Type Here to Get Search Results !

Luke 12 Bible Quiz Question Answer in Tamil |லூக்கா பனிரெண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

=================================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதி்கள்
லூக்கா அதிகாரம் பனிரெண்டு (12)
The Gospel of Luke Bible Quiz Question answer
LUKE Chapter 12

=================================

01. யாருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

(லூக்கா 12: 1)

 

02. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத __________ .

A) இரகசியமுமில்லை

B) பொக்கிஷமுமில்லை

C) மறைபொருளுமில்லை

Answer: A) இரகசியமுமில்லை

(லூக்கா 12: 2)

 

03. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்?

A) இரண்டு

B) நான்கு

C) ஐந்து

Answer: C) ஐந்து

(லூக்கா 12: 6)

 

04. யாருக்கு விரோதமாய் தூஷணஞ் சொன்னால் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை?

A) பரம பிதா

B) மனுஷகுமாரன்

C) பரிசுத்த ஆவி

Answer: C) பரிசுத்த ஆவி

(லூக்கா 12: 10)

 

05. நீங்கள் பேச வேண்டியதை உங்களுக்கு போதிப்பது யார்?

A) பரம பிதா

B) மனுஷகுமாரன்

C) பரிசுத்த ஆவியானவர்

Answer: C) பரிசுத்த ஆவியானவர்

(லூக்கா 12: 12)

 


06. ”என்னை உங்களுக்கு நியாயாதிபதியாவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்“ என்றது யார்?

A) மனுஷகுமாரன்

B) யோவான்ஸ்நானன்

C) பிரதான ஆசாரியன்

Answer: A) மனுஷகுமாரன்

(லூக்கா 12: 14)

 

07. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல?

A) ஜீவன்

B) வாழ்வு

C) சந்தோஷம்

Answer: A) ஜீவன்

(லூக்கா 12: 15)

 

08. ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?

A) உடை

B) ஜீவன்

C) சரீரம்

Answer: B) ஜீவன்

(லூக்கா 12: 23)

 

09. உடையை பார்க்கிலும் விசேஷித்தது எது?

A) ஜீவன்

B) சரீரம்

C) ஆகாரம்

Answer: B) சரீரம்

(லூக்கா 12: 23)

 

10. எங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை?

A) வீடு

B) பூமி

C) பரலோகம்

Answer: C) பரலோகம்

(லூக்கா 12: 33)

 


11. பொக்கிஷம் இருக்கும் இடத்தில் எது இருக்கும்?

A) கவலை

B) இருதயம்

C) பெறுமை

Answer: B) இருதயம்

(லூக்கா 12: 34)

 

12. ஆண்டவரே இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டது யார்?

A) பேதுரு

B) பிலிப்பு

C) யோவான்

Answer: A) பேதுரு

(லூக்கா 12: 41)

 

13. இயேசு பூமியின் மேல் எதைப் போட வந்தேன் என்றார்?

A) அக்கினி

B) பிரிவினை

C) சமாதானம்

Answer: A) அக்கினி

(லூக்கா 12: 49)

 

14. எத்திசையில் மேகம் எழும்பும் போது மழை வரும்?

A) கிழக்கு

B) மேற்கு

C) தெற்கு

Answer: B) மேற்கு

(லூக்கா 12: 54)

 

15. தென்றல் அடிக்கும்போது என்ன உண்டாகும்?

A) மழை

B) பணி

C) உஷ்ணம்

Answer: C) உஷ்ணம்

(லூக்கா 12: 55)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.