Type Here to Get Search Results !

MARK 3 | Bible question with answer tamil | மாற்கு நற்செய்தி நூல் பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

===================
மாற்கு - அதிகாரம் - மூன்று (3)
====================
பைபிள் கேள்வி பதில்கள்
==================
MARK Chapter - Three (3)
=================
Bible Question and Answer
=====================
01. இயேசு எத்தனை முறை ஜெப ஆலயத்திற்கு சென்றார்?
Answer: மூன்று முறை
    மாற்கு 1:21-28
    மாற்கு 3:1-6
    மாற்கு 6:2-6

02. ஓய்வு நாளில் இயேசுவை குற்றம் சாட்ட நினைத்தது யார்?
Answer: பரிசேயர்
    (மாற்கு 3:2)
    யாத்திராகமம் 20: 8-11 இந்த வசனத்தின் படி ஓய்வு நாளில் வேலை செய்வது குற்றம் என்று பரிசேயர் எண்ணினர். எனவே இதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவை குற்றம் சாட்ட நினைத்தனர்.

03. இயேசு விசனப்படக் காரணம் என்ன?
Answer: இருதயக் கடினத்தின் நிமித்தம்
    (மாற்கு 3:5)
    அங்கே சுற்றி இருந்தவர்களின்(பரிசேயர்) இருதயக் கடினத்தின் நிமித்தம்.

04. இயேசுவை கொலை செய்ய பரிசேயர் யாரோடு ஆலோசனை பண்ணினார்கள்?
Answer: ஏரோதியரோடு
    (மாற்கு 3:6)
    ஏரோதியர் என்பவர்கள் பெரிய ஏரோதுவின் மகன் ஏரோது அந்திபாவின் அரசியல்வாதிகள்.

05. எந்த திசைகளிலிருந்து இருந்து ஜனங்கள் இயேசுவைப் பார்க்க வந்தனர்?
Answer: தீரு, சீதோன்
    (மாற்கு 3:8)
    தீரு, சீதோன் பட்டணமானது வட பாலஸ்தீனாவிலுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
 

06. 'இதுமேயா' இந்த பட்டணம் பழைய ஏற்பாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சேயீர், ஏதோம்
    (மாற்கு 3:8)
சேயீர் - ஆதியாகமம் 32:3
ஏதோம் - எண்ணாகமம் 20:14-21

07. இயேசுவை தொட நினைத்தது யார்?
Answer: நோயாளிகள்
    (மாற்கு 3:9)

08. இயேசு கிறிஸ்துவைக் கண்டு: நீர் தேவனுடைய குமாரன் என்றது யார்?
Answer: அசுத்த ஆவிகள்
    (மாற்கு 3:11)
உன்னதமான தேவனுடைய குமாரனே என்றது யார்?
Answer: அசுத்த ஆவியுள்ள மனுஷன்
    (மாற்கு 5:7)
நீர் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றது யார்
Answer: பிரதான ஆசாரியன்
    (மாற்கு 14:61)
இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றது யார்?
Answer: நூற்றுக்கு அதிபதி
    (மாற்கு 15:39)

09. இயேசு எத்தனை பேரைத் தெரிந்துகொண்டார்?
Answer: பன்னிரெண்டு பேரை தெரிந்துகொண்டார்
    (மாற்கு 3:14,15)
பன்னிருவரைத் தெரிந்து கொள்ளக் காரணம்.
    1. தம்மோடு இருக்க.
    2. பிரசங்கம் பண்ண.
    3. வியாதிகளை குணமாக்க.
    4. பிசாசுகளை துரத்த

10. 'கானானியனாகிய சீமோன்' இதன் கிரேக்க பதம் என்ன?
Answer: கனனேயனான சீமோன்
    (மாற்கு 3:18)
    கனனேயன் என்றால் எபிரேயத்தில் 'தீவிரவாதி' என்று பொருள்.


11. இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்றது யார்?
Answer: இயேசுவின் இனத்தார்
    (மாற்கு 3:21)
    இயேசு கிறிஸ்துவை பிடித்துக்கொள்ளும்படி இப்படி சொன்னார்கள்.

12. 'பெயல்செபூல்' என்பதன் அர்த்தம் என்ன?
Answer: சாத்தான்
    பேய்களின் தலைவன்
    (மாற்கு 3:22)

13. இயேசுவை 'பெயல்செபூல்' என்றது யார்?
Answer: வேதபாரகர்
    (மாற்கு 3: 22)
    எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர் இயேசு கிறிஸ்துவை பெயல்செபூல் என்றனர்.

14. எவன் என்றென்றும் மன்னிக்கப்படாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்?
Answer: பரிசுத்த ஆவிக்கு விரோரமாய் தூஷணம் சொல்லுகிறவன்.
    (மாற்கு 3:29)

15. இயேசுவின் சகோதரன், சகோதரி, தாய் யார்?
Answer: தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவன்.
    (மாற்கு 3:35)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.