Type Here to Get Search Results !

MARK 1 | BIBLE QUIZ QUESTION & ANSWER | மாற்கு ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

=======================
MARK CHAPTER - 1
BIBLE QUIZ QUESTION & ANSWER
=======================
மாற்கு அதிகாரம் – 1
பைபிள் கேள்வி - பதில்கள்
=======================
1. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதையை ----------- .
விடை: செவ்வைபண்ணுங்கள்
          (மாற்கு 1:3)
 
2. வனாந்தரத்திலே ஞானஸ்நானம் கொடுத்து யார்?
விடை: யோவான்
          (மாற்கு 1:4)
 
3. பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தது யார்?
விடை: யோவான்
          (மாற்கு 1:4)
 
4. யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யாரிடம் ஞானஸ்நானம் எடுத்தார்கள்?
விடை: யோவானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்கள்
          (மாற்கு 1:5)
 
5. யோவான் எங்கு ஞானஸ்நானம் கொடுத்தான்?
விடை: யோர்தான் நதியில்
          (மாற்கு 1:5)
 
6. ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தது யார்?
விடை: யோவான்
          (மாற்கு 1:6)
 
7. யோவானின் உணவு எது?
விடை: வெட்டுக்கிளி, காட்டுத்தேன்
          (மாற்கு 1:6)
 
8. அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றது யார்?
விடை: யோவான்
          (மாற்கு 1:7)
 
9. இயேசு எங்கிருந்து வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்?
விடை: கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்
          (மாற்கு 1:9)
 
10. எப்போது வானம் திறக்கப்பட்டு, ஆவியானவர் புறாவைப்போல் இறங்கி வந்தார்?
விடை: இயேசு ஜலத்திலிருந்து கரையேறினவுடனே
          (மாற்கு 1:10)
 
11. நீர் என்னுடைய நேசக்குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் எங்கு உண்டாயிற்று?
விடை: வானத்திலிருந்து உண்டாயிற்று
          (மாற்கு 1:11)
 
12. இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியது யார்?
விடை: ஆவியானவர்
          (மாற்கு 1:12)
 
13. இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் எத்தனை நாள் இருந்தார்?
விடை: நாற்பது நாள்
          (மாற்கு 1:13)
 
14. நாற்பது நாள் சாத்தானால் சோதிக்கப்பட்டது யார்?
விடை: இயேசு கிறிஸ்து
          (மாற்கு 1:13)
 
15. காட்டுமிருகங்களின் நடுவே சஞ்சரித்துக்கொண்டிருந்தது யார்?
விடை: இயேசு கிறிஸ்து
          (மாற்கு 1:13)
 
16. இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்படும்போது அவருக்கு ஊழியஞ்செய்தது யார்?
விடை: தேவதூதர்கள்
          (மாற்கு 1:13)
 
17. யோவான் காவலிலே வைக்கப்பட்ட பின்பு இயேசு எங்கு வந்து? எதை பிரசங்கித்தார்?
விடை: கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்
          (மாற்கு 1:14)
 
18. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று.  மனந்திரும்பி, ---------------- விசுவாசியுங்கள்.
விடை: சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
          (மாற்கு 1:15)
 
19. கடலில் வலைபோட்டுக்கொண்டிருந்தது யார்?
விடை: சீமோன், அந்திரேயா
          (மாற்கு 1:16)
 
20. சீமோனின் சகோதரன் பெயர் என்ன?
விடை: அந்திரேயா
          (மாற்கு 1:16)
 
21. என் பின்னே வாருங்கள் , உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று யார்? யாரிடம் சொன்னது?
விடை: இயேசு கிறிஸ்து – சீமோன், அந்திரேயாவிடம் சொன்னது
          (மாற்கு 1:17)
 
22. படவிலே வலையைப் பழுதுபார்க்கொண்டிருந்தது யார்?
விடை: யாக்கோபு, யோவான்
          (மாற்கு 1:19)
 
23. யாக்கோபின் சகோதரன் பெயர் என்ன?
விடை: யோவான்
          (மாற்கு 1:19)
 
24. யாக்கோபு, யோவானின் தகப்பன் பெயர் என்ன?
விடை: செபதேயு
          (மாற்கு 1:19)
 
25. செபதேயுவையும், கூலியாட்களோடே படவிலே விட்டு இயேசுவுக்கு பின்சென்றது யார்?
விடை: யாக்கொபு, யோவான்
          (மாற்கு 1:20)
 
26. இயேசு கிறிஸ்து யாரைப்போல போதிக்கவில்லை?
விடை: வேதபாரகரைப் போல போதிக்கவில்லை
          (மாற்கு 1:22)
 
27. இயேசு கிறிஸ்து எப்படி போதித்தார்?
விடை: அதிகாரமுடையவராய் போதித்தார்
          (மாற்கு 1:22)
 
28. ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர் என்றது யார்?
விடை: கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன்
          (மாற்கு 1:21,23,24)
 
29. நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டது யார்?
விடை: கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன்
          (மாற்கு 1:21,23,24)
 
30. இயேசு கிறிஸ்து அசுத்த ஆவிகளுக்கு எப்படி கட்டளையிட்டார்?
விடை: இயேசு கிறிஸ்து அதிகாரத்தோடு அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிட்டார்
          (மாற்கு 1:27)
 
31. இயேசு கிறிஸ்து அசுத்த ஆவியை துரத்தியதால் அவருடைய கீர்த்தி எங்கு பிரசித்தமாயிற்று?
விடை: கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று
          (மாற்கு 1:28)
 
32. ஜுரமாய்க் கிடந்தது யார்?
விடை:  சீமோனின் மாமி
          (மாற்கு 1:30)
 
33. சீமோனின் மாமி கையைப் பிடித்து தூக்கி விட்டது யார்?
விடை: இயேசு கிறிஸ்து
          (மாற்கு 1:31)
 
34. ஜுரம் நீங்கி, இயேசுவுக்கு பணிவிடை செய்தது யார்?
விடை: சீமோனின் மாமி
          (மாற்கு 1:31)
 
35. யார் பேசுகிறதற்கு இயேசு கிறிஸ்து இடங்கொடுக்கவில்லை?
விடை: பிசாசுகள்
          (மாற்கு 1:34)
 
36. இயேசுவைப் பார்த்து: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்றது யார்?
விடை: சீமோனும் அனோடே இருந்தவர்களும்
          (மாற்கு 1:37)
 
37. இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு:  உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றது யார்?
விடை: குஷ்டரோகி
          (மாற்கு 1:40)
 
38. குஷ்டரோகியிடம் இயேசு என்ன சொன்னார்?
விடை: குஷ்டரோகியைத் தொட்டு.  எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்றார்
          (மாற்கு 1:41)
 
39. ”நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு”  யார்? யாரிடம் சொன்னது?
விடை: இயேசு கிறிஸ்து – குஸ்டரோகியிடம் சொன்னது
          (மாற்கு 1:43)
 
40. இயேசு கிறிஸ்து குஸ்டரோகம் சொஸ்தமானவனை யாரிடத்தில் அனுப்பினார்?
விடை: ஆசாரியர்களிடம் அனுப்பினார்
          (மாற்கு 1:44)

01. "சுவிசேஷம்" என்பதன் கிரேக்க பதம்?
               இவாங்கலியோன்
     (மாற்கு 1:1)
 
02. "மாற்கு 1: 3" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
          ஏசாயா 40:3
     ஏசாயா தீர்க்கதரிசி யூதாவில் கி.மு. 740 முதல் கி.மு. 701 வரை தீர்க்க தரிசனம் உரைத்தார்.
 
03. யோவான் என்பதன் அர்த்தம்?
          ஆண்டவர் கிருபையுள்ளவர்
     (மாற்கு 1:4)
 
04. "திரித்துவம்" வெளிப்பட்ட இடம்?
               மாற்கு 1:10,11
     திரித்துவம் என்பது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.
     பிதா - வானத்திலிருந்து சத்தமிடுகிறார்.
     குமாரன் - ஜலத்திலிருந்து வெளியேறுகிறார்.
     பரிசுத்த ஆவி - புறாவைப் போல் இறங்கி வருகிறார்.
 
05. "விண் தூதர்கள்" இதன் கிரேக்க பதம்?
               ஏஞ்சலோஸ்
     (மாற்கு 1:13)

 
06. வனாந்தரத்தில் இயேசு கிறிஸ்து யாரோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்?
                காட்டு மிருகங்கள்
     (மாற்கு 1:13)
 
07. கலிலேயா கடலின் நீளம், அகலம்?
               நீளம் 23 கி.மீ
               அகலம் 9 கி.மீ
     (மாற்கு 1:16)
     பழைய ஏற்பாட்டில் இந்த கடல் "கின்னரேத்" என்று அழைக்கப்பட்டது.
     (எண்ணாகமம் 34:11)
     (உபாகமம் 3:17)
     மத்தேயு இக்கடலை "கெனசரேத்" என்று அழைக்கிறார்.
     (மத்தேயு 14:34)
     ரோமர்கள் இக்கடலை "திபேரியாக் கடல்" என்று அழைத்தனர்.
     (யோவான் 6:1)
     (யோவான் 21:1)
 
08. சீமோனின் மற்றொரு பெயர்?
                கேபா
     (மாற்கு 1:16)
     கேபா என்பது அரமேய மொழி வார்த்தைஇதன் அர்த்தம் "கற்பாறை".  இதற்கு இணையான கிரேக்க வார்த்தை "பெட்ரோஸ்".  இதன் அர்த்தம் "பாறை".
 
 
09. யோவான், யாக்கோபு இவர்களை எவ்வாறு அழைப்பர்?
               பொவனெர்கேஸ்
     (மாற்கு 1:19)
     இதன் அர்த்தம் இடிமுழக்க மக்கள். (மாற்கு 3:17)
     லூக்கா 9:54 இந்த இடத்தில் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்படுகிறது.
 
10. 'நீர் தேவனுடைய பரிசுத்தர்' என்றது யார்?
          அசுத்த ஆவியுள்ள மனுஷன்
     (மாற்கு 1:23,24)
 

11. மாற்கு சுவிசேஷத்தில் எத்தனை முறை "ஐயோ" என்ற வார்த்தை வருகிறது?
               மூன்று 
     (மாற்கு 1:24)
     (மாற்கு 13:17)
     (மாற்கு 14:21)
 
12. ஜுரமாய்க் கிடந்தது யார்?
               சீமோனின் மாவி
     (மாற்கு 1:30)
     
13. யார் பேசுவதற்கு இயேசு கிறிஸ்து இடம் கொடுக்கவில்லை?
               பிசாசுகள்
     (மாற்கு 1:34)
 
14. இயேசு கிறிஸ்து முன்பாக முழங்கால் படியிட்டது யார்?
               குஸ்டரோகி
     (மாற்கு 1:40)
 
15. 'ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்' மாற்கு சுவிசேஷத்தில் எத்தனை முறை வருகிறது?
               ஆறு
     (மாற்கு 1:43)
     (மாற்கு 5:43)
     (மாற்கு 7:36)
     (மாற்கு 8:26)
     (மாற்கு 8:30)
     (மாற்கு 9:9)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.