============
மாபெரும் வைத்தியன்
=============
நீர் சுகவீனமாய்ப் படுத்திருப்பதைப் பற்றி நான் மெத்தவும் வருந்தி உளம்கனிந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அத்துடன் நீர் விரைவில் சுகமடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன். நிழலின் அருமை வெளியில் போனால் தெரியும் என்பது போலச் சுகவீனம் உண்டாகும் வரை நற்சுகத்தின் மேன்மையை நாம் உணருவதில்லை. நீர் நற்சுகம் வேண்டுமென்று விரும்புவது இயல்பே. இவ்விருப்பத்தை நடைமுறையில் கொண்டு வரவே நீர் பெரும் பிரயாசை எடுத்து நல்ல மருத்துவரைத் தேடி மருந்து அருந்தி அதிவிரைவில் சுகமடைய விரும்புகிறீர்.
நீர் மருந்தருந்துவதுமில்லாமல் மாபெரும் வைத்தியரான எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவிடம் உமது விருப்பத்தை ஜெபத்தின் மூலம் அறிவித்துச் சுகமடைவது உமக்குக் கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு என்று, உம்மை நினைப்பூட்ட விரும்புகிறேன். நீர் பெறும் சிகிச்சையை ஆசீர்வதித்து உமக்குப் பூரண சுகம் நல்க நீர் அவரிடம் ஜெபிக்கலாம். அவர் உமது வேண்டுதலைக் கேட்டு இலவசமாய் அற்புத சுகமளிப்பார். ஏனெனில் அவர் அருள்கூறும் அற்புதர், அவர் பாவத்தை மட்டுமல்ல, கொடும் வியாதியையும் பரிகரிக்கக்கூடிய மாபெரும் வைத்தியர். எக்கொடிய வியாதியும் அவருக்கு நிகரன்று, அவர் இவ்வுலகில் இருந்த போது சுற்றி நடந்து சுவசேஷத்தைதப் பிரசங்கித்து மக்களுக்குண்டாயிந்த சகல நோய்களையும் நீக்கிக் குணமாக்கினார் என்று சத்திய வேதத்தில் வாசிக்கிறோம். (மத்தேயு 4:23)
இன்றும் சரீரப்பிரகாரமாகவும, ஆத்மீகப் பிரகாரமாகவும் அவதிப்படுகிறவர்களை ஆசீர்வதித்து அருள்கூற வல்லவராய் விளங்குகின்றார். ஆகவே உங்களுக்காக எடுக்கப்படும் சிகிச்சையை ஆசீர்வதிக்க ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் கேட்க மறந்துவிட வேண்டாம். ஏனெனில், ”ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய்“ (சங்கீதம் 50:15) என்று வாக்களித்திருக்கின்றார்.
சில சமயங்களில் வியாதிகளையும், வாழ்க்கையில் இன்னல்களையும் ஏமாற்றங்களையும் உண்டுபண்ணி, இவ்வுலகின் கண் உள்ள நம் நோக்கங்களை மாற்றித் தம்மைத் தேடும்படியாகத் தேவன் இவைகளை நமக்கு ஒரு தூண்டுகோலாக பயன்படுத்துகின்றார் என்பதை நீர் சிந்தித்ததுண்டா? சரீர சுகத்துக்கு மட்டுமன்று ஆத்மீக சுகமடைவதற்கும் அதாவது நீங்கள் இரட்சிப்படைவதற்கும் என்னிடம் வாருங்கள் என்று இயேசு கிறிஸ்து உம்மை விரும்பி வருந்தி அழைக்கின்றார். “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்“ (மத்தேயு 11:28) என்று வாசிக்கிறோம்.
அன்பரே! நீர் எப்பொழுதாவது உமது ஆத்ம ஈடேற்றத்திற்காகக் கடவுளிடம் திரும்பினதுண்டா? இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பும், பாவ மன்னிப்பும் பெற்றதுண்டா? இல்லாவிடில் உமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரை உமது சொந்தத் தெய்வ இரட்சகராக ஏற்றுக் கொள்வீராக! ஏனெனில் அவர் தாமே சிலுவையில் உமது சகல பாவங்களையும், நோய்களையும் சுமந்து உமக்குப் பதிலாய் தமது ஜீவனைக் கிருபாதாரபலியாகத் தந்தார்.
குமாரனிடத்தில் (இயேசு கிறிஸ்வினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். குமாரனை விசுவாசியாதவனே ஜீவனைக் காண்பதில்லை். (யோவான் 3:36)
நீர் தைப் படிக்கும்பொழுது, “இப்பொழுதே அனுக்கிரகக் காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்“ என்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் உமக்கு நினைப்பூட்டுகின்றார். ஆகவே இன்றே இயேசு கிறிஸ்துவை உமது சொந்தத் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராக.
“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்கி….. திருப்தியாக்குகிறார்“ (சங்கீதம் 103:3)
இக்கைப்பிரதியைப் படித்ததினால் இயேசு கிறிஸ்துவை நீர் ஏற்றுக்கொள்வீராயின் எமக்கு எழுதவும்.
தமிழாக்கம்: Dr. சாமுவேல் தானியேல்
குறிப்பு:
தூய வேதாகமம் மாற்கு 16:15-ன் அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டம் ஷரத் 25-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள மதச்சுதந்திரத்தின் அடிப்படையிலும் இந்த கைப்பிரதி பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. எவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, நயம் காட்டியோ, மோசடியான முறையிலோ மதம் மாற்றுவது இக்கைப்பிரதியின் நோக்கமல்ல.
மேலும் விவரங்களுக்கும் ஜெப உதவிக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
போன்: 044-2644 9213
044-2660 3503
044-4355 2402
Email: fptlindia@gmail.com
Website: www.fptlindia.com
விசுாச ஜெபக் கைப்பிரதிக் கழகம்
அஞ்ச் பெட்டி எண். 1010.
சென்னை 600 010
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.