Type Here to Get Search Results !

Luke 15 Bible Quiz Question And Answer in Tamil | லுக்கா நற்செய்தி நூல் அதிகாரம் பதினைந்து 15 | பைபிள் வினா விடைகள் | Jesus Sam

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
லுக்கா நற்செய்தி நூல் அதிகாரம் பதினைந்து (15)
கேள்வி பதில்கள்
The Gospel of Luke Chapter - 15
Bible Question And Answer in Tamil
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

01. இயேசுவை பார்த்து முறுமுறுத்தது யார்?
A) ஆயக்காரர், ஆசாரியர்
B) பரிசேயர், சதுசேயர்
C) பரிசேயர், வேதபாரகர்
Answer: C) பரிசேயர், வேதபாரகர்
    (லூக்கா 15: 2)
 
02. பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிட்டது யார்?
A) இயேசு
B) பரிசேயர்
C) வேதபாரகர்
Answer: A) இயேசு
    (லூக்கா 15: 2)
 
03. ஒரு ஆட்டை தொலைத்த மனுஷன் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் எங்கே விட்டான்?
A) காடு
B) வனாந்தரம்
C) மலை
Answer: B) வனாந்தரம்
    (லூக்கா 15: 4)
 
04. நூறு ஆடுகள் உவமையில் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் எங்கு மிகுந்த சந்தோஷமுண்டாகும்?
A) பரலோகத்தில்
B) தேவனுடைய தூதருக்கு முன்பாக
C) தேவனுக்கு முன்பாக
Answer: A) பரலோகத்தில்
    (லூக்கா 15: 7)
 
05. உவமை: ஒரு வெள்ளிக்காசை தொலைத்த ஸ்திரீயிடம் மொத்தம் எத்தனை வெள்ளைக்காசு இருந்தது?
A) ஒன்பது
B) பத்து
C) பதினொன்று
Answer: B) பத்து
    (லூக்கா 15: 8)
 


06. எதை தொலைத்த ஸ்திரீ விளக்கை கொளுத்தி வீட்டை பெருக்கி தேடினால்?
A) தங்கம்
B) வெள்ளிக்காசு
C) பணம்
Answer: B) வெள்ளிக்காசு
    (லூக்கா 15: 8)
  
07. பத்து வெள்ளிக்காசு உவமையில் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் எங்கு மிகுந்த சந்தோஷமுண்டாகும்?
A) பரலோகத்தில்
B) தேவனுடைய தூதருக்கு முன்பாக
C) தேவனுக்கு முன்பாக
Answer: B) தேவனுடைய தூதருக்கு முன்பாக
    (லூக்கா 15: 10)
 
08. ஆஸ்திகளில் எனக்கு வரும் பங்கை தரவேண்டும் என்றது யார்?
A) வேலைக்காரன்
B) மூத்த மகன்
C) இளைய மகன்
Answer: C) இளைய மகன்
    (லூக்கா 15: 12)
 
09. இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு எங்கு புறப்பட்டான்?
A) தூர தேசம்
B) தூர பிரயாணம்
C) தூர பட்டணம்
Answer: A) தூர தேசம்
    (லூக்கா 15: 13)
 
10. பஞ்ச காலத்தில் இளைய மகன் செய்த வேலை என்ன?
A) ஆடு மேய்த்தல்
B) மாடு மேய்த்தல்
C) பன்றி மேய்த்தல்
Answer: C) பன்றி மேய்த்தல்
    (லூக்கா 15: 15)


11. இளைய மகன் தூரத்தில் வருகிறதை கண்டது யார்?
A) தகப்பன்
B) மூத்த மகன்
C) ஊழியக்காரன்
Answer: A) தகப்பன்
    (லூக்கா 15: 20)
 
12. தகப்பன் யாருடைய கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு பாதரட்சையையும் போடுவித்தான்?
A) இளைய மகன்
B) மூத்த மகன்
C) ஊழியக்காரன்
Answer: A) இளைய மகன்
    (லூக்கா 15: 22)
 
13. காணாமற்போன இளைய மகன் வரும்போது மூத்த மகன் எங்கிருந்தான்?
A) வீட்டில்
B) சிநேகிதருடன்
C) வயலில்
Answer: C) வயலில்
    (லூக்கா 15: 25)
 
14. தன் சகோதரன் வந்த செய்தியை மூத்த மகன் யாரிடம் விசாரித்தான்?
A) தகப்பன்
B) பணிவிடைக்காரன்
C) ஊழியக்காரன்
Answer: C) ஊழியக்காரன்
    (லூக்கா 15: 26)
 
15. வேசிகளிடத்தில் ஆஸ்தியை அழித்துப் போட்டவன் யார்?
A) தகப்பன்
B) இளைய மகன்
C) மூத்த மகன்
Answer: B) இளைய மகன்
    (லூக்கா 15: 30)


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.