Type Here to Get Search Results !

MARK 2 | மாற்கு கேள்வி பதில்கள் தமிழில் | Bible Quiz Question and Answer Tamil | Jesus Sam

===================
MARK CHAPTER TWO (2)
==================
Bible Question And Answer
====================
மாற்கு கேள்வி பதில்கள்
====================

01. மாற்கு 2:1 இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து தங்கியிருந்த வீடு யாருடைய வீடு?
Answer: சீமோன் பேதுருவின் வீடு

02. திமிர்வாதக்காரனை சுமந்துகொண்டு வந்தது எத்தனை பேர்?
Answer: நான்கு நபர்கள்
    (மாற்கு 2:3)

03. மாற்கு சுவிசேஷத்தில் எத்தனை முறை 'மனுஷகுமாரன்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer: பதின்மூன்று
(மாற்கு 2:10), (மாற்கு 2:28), (மாற்கு 8:31), (மாற்கு 8:38), (மாற்கு 9:9), (மாற்கு 9:12), (மாற்கு 9:31), (மாற்கு 10:33), (மாற்கு 10:45), (மாற்கு 13:26), (மாற்கு 14:21), (மாற்கு 14:41), (மாற்கு 14:62)

04. பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுடையவர் யார்?
Answer: மனுஷகுமாரன்
    (மாற்கு 2:10)

05. லேவி இதன் மற்றொரு பெயர் என்ன?
Answer: மத்தேயு
    (மாற்கு 2:14)
    மத்தேயு 9:9-13


06. 'லேவி' இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: சேருதல்
    (மாற்கு 2:14)
    ஆதியாகமம் 29:34

07. 'அல்பேயு' இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தைரியசாலி
    (மாற்கு 2:14)

08. 'பரிசேயர்' என்பதன் அர்த்தம் என்ன?
Answer: தூயவர்கள் (அ) பிரித்தெடுக்கப்பட்டவர்கள்
    பரிசேயர் என்ற வார்த்தை எபிரேய வார்த்தை.
    (மாற்கு 2:16)

09. உபவாசம் பண்ணியவர்கள் யார்?
Answer: யோவானுடைய சீஷர், பரிசேயருடைய சீஷர்.
    (மாற்கு 2:18)

10. ”பின்பு அவர் ஓய்வுநாளில் பயிர்வழியே போனார். அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்” இந்த வசனத்தை விளக்கும் பழைய ஏற்பாட்டுப் பகுதி எது?
Answer: உபாகமம் 23:25
    உபாகமம் 24: 19-22
    (மாற்கு 2:23)


11. ”ஓய்வு நாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள்” இந்த வசனத்தை விளக்கும் பழைய ஏற்பாட்டு பகுதி?
Answer: யாத்திராகமம் 34:21
    மாற்கு 2:24

12. மாற்கு 2: 25,26 இந்த நிகழ்வு நிகழ்ந்த பழைய ஏற்பாட்டுப் பகுதி?
Answer: I சாமுவேல் 21:1-6
    I சாமுவேல் 21:1-6 இந்த இடத்தில் அபியத்தாரின் தந்தை அகிமெலேக்கு தலைமை ஆசாரியராக இருக்கிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளர் அபியத்தார் எனக் கூறக் காரணம் பண்டைய கால நிகழ்ச்சியைக் குறித்து கூறப்படும் வேறுபட்ட மரபு நெறியாகும். (II சாமுவேல் 8:17)
    தெய்வசமுகத்து அப்பங்களை ஆசாரியர் மட்டுமே புசிக்க வேண்டும். (லேவியராகமம் 24:8,9)

13. 'தாவீது' இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: பிரியமானவன்
    (மாற்கு 2:25)

14. 'அபியத்தார்' இப்பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தந்தை அரசராவார்
    (மாற்கு 2:26)

15. மனுஷகுமாரன் இதற்கும் ஆண்டவராயிருக்கிறார்?
Answer: ஒய்வுநாளுக்கும்
    (மாற்கு 2:28)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.