Type Here to Get Search Results !

John 11 Bible Quiz | The Gospel of John Bible Question & Answer in Tamil | யோவான் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதினொன்றாம் அதிகாரம்
The Gospel of JOHN 11
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. மார்த்தாள், மரியாள், லாசரு இவர்கள் இருந்து கிராமம் எது?
A) கலிலேயா
B) பெத்தானியா
C) பெத்லகேம்
Answer: B) பெத்தானியா
    (யோவான் 11:1)

02. கர்த்தருக்கு பரிமளதைலம் பூசி தன் தலைமயிரால் அவருடைய பாதங்களை துடைத்தது யார்?
A) லாசரு
B) மார்த்தாள்
C) மரியாள்
Answer: C) மரியாள்
    (யோவான் 11:2)

03. மரியாள் மார்த்தாளின் சகோதரன் பெயர் என்ன?
A) லேவி
B) மத்தேயு
C) லாசரு
Answer: C) லாசரு
    (யோவான் 11:1)

04. லாசரு வியாதியாயிருக்கிறதை கேள்விப்பட்ட இயேசு தாம் இருந்த‌ இடத்தில் பின்னும் எத்தனை நாள் இருந்தார்?
A) ஒன்று நாள்
B) இரண்டு நாள்
C) மூன்று நாள்
Answer: B) இரண்டு நாள்
    (யோவான் 11:6)

05. அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றது யார்?
A) சீமோன் பேதுரு
B) யோவான்
C) திதிமு என்னப்பட்ட தோமா
Answer: C) திதிமு என்னப்பட்ட தோமா
    (யோவான் 11:16)

 

06. பெத்தானியாவிற்கும் எருசலேமிற்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு?
A) ஏறக்குறைய இரண்டு மைல்
B) ஏறக்குறைய பத்து மைல்
C) ஏறக்குறைய இருபது மைல்
Answer: A) ஏறக்குறைய இரண்டு மைல்
    (யோவான் 11:18)

07. மார்த்தாள், மரியாளுக்கு ஆறுதல் சொல்ல வந்தது யார்?
A) யூதர்கள்
B) கிரேக்கர்கள்
C) ரோமர்கள்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 11:19)

08. ஆண்டவரே நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான் என்று சொன்னது யார்?
A) யூதர்கள்
B) அயலகத்தார்
C) மார்த்தாள், மரியாள்
Answer: C) மார்த்தாள், மரியாள்
    (யோவான் 11:21,32)

09. நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றது யார்?
A) லாசரு
B) மார்த்தாள்
C) மரியாள்
Answer: B) மார்த்தாள்
    (யோவான் 11:27)

10. போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றது யார்?
A) சீஷர்கள்
B) மார்த்தாள்
C) மரியாள்
Answer: B) மார்த்தாள்
    (யோவான் 11:28)

 

11. இயேசு கண்ணீர் விட்ட இடம் எது?
A) தேவாலயம்
B) லாசருவின் கல்லறை
C) ஜெப ஆலயம்
Answer: B) லாசருவின் கல்லறை
    (யோவான் 11:35)

12. மரித்த லாசருவை எத்தனையாவது நாளில் தேவன் எழுப்பினார்?
A) மூன்றாம் நாள்
B) நான்காம் நாள்
C) ஐந்தாம் நாள்
Answer: B) நான்காம் நாள்
    (யோவான் 11:39,17)

13. மரித்த லாசரு எழுந்ததை பரிசேயருக்கு அறிவித்தது யார்?
A) சேவகர்
B) அயலகத்தார்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (யோவான் 11:45,46)

14. தீர்க்கதரிசினம் சொன்ன பிரதான ஆசாரியன் யார்?
A) காய்பா
B) அபியத்தார்
C) அண்ணா
Answer: A) காய்பா
    (யோவான் 11:49,52)

15. மரித்த லாசருவை எழுப்பின பின் இயேசு எங்கு தங்கினார்?
A) யோர்தான்
B) எப்பிராயீம்
C) கலிலேயா
Answer: B) எப்பிராயீம்
    (யோவான் 11:54)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.