Type Here to Get Search Results !

Luke 18 | லூக்கா சுவிசேஷம் வேதாகம கேள்வி பதில்கள் தழிழில் | மனுஷகுமாரன் வரும்போது பூமியில் எதை காண மாட்டார்? | The Gospel of Luke Quiz | Jesus Sam

=========================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
லூக்கா பதினெட்டாம் (18) அதிகாரம்
The Gospel Of Luke Question Answer
Luke Chapter  18 Bible Quiz
========================
01. எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றது யார்?
A) விதவை
B) நியாயாதிபதி
C) ஐசுவரியவான்
Answer: A) விதவை
    (லூக்கா 18: 3) 

02. மனுஷகுமாரன் வரும்போது பூமியில் எதை காண மாட்டார்?
A) அன்பு
B) விசுவாசம்
C) சந்தோஷம்
Answer: B) விசுவாசம்
    (லூக்கா 18: 8)

03. ஜெபிக்கும்படி ஆலயத்திற்கு சென்ற இருவர் யார்?
A) பரிசேயன், ஆயக்காரன்
B) பரிசேயர், சதுசேயர்
C) வேதபாரகன், ஏரோதியன்
Answer: A) பரிசேயன், ஆயக்காரன்
    (லூக்கா 18: 10)

04. வாரத்தில் எத்தனை தரம் உபவாசிப்பதாக பரிசேயன் ஜெபித்தான்?
A) இரண்டு தரம்
B) மூன்று தரம்
C) நான்கு தரம்
Answer: A) இரண்டு தரம்
    (லூக்கா 18: 12)

05. தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தது யார்?
A) பரிசேயன்
B) ஆயக்காரன்
C) ஆசாரியன்
Answer: B) ஆயக்காரன்
    (லூக்கா 18: 13)

06. ஜெபிக்கும்படி ஆலயத்திற்கு சென்ற இருவரில் நீதிமானாக்கப்பட்டது யார்?
A) பரிசேயன்
B) ஆயக்காரன்
C) ஆசாரியன்
Answer: B) ஆயக்காரன்
    (லூக்கா 18: 14)

07. குழந்தைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தவர்களை அதட்டியது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
    (லூக்கா 18: 15)

08. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடையது என்று இயேசு சொன்னார்?
A) சிறு பிள்ளைகள்
B) வாலிபர்கள்
C) முதியோர்கள்
Answer: A) சிறு பிள்ளைகள்
    (லூக்கா 18: 16)

09. நல்ல போதகரே! நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது யார்?
A) தலைவன்
B) நியாயசாஸ்திரி
C) வாலிபன்
Answer: A) தலைவன்
    (லூக்கா 18: 18)

10. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கிறது என்று இயேசு சொன்னார்?
A) தலைவன்
B) நியாயாதிபதி
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
    (லூக்கா 18: 24) 

11. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் ஒட்டகமானது எதில் நுழைவது அரிதாயிருக்கிறது?
A) ஊசியில்
B) ஊசியின் முனையில்
C) ஊசியின் காதில்
Answer: C) ஊசியின் காதில்
    (லூக்கா 18: 25)

12. நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோமே என்றது யார்?
A) பேதுரு
B) அந்திரேயா
C) யோவான்
Answer: A) பேதுரு
    (லூக்கா 18: 28)

13. மனுஷகுமாரனை குறித்து தீர்க்கதரிசிகள் சொன்னது நிறைவேறுமிடம் எது என்று இயேசு சொன்னார்?
A) நாசரேத்
B) கலிலேயா
C) எருசலேம்
Answer: C) எருசலேம்
    (லூக்கா 18: 31)

14. மனுஷகுமாரன் எத்தனையாவது நாளில் உயிரோடு எழுந்திருப்பார்?
A) இரண்டாம் நாள்
B) மூன்றாம் நாள்
C) நான்காம் நாள்
Answer: B) மூன்றாம் நாள்
    (லூக்கா 18: 33)

15. இயேசு எரிகோவுக்கு சமீபமாய் வரும்போது வழியிலே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தது யார்?
A) முடவன்
B) சப்பாணி
C) குருடன்
Answer: C) குருடன்
    (லூக்கா 18: 35) 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.