===========
நாம் மரிக்கும்போது
============
செல்வந்தரானாலும், ஏழையானாலும், நாம் யாவருமே மரிப்போம். சிலர் வரப்போகும் வாழ்வினை எதிர்நோக்கி மரிப்பார். நமது இலக்கு நமது வறுமையையோ, செல்வத்தையோ சார்ந்ததல்ல. ஆனால் நித்திய கடவுளோடு நாம் வைத்திருக்கிற உறவையே சார்ந்ததாகும். இன்றே நன்னாள், கடவுளோடு நல்லுறவு கொண்டிருக்கிறீர் என்ற உறுியை பெற்றுக்கொள்ளும். மரணத்திற்குப் பின் அதைப் பெற இயலாது.
இயேசு கிறிஸ்து சொன்னார்:
செல்வமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் செந்நிற உடையும் பட்டாடையும் அணிந்து கொண்டு களித்து வளமாய் வாழ்ந்து வந்தான். இலாசரு என்னும் பெயர் கொண்ட ஏழை மனிதன் ஒருவனும் இருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய் அந்த செல்வன் வீட்டு வாயிலருகில் கிடந்தான். அவனுடைய மேசையிலிருந்து விழும் துணிக்கைகளால் ன் பசியை ஆற்றிக்கொள்ள ஆவலோடு காத்துக்கொண்டிருப்பான். நாய்கள் வந்து அவன் புண்களை நக்கும்.
“ஒருநாள் அந்த ஏழை இறந்துபோனான். தெய்வ தூதர்கள் அவனை ஆபிரகாமின் மடியிலே கொண்டு போய் விட்டார்கள். பிறகு அந்த செல்வனும் இறந்து போனான். அடக்கம் செய்யப்பட்டான். அவன் பாதாளத்தில் வேதனைப்படுகையில் உயரப் பார்த்தான். அப்பொழுது தொலைவில் ஆபிரகாமையும் அவர் மடியில் இலாசருவையும் கண்டான். உடனே அவன், “தந்தை ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, இலாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து என் நாவைக் குளிரபச் செய்யும்படி அவனை அனுப்பும். இந்த தீச்சுடரிலே வேதனைப்படுகிறேனே“ என்று உரத்துச் சொன்னான்.
ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்றிருந்தாய். இலாசரு அடைந்ததோ இன்னல், அதை நினைத்துப்பார். இப்பொழுது அவன் இங்கே ஆறுதலடைகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். மேலும், எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும் பிளவு இருக்கிறது. ஆகையால் இவ்விடத்திலிருந்து உங்களிடம் வர விரும்புகிறவர்கள் கடந்து வர இயலாது“ என்றார். அதற்கு அவன், “அப்படியானால், தந்தையே, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன். எனக்கு உடன் பிறந்தார் ஐவர் உண்டு. வேதனையுள்ள இந்த இடத்துக்கு அவர்களும் வராதபடி அவன் போய் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும் என்றான்.
ஆபிரகாம், “அவர்களுக்கு மோசேயும் இறைவாக்குரைப்போரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு செவி சாய்க்கட்டும்“ என்று சொன்னார். அதற்கு அவன், ”இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களுள் ஒருவன் அவர்களிடம் போனால் மனமாற்றமடைவார்கள்“ என்றான். ஆபிரகாம். ”அவர்கள் மோசேயும் இறைவாக்குரைப்போரும் கூறியவற்றிற்கு செவிசாய்க்காவிடில், இறந்தோரிலிருந்து ஒருவன் உயிரோடெழுந்து போனாலும் நம்பமாட்டார்கள்“ என்று சொன்னார். (லூக்கா 16:19-31)
கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிரோடெழுப்பப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்வது எப்படி? இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிரோடெழுப்பப்படவில்லை என்றாகும். கிறிஸ்துவும் உயிரோடெழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவிக்கும் செய்தியும் பொருளற்றதாகும், உங்கள் நம்பிக்கையும் பொருளற்றதாகும். மேலும், நாங்கள் கடவுளின் பொய்ச்சாட்சிகளாய் காணப்படுவோம். எப்படியெனில், கடவுள் கிறிஸ்துவை உயிரோடெழுப்பினார் என்று நாங்கள் அவரைப் பற்றி சாட்சி கூறினோம். ஆனால் இறந்தோர் உயிரோடெழுப்பப்படுவதில்லை என்பது உண்மையானால், கடவுள் கிறிஸ்துவை உயிரோடெழுப்பவில்லை என்றாகும். இறந்தோர் உயிரோடெழுப்பப்படுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிரோடெழுமப்பப்படவில்லை என்றாகிறது அல்லவா? கிறிஸ் உயிரோடெழுப்பப்படவில்லையென்றால், உங்கள் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னும் பாவ மன்னிப்புப் பெறாத நிலையிலேயே இருக்கிறீர்கள் என்றுமாகும். மேலும், கிறிஸ்வினிடம் நம்பிக்கை கொண்டவர்களாய்த் துஞ்சினவர்களும் அழிந்துபோனவர்களாவார்கள். இம்மைக்கென்று மட்டும் நாம் கிறிஸ்துவை நம்பி வாழ்கிறோமென்றால், எல்லா மனிதருள்ளும் நாமே மிக மிக இரங்குதற்குரியவர்களாவோம்.
ஆனால், கிறிஸ் மெய்யாகவே உயிரோடெழுப்பப்பட்டார். அவர் முதலில் உயிரோடெழுப்பப்பட்டது துஞ்சினோர் அனைவரும் உயிரோடெழுப்பப்படுவர் என்பதை உறுதி செய்கிறது. சாவு நிகழ்வதும் ஒரு மனிதனாலேயே, செத்தோரின் உயிர்த்தெழுதல் நிகழ்வதும் ஒரு மனிதனாலேயே. எல்லோரும் ஆதாமோடு இணைக்கப்பட்டவர்களாய் இறப்பது போல், எல்லோரும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டவர்களாய் உயிர்பெற்றெழுவர். ஒவ்வொருவனும் அவனவனுக்கு விதித்துள்ள ஒழுங்கின்படி உயிர்பெற்றெழுவான். இறந்தோரின் உயிர்த்தெழுதலை உறுதி செய்கிறவராகக் கிறிஸ்து முதலில் உயிர்த்தெழுந்தார். அடுத்தபடியாக, அவருக்குரியவர்கள் உயிர்த்தெழுவார்கள். அது அவர் மீண்டும் வரும்போது நடக்கும். (1 கொரிந்தியர் 15:12-23)
இந்தப் பிரதியில் தாங்கள் படித்தவை அனைத்தும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தங்கள் வாழ்க்கையில் ஆறுதலும், சமாதானமும், சந்தோஷமும், வெளிச்சமும் உண்டாக பரிசுத்த வேதாகமத்தையோ அல்லது அதன் சில பகுதிகளையோ வாசித்துப் பாருங்கள். அவைகள் கிடைக்கும் இடம்:
உங்கள் கடிங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
இந்திய வேதாகமச் சங்கம்
தபால் பெட்டி 502, பார்க் டவுன்,
சென்னை 600 003. தமிழ்நாடு
Published by: THE BIBLE SOCIETY OF INDIA
WHEN YOU DIE? – Tamil
50N 0882/2017-18/150M
ISBN 81-221-0374-X
ISBN 978-81-221-0374-8
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.