Type Here to Get Search Results !

John 9 Bible Quiz | Gospel of JOHN Bible Question With Answer in Tamil | யோவான் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் ஒன்பதாம் அதிகாரம்
The Gospel of JOHN 9
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. ரபீ, இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம் என்றது கேட்டது யார்?
A) பரிசேயர்
B) நியாயசாஸ்திரி
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
    (யோவான் 9:2)

02. ஒருவனும் கிரியை செய்யகூடாத _________ வருகிறது.
A) பகற்க்காலம்
B) கொடிய காலம்
C) இராக்காலம்
Answer: C) இராக்காலம்
    (யோவான் 9:4)

03. பிறவிக் குருடனுடைய கண்களில் சேற்றை பூசிய இயேசு அவனை எங்கு போய் கழுவ சொன்னார்?
A) பெதஸ்தா குளத்தில்
B) சீலோவாம் குளத்தில்
C) யோர்தான் நதியில்
Answer: B) சீலோவாம் குளத்தில்
    (யோவான் 9:7)

04. சீலோவாம் என்பதன் அர்த்தம் என்ன?
A) அனுப்பப்பட்டவன்
B) திறக்கப்படுவதாக
C) அனுப்பப்பட்டேன்
Answer: A) அனுப்பப்பட்டவன்
    (யோவான் 9:7)

05. பார்வையடைந்த பிறவி குருடனை யாரிடத்திற்கு கொண்டு போனார்கள்?
A) பரிசேயரிடத்திற்கு
B) அவன் பெற்றோரிடத்திற்கு
C) இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு
Answer: A) பரிசேயரிடத்திற்கு
    (யோவான் 9:13)
 

06. பிறவி குருடனுடைய கண்களை இயேசு திறந்த நாள் எந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) பண்டிகை நாள்
Answer: A) ஓய்வு நாள்
    (யோவான் 9:14)

07. பிறவி குருடன் இயேசுவை குறித்து குறித்து சொன்ன சாட்சி என்ன?
A) மேசியா
B) தாவீதின் குமாரன்
C) தீர்க்கதரிசி
Answer: C) தீர்க்கதரிசி
    (யோவான் 9:17)

08. பிறவி குருடன் பார்வையடைந்ததை நம்பாத யூதர்கள் யாரை அழைத்து விசாரித்தனர்?
A) இயேசு கிறிஸ்து
B) பார்வையடைந்தவனின் பெற்றோர்
C) அயலகத்தார்
Answer: B) பார்வையடைந்தவனின் பெற்றோர்
    (யோவான் 9:18)

09. இயேசுவை குறித்து எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெப ஆலயத்திற்கு புறம்பாக்க வேண்டும் என்றது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (யோவான் 9:22)

10. இயேசுவுக்கு சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்று யூதர்களிடம் கேட்டது யார்?
A) பிறவி குருடன்
B) பிரதான ஆசாரியர்
C) அப்போஸ்தலர்கள்
Answer: A) பிறவி குருடன்
    (யோவான் 9:27)



11. தேவன் யாருக்கு செவிகொடுப்பதில்லை?
A) குருடர்
B) தலைவர்கள்
C) பாவிகள்
Answer: C) பாவிகள்
    (யோவான் 9:31)

12. பிறவி குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே இல்லையே என்றது யார்?
A) குருடன்
B) பரிசேயர்
C) யூதர்கள்
Answer: A) குருடன்
    (யோவான் 9:32)

13. முழுவதும் பாவத்தில் பிறந்தவன் என்று யூதர்கள் யாரை சொன்னார்கள்?
A) குருடன்
B) பிசாசு பிடித்தவன்
C) சப்பாணி
Answer: A) குருடன்
    (யோவான் 9:34)

14. பிறவி குருடனை புறம்பே தள்ளிவிட்டது யார்?
A) யூதர்கள்
B) அவன் பெற்றோர்
C) இயேசு கிறிஸ்து
Answer: A) யூதர்கள்
    (யோவான் 9:34)

15. நாங்களும் குருடரோ என்று கேட்டது யார்?
A) சீஷர்கள்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
    (யோவான் 9:40)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.