Type Here to Get Search Results !

Luke 17 | லூக்கா நற்செய்தி நூல் | பைபிள் கேள்வி பதில்கள் | The Gospel of Luke Question And Answer in Tamil | Jesus Sam

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
லூக்கா பதினேழாம் அதிகாரம் - 17
The Gospel Of Luke Question And Answer
Luke Chapter - 17 Bible Quiz Tamil
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
01. சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்கினால் அவன் கழுத்தில் எதை கட்டி சமுத்திரத்தில் போட வேண்டும்?
A) கல்
B) எந்திரக்கல்
C) எந்திரம்
Answer: B) எந்திரக்கல்
    (லூக்கா 17: 2) 

02. உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றம் செய்தால் ________ .
A) தண்டி
B) மன்னித்துவிடு
C) கடிந்துகொள்
Answer: C) கடிந்துகொள்
    (லூக்கா 17: 3)

03. எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றது யார்?
A) பரிசேயர்
B) அப்போஸ்தலர்கள்
C) ஜனங்கள்
Answer: B) அப்போஸ்தலர்கள்
    (லூக்கா 17: 5)

04. எந்த அளவு விசுவாசம் நமக்கு வேண்டும்?
A) மலை
B) அத்திமரம்
C) கடுகுவிதை
Answer: C) கடுகுவிதை
    (லூக்கா 17: 6)

05. இயேசு கடுகு விதையளவு விசுவாசத்திற்கு எந்த மரத்தை சுட்டிக்காட்டுகிறார்?
A) ஒலிவ மரம்
B) காட்டத்திமரம்
C) அத்திமரம்
Answer: B) காட்டத்திமரம்
    (லூக்கா 17: 6)



06. ஆசாரியரிடம் தங்களை காண்பிக்க சென்றபோது சுத்தமானவர்கள் யார்?
A) குருடர்கள்
B) குஸ்டரோகிகள்
C) ஊமையர்கள்
Answer: B) குஸ்டரோகிகள்
    (லூக்கா 17: 12,14)

07. சொஸ்தமான பத்து குஸ்டரோகிகளில் இயேசுவிடம் திரும்பி வந்தது எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: A) ஒன்று
    (லூக்கா 17: 15)

08. திரும்பி வந்த ஒரு குஸ்டரோகி எந்த ஊரான்?
A) கலிலேயன்
B) நாசரேத்தான்
C) சமாரியன்
Answer: C) சமாரியன்
    (லூக்கா 17: 16)

09. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று கேட்டது யார்?
A) பரிசேயர்
B) அப்போஸ்தலர்கள்
C) ஜனங்கள்
Answer: A) பரிசேயர்
    (லூக்கா 17: 20)

10. யாருடைய நாட்களை காண ஆசையாயிருந்து காணமாட்டீர்கள்?
A) மோசே
B) மனுஷகுமாரன்
C) ஆபிரகாம்
Answer: B) மனுஷகுமாரன்
    (லூக்கா 17: 22)


11. மின்னலைப் போன்று வானத்தின் ஒரு திசையிலிருந்து மறுதிசை வரை பிரகாசிப்பது யார்?
A) மனுஷகுமாரன்
B) மறுரூபமானவர்கள்
C) தேவ தூதர்கள் \
Answer: B) மறுரூபமானவர்கள்
    (லூக்கா 17: 24)

12. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்?
A) நோவா, லோத்து
B) யோனா, நோவா
C) லோத்து, யோனா
Answer: A) நோவா, லோத்து
    (லூக்கா 17: 26, 28)

13. வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வந்து எந்த பட்டணத்தை அழித்துப்போட்டது?
A) நினிவே
B) சோதோம்
C) கலிலேயா
Answer: B) சோதோம்
    (லூக்கா 17: 29)

14. எங்கு இருப்பவன் பின்னிட்டு திரும்பாமல் இருக்கக்கடவன்?
A) வீடு
B) ஆலயம்
C) வயல்
Answer: C) வயல்
    (லூக்கா 17: 31)

15. பிணம் எங்கேயோ அங்கே _______ வந்து கூடும்.
A) புறாகள்
B) கழுகுகள்
C) பாம்புகள்
Answer: B) கழுகுகள்
    (லூக்கா 17: 37)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.