எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும்
நற்செய்தி
அன்பானவர்களே!
உங்களுக்கு ஒரு நற்செய்தி, இயேசு கிறிஸ்து பாவம், வியாதி பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கவே இவ்வுலகிற்கு வந்தார். நம் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாக இயேசு இரட்சகர் சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்தார். பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை இயேசு சிலுவையில் ஏற்றுக்கொண்டு, நமக்காக மரித்து, பின்பு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் நம்மை இரட்சித்துக் கொண்டு இருக்கிறார். பாவம், வியாதி பிசாசின் பிடியிலிருக்கிற யாராயிருந்தாலும், இயேசுவண்டை வரும்போது அவர்களுக்கு விடுதலை (இரட்சிப்பு) தருகிறார். இயேசு சிலுவையில் சிந்திய மாசற்ற இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. இயேசு என்ற பெயருக்கு தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கிறவர் என்று பொருள் என் – பரிசுத்த வேதாகமம் நமக்கு தெரிவிக்கிறது.
அன்பானவர்களே!
நீங்கள் யாராயிருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு தரும் இலவச இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இயேசுவை விசுவாசத்தோடு உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகயாக மாறுவீர்கள். இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது பாவத்தின் மீதும் வியாதியின் மீதும், பிசாசின் பிடியின் மீதும், ஏனைய சகல பிரச்சனையின் மீதும் இயேசு உங்களுக்கு வெற்றி தருவார்.
நாம் நினையாத வேளையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை இவ்வுலகிற்கு நியாயம் தீர்க்க வரப்போகிறார். இயேசுவால் இரட்சிக்கப்பட்டவர்களை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிய விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
“மந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது.“
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
தொடர்புக்கு:
சுவிசேஷ ஐக்கியம்
19, 2-வது தெரு, பெர்க்கின்ஸ்புரம்,
அருப்புக்கோட்டை. – 626 101.
செல்: 94437 36036
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.