தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
இளையோர் திருச்சபை
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2022
கருப்பொருள்: காண்பாய் (யோவான் 1:50)
வந்து பார் வந்துபார்
JC VBS-க்கு வந்துபார்
வந்துபார் வந்துபார்
இயேசு கிறிஸ்துவை வந்து பார்
கொஞ்சமல்ல சிறியதல்ல
பெரிதானவைகளை பெற்றிடவே/கண்டிடவே (2)
VBS க்கு வந்து - JC – 2
இயேசுவிடம் வந்துபார்
இயேசு கிறிஸ்துவிடம் வந்துபார்
காண்பேன் நான் காண்பேன்
பெரிதானவைகளை காண்பேன் (2)
இயேசுவிடம் வந்து அவரை ஏற்றுக்கொண்டதால்
அவரின் பிள்ளையாக என்றும் வாழ்வதால் (2)
காண்பேன் நான் காண்பேன்
பெரிதானவைகளைக் காண்பேன் (2)
லலா லாலா லலலா லலா லல்லலாலாலலலா
என் உள்ளம் கபடானதே
என் உள்ளம் கேடானதே (2)
மாற்றிடுமே கபடற்றவனாய்
மாற்றிடுமே உத்தமனாய்
உத்தமமாய் வாழ உதவிடுமே
கபடில்லாமல் வாழ கரம்பற்றுமே (2)
வாழ்வேன் என்றுமே உமக்காய் இயேசுவே – 2
நாத்தான்வேலை வரக்கண்ட இயேசு – அவர்
கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார் (2)
என்னை எப்படி அறிவீர்? என்று நாத்தான்வேல் கேட்டார்
அதற்கு இயேசு
பிலிப்பு உன்னை அழைக்கும் முன்னே – அத்திமரத்தின்
கீழே உன்னை கண்டேன் என்றார் (2)
நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா
என்று நாத்தான்வேல் சொன்னார்….. அதற்கு இயேசு
நான் உனக்கு சொன்னதினால் விசுவாசிக்கிறாய்
இதிலும் பெரியவற்றை நீ காண்பாய் (2)
நாமும் கபடற்று உத்தமராய் வாழும்போது
பெரியவற்றை காண்போம் பெரியவற்றை காண்போம் (2)
படகில் நானும் பயமில்லாமல் போகிறேன்
சந்தோஷமாய் பயமில்லாமல் போகிறேன் (2)
புயல் காற்று வந்தாலும் பயமில்ல
பேரலை வந்தாலும் பயமில்ல (2)
எந்தன் படகில் இயேசுவுண்டு
எனக்கெப்போதும் பயமில்லயே (2)
- படகில்………
எனக்கு துணையாய் இருக்கிறார் (2)
எனக்கென்றும் பயமில்லையே
இயேசுவுண்டு என் வாழ்விலே (2)
- படகில்…….
பாடல்
6
தும் டரோ மத் தும் டரோ மத்
தும் டரோ தும் டரோ தும் டரோ மத்
தும் டரோ மத் தும் டரோ மத்
தும் டரோ தும் டரோ தும் டரோ மத்
ஈசு
மேரா ஷாகஸ் ஹை
ஈசு துமாரா ஷாகஸ் ஹை
ஈசு ஹமாரா ஷாகஸ் ஹை
தும் டரோ மத் (2)
ஈசு மேரே ஷாத்
ஈசு ஆப்கே ஷாத்
ஈசு ஹமாரே ஷாத்
குஷி குஷி ஹமாரே லியே குஷி (2)
- தும் டரோ மத்……..
ஈசு துமாரா ஷாகஸ் ஹை
ஈசு ஹமாரா ஷாகஸ் ஹை
தும் டரோ மத் (2)
ஈசு மேரே ஷாத்
ஈசு ஆப்கே ஷாத்
ஈசு ஹமாரே ஷாத்
குஷி குஷி ஹமாரே லியே குஷி (2)
- தும் டரோ மத்……..
சின்னக் கண்கள் எனக்குத் தந்தார்
நல்லவற்றை நான் பார்ப்பேன் (2)
சின்ன கைகள் எனக்குத் தந்தார்
நல்ல செயல் நான் செய்வேன் (2)
சின்ன கால்கள் அவர் வழி நடக்கும்
சின்ன இதயம் அவரையே நினைக்கும் (2)
என்றென்றும் அவரை துதித்திடுவேன் – நான் – 2
கண்பார்வையிருந்தும் காணலயே
செவித்திறனிருந்தும் கேட்கலயே (2)
இயேசு நான் உம்மைக்கான
என் கண்களை திறந்தருளும்
இயேசுவே உம் குரல் நான் கேட்க
என் செவிகளை திறந்தளும் (2)
என் கண்களை திறந்தருளும்
என் செவிகளை திறந்தருளும் (2)
பின்பற்றுவேன் நான் பின்பற்றுவேன்
இயேசுவையே பின்பற்றுவேன் (2)
தாழ்மைக்கு மாதிரி இயேசு
உண்மைக்கு மாதிரி இயேசு
அன்புக்கு மாதிரி இயேசு
இரக்கத்திற்கு மாதிரி இயேசு
நானும் பின்பற்றுவேன் – இயேசுவின்
மாதிரியை பின்பற்றுவேன்
Model நல்ல Model
இயேசு எனக்கு Role Model – 2 (2)
என்னைப் பற்றிய பெருமையை நீக்கி
பிறரிடம் என்றும் தாழ்மையாய் நடக்க
இயேசு எனக்கு மிகவும் நல்ல Model-2 (2)
என் வாழ்வில் அவரே Real Model – இப்போ
இயேசுவுக்காய் நானும் Role Model (2)
குற்றமில்லா இயேசு குற்றமானாரே
எனக்காய் குற்றமானாரே
பரிசுத்தர் இயேசு பாவமானாரே
எனக்காய் பாவமானாரே (2)
நான் குற்றம் செய்யாமல் காத்திடவே
நான் பாவம் செய்யாமல் வாழ்ந்திடவே (2)
Perfect ஆன இயேசுவுடனே
Perfect ஆக வாழ்ந்திடுவேன் (2)
லல்லா லால லலலா லல்லலாலா லாலல
பாடல்
12
என் இயேசுவின் அன்பு
எனக்காய் பரிசளித்த அன்பு (2)
என் கைகள் செய்த பாவத்திற்கு
என் கால்கள்செய்த தவறுக்கு
என் சிந்தை செய்த கேட்டிற்காக
என் அசுத்தம் நிறைந்த வாழ்விற்காக
தன்னைத் தந்தாரே இயேசு எனக்காய் தந்தாரே
என்னைத் தருவேன் எனக்குள்ளதை தருவேன் (2)
என் இயேசுவின் அன்பு
எனக்காய் பரிசளித்த அன்பு (2)
என் கைகள் செய்த பாவத்திற்கு
என் கால்கள்செய்த தவறுக்கு
என் சிந்தை செய்த கேட்டிற்காக
என் அசுத்தம் நிறைந்த வாழ்விற்காக
தன்னைத் தந்தாரே இயேசு எனக்காய் தந்தாரே
என்னைத் தருவேன் எனக்குள்ளதை தருவேன் (2)
Be not Faithless (2)
The son of GOD
Might have life
Through JESUS name (2)
மலைகளை பெயர்த்திடுமே
கர்த்தர்மேல் உள்ள விசுவாசம்
காற்றையும் கடலையும் அதட்டிடுமே (2)
இயேசுவில் நிலைபெற செய்திடுமே
அரிதான நம் விசுவாசம்
பெரிதானதை காணச் செய்திடுமே (2)
எனக்கு வெற்றியைத் தருகிறார் (2)
எனக்கு உதவி செய்கிறார் (2)
ஆவியானவர் கொடியேற்றுவார் (2)
நான் ஒருவன் அல்ல
எனக்குள் ஒருவர் இருக்கிறார் (2)
வேத வார்த்தையிலே அவர் சத்தம் கேட்பேன்
ஜெப வாழ்வில் அவரோடு பேசுவேன்
என்னை என்றும் நடத்திடுவார் (2)
நான் அல்ல ஆவியானவர் என்னோடு இருக்கிறார் (2)
1, 2, 3 Push!
தள்ளப்பட்டதே – 2
கல் புரட்டி தள்ளப்பட்டதே
இயேசுவின் கல்லறைக் கல் தள்ளப்பட்டதே
புரட்டி தள்ளப்பட்டதே – ஆஹா (2)
கிறிஸ்து இயேசுவே
உயிர்த்த இயேசு மீண்டும் வருவார்
நானும் காண்பேனே (2)
நானும் காண்பேனே (2)
உயிர்த்தெழுந்த இயேசுவை
நானும் காண்பேனே ஆஹா (2)
கண்கள் காண வரப்போகிறார் – 2 (2)
ஆயத்தமாவேன் நான் ஆயத்தமாவேன் – 2
இயேசு கிறிஸ்துவின் சாட்சியாக
அவரின் வழியில் தினம் நடந்து (2)
ஆயத்தமாவேன் நான் ஆயத்தமாவேன் - 2
- மரித்து உயிர்த்த
நம்பவில்லையே-2 தோமா நம்பவில்லையே-2
இயேசுவை கண்டோம் என்று
சீஷர்கள் சொன்னதை நம்பவில்லையே (2)
இயேசுவின் காயங்களை தொட்டு
நம்பினார் தோமா மாமா (2)
காணாமல் நம்புவோரே பாக்கியவான் (2)
இயேசுவோடு வாழ அர்ப்பணிப்போம்
நித்தியமாய் வாழ நிலைத்திடுவோம்
நிரந்தர வாழ்வை பெற்றிடுவோம் (2)
துக்கமில்லை, துயரமில்ல
இயேசுவோடு வாழும்போது சந்தோஷமே 2 (2)
உன் Life Style-ல தினமும் திரும்பிப்பாரு – 2
உன் Phone ல மாடல், உன் Life எல்லாம் மாடல் (2)
இந்த மாடல் மாறும் எல்லாம் மறைந்து போகும் – 2
அவரை தினம் காண்போம்
நம் Life எல்லாம் மாற்றி
நித்திய வாழ்வை திருவார் (2)
இயேசுவே நமது மாடல் – 2
சிந்தாம சிதறாம…. இயேசுவின் அன்பை பாரு
சாயாம கோணாம அவரின் மாதிரியை பாரு
நிற்காம நெழியாம இயேசுவை நோக்கி ஓடு
மேலானதை கண்டிட அவரில் அன்பு கூறு (2)
உம் பெலன் என்னில் நிரம்பிடவே (2)
உம் வாழ்வை எம் வாழ்வில் நித்தம் நான் காண
நீரே என் இலக்காகட்டும் - 2
இயேசுவே என்னில் வாழ்கிறார்
இனி வாழ்வது நான் அல்ல
இயேசுவே என்னில் ஒளிர்கின்றார் – 2
அவர் நீதி என்னில் கிருபையால் பெருக (2)
உதய தியானத்தில் வளர்ந்திடுவேன்
உன்னதரை நிதம் அனுபவிப்பேன் (2)
- இனி வாழ்வது…
இறைமகன் இல்லங்கள் தெருவெங்கும் பரவ (2)
சிலுவை சுமந்து என் சிந்தை விரிந்து
கிறிஸ்துவின் சீடனாய் / சீஷியாய் தொடர்ந்திடுவேன் (2)
- ஒப்படைக்கின்றேன்….
பெரிதானவைகளை காண்பேனே (2)
இயேசுவை அறிந்து அவர் வழிநடந்தால்
பெரிதானவைகளை காண்பேனே (2)
எனக்குள் இருப்பவரை காண்பேனே (2)
குற்றமில்லாதவரைக் காண்பேனே
உயிரோடு எழுந்தவரைக் காண்பேனே (2)
- காண்பேனே என் கண்களினாலே
காணாத பரலோகம் காண்பேனே (2)
நித்தியத்தில் மகிழ்ச்சியைக் காண்பேனே
நிலையான வாழ்வையும் காண்பேனே (2)
-காண்பேனே என் கண்களினாலே

தென்னிந்திய திருச்சபை மதுரை – இராமநாதபுரம்
பேராயம்
வளர்ச்சியின் ஆண்டு – 2022
கருப்பொருள் பாடல்
இதிலும் பெரிதான வற்றை
இதிலும் உயர்வான வற்றைஇதிலும் சிறப்பான வற்றை
காண்பீர் வாருங்கள் என்று
கர்த்தர் அழைக்கிறார் நம்மை ஆசீர்வதிப்பார்
நம்மை உயரச் செய்வார்
அவர்க்காய் வாழச் செய்வார்
அனுபல்லவி
உயருவோம்… கடவுள் விரும்பும் கனி கொடுப்போம்
வசனத்தில் வேரூன்றி நற்கனி தந்திடும்
நல் மரமாக வளர்ந்திடுவோம்
சரணங்கள்
செடியாம் அவரோடு என்றுமே நிலைப்போம்
புது வாழ்வில் மலர பழையன களைவோம்
நன்மைகள் செய்யவே அனுதினம் வளர்வோம்
திட விசுவாசத்தில் கட்டுப்படுவோம்
திருப்பணி செய்வதில் தீவிரம் கொள்வோம்
ஒரு மனப்பாட்டில் ஓங்கியே வளர்வோம்
அற்றவர் மீது கரிசனை கொள்வோம்
சீடர்களாக அனைத்தையும் பகிர்வோம்
சீரான வளர்ச்சி நிச்சயம் பெறுவோம்
அருட்பெருந்திரு. முனைவர். M. ஜோசப்
அருள்திரு. முனைவர். S. P. கிதியோன் சாம்
திருமதி. S. கலா டேனியல்
திருமதி. P. ரோஸி ஜோசப்
திரு. N. சர்மா பிரபு
திரு. P. ஜான் கிரேட் செல்வராஜ்
திரு. T. சைமன் சுந்தர்ராஜ்
திருமதி. S. சாந்தி சைமன்
திருமதி. J. வனிதா சர்மா
திருமதி. K. கிரேஸி
திருமதி. D. எமிமா கிரேட் செல்வராஜ்
திரு. J. பிரின்ஸ் கிளாட்ஸன்
திரு. T. ரிச்சர்ட்
திரு. T. டேனியல்
இயக்குநர், இளையோர் திருச்சபை
எண் 1/1, இரட்சண்யபுரம், மூன்றுமாவடி, கோ.புதூர்.
மதுரை – 625 007.
Cell: 94864 61717
E-mail: csidmrjcm@gmail.com
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.