என் வாழ்வில்….
===========
ஒரு பெண் தன் வாழ்வில் இயேசு செய்த அற்புத்தை போதகர் ஒருவரை சந்தித்து உள்ளம் உருக தன் அனுபவத்தை கூறினாள்.
ஐயா, என் சரீரத்தில் ஏற்பட்ட தீராத வியாதியை நினைத்து தினமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை நாட்களுக்குத்தான் நான் இப்படி செத்துசெத்துப் பிழைப்பது. எனவே விஷம் குடித்து இறந்து போவது என்று முடிவெடுத்தேன். அதற்கு வேண்டிய எல்லா ஒழுங்குகளையும் நான் செய்து கொண்டிருக்கும் போது வானொலியின் மூலம் உங்கள் செய்தி என் காதில் விழுந்தது. கேட்டுக்கொண்டிருந்தேன், செய்தியின் முடிவில் ஜெபத்தின் போது சகோதரியே! உன் வியாதியின் வேதனை தாங்காமல் நீ தற்கொலை செய்து கொள்ள துணிந்து விட்டாய், வேண்டாம் மகளே! இறைவன் பக்கம் வா, அவர் உனக்கு உதவி செய்வார் என்று கூறினது, என்னைப் பார்த்து சொன்னது போலவே இருந்தது. யோசித்தேன், என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறவர் இயேசு ஒருவர்தான் என்று அறிந்து, இயேசுவை ஏற்றுக் கொண்டு, என் முடிவை மாற்றிக் கொண்டேன்.
இன்றைக்கு நான் ஜீவிக்கிறேன் என்றால் உங்கள் மூலம் ஆண்டவர் பேசிய ஆறுதலான வார்த்தைகளினால் தான். துயரம், வேதனை, கண்ணீர் நிறைந்த இந்த உலகத்தில் இயேசுவே நமக்கு ஆதாரம் என்று கூறினாள். சகோரனே! சகோதரியே! உன் வாழ்க்கையிலும் துயரம் நிறைந்திருக்கிறதா? வேதனை நிமித்தம் மனம் உடைந்து போய் காணப்படுகிறீர்களா? ஒவ்வொரு நாளும் கண்ணீர் நிறைந்த நாட்களா? என்று என் வியாதி நீங்கும்? என்று தான் சரீர சுகம் கிடைக்கும்? கானல் நீராக இருக்கிறதே, ஒரு மணி நேரம் கூட நிம்மதியான வாழ்க்கை இல்லையே! பாடுகள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறதே என்று கலங்கிப்போய் கண்ணீரோடு இருக்கிறீர்களா? தவறான பாவமான செயல்களில் ஈடுபட்டு என் வாழ்க்கை சீரழிந்துப் போய்விட்டதே என்று மனம் உடைந்தும் என் வாழ்க்கையை மாற்றுவார் யாரும் இல்லையே? என்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். (யோவான் 14:1) மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார். (ஏசாயா 53:4)
அந்த சகோதரியைப் போல நீயும் இயேசுவண்டை வா. அவர் உனக்கு உதவி செய்து உன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற வேதனை நிறைந்த சூழ்நிலைகளை மாற்றுவார். இவரே உனக்காக உன் பாவங்களைப் போக்க தன்னையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தவர். இவரே உனக்காக இரத்தம் சிந்தி மீட்பை உண்டு பண்ணினவர்.
அவர் உங்கள் பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு உங்கள் நோய்களையெல்லாம் சுமந்தார். அவர் சிலுவையில் பட்ட தழும்புகளால் இன்று சுகத்தையும் விடுதலையையும் பெற்று இருக்கிறீர்கள்.
ஆண்டவராகிய இயேசுவே என் பாடுகளுக்காகவும், வேதனைகளுக்காகவும், கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்டு நொருக்கப்பட்டு என் துக்கங்களையும், நோய்களையும் சுமந்தீர் என்று விசுவாசிக்கிறோம்.
இயேசுவே என் முழு உள்ளத்தோடு உம்மை நம்பியிருக்கிறேன். நீரே என் வாழ்வில் ஆதாரம் என்று ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் கேளுங்கள். அவர் உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்து அதிசயங்களைக் காணப்பண்ணுவார்.
இப்படிக்கு,
சகோ. ஆல்பர்ட்
தொடர்புக்கு:
கைப்பிரதி ஊழியங்கள் கழகம்,
1/889, அழகாபுரி நகர், மானாமதுரை. 630 606. தமிழ்நாடு.
தொலைப்பேசி: 9382157309
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.