Type Here to Get Search Results !

The Mystery of Genesis 1:1 | ஆதியாகமம் 1:1-ன் இரகசியம் | Biblical Studies in Hebrew Language | எபிரெய மொழியில் ஓர் வேத ஆராய்ச்சி | Jesus Sam

ஆதியாகமம் 1:1-ன் இரகசியம்
===============
ஆதியாகமம் 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.

1:1 יתשארב
׃ץראְָֽהָ תאֵ֥וְּ יִםמַ֖שּׁהַ תאֵֹ֥ יםהִ֑לֹאֱ ארָ֣בָּ יתשִׁארֶבְּ


கிறிஸ்தவர்களுக்கும், வேதத்தை நம்புகிறவர்களுக்கும் மாத்திரமே வேதம் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரையும், அவருடைய கிரியைகளையும் நம்பாதவர்களுக்கு வேதம் எழுதப்படவில்லை.

எ.கா: நாம் ஒருவரிடம் இன்றைக்கு நமது ஆலயத்திற்கு பேராயர் வருகிறார் என்று சொல்லுவோம் என்றால், அந்த பேராயர் யார்? எந்த பகுதிக்கு அவர் பேராயராக இருக்கிறார் என்று அறிந்த ஒருவருக்கே நாம் சொல்லுகிறோம் என்று அர்த்தம்.

பேராயர் என்றால் யார் என்றே தெரியாத ஒரு நபருக்கு, பேராயர் வருகிறார் என்ற செய்தியை சொல்லும்போது, இன்று பேராயர் வருகிறார் என்று சொல்லாமல், நம்முடைய சபைக்கு தலைமைப் மேய்ப்பர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் பேராயர். இதுதான் அவருடைய பெயர். இவர் இன்றைக்கு நம்முடைய சபைக்கு வருகிறார் என்று நாம் சொன்னால் தான் அவர்களுக்கு புரியும்.

பேராயரைப் பற்றி தெரியாத ஒருவருக்கு பேராயரைக் குறித்து விளக்கும்போது, அவரைக்குறித்த முன்னுரை தேவைப்படுகிறது.

ஆதியாகமம் 1:1-ல் ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஆண்டவர், அவர் எப்படிப்பட்டவர், யாருக்கெல்லாம் அவர் ஆண்டவர் என்ற எந்த தகவலும் இந்த வசனத்தில் இல்லை. அப்படியானால், அந்த தேவனைப்பற்றி நன்கு அறிந்த, அவரை விசுவாசிக்கக்கூடியவர்களுக்கு மாத்திரமே வேதம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, தேவனைப் பற்றிய ஒரு அறிமுகம் தேவையில்லாத ஒரு நபருக்காகவே வேதம் எழுதப்பட்டுள்ளது.

தேவனை அறியாதவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் இந்த வேதம் எழுதப்பட்டிருக்குமானால், அந்த தேவன் யார்? எப்படிப்பட்டவர் என்ற அறிமுகத்தைக் கொடுத்த பின்பே, இப்படிப்பட்ட தேவன் தான் வானத்தையும், பூமியையும் படைத்தார் என்று எழுதப்பட்டிருக்கும்.

எனவே, வேதத்தைக்கொண்டு வேதத்தை நம்பாத, வேதத்தை விசுவாசிக்காதவர்களோடு வியாக்கியாணம் செய்வது தவறு.

இந்த முதலாம் வசனம் முழுவதும் விஞ்ஞானத்தால் நிறைந்தது.

இந்த வசனத்தில் மூன்று காரியங்களை நாம் தெளிவாக பார்க்க முடியும்.
    1. காலம்
    2. இடம்
    3. பொருள்

ஆதியாகமம் 1:1-ல் காணப்படும் தேவன் என்பவர் காலத்திற்கும், இடத்திற்கும் பொருளுக்கும் அப்பாற்பட்டவர். ஏனென்றால், அவர் தான் காலத்தையும், இடத்தையும், பொருளையும் உண்டாக்கினார்.

ஆதியிலே (ஆதி) என்பது ஒரு காலத்தைக் குறிக்கிறது. வானம் என்பது இடத்தைக் குறிக்கிறது. பூமி என்பது பொருளைக் குறிக்கிறது.

எபிரெயு மொழி:
தமிழ், ஆங்கிலம், சிங்கலம் போன்ற மொழிகள் அனைத்தும் இடது புறத்திலிருந்து வலது புறம் நோக்கி எழுதப்படும் எழுத்துக்கள். ஆனால் எபிரெய மொழி இடது புறத்திலிருந்து வலது புறம் நோக்கி எழுதப்படும் எழுத்து.

எபிரெயு மொழியில் மொத்தம் 22 எழுத்துக்கள் உள்ளது. அதை எப்படி தமிழில் உச்சரிப்பது என்றால்,
    1. ஆலெப் (Alef)
    2. பேத் (Bet)
    3. கிமெல் (Gimel)
    4. டாலெத் (Dalet)
    5. ஹெ (Heh)
    6. வௌ (Vav)
    7. ஷாயீன் (Zayin)
    8. கேத் (Khet)
    9. தேத் (Tet)
    10. யோட் (Yud)
    11. கப் (Kaf)
    12. லாமேட் (Lamed)
    13. மேம் (Mem)
    14. நூன் (Nun)
    15. சாமெக் (Samekh)
    16. ஆயின் (Ayin)
    17. பே (Peh)
    18. த்சாடே (Tzadi(k))
    19. கோப் (Qof)
    20. ரேஷ் (Resh)
    21. ஷீன் (Shin)
    22. தௌ (Tav)

எபிரெய மொழியில் ஆதியாகமம் 1:1
பெகிஸித் பாஹா எலோகிம் ஹட் ஹசமாயின் வஹிட் ஹரேட்ஸ்.

எபிரெயு நடை
ஸ்ட்ரேஹ ட்ஹிவ ன்யிமாசஹ ட்ஹ ம்கிலோஎ ஹாபா த்ஸிகிபெ

1:1 יתשארב
׃ץראְָֽהָ תאֵ֥וְּ יִםמַ֖שּׁהַ תאֵֹ֥ יםהִ֑לֹאֱ ארָ֣בָּ יתשִׁארֶבְּ

יתשִׁארֶבְּ - பெகிஸித் – ஆதியிலே – Beginning

ארָ֣בָּ - பாஹா – சிருஷ்டித்தார் - Greater

יםהִ֑לֹאֱ - எலோகிம் – தேவன் - God

תאֵֹ֥ - ஹட் – அர்த்தம் இல்லை

יִםמַ֖שּׁהַ - ஹசமாயின் – வானங்கள் - Heaven

תאֵ֥וְּ - வஹிட் – மற்றும் - And

׃ץראְָֽהָ - ஹரேட்ஸ் – பூமி – Earth

தமிழ் மொழியில் ஆதியாகமம் 1:1 ஐந்து வார்த்தைகளைக் கொண்டது.
    1. ஆதியிலே
    2. தேவன்
    3. வானத்தையும்
    4. பூமியையும்
    5. சிருஷ்டித்தார்

இந்த வசனம் ஆங்கில மொழியில் பத்து வார்த்தைகளைக் கொண்டது.
    1. In
    2. the
    3. Beginning
    4. God
    5. Created
    6. the
    7. Heaven
    8. and
    9. the
    10. Earth

இந்த வசனம் எபிரெயு மொழியில் ஏழு எழுத்துக்களைக் கொண்டது.
    1. יתשִׁארֶבְּ - பெகிஸித்
    2. ארָ֣בָּ - பாஹா
    3. יםהִ֑לֹאֱ - எலோகிம்
    4. תאֵֹ֥ - ஹட்
    5. יִםמַ֖שּׁהַ - ஹசமாயின்
    6. תאֵ֥וְּ - வஹிட்
    7. ׃ץראְָֽהָ - ஹரேட்ஸ்

வேதத்தின்படி ஏழு என்பது பரிபூரணம் அல்லது சம்பூரணம் என்று பொருள்படும். (׃ץראְָֽהָ - ஹரேட்ஸ்) இந்த கடைசி வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு புள்ளிகள் என்பது முற்றுப்புள்ளியை விட, உறுதியான முடிவு என்பதைக் குறிக்கிறது.

சர்வ சம்பூரணமும் இந்த ஏழு வார்த்தைக்குள் அடங்கியிருக்கிறது என்பதை இந்த கடைசி இரண்டு புள்ளிகளும் காட்டுகிறது.

இப்படிப்பட்ட வெளிப்பாட்டை மூல மொழியாகிய எபிரெயு மொழியில் வேதத்தைப் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

எபிரெயு மொழியின் ஆழங்களை, இரகசியங்களை வேறு எந்த ஒரு மொழிபெயர்ப்பாலும் கொடுக்க முடியாது.

வேதத்தில் எண்களுக்கான அர்த்தங்கள்:
1. ஒன்று என்பது தேவனைக் குறிக்கும். (God)

2. இரண்டு என்பது பிரிவைக் குறிக்கும். (Division)

3. மூன்று என்பது உயிர்த்தெழுதலைக் குறிக்கும். (Resurrection)

4. நான்கு என்பது இயேசுவைக் குறிக்கும். (Jesus)

5. ஐந்து என்பது தேவனுடைய வல்லமையைக் குறிக்கும். (Power of God)

6. ஆறு என்பது மனிதனைக் குறிக்கும். (Man)

7. ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கும். (Completeness)

எபிரெயு மொழிகள் மொத்தம் இருபத்து இரண்டு எழுத்துக்கள் உள்ளன.

I. יתשִׁארֶבְּ - பெகிஸித்
குமாரன் என்ற பதத்திற்கு எபிரெயு மொழியிலே இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று பார் மற்றொன்று பென். பார் என்றாலும், பென் என்றாலும் குமாரன் என்பதையே குறிக்கிறது.

בְּ – ப - என்பது எபிரெய மொழியின் இரண்டாவது வார்த்தை.

רֶבְּ - பார் – என்றால் எபிரெயு மொழியில் குமாரன் என்று பொருள். வேதம் குமாரன் என்ற பெயரில் தான் துவங்குகிறது.

வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கடைசி எழுத்து. வெளிப்படுத்தல் கடைசி அதிகாரம் கடைசி வசனத்தில் வாசிக்கிறோம். ஆமென் என்று வேதம் முடிகிறது.

கடைசி வார்த்தையின் கடைசி எழுத்து “ன்“.

வேதத்தில் எழுதப்பட்ட முதல் எழுத்து “ப“, கடைசி எழுத்து “ன்“. இரண்டையின் சேர்த்தால் பென். பென் என்றால் குமாரன் என்று பொருள்.

யோவான் 1:1-ல் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்று வாசிக்கிறோம்.

யோவான் 1:14-ல் அந்த வார்த்தை தான் மாம்சமானது என்றும் வாசிக்கிறோம்.

ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற பதம் யாரைக் குறிக்கிறது என்றால் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது.

குமாரனாய் வந்தவர் யார் என்றால், ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர்.

வார்த்தை என்பது தேவனாகிய இயேசு. மாம்சமாய் வந்தது மனுஷனாகிய இயேசு.

இந்த இயேசு மனுஷனாய் வந்த போது குமாரனாய் வந்தார். அப்படியானால் உலகத்தில் வந்த இயேசு தான் குமாரன். மனுஷனாய் வந்தவர் தான் குமாரன். அந்த குமாரனாகிய இயேசு தான் இன்று வார்த்தையாய் (பரிசுத்த வேதம்) இருக்கிறார்.

வேதத்தில் உள்ள முதல் எழுத்து “ப", கடைசி எழுத்து “ன்" பென் இந்த குமாரனுக்குள், அதாவது இயேசுவுக்குள் முழு வேதமும் அடங்குகிறது.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இணைந்து இயேசுவைக் குறிக்கிறது என்றால், முழு வேதமும் இயேசுவுக்குள் இருக்கிறது.

வேதத்தை அறியாத சிலர் பழைய ஏற்பாட்டில் இயேசு இருக்கிறாரா? என்று கேட்பதுண்டு. பழைய ஏற்பாட்டில் இயேசு இருக்கிறாரா என்று கேட்பதே தவறு, முழு வேதமும் (பழைய மற்றும் புதிய ஏற்பாடு) இயேசுவுக்குள் இருக்கிறது என்பதே உண்மை.

வேதத்தில் குறிப்பாய் பழைய ஏற்பாட்டில் இயேசு இருக்க வேண்டும் என்பது அல்ல, இயேசுவுக்குள் தான் முழு வேதமும் (பழைய மற்றும் புதிய ஏற்பாடு) இருக்கிறது. இந்த வேதம் தான் குமாரன் என்ற இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை.

רֶבְּ - பார் – என்றால் எபிரெயு மொழியில் குமாரன் என்று பொருள். வேதம் குமாரன் என்ற பெயரில் தான் துவங்குகிறது. குமாரன் என்பது இயேசுவைக் குறிக்கிறது.

שִׁא எஸ் என்றால் அக்கினி என்று பொருள்.

முதல் வார்த்தையில் உள்ள שִׁא என்ற வார்த்தையை நீக்கிவிட்டு முதல் வார்த்தையை வாசித்தால், יתרֶבְּபெகித் என்று வரும். பெகித் என்றால் உடன்படிக்கை என்று பொருள்.

அப்படியானால் יתשִׁארֶבְּ (பெகிஸித்) – என்பது குமாரனாகிய இயேசு அக்கினியின் மூலமாக கொடுத்த உடன்படிக்கை தான் பரிசுத்த வேதாகமம் என்பதை குறிக்கிறது.


II. ארָ֣בָּ (பாஹா)
இரண்டாவது எழுத்து பாஹா. முதல் வார்த்தையாகிய பெகிஸித் என்ற வார்த்தையின் முதல் மூன்று எழுத்துக்களும் அப்படியே இரண்டாவது வார்த்தையில் வந்திருப்பதை பார்க்க முடியும்.

பார் என்றால் எபிரெயு மொழியில் குமாரன் என்று பொருள். பாஹா என்றால் மனுஷகுமாரன் என்பதைக் குறிக்கிறது. அதாவது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

வேதத்திலுள்ள முதல் இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால், பரலோகத்திலே வீற்றிருந்த தேவகுமாரன், பரலோகத்தை விட்டு பிரிந்து (எபிரெயு மொழியல் இரண்டு என்றால் பிரிவு என்று பொருள்), பூமியில் அவதரித்தார் என்பதை உணர்த்துகிறது.


3. יםהִ֑לֹאֱ - எலோகிம்
எலோகிம் என்றால் தேவன் என்று பொருள். இந்த பதம் இலக்கண ரீதியாக பன்மையைக் குறிக்கிறது. ஆனால் இந்த பதம் ஒரே தேவனைப் பற்றி பேசுகிறது. ஏன் பன்மையாய் காட்டுகிறது என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை இந்த மூன்றாவது வார்த்தை காட்டுகிறது.

மூன்று என்பது உயிர்த்தெழுதலின் அடையாளம். இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். உயிரோடு எழுந்த இயேசு இன்று மனிதனாக அல்ல, தேவனாக இருக்கிறார்.

4. תאֵֹ֥ – ஹட்
எபிரெய மொழியில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற வார்த்தை இந்த ஹட் என்ற வார்த்தை. ஆனால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லை. இதுபோன்ற அர்த்தம் இல்லாத ஒரு சொல் தமிழில் இல்லை. ஆங்கிலத்திலும் இல்லை.

தமிழில் உள்ள ஆ, இ, ஓ, ம். இது போன்ற எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் உண்டு.

ஆங்கிலத்தில் Mmm, Hmm என்றால் கூட அதற்கும் அர்த்தங்கள் உண்டு்.

ஆனால் எபிரெயு மொழியில் உள்ள ஹட் என்ற பதத்திற்கு அர்த்தம் இல்லை. ஆனால் பழைய ஏற்பாட்டில் இந்த ஹட் என்ற பதம் 7,034 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 7 என்பது பரிபூரணம் அல்லது சம்பூரணத்தைக் குறிக்கிறது.

3 என்பது உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது

4 என்பது இயேசுவைக் குறிக்கிறது.

எபிரெயு மொழியில் நான்கு என்றால் அது இயேசுவைக் குறிக்கும். ஆதியாகமம் 1:1-ல் நான்காவதாக பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை ஹட். அப்படியானால் ஹட் என்பது இயேசுவைக் குறிக்கிறது.

மல்கியா இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடும்போது, நீதியின் சூரியன் என்று குறிப்பிடுகிறார் (மல்கியா 4:2). நான்காவது நாள் ஆண்டவர் சூரியனை படைத்தார். எனவே, ஹட் என்பது இயேசுவைக் குறிக்கும்.

சங்கீதம் 119-ல் 176 வசனங்கள் உள்ளன. இவைகள் 22 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் எபிரெய எழுத்துக்களின் ஒரு எழுத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக முதல் எட்டு வசனங்களும் எபிரெய மொழி முதல் எழுத்தான ஆலெப் என்ற எழுத்திலே துவங்குகிறது. இப்படி எபிரெயு மொழியில் உள்ள 22 எழுத்துக்களுக்கும் எட்டு எட்டு வசனத்தை எழுதியுள்ளார் தாவீது ராஜா.

பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 119-ல் ஒவ்வொரு எட்டு வசனங்களுக்கு மேலும், அந்த எபிரெய எழுத்து எழுதப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும்.

எபிரெய எழுத்துக்கள் மொத்தம் 22. முதல் எழுத்து ஆலெப். கடைசி எழுத்து தௌ.

ஏசாயா 44:6
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவருடைய மீட்பரும் சொல்லுகிறார்.

பழைய ஏற்பாட்டின் ஆண்டவர், நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

வெளிப்படுத்தல் 1:8
இருக்கிறவரும், இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்; நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

வெளிப்படுத்தல் 22:13
நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

புதிய ஏற்பாட்டில் இயேசு நான் முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஓமெகா. இயேசு நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறார்

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளதால், அல்பா, ஓமேகா என்று எழுதப்பட்டுள்ளது. இதை எபிரெய மொழியில் சொல்வது என்றால் ஆலெப், தௌ என்று சொல்ல வேண்டும்.

அல்பா, ஓமெகா என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து ஆலெப், தௌ ஆக 7,034 முறை வெளிப்பட்டுள்ளார்.

ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில் மாத்திரம் 13 முறை ஹட் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 1:1-ல் பயன்படுத்தப்பட்டுள்ள நான்காவது வார்த்தையான ஹட் என்பது இயேசுவைக் குறிக்கிறது.

1 பேதுரு 3:22அ
அவர் பரலோகத்திற்குப் போய் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்.

ஆதியாகமம் 1:1-ல் மூன்றாவது வார்த்தை எலோகிம். எலோகிம் என்றால் தேவன். அந்த தேவன் என்ற வார்த்தைக்கு வலது புறத்தில் ஹட் என்ற நான்காவது வார்த்தை வந்துள்ளது. அதாவது தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசு இருக்கிறார் என்பதை ஆதியாகமம் 1:1-ல் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது வார்த்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

ஆதியாகமம் 1:1
முதல் வார்த்தையான பெகிஸித் என்ற பதத்தில் இயேசு இருக்கிறார்.

இரண்டாவது வார்த்தையான பாஹா என்ற பதத்தில் பார் என்று இயேசு இருக்கிறார்.

மூன்றாவது வார்த்தையான எலோகிம். மூன்று என்பது உயிர்த்தெழுதல் என்பதால், மூன்றாவது வார்த்தையிலும் உயிர்த்தெழுந்த இயேசு, அதாவது திரித்துவத்தின் இரண்டாவது நபராக இயேசு இருக்கிறார்.

நான்காவது வார்த்தை ஹட். ஆல்பா ஓமேகாவாக, ஆலெப் தௌ ஆக இயேசு இருக்கிறார்.

ஆதியாகமம் 1:1-ல் முதல் நான்கு வார்த்தையை மாத்திரம் எடுத்து ஓர் ஆராய்ச்சி. எபிரெயு மொழியில் ஹட் என்றால் அதற்கு அர்த்தம் இல்லை.

תאֵֹ֥ יםהִ֑לֹאֱ ארָ֣בָּ יתשִׁארֶבְּ

முதலாவது வார்த்தை பெகிஸித் (יתשִׁארֶבְּ) என்றால் ஆதியிலே.

இரண்டாவது வார்த்தை பாஹா (ארָ֣בָּ) என்றால் சிருஷ்டித்தார்.

மூன்றாவது வார்த்தை எலோகிம் (יםהִ֑לֹאֱ) என்றால் தேவன்.

நான்காவது வார்த்தை ஹட் (תאֵֹ֥) என்றால் ஆலெப், தௌ

அப்படியானால், ஆதியிலே சீருஷ்டித்தார் தேவன் ஆலெப்பையும், தௌவையும்.

ஆதியிலே தேவன் ஆலெப்பையும், தௌவையும் சிருஷ்டித்தார் என்றால், கடவுள் முதல் முதலாக உருவாக்கியது எபிரெயு மொழி. ஆதியிலே தேவன் ஆலெப் முதல் தௌ வரை உள்ள எபிரெயு மொழியை உண்டாக்கினார்.

கல்தேன்றி மண் தோன்றா முன் தோன்றி மூத்த மொழி தமிழ் மொழி என்று தமிழர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் வானமும், பூமியும் படைக்கப்படும் முன்பே கர்த்தர் எபிரெயு மொழியை உருவாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது.

ஆண்டவர் எபிரெயு மொழியை உருவாக்கின பின்பே, தேவதூதர்களை உருவாக்குகிறார். வானங்களை உருவாக்குகிறார். பூமியை உருவாக்குகிறார்.

அப்படியானால் ஆண்டவர் தேவதூதர்களோடு எபிரெயு மொழியிலேயே பேசியிருக்க வேண்டும்.

ஏதேன் தோட்டத்திலே ஆண்டவர் ஆதாம், ஏவாளோடு எபிரெயு மொழியிலேயே பேசினார்.

நோவா காலத்து வெள்ளத்திற்கு பிறகு, ஜனங்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டி, கர்த்தருக்கு கோபமூட்டினபோது, கர்த்தர் அவர்களுடைய எபிரெயு பாஷையை எடுத்துக்கொண்டு, பாஷைகளை தாருமாறாக்கினார்.

இப்படியாக பாபேலில் வைத்து எபிரெயு மொழியை எடுத்துக்கொண்ட ஆண்டவர், பின் நாட்களில் பாபிலோனிலிருந்து ஒரு மனிதனை தெரிந்துகொண்டு, அவனுக்கு அந்த மொழியைக் கொடுத்தார். அவர் தான் ஆபிரகாம்.

ஆபிரகாம் ஆண்டவரால் அழைக்கப்படும் முன் பேசிய மொழி அகாடியன் மொழி.

நாம் இந்த நாட்களில் பயன்படுத்தி வருகின்ற அல்லேலுயா என்ற பதம் எபிரெய பதம். அதாவது பரலோகத்தின் மொழி.

அல் என்றால் துதி என்று பொருள்.

எல் என்றால் கடவுள்.

லூயா என்றால் யாவே என்று பொருள்.

ஆமென் என்ற பதமும் எபிரெயு பதம்.

அப்படியானால் எபிரெயு மொழி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது. அந்த மொழி தான் இயேசு. இயேசு தான் அந்த மொழி. மொழி என்றால் ஆலெப், தௌ. இது மொழி மாத்திரம் அல்ல இயேசுவையும் குறிக்கிறது.

எனவேதான், யோவான் 1:1-ல் ஆதியிலே வார்த்தை இருந்தது என்று வாசிக்கிறோம்.

இதுபோன்ற வேதத்தின் ரகசியங்களை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அறிந்துகொள்ள முடியாது. மூல பாஷையான எபிரெயு மொழியில் வேதத்தை ஆராய்ச்சி செய்தால் தான் உண்மையான, ஆழமான விளக்கங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எபிரெயு மொழி என்பது பரலோகத்தின் மொழி என்பதால் தான், அநேகர் இன்று எபிரெயு மொழியை வெறுக்கிறார்கள். பிசாசானவனும் எபிரெயு மொழியை வெறுக்கிறான். பிசாசு எபிரெயு மொழியை மாத்திரம் அல்ல, எபிரெயு மொழி பேசுகின்ற இஸ்ரவேலர்களையும் வெறுக்கிறான்.

நாம் பரலோகத்திற்கு சென்ற பிறகு நாம் பேசும் மொழி எபிரெயு மொழி.


5. יִםמַ֖שּׁהַ - ஹசமாயின்
ஐந்தாவது வார்த்தை ஹசமாயின். ஹசமாயின் என்றால் வானங்கள் என்று பொருள்.

எபிரெயு மொழியில் நான்கு என்பது தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது.


6. תאֵ֥וְּ - வஹிட்
ஆறாம் வார்த்தை வஹிட். இந்த வார்த்தையிலும் ஹட் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹட் என்றால் இயேசுவைக் குறிக்கும்.

எபிரெயு மொழியில் நான்கு என்றால் இயேசு. ஆறு என்றால் மனிதன் என்று பொருள்.

அப்படியானால் நான்காம் வார்த்தையான ஹட் என்பது தேவனாகிய இயேசுவைக் குறிக்கிறது. ஆறாம் வார்த்தையான வஹிட் என்பது மனுஷனாகிய இயேசுவைக் குறிக்கிறது.


7. ׃ץראְָֽהָ - ஹரேட்ஸ்
ஏலாம் வார்த்தை ஹரேட்ஸ். ஹரேட்ஸ் என்றால் பூமி என்று பொருள். அப்படியானால் மனுஷனாகிய இயேசு பூமியை உருவாக்குகிறார்.

இயேசு மனிதனுடைய பாவத்திலிருந்து அவனை மீட்டு, அவனை ஆண்டவரோடு சேர்ப்பதற்காகவே வந்தார்.

ஆதியாகமம் 1:1
׃ץראְָֽהָ תאֵ֥וְּ יִםמַ֖שּׁהַ תאֵֹ֥ יםהִ֑לֹאֱ ארָ֣בָּ יתשִׁארֶבְּ

முதல் வசனத்தில் எழு எழுத்துக்கள் உள்ளது. இவற்றில் நடுவாக இருப்பது ஹட் என்ற வார்த்தை. ஹட் என்றால் இயேசு என்று பொருள்.

அப்படியானால் இயேசு தான் நடுவாக இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றையும், இடது புறத்தில் உள்ள மூன்றையும் தாங்குகிறார்.

வலது புறத்தில் உள்ள மூன்று வார்த்தைகளும் கடவுள், தெய்வத்துவம் சம்பந்தமானவை.

இடது புறத்தில் உள்ள மூன்றும் உலகம், அதாவது வானம், பூமி சம்பந்தமானவை.

மனிதன் பாவம் செய்தபடியினால் இடது புறத்தில் உள்ள மூன்று வார்த்தைகளும், வலது புறத்தில் உள்ள வார்த்தைகளை விட்டு பிரிந்தது.

கடவுளோடு இருந்த மனிதன், பாவம் செய்தபோது, கடவுளை விட்டு பிரிந்தான். கடவுளை விட்டு பிரிந்த மனிதனை கடவுளோடு சேர்க்கும்படியாவே, இயேசு கிறிஸ்து மனிதனானார்.

இயேசுவானர் சிலுவையிலே தொங்கி, கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, தன்னுடைய ஜீவனையே கொடுத்து, மனிதன் கடவுளோடு சேர்வதற்காக வழியை ஆயத்தப்படுத்தினார்.

மனிதன் பாவம் செய்தபோது, கடவுளுடைய ஒளியை அதாவது மகிமையை இழந்தான். மனிதனுடைய வாழ்க்கையை பிரகாசிக்கப் பண்ணுகிற ஒளி தான் இயேசு கிறிஸ்து.

எபிரெயர்கள் ஏழு பொன் குத்துவிளக்கை (மெனோரா) வைத்திருப்பார்கள்.

அந்த ஏழு விளக்குகளும் ஆதியாகமம் 1:1-ல் உள்ள ஏழு வார்த்தைகளைக் குறிக்கிறது.

வெளிப்படுத்தல் 2:1-ல் இயேசுவானவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவில் இருக்கிறார் என்று வாசிக்கிறோம்.

ஆதியாகமம் 1:1 என்ற இந்த ஒரு வசனத்தைக் குறித்து நாம் இந்த தொகுப்பில் அறிந்து கொண்டோம். ஆனால் இது ஒரு சிறிய விளக்கம் மட்டுமே.

இன்னும் ஏராளமான, ஆழமான, விஞ்ஞானப்பூர்வமான சத்தியங்கள் இந்த முதலாம் வசனத்தில் மறைந்திருக்கிறது.

ஆதியாகமம் 1:1-லேயே இவ்வளவு சத்தியங்கள் அடங்கியிருக்கிறது என்றால், முழு வேதத்தையும் ஒவ்வொரு எழுத்தாக, ஒவ்வொரு வார்த்தையாக எபிரெயு மொழியில் ஆராய்ந்தால் எவ்வளவு சத்தியங்களை ஆராய முடியும்.

இவ்வளவு விலையேறப்பெற்ற வேதாகமத்தை, இன்று விஞ்ஞானிகள், அறிவாளிகள் என்ற பெயரில், வேதத்தை முறையாக புரிந்துகொள்ளாமல், கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.