Type Here to Get Search Results !

Luke 19 | The Gospel of Luke Bible Quiz Question And Answer in Tamil | சகேயு இயேசுவை பார்க்க எந்த மரத்தில் ஏறினான்? | லூக்கா கேள்வி பதில்கள் | Jesus Sam

===================
லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள்
லூக்கா பத்தொன்பதாம் அதிகாரம்
The Gospel of Luke Question And Answer
Luke Chapter - 19 Bible Quiz
===================
01. ஆயக்காரருக்கு தலைவனும் ஐசுவரியவானுமாய் இருந்தது யார்?
A) சகேயு
B) மத்தேயு
C) பிலிப்பு
Answer: A) சகேயு
    (லூக்கா 19: 2)

02. இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகை தேடியது யார்?
A) சகேயு
B) பிரதான ஆசாரியன்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: A) சகேயு
    (லூக்கா 19: 3)

03. சகேயு இயேசுவை பார்க்க எந்த மரத்தில் ஏறினான்?
A) ஒலிவமரம்
B) காட்டத்திமரம்
C) கேதுருமரம்
Answer: B) காட்டத்திமரம்
    (லூக்கா 19: 4)

04. சகேயு தன் ஆஸ்திகளில் பாதியை யாருக்கு தருவதாக சொன்னான்?
A) விதவைகள்
B) அநியாயமாய் வாங்கியவர்கள்
C) ஏழைகள்
Answer: C) ஏழைகள்
    (லூக்கா 19: 8)

05. சகேயு யாருக்கு நாலத்தனையாக தருவதாக கூறினான்?
A) விதவைகள்
B) அநியாயமாய் வாங்கியவர்கள்
C) ஏழைகள்
Answer: B) அநியாயமாய் வாங்கியவர்கள்
    (லூக்கா 19: 8)



06. இயேசு யாரை பார்த்து ஆபிரகாமுக்கு குமாரன் என்றார்?
A) சகேயு
B) குருடன்
C) லாசரு
Answer: A) சகேயு
    (லூக்கா 19: 9)

07. இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவும் வந்திருக்கிறது யார்?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: B) மனுஷகுமாரன்
    (லூக்கா 19: 10)

08. பிரபுவாகிய ஒருவன் தன் ஊழியரில் பத்து பேரை அழைத்து அவர்களுக்கு எத்தனை ராத்தல் திரவியம் கொடுத்தான்?
A) ஒன்று
B) ஐந்து
C) பத்து
Answer: C) பத்து
    (லூக்கா 19: 12,13)

09. இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லை என்று சொல்ல யாரை அனுப்பினார்கள்?
A) ஸ்தானாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகர்
Answer: A) ஸ்தானாபதி
    (லூக்கா 19: 14)

10. பெத்பகே, பெத்தானியா இந்த ஊர் எந்த மலைக்கு அருகில் இருந்தது?
A) சீனாய்மலை
B) ஒலிவமலை
C) மோரியாமலை
Answer: B) ஒலிவமலை
    (லூக்கா 19:29)

11. கழுதை குட்டியை அவிழ்த்து கொண்டுவர இயேசு எத்தனை சீஷரை அனுப்பினார்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
Answer: A) இரண்டு
    (லூக்கா 19: 29)

12. போதகரே உம்முடைய சீஷரை அதட்டும் என்றது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சதுசேயர்
Answer: A) பரிசேயர்
    (லூக்கா 19: 39)

13. இயேசு எதை பார்த்து கண்ணீர்விட்டழுதார்?
A) தேவாலயம்
B) எருசலேம்
C) ஒலிவமலை
Answer: B) எருசலேம்
    (லூக்கா 19:41)

14. இயேசு விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்திய இடம் எது?
A) தேவாலயம்
B) ஜெப ஆலயம்
C) ஜெப கூடாரம்
Answer: A) தேவாலயம்
    (லூக்கா 19: 45)

15. இயேசுவை கொலை செய்யும்படி வகை தேடியது யார்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியர், வேதபாரகர்
C) ஜனத்தின் மூப்பர், பிரதான ஆசாரியர், வேதபாரகர்
Answer: பிரதான ஆசாரியர், வேதபாரகர்
    (லூக்கா 19: 47)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.