Type Here to Get Search Results !

ஒருவருக்கொருவர் | வாழ்க்கையை மாற்றும் ஓர் செய்தி | பிரசங்க குறிப்பு | bible sermon points tamil | Jesus sam

பிரசங்க குறிப்பு

செய்தியின் தலைப்பு: ஒருவருக்கொருவர்

            நாம் மற்றவர்களுக்கு (ஒருவருக்கொருவர்) என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.

 

1. ஒருவருக்கொருவர் ஜெபம் செய்ய வேண்டும்:

யாக்கோபு 5: 16

            நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.

            நாம் நமக்காக, நம்முடைய குடும்பத்திற்காக, நம்முடைய பிள்ளைகளுக்காக, நம்முடைய வேலைக்காக மாத்திரம் ஜெபிக்கிறவர்களாக இறாமல், மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், அவர்களுடைய அன்றாடத் தேவைகள் சந்திக்கப்படவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும்.  நம்மைச் சுற்றி வாழ்கின்றவர்களில் அநேகர் உடல் நலமற்றவர்களாக, கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களாக, எதிர்காலத்தைக் குறித்த பயத்தோடும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்.  அவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும் என்று கடவுள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

            நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது கடவுள் நம்முடைய குடும்பத்தின் தேவைகளை சந்திக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 


2. ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்:

1 பேதுரு 4: 10ஆ

            ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்.

            நாம் அநேக நேரங்களில் மற்றவர்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஆனால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யத் தவறிவிடுகிறோம்.

            ஒரு பணிரெண்டாம் வகுப்பு முடித்த ஒரு ஏழை மாணவனுக்கு தனது கல்லூரிப்படிப்பினை ஒரு பெரிய கல்லூரியில் சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.  ஆனால் அவன் குடும்பத்திலோ கல்லூரி கட்டணத்தைச் செலுத்தும் அளவிற்கு பணம் இல்லை.  அவன் கடவுளிடம் ஜெபிக்கிறான்.

            அன்றிலிருந்து அவன் யாரையாவது ஒரு பணக்காரரைப் பார்த்தால், இவர் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு வருகிறது.  அவர் யார் என்று தெரியாவிட்டாலும், அவர் நல்லவரா? கெட்டவரா? எனத் தெரியாவிட்டாலும், எந்த ஒரு பணக்காரரைப் பார்த்தாலும் அவனுக்கு நினைவில் வருவது எல்லாம், இவர் எனக்கு உதவி செய்ய மாட்டாரா? என்ற எண்ணம் மட்டுமே.

            அவன் ஒரு நாள் ஒரு சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு பிச்சைக்காரர், தம்பி மிகவும் பசிக்கிறது என்று கேட்டாள் அந்த வாலிபன் என்ன செய்வான்.  யோசித்துப்பாருங்கள்.

            அந்த வாலிபனிடம் கல்லூரிக்கு பணம் செலுத்தும் அளவிற்கு பணம் இல்லை என்றாலும், இந்த பிச்சைக்காரனுக்கு ஒரு வேளை உணவு வாங்கித்தரும் அளவிற்கு பணம் இருக்கும்.

எப்படி ஒரு பணக்காரரைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வாலிபனுக்கு இவர்கள் எனக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று தோன்றுகிறதோ? அதேபோல் தானே அந்த பிச்சைக்காரனுக்கும் தோன்றும்.  இவன் என்னைவிட வசதியாகத் தானே இருக்கிறான்.  இவனிடம் கேட்டாள் ஒருவேளை சாப்பாடு எனக்கு கிடைக்கும் என்று எண்ணி தானே அவன் பிச்சை கேட்ரிருப்பான்.

நாம் அநேக நேரங்களில் என்ன நினைக்கிறோம் என்றால், நானே மிகவும் வருமையில் இருக்கிறேன்.  என்னால் எப்படி உதவி செய்ய முடியும் என்று.  ஆனால், நம்மைவிட வசதிவாய்ப்பில் குறைந்தவர்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

            நான் ஒருவருக்கு உதவி செய்யும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும்.  எனது அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி யாராவது மிகவும் கஷ்டத்தில் இருக்கும்போது நான் அவர்களுக்கு உதவி செய்தால் ஆண்டவர் அதை உதவியாக எடுத்துக்கொள்வதில்லை.  ஏனென்றால், நான் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று எண்ணியே நாம் அவர்களுக்கு உதவிசெய்கிறோம்.

அவர்கள் எனக்கு மீண்டும் செய்வார்கள் என்று எண்ணி நாம் செய்வது உதவி அல்ல எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது தான் உதவி.

 


மத்தேயு 25: 40

            மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.

            நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி  செய்தால், நாம் அந்த நபருக்கு உதவி செய்யவில்லை, ஆண்டவருக்கு செய்கிறோம்.  அதை நாம் மனதில் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வோமானால் கடவுள் அதை ஆசீர்வதித்து, பலமடங்கு திரும்ப நமக்கு தர வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

            ஒவ்வொரு மாதம் நம் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கி கொடுக்கும்போது, கடவுள் அதற்கு சரியாகவும், அதற்கு அதிகமாகவும் நம்மை ஆசீர்வதிக்கிற ஆண்டவராய் இருக்கிறார்.

 

3. கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்:

ரோமர் 12: 10ஆ

            கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

            கனம்பண்ணுகிறதிலே ஒருவரையொருவர் முந்திக்கொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு கற்றக்கொடுக்கிறது.

1. ஒருவர் என்னை மதித்து என்னை அழைப்பார் என்றால் அவரை நான் கனம் பண்ணுவேன்.

2. என்னை விட பெரிய அதிகாரியாக இருப்பார் என்றால் நான் அவரை கனம்பண்ணுவேன்.

3. என்ன விட செல்வாக்கிலே உயர்ந்தவர் என்றால் நான் அவரை கனம்பண்ணுவேன்.

4. என்னை விட படிப்பிலே உயர்ந்தவர் என்றால் நான் அவரை கனம்பண்ணுவேன்

5. அவரால் எனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் நான் அவரை கணம்பண்ணுவேன்.

            நாம் இப்படி வாழ்ந்துகொண்டிருப்போமானால், கடவுள் அதை விரும்பவில்லை, எல்லோரையும் நாம் கனம்பண்ண வேண்டும்.  எல்லோர் மீதும் அன்பு பாராட்ட வேண்டும், எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

குட்டி கதை:

            ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு அதிகாரி ஒருவர், ஒவ்வொருநாள் காலையும், மாலையும் வாசலில் நிற்கிற அந்த காவல்காரருக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்வார். (Good Morning Ayah, Good Evening Ayah).  ஒருநாள் காலையில் காவலருக்கு மரியாதை செய்துவிட்டு உள்ளே சென்றவர் மாலையில் நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.  என்னவாயிற்று என்று பார்ப்பதற்காக காவலர் அவர் அரைக்குச் சென்று பார்த்தபோது, அவர் உடல் பெலவீனத்தால் மயங்கிக் கிடந்தார்.  உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை காப்பாற்றினார்கள்.



            ஒருவேலை அந்த அதிகாரி இவன் வாசலில் நிற்கிவன் தானே, இவனால் எனக்கு என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று யோசித்திருந்தால், அன்று அவர் காப்பாற்றப்பட்டிருக்க முடியாது.  நாமும் அநேக நேரங்களில் இப்படி யோசிப்பதுண்டு, இவரால் எனக்கு என்ன பிரயோஜனம்.  நான் ஏன் இவரை மதிக்க வேண்டும் என்று.  ஆனால் நாம் எல்லோரையும் மதிக்க வேண்டும், கனப்படுத்த வேண்டும் என்று வேதம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

 

4. ஒருவருக்கொருவர் தாழ்மையாய் இருக்க வேண்டும்:

1 பேதுரு 5: 5

            நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்.

            நாம் ஒரு அதிகாரியாக இருப்போம் என்றால், நம்மை சுற்றியுள்ள அனைவரும் நம்மிடம் வந்து பேச ஆசைப்பட வேண்டும்.  இவரிடம் மனிதர்கள் பேசுவார்களா என்று நம்மை வெறுக்கும் அளவிற்கு நாம் நடந்துகொள்ள கூடாது.  நாம் எவ்வளவு பெரிய உயர்ந்த நிலைக்கு சென்றாலும், எல்லோரையும் மதித்து, தாழ்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

 

5. ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்:

எபேசியர் 4: 32

            ஒருவருக்கொருவர் தயவாயும் மனவுருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

            நான் ஏன் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றால், கடவுள் என்னை மன்னித்திருக்கிறார், எனவே நான் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்.

            நான் செய்த தவறுகளை சற்று நினைத்துப் பார்பேன் என்றால், அதற்குச் சரியான தன்டனையை கடவுள் எனக்கு கொடுத்திருப்பார் என்றால், நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவன்.  என்றாலும், ஆண்டவர் என்னையும் மன்னித்து இந்த வினாடி வரை சுகத்தோடும், பெலனோடும் என்னை பாதுகாத்து நடத்தி வருகிறார்.  எனவே, நான் மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும்.

            அவர்கள் எனக்கு விரோதமயாய் என்ன ஒரு தவறு செய்திருந்தாலும், அதை நான் மனப்பூர்வமாய் மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.



எபேசியர் 4: 26

            நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்.  சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.

            ஒருவர் மேல் எனக்கு எவ்வளவு பெரிய கோபம், எரிச்சல் இருந்தாலும் சூரியன் மறையும் முன் நான் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது.

மத்தேயு 5: 23, 24

            23. ஆகையால நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

            24. அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து,

            எனக்கு விரோதமாய் குற்றம் செய்தவரை நான் மன்னித்து, அவரோடு ஒப்பரவான பின்பே நான் காணிக்கை செலுத்த வேண்டும் என்ற வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

            நான் யாரையாவது மன்னிக்காமல் இருந்திருந்தால், அவரை நாம் மன்னித்து, அவரோடு நாம் ஐக்கியமாக வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

 

6. ஒருவருக்கொருவர் முறையிடாதிருங்கள்: (குற்றப்படுத்தாதிருங்கள்)

யாக்கோபு 5: 9

            சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்.   இதோ நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

 

            முதல் ஐந்து காரியங்களில் ஒருவருக்கொருவர் இதை செய்யுங்கள் செய்யுங்கள் என்று சொன்ன ஆண்டவர் ஆறாவது காரியத்தை மாத்தியம் செய்யாதிருக்கள் என்று கற்றுக்கொடுக்கிறார். (குற்றப்படுத்தாதிருங்கள்)

            எவர் ஒருவர் தவறும் செய்தாலும், நீ தவறு செய்துவிட்டாய், என்று அவரை குற்றப்படுத்தும் அதிகாரத்தை கடவுள் நமக்கு கொடுக்கவில்லை.  ஒருவரை குற்றப்படுத்தும் முழு உரிமையும் கடவுளுக்கு மட்டுமே உண்டு.  ஒருவர் உண்மையிலேயே ஒரு தவறு செய்கிறார் என்றால், அவர் ஆண்டவருக்கு கணக்குக் கொடுத்துக்கொள்வார்.  நீ குற்றவாளி என்று நாம் அவரை நியாயம் தீர்க்கத்தோவையில்லை.

            அதைதான் வாசிக்கிறோம், நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார், அவர் நியாயம் தீர்த்துக்கொள்வார், ஒருவரை குற்றவாளி என்று சொல்வதற்கு நாம் யார்?  நாம் ஏன் மற்றவர்களை குற்றவாளி என்று சொல்லுகிறோம் என்றால், அவர்கள் செய்த குற்றம் வெளிப்படையாக தெரிந்திருக்கும்.  ஒருவேலை நான் செய்த குற்றமும் இப்படி வெளிப்படையாக தெரிந்திருந்தால், என்னையும் மற்றவர்கள் அப்படி குற்றவாளியாக தீர்த்தால் எப்படி இருக்கும்,  சற்று யோசித்துப்பார்ப்போம்.  எந்த ஒரு நபரையும் இவர் குற்றவாளி என்று அவரை குற்றப்படுத்த கடவுள் நமக்கு அதிகாரம் தரவில்லை.

எ.கா:

           * ஒரு ஊழியர் ஒருவர் மதுபானக்கடையில் நின்று கொண்டு மது அருந்திக்கொண்டிருக்கிறார் என்றால், ஏன் ஐயா இப்படி செய்கிறீர்கள், இது கடவுள் அருவெருக்கின்ற காரியம் தானே என்று அவருக்கு நாம் ஆலோசனை சொல்லாமல்.  அது ஒரு நபரை குற்றப்படுத்தும் காரியம் அல்ல.  ஆனால் நாம் யாரும் அதை செய்வதில்லை.  நாம் என்ன செய்வோம் என்றால், உடனே ஊழியரை வீடியோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பிவிடுவோம்.  பாருங்கள் ஊழியர் செய்யும் கொடுமைகளை என்று.  காரணம் என்னவென்றால் அவர் செய்த தவறு நமக்கு தெரிந்துவிட்டது.  ஒருவேலை நான் செய்த தவறை இப்படி யாராவது வெளிப்படுத்தியிருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.  அந்த ஊழியர் ஒருவேலை உண்மையிலேயே தவறு செய்திருந்தாலும், நியாயம் தீர்க்க ஆண்டவர் இருக்கிறார்.  நாம் ஏன் அவரை நியாயம் தீர்க்க வேண்டும்.

           * ஒரு ஆலயத்தில் ஒரு வாலிப மகனும், வாலிப மகளும், ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்றால், அநேக நாட்களாக யாருக்கும் தெரியாத அந்த காதல், ஒரு நாள் நமக்கு தெரிந்த உடனே நாம் அவரைகளை அழைத்து கண்டிக்க வேண்டும்.  தம்பி இது முற்றிலும் தவறானது, ஆண்டவர் இதை வெறுக்கிறார் என்று நாம் ஆலோசனை சொல்லலாம். ஆனால் நாம் அதை செய்வதில்லை.  மாறாக, அதை ஊருக்கே தெரியப்படுத்திவிடுவோம்.  நிற்கும் இடம், உட்காரும் இடம், பிரயாணத்தில் எங்கு சென்றாலும் அவர்களைப் பற்றி பேசி அவர்களை ஒரு வழி செய்துவிடுவோம்.  இதைதான் ஆண்டவர் அறுவெறுக்கிறார்.  ஒருவரையொருவர் குற்றப்படுத்தாருங்கள் என்று கற்றுக்கொடுக்கிறார்.

            ஒருவேளை அந்த ஊழியர் பாவமன்னிப்பு கேட்டு, மனந்திரும்பி கடவுளோடு ஒப்புரவாகிவிடுவார்.  அந்த வாலிபர்கள் தன் தவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்டு ஆண்டவரோடு ஐக்கியமகிவிடுவார்.  அதை நாம் அறியோம்.  நாம் இப்படி குற்றப்படுத்திக்கொண்டே இருப்போமானால், குற்றம் செய்தவர்கள் பரலோகம் சென்றுவிடுவார்கள்.  குற்றப்படுத்திக்கொண்டே இருந்த நாம் கைவிடப்பட்டுவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

            நீ குற்றவாளி என்று நாம் ஒருவரை சுட்டிக்காட்டும்போது ஒரு விரல் அவரையும், மூன்று விரல் நம்மையும் காட்டுகிறது.  எனவே, எவறையும் குற்றப்படுத்தாமல் இருப்போம்.



இந்த நாளிலே சற்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.  நான் யாரையாவது குற்றப்படுத்தியிருக்கிறேனா? சிந்திப்போம்.  அப்படி நான் குற்றப்படுத்தியிருந்தால், ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்போம்.  இனி நாம் எவறையும் குற்றப்பத்த வேண்டும்.  நியாயாதிபதி நியாம் தீர்த்துக்கொள்வார்.

 

ஒருவருக்கொருவர் என்ற தலைப்பிலே நாம் ஆறு காரியங்களை கற்றக்கொண்டோம்.

1. ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டும்

2. ஒருவருக்காக ஒருவர் உதவி செய்ய வேண்டும்

3. ஒருவரையொருவர் கனம்பண்ண வேண்டும்

4. ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையாய் இருக்க வேண்டும்

5. ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும்

கடைசியாக,

            6. ஒருவரையொருவர் குற்றப்படுத்த வேண்டாம்.

            நாம் கற்றக்கொண்டதின் பிரகாரமாக நாம் வாழும் போது, கடவுள் நம்மையும் நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், தேவைகளை சந்தித்து, ஆசீர்வதித்து நம்மை வழிநடத்துவாராக ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.