Type Here to Get Search Results !

Luke 13 Bible Quiz Question Answer Tamil | லூக்கா நற்செய்தி நூல் பதின்மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

===========================
லூக்கா சுவிசேஷம் கேள்வி பதில்கள்
லூக்கா பதின் மூன்றாம் அதிகாரம் (13)
The Gospel Of LUKE Question And Answer Tamil
Luke Chapter 13

==========================

01. கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்தது யார்?

A) ஏரோது

B) பிலிப்பு

C) பிலாத்து

Answer: C) பிலாத்து

(லூக்கா 13: 1)

 

02. சீலோவாமிலே கோபுரம் விழுந்த போது மடிந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

A) எட்டு

B) பதினெட்டு

C) இருபத்து எட்டு

Answer: B) பதினெட்டு

(லூக்கா 13: 4)

 

03. ஒருவன் எந்த மரத்தில் கனியைத் தேடி காணாதிருந்தான்?

A) கேதுருமரம்

B) ஒலிவமரம்

C) அத்திமரம்

Answer: C) அத்திமரம்

(லூக்கா 13: 6)

 

04. ஒருவன் அத்திமரத்தில் எத்தனை வருடமாக கணியைத் தேடினான்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: C) மூன்று

(லூக்கா 13: 7)

 

05. நிமிரக்கூடாதிருந்த கூனியை இயேசு சொஸ்தமாக்கிய நாள் எந்த நாள்?

A) ஆயத்த நாள்

B) ஓய்வு நாள்

C) வாரத்தின் முதல் நாள்

Answer: B) ஓய்வு நாள்

(லூக்கா 13: 10, 11)

 


06. ஜெப ஆலயத்தில் இருந்த கூனி எத்தனை வருடமாய் நிமிரக்கூடாதிருந்தாள்?

A) பதினைந்து

B) பதினெட்டு

C) இருபத்து ஒன்று

Answer: B) பதினெட்டு

(லூக்கா 13: 11)

 

07. இயேசு ஜெப ஆலயத்தில் சொஸ்தமாக்கியதைக் கண்டு கோபமடைந்தது யார்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) ஜெப ஆலயத்தலைவன்

Answer: C) ஜெப ஆலயத்தலைவன்

(லூக்கா 13: 14)

 

08. வேலை செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்நாட்களில் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றது யார்?

A) இயேசு

B) பரிசேயர்

C) ஜெப ஆலயத்தலைவன்

Answer: C) ஜெப ஆலயத்தலைவன்

(லூக்கா 13: 14)

 

09. இயேசு நிமிரக்கூடாதிருந்த கூனியை யாருடைய குமாரத்தி என்றார்?

A) ஆபிரகாம்

B) மோசே

C) தாவீது

Answer: A) ஆபிரகாம்

(லூக்கா 13: 16)

 

10. இயேசு கடுகு விதை, புளித்த மாவு இவைகளை எதற்கு ஒப்பிடுகிறார்?

A) உவமை

B) தேவனுடைய ராஜ்யம்

C) பரலோக ராஜ்யம்

Answer: B) தேவனுடைய ராஜ்யம்

(லூக்கா 13: 19, 20)

 


11. ஒரு ஸ்திரீ எத்தனை படி மாவை எடுத்து புளிக்கும்படி வைத்தாள்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

Answer: B) மூன்று

(லூக்கா 13: 21)

 

12. இயேசு எங்கு பிரயாணமாய்ப் போகும்போது பட்டணங்கள் தோறும் கிராமங்கள் தோறும் உபதேசம் பண்ணினார்?

A) நாசரேத்

B) எருசலேம்

C) கலிலேயா

Answer: B) எருசலேம்

(லூக்கா 13: 22)

 

13. இயேசுவிடம் வந்து ஏரோது உம்மை கொலை செய்ய மனதாய் இருக்கிறான் என்றது யார்?

A) சில பரிசேயர்

B) சில சதுசேயர்

C) சில வேதபாரகர்

Answer: A) சில பரிசேயர்

(லூக்கா 13: 31)

 

14. எருசலேமிற்கு புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்து போகிறதில்லை என்றது யார்?

A) இயேசு

B) ஏரோது

C) யோவான்ஸ்நானன்

Answer: A) இயேசு

(லூக்கா 13: 33)

 

15. ஏரோதுவை நரி என்று அழைத்தது யார்?

A) இயேசு

B) பிலிப்பு

C) பிலாத்து

Answer: A) இயேசு

(லூக்கா 13: 33)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.