Type Here to Get Search Results !

AIM | Youth Program Song Sheet | சாட்சியாபுரம் | Junior Church Ministry | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
16-வது இளையோர் திருச்சபை முகாம்

கருப்பொருள்: AIM

பாடல் 1:
பம் பம் பம் AIM – 2
நிலைத்திரு நிலைத்திரு நிலைத்திரு
இயேசுவுக்குள் என்றும் நிலைத்திரு
நிலைத்திரு நிலைத்திரு நிலைத்திரு
இயேசுவின் வார்த்தையில் நிலைத்திரு

பம் பம் பம் AIM – 2
கொஞ்ச நேரம் அல்ல கொஞ்ச காலம் அல்ல
வாழும் வரை அவருக்காய் நிலைத்திரு
இயேசுவின் வார்த்தையில் நிலைத்திரு (2)
பம் பம் பம் AIM – 2


பாடல் 2:
நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும்
நிலைத்திருந்தால் நீங்கள் கேட்பதெல்லாம் (2)
உங்களுக்கு செய்யப்படும்
யோவான் 15:7ல் இயேசு சொன்ன வார்த்தை இது – 2
அவரின் வார்த்தைகளில் நிலைத்திருந்தால்
நாம் ஜெபத்திற்கு பதில் தருவாரே (2)
இயேசு நமக்கு பதில் தருவாரே – 2


பாடல் 3:
இயேசுவே மெய்யான திராட்சை செடி
அவரின் கொடிகளாய் படர்ந்திருப்போம் (2)
ஆதியும் அவரே அந்தமும் அவரே
ஆளுகை செய்கின்ற கர்த்தரும் அவரே

நிலைத்திருப்போம் என்றும் நிலைத்திருப்போம்
உறுதியாய் நிலைத்திருப்போம்

நிலைத்திருப்போம் நாமும் நிலைத்திருப்போம்
இயேசுவில் நிலைத்திருப்போம் (2)
                                    - இயேசுவே


பாடல் 4:
சுத்தம் செய்திடுங்க என்னை சுத்தம் செய்திடுங்க
நான் அதிக கனிகள் கொடுக்க என்னை சுத்தம் செய்திடுங்க (2)

பாதுகாத்திடுங்க என்னை பாதுகாத்திடுங்க
நான் செழிப்பாக வளர என்னை பாதுகாத்திடுங்க (2)

பராமரித்திடுங்க என்னை பராமரித்திடுங்க
என் களைகளை நீங்கி என்னை பராமரித்திடுங்க (2)


பாடல் 5:
சமர்ப்பணம் செய்கின்றேன்
என்னை ஏற்றுக் கொள்ளுமே (2)

சிலுவையில் எனக்காய் சிந்திய இரத்தம்
என் பாவம் போக்க உம்மையே தந்தீர் (2)

சமர்ப்பணம் என் வாழ்வே அர்ப்பணம் – 2
                            - சமர்ப்பணம்

என் இயேசு ராஜா உம்மிடம் வந்தேன்
உமக்காக வாழ என்னையே தந்தேன் (2)

சமர்ப்பணம் என் வாழ்வே அர்ப்பணம் -2
                            - சமர்ப்பணம்


பாடல் 6:
ஆட்டுக்குட்டி நானு -2
காணாமல் போன செல்ல
ஆட்டுக்குட்டி நானு (2)

நல்ல மேய்ப்பன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே (2)

தன்னைத் தந்து இரட்சிப்பை
எனக்கு பெற்றுத் தந்தாரே (2)

அவர் அன்பிலே நிலைத்திருப்பேன் – 2
                                - ஆட்டுக்குட்டி நானு


பாடல் 7:
1. மகிமையின் இறைவா இயேசு ராஜா
மகிழ்வுடன் உம்மில் நிலைத்திருக்க
மன்னவா என்னையே தருகின்றேன்
மகிழ்வுடன் உமக்காய் உழைத்திடவே (2)

உருவாக்கிடும் என்னை உருவாக்கிடும்
உண்மையாய் உழைத்திட உருவாக்கிடும் (2)

2. உம் இரத்தம் என்னை கழுவவும்
உம் வேதம் என்னை காக்கவும்
உம் ஆவியர் என்னை உயிர்ப்பிக்கவும்
உம்மில் நிலைத்திட அர்ப்பணித்தேன் (2)
                            - உருவாக்கிடும்

3. தனித்து ஜெபித்த யாக்கோபை போல்
தாகத்துடன் என்னை தருகின்றேன் (2)
இஸ்ரவேலராய் என்னை உருவாக்கிடும்
இந்திய தேசத்தில் உழைத்திடவே (2)
                            - உருவாக்கிடும்


பாடல் 8:
விட்டு விடு நீ விட்டு விடு
பாவத்தையெல்லாம் விட்டு விடு (2)
தொட்டுவிடு நீ தொட்டுவிடு
இயேசுவின் இதயத்தை தொட்டு விடு (2)

பொய் பேசும் சிந்தையை விட்டு விடு
சண்டை போடும் பழக்கத்தை விட்டு விடு
தீய வார்த்தை பேசுவதை விட்டு விடு
நண்பருக்கு துரோகம் செய்வதை விட்டு விடு (2)

மற்றவர் பொருளை திருடுவதை விட்டு விடு
ஏமாற்றும் பழக்கத்தை விட்டு விடு (2)

தந்துவிடு நீ தந்து விடு
இயேசுவுக்கு உன்னையே தந்து விடு
நிலைத்திடு நீ நிலைத்திடு
அவர் வார்த்தையிலே என்றுமே நிலைத்திடு (2)


பாடல் 9:
நிலைத்திடுவோம் இயேசுவின் வார்த்தையிலே நிலைத்திடுவோம்
நிலைத்திடுவோம் இயேசுவின் அன்பினிலே (2)

அவரது வார்த்தையில் நிலைத்திருந்தால்
மிகுந்த கனிகளைத் தந்திடலாம்
அவரது அன்பிலே நிலைத்திருந்தால்
என்றும் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடலாம் (2)


பாடல் 10:
என்னில் நிலைத்திருங்கள் – நான்
உங்களில் நிலைத்திருப்பேன் (2)
திராட்சைக் கொடி நானே
இயேசுவில் நிலைத்திடுவேன் (2)

நான் அதிக கனி கொடுக்க
நம்மை சுத்தப்படுத்திடுவார்
நாம் அவரில் நிலைத்திருந்தால்
கேட்பதெல்லாம் கொடுத்திடுவார் (2)
                                                - என்னில்


பாடல் 11:
வானத்திலே மின்னிடும் நட்சத்திர கூட்டம்
அழகாக ஜொலிக்கின்றன… - ஆஹா (2)
இயேசுவின் அன்பை காட்டிடும் கூட்டம்
உலகத்திலே ஜொலிக்கின்றன (2)

அந்த அன்பிலே சமாதானம் உண்டு
அந்த அன்பிலே சந்தோஷம் உண்டு (2)

அவர் அன்பின் கட்டளையை நிறைவேற்ற
இயேசு உன்னையும் என்னையும் அழைக்கின்றாரே (2)

உன்னையும் என்னையும் அழைக்கின்றாரே (2)


பாடல் 12:
நிலைத்திடு – 3
வேதம் காட்டும் வழியில் நிலைத்திடு
நிலைத்திடு – 3
வேதம் சொல்லும் வழியில் நிலைத்திடு
ஆபிரகாமைப் போல விசுவாசத்தில்
யோசேப்பைப் போல பரிசுத்தத்தில்
நோவாவைப் போல கீழ்ப்படிந்து
இயேசுவில் என்றும் நிலைத்திடு
நிலைத்திடு தம்பி / தங்கை நிலைத்திடு – 2

பாடல் 13:
திராட்சை கொடியே திராட்சை கொடியே
திராட்சை செடியில் நிலைத்திரு
பிள்ளைகளே அன்பு செல்லங்களே
இயேசுவில் நிலைத்திடுங்கள் (2)

இயேசு உன்னை நேசிக்கிறார் - அவர்
அன்பிலே நிலைத்திடு
வேதவசனம் கைக்கொண்டு அவர்
வார்த்தையில் நிலைத்திடு (2)

அவரில் நிலைத்திருந்தால்
பிதா நம்மில் மகிமைப்படுவார் (2)

மெய்யான திராட்சை செடி இயேசுவே – அவரில்
நிலைத்திருக்கும் திராட்சை கொடி நாம் தானே (2)
                                - திராட்சை கொடியே



பாடல் 14:
கோதுமை மணியாய் மண்ணுக்குள் மறைய
என்னையே தருகிறேன் (2)

என் வாழ்வில் வசந்தம் நீர்
என் தாழ்வில் தேவன் நீர்

வாழ்க்கைப் பயணத்தின் என் இயேசுவே – நீர்
வழிகாட்டியாகிட அர்ப்பணிக்கின்றேன் (2)
தடையின்றி தொடர்ந்து பயணம் செய்து
நிறை வாழ்வு வாழ்ந்திட அர்ப்பணிக்கின்றேன் (2)
                                        - என் வாழ்வின்


பாடல் 15:
நானே மிகுந்த கனிகளைத் தந்திடும்
இயேசுவின் திராட்சை செடி (2)
இயேசுவின் வசனம் எனக்குள்ளே
மிகுந்த கனிகளைத் தந்திடுவேன் (2)

இயேசுவின் அன்பு எனக்குள்ளே
என்றென்றும் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2)
                                        - நானே


பாடல் 16:
ஏ….. தன்னானே…… எஏ….
மாட்டுவண்டியில் ஏறி நானும் பயணம் போகிறேன்
என் நண்பரோடு ரொம்ப ஜாலியா பணம் போகிறேன்
கொண்டாட்டம் தான் ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான்
இயேசு எங்ககூட வரார் சந்தோஷம் தான் (2)

போறோம் போறோம் போறோம் நாங்க வெகுதூரம்
சொல்லத்தான் போறோமே சுவிசேஷம் (2)
அறிவிப்போம் நற்செய்தியை பிறருக்கும்
அகமகிழ்வோம் எந்நாளுமே இயேசுவுக்குள் (2)
 



நாள்: 15,16,17 ஜனவரி 2023
இடம்: தவச உற்சவ பண்டிகை வளாகம்,
சாட்சியாபுரம், சிவகாசி.


பேராயர் – தலைவர்
Rt. Rev. Dr. D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் M.A., B.D., P.G.D.Th., D.D.,

இயக்குநர்
Revd. Dr. S. P. கிதியோன் சாம் Ph.d., (Glis, UK)

முழு நேரப்பணியாளர்கள்
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. N. சர்மா பிரபு
திரு. P. ஜான் கிரேட் செல்வராஜ்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திருமதி. J. வனிதா சர்மா
திருமதி. K. கிரேஸி
திருமதி. D. எமிமா கிரேட் செல்வராஜ்
திரு. J. பிரின்ஸ் கிளாட்ஸன்
திரு. T. ரிச்சர்ட்

முன்னேற்ற பணியாளர்
திரு. T. டேனியல்

தொடர்புக்கு:
இயக்குநர், இளையோர் திருச்சபை
எண் 1/1, இரட்சண்யபுரம், மூன்றுமாவடி, கோ.புதூர்.
மதுரை – 625 007.

Cell: 94864 61717

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.