Type Here to Get Search Results !

John 10 Bible Quiz | The Gospel of JOHN Question And Answer in Tamil | யோவான் பத்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பத்தாம் அதிகாரம்
The Gospel of JOHN 10
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. ஆட்டு தொழுவத்திற்குள் வாசல் வழியாய் பிரவேசியாமல் வேறு வழியாய் பிரவேசிக்கிறவன் யார்?
A) மேய்ப்பன்
B) கள்ளன், கொள்ளைக்காரன்
C) வாசலை காக்கிறவன்
Answer: B) கள்ளன், கொள்ளைக்காரன்
    (யோவான் 10:1)

02. ஆட்டு தொழுவத்திற்குள் வாசல் வழியாய் பிரவேசிக்கிறவன் யார்?
A) மேய்ப்பன்
B) கொள்ளைக்காரன்
C) கள்ளன்
Answer: A) மேய்ப்பன்
    (யோவான் 10:2)

03. ஆடுகளை பெயர் சொல்லி கூப்பிடுகிறவன் யார்?
A) திருடன்
B) கொள்ளைக்காரன்
C) மேய்ப்பன்
Answer: C) மேய்ப்பன்
    (யோவான் 10:3)

04. மேய்ப்பன் ஆடுகளை வெளியே விட்டு எங்கு நடந்து போகிறான்?
A) ஆடுகளுக்கு முன்பாக
B) ஆடுகளின் நடுவிலே
C) ஆடுகளுக்கு பின்பாக
Answer: A) ஆடுகளுக்கு முன்பாக
    (யோவான் 10:4)

05. நானே வாசல் என் வாழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் __________ ?
A) மீட்கப்படுவான்
B) காப்பாற்றப்படுவான்
C) இரட்சிக்கப்படுவான்
Answer: C) இரட்சிக்கப்படுவான்
    (யோவான் 10:9)



06. திருடவும் கொள்ளவும் அழிக்கவும் வருகிறவன் யார்?
A) பிசாசு
B) சாத்தான்
C) திருடன்
Answer: C) திருடன்
    (யோவான் 10:10)

07. ஓநாய் வருகிறதை கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறவன் யார்?
A) கூலியாள்
B) மேய்ப்பன்
C) திருடன்
Answer: A) கூலியாள்
    (யோவான் 10:12)

08. ஆடுகளுக்காக கவலைப்படாதவன் யார்?
A) திருடன்
B) மேய்ப்பன்
C) கூலியாள்
Answer: C) கூலியாள்
    (யோவான் 10:13)

09. ஜீவனை கொடுக்கும் எடுக்கும் அதிகாரத்தை பிதாவினிடமிருந்து பெற்றது யார்?
A) தீர்க்கதரிசி கள்
B) மனுஷகுமாரன்
C) தேவ தூதர்கள்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 10:18)

10. எருசலேம் தேவாலயத்தில் மாரிகாலத்தில் வரும் பண்டிகை என்ன பண்டிகை?
A) பஸ்கா பண்டிகை
B) பிரதிஷ்டை பண்டிகை
C) கூடார பண்டிகை
Answer: B) பிரதிஷ்டை பண்டிகை
    (யோவான் 10:22)

 

11. இயேசு எந்த பண்டிகையில் தேவாலயத்தில் சாலமோனுடைய மண்டபத்தில் உலாவிக் கொண்டிருந்தார்?
A) பஸ்கா பண்டிகை
B) பிரதிஷ்டை பண்டிகை
C) கூடார பண்டிகை
Answer: B) பிரதிஷ்டை பண்டிகை
    (யோவான் 10:23)

12. இயேசுவிடம் வந்து நீர் கிறிஸ்துவானால் எங்களுக்கு சொல்லும் என்றது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (யோவான் 10:24)

13. தேவவசனத்தை பெற்று கொண்டவர்கள் __________ வேதவாக்கியம் சொல்லியிருக்கிறது
A) பாவிகள்
B) பரிசுத்தர்கள்
C) தேவர்கள்
Answer: C) தேவர்கள்
    (யோவான் 10:35)

14. யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?
A) யோர்தான்
B) கப்பர்நகூம்
C) கலிலேயா
Answer: A) யோர்தான்
    (யோவான் 10:40)

15. ஜனங்கள் இயேசுவை குறித்து யார் சொன்னது மெய்யாயிருக்கிறது என்றார்கள்?
A) யோவான்
B) தீர்க்கதரிசிகள்
C) தாவீது
Answer: A) யோவான்
    (யோவான் 10:41)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.