Type Here to Get Search Results !

இயன்ற மட்டும் செய்யுங்கள் | ஆழமான ஆசீர்வாத பிரசங்க குறிப்புகள் | பிரசங்கம் செய்ய தலைப்புகள் | Sermon Outline in Tamil | Jesus Sam

==========================
இயன்ற மட்டும் செய்யுங்கள்
==========================
  இயன்ற மட்டும் நாம் என்ன என்ன காரியங்களை செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் அறிந்துகொள்வோம்.

1. இயன்றமட்டும் ஆலயத்திற்குக் கொடுக்க வேண்டும்:
1 நாளாகமம் 29: 2, 3
  2. நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.
  3. இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

  கடவுள் தாவீதிடம் நீ எனக்காக ஆலயம் கட்ட மாட்டாய், உன் மகன் எனக்காக ஆலயம் கட்டுவான் என்று சொல்லுகிறார். ஏனென்றால் அநேக போர் புரிந்ததால் தாவீதின் கை இரத்தக்கரையாக இருந்தது.

  தாவீது என் மகன் தானே ஆலயத்தைக் கட்டப்போகிறான், அவன் சம்பாதித்து கட்டிக்கொள்ளட்டும், என்று யோசிக்கவில்லை. தன்னால் இயன்ற எல்லாவற்றையும் கர்த்தருடைய ஆலயத்திற்காக கொடுத்தான். தனது சொத்து முழுவதையும் ஆலயத்திற்கு எழுதிவைத்துவிட்டு தான் மரித்தான்.

  நாம் அநேக நேரங்களில், நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை, எனது திருச்சபையில் பணக்காரர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமானால், உயர்த்த வேண்டுமானால் நாம் தான் கொடுக்க வேண்டும். நான் ஒரு ஏழை என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்று என்னாமல், என்னிடம் இருப்பதை நான் கிறிஸ்துவுக்காக கொடுக்க வேண்டும். அதை ஆண்டவர் கனப்படுத்தி என்னை ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

  ஒரு பக்தன் இப்படியா எழுதுகிறார் ”கிரிஸ்துவுக்காக இழந்தவர் எவறும் தரித்திரரானதில்லை”. நாம் கிறிஸ்துவுக்காக எதை இழக்கிறோமா அதை இரண்டு மடங்காக பொற்றுக்கொள்வோம்.

லூக்கா 6:38
  நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.


2. இயன்றமட்டும் ஆண்டவருக்குச் செய்யுங்கள்:
மாற்கு 14: 3-9
மாற்கு 14: 3
 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

  வெள்ளைக் கல் பரணியின் மதிப்பு 300 பணம் ஆகும். இஸ்ரவேலர்கள் இதை சரீரத்தை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்துவார்கள்.

  இஸ்ரவேலர்களின் ஒரு நாளைய அதிகபட்ச கூலி ஒரு பணம். அப்படியானால் அந்த ஸ்திரீ பெரிய உத்தியோகத்தில் இருந்திருப்பாலானால் அவள் அந்த பணத்தை சம்பாதிக்க குறைந்தது 300 நாட்கள் ஆகும்.

மாற்கு 14: 4, 5
  4. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்.
  5. இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவர்ளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.

  எத்தனை பேர் தடுத்தாலும், கேலியாக பேசினாலும், விமர்சித்தாலும் நம்மால் இயன்றதை நம்மை படைத்த கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டும்.

  நாம் ஆண்டவருக்காக நம்முடைய பணத்தை, நேரத்தை தாலந்துகலை பயன்படுத்தும்போது, இந்த சீஷர்கள் ஸ்திரீயை முறுமுறுத்ததுபோல, நம்முடைய உறவினர்கள், பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி நம்மை முறுமுறுக்கலாம். நீ தேவையில்லாமல் உன் வாழ்க்கையை வீனடித்துக் கொண்டிருக்கிறாய் என்று நம்மை குற்றப்படுத்தலாம். அந்த ஸ்திரீயைப் பாருங்கள் சீஷர்களின் முறுமுறுப்புக்களுக்கு செவிகொடுக்காமல், தன்னால் இயன்றதை ஆண்டவருக்காக செய்தால்.

மாற்கு 14: 8
  இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்புச முந்திக்கொண்டாள்.

  இந்த ஸ்திரீயைப் பார்த்து ஆண்டவர் கொடுத்த சாட்சி, இவள் தன்னாள் இயன்றதைச் செய்தாள். நாமும் கூட சற்று ஆராய்ந்து பார்ப்போம், நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்திருக்கிறேன். இந்த நாள் வரை நமக்கு சுகம், பெலன், ஜீவன் தந்த கர்த்தாதி கர்த்ருக்கு நாம் என்ன செய்திருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் அவருக்காக பயன்படுத்தியிருக்கிறோமா? இந்த ஸ்திரீயைப் போல நாமும் நம்மால் இயன்றதைச் செய்யும்போது கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்.



3. இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்:
ரோமர் 1: 15, 16அ
  15. ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.
  16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நான் வெட்கப்படேன்…..

  பவுலைப்போல நம்மால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். உண்மைக் கடவுளைப் பற்றி அறியாமல் இன்றும் அநேக மரித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு தான் உண்மையான தெய்வம் என்று அறியாத அநேகருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக ஆண்டவர் இன்றும் அநேக பவுல்கலைத் தேடிக்கொண்டிருக்கிறார். நாம் முழு நேர ஊழியனாக இல்லாவிட்டாலும், நாம் வசிக்கக் கூடிய இடங்களில் ஆண்டவரைப் பற்றி அறியாத அநேக இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களுக்கு நாம் கிறிஸ்துவின் அன்பைப்பற்றி அறிவிக்க வேண்டும்.

  ”அறிவிக்கிறவர்கள் இல்லை என்றால் எப்படி கேள்விப்படுவார்கள். கேள்விப்படவில்லை என்றால் எப்படி இரட்சிக்கப்படுவார்கள்”.

  நாம் அநேக நேரங்களில் நம்முடைய நண்பர்களிடமே கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க வெட்கப்படுகிறோம். ஆனால் பவுல் அப்போஸ்தலன் அந்த நாட்களில் உலக வல்லரசு நாடாக திகழ்ந்த ரோமாபுரியாருக்கு நான் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன். அதற்காக நான் வெட்கப்பட மாட்டேன் என்று சொல்லுகிறார். நாமும் நமக்கு அறிமுகமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடம் கிறிஸ்துவின் அன்பைப்பற்றி கூறி, அவர்களையும் பரலோக ராஜ்யத்திற்கு தகுதிப்படுத்துவோம்.

  சுவிசேஷம் அறிவிப்பது என்பது கிறிஸ்தவர்களின் மூச்சு, அது நம்மேல் விழுந்த கடமை. நாம் சுவிஷேம் அறிவிக்க தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எங்கோ ஒரு மனிதன், சுவிசேஷத்தைப் பற்றி அறியாமல் அழிந்துகொண்டிருக்கிறார்.
 
  எனவே நம்மால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று அருள்நாதர் விரும்புகிறார்.


4. இயன்றமட்டும் சமாதானமாய் இருங்கள்:
ரோமர் 12: 18
  கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

  நாம் இயன்ற மட்டும் எல்லா மனிதர்களோடு சமாதானமாக வாழ வேண்டும் என்று ஆண்டவர் வரும்புகிறார். நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆண்டவர் நமக்கு கிருபையாய் கொடுத்தது. ஒரே ஒரு முறை மட்டுமே நாம் வாழமுடியும், அநேகர் நாம் ஏழு பிறவி வாழுவோம் என்று நினைத்து நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதம் தெளிவாய் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது,

எபிரெயர் 9:27
  அன்றியும் ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிற படியே,

  நமக்கு ஆண்டவர் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் நம்மால் இயன்றவரை எல்லோரோடும் கூட சமாதானமாக இருப்போம். நாம் ஏன் மற்றவர்களைப் பகைக்கிறோம், நமக்கு ஏன் சமாதானக் குழைச்சல் ஏற்ப்படுகிறது என்றால், அதற்கு மூல முக்கிய காரணம் ஆசை ஆகும். நான் அநேகரைப் பகைத்து, என்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுடனான ஐக்கியத்தை, சமாதானத்தை நான் குழைத்துப்போடுகிறவனாக காணப்பட்டால், அதினால் எனக்கு என்ன பயன். நான் மற்றவர்களின் வெறுப்பையும், ஆதங்கத்தையும் சம்பாதித்து, அதினால் நான் ஆசைப்பட்டதை பெறுவேனானால், இன்று நான் மரித்துப்போனால் அதை அனுபவிக்க என்னால் முடியாமல் போய்விடுமே. நாம் இந்த உலகில் தேடி அழையும் எதுவும் நிரந்தரமில்லை. எனவே, நிரந்தரமில்லாதவைகளைத் தேடி நாம் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், அன்பையும், உறவையும் இழந்துபோக வேண்டாம்.

சங்கீதம் 90: 10
  எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும்….

  நாம் வாழக்கூடிய இந்த குறுகிய காலத்தில் இயன்றமட்டும் அனைவரோடும் சமாதானமாக, ஐக்கியமாக வாழுவோம். நமக்கு விரோதமாய் செயல்படுகிறவர்களோடு நாம் சமாதான உறவை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோமானால், அதின்நிமித்தம் ஆண்டவர் மகிமைப்படுகிறவராய் இருக்கிறார்.

  இந்த குறிப்பின் மூலமாக நாம் நம்மால் இயன்றமட்டும் ஆண்டவருடைய ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும், ஆண்டவருக்கு நம்முடைய தாலந்துகள், திறமைகள், நேரத்தக் கொடுக்க வேண்டும் என்றும், நம்மால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்றும், நம்மால் இயன்றமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாய் வாழ வேண்டும் என்றும் கற்றுக்கொண்டோம். நம்மால் இயன்றமட்டும் இந்த காரியங்களைக் கடைபிடித்து வாழும்போது ஆண்டவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார், தேவைகளை சந்திப்பார்.

  ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.