள ஒருவேளை நீர் மறுக்கலாம். ஆயினும் இது உன் வாழ்வை மாற்றியமைக்கக் கூடிய செய்தியாகும். மரணத்திற்குப் பின்பு உள்ள வாழ்க்கையையுங்கூட இது திசைத்திருப்பக்கூடியது. சொர்க்கத்தின் வாசலை திறந்து கொடுக்க வல்லது. அதற்காகத்தான் மண்ணையும் விண்ணையும் உன்னையும் படைத்த கடவுள் மனிதனானார், மனிதருக்காக மரணமானார், மூன்றாம் நாளில் மரணத்தை வென்று, இன்றும் உயிரோடிருக்கிறார், மீண்டும் வருவார்.
அப்படிப்பட்ட ஒருவர் தான் இயேசு. நம்மை நரகத்திலிருந்து விடுவிக்க தன்னையே தந்தவர். இயேசு என்பவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தெய்வம் அல்ல. இந்த மனுக்குலத்தை சொர்க்கத்தில் சேர்க்க அவரே ஒரே வழி. அவர் இல்லாமல் மோட்சத்தைக் காண முடியாது. அவரே உன் வாழ்வின் நங்கூரமாகட்டும். நிலையற்ற உன் வாழ்வுக்கு நம்மதி தரட்டும். அன்பின்றி தவிக்கும் உனக்கு அரவனைக்கும் நேசராகட்டும். ஆதரவின்றி தவிக்கும் நண்பா, உன்னோடு பேச அவர் துடிக்கிறார். உனது பொன்னையோ பொருளையோ அவர் விரும்பவில்லை. உன்னையும் உன் உள்ளத்தையுமே நேசிக்கிறார். இடம் தருவாயா உன் இதயத்தில்? அந்தோ அவர் இரத்தம் படிந்த கரம் உன்னைத்தான் அழைக்கிறது. ஓடி வருவாயா? இதய நாயகனுக்கு உன்னைத் தருவாயா? சொர்க்க வாழ்வைப் பெறுவாயா?
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.