Type Here to Get Search Results !

Luke Leven 11 Bible Quiz Question With Answer in Tamil | லூக்கா சுவிசேஷம் பதினொன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் pdf | Jesus Sam

==================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள
லூக்கா பதினொன்றாம் அதிகாரம் (11)
The Gospel Of LUKE Bible Quiz Question Answer Tamil
LUKE Chapter Leven (11)
==================

01. ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பாதிராத்திரியில் போய் எத்தனை அப்பம் கேட்டான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
    (லூக்கா 11:5,6)

02. தகப்பனாயிருக்கிறவனிடத்தில் மகன் எதைக் கேட்டாள் தேளைக் கொடுப்பானா?
A) மீன்
B) முட்டை
C) அப்பம்
Answer: B) முட்டை
    (லூக்கா 11:11,12)

03. பிசாசுகளின் தலைவன் யார்?
A) மிகாவேல்
B) காபிரியேல்
C) பெயெல்செபூல்
Answer: C) பெயெல்செபூல்
    (லூக்கா 11:15)

04. தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் _________ .
A) கெட்டுபோம்
B) பாழாய்போம்
C) விழுந்துபோம்
Answer: B) பாழாய்போம்
    (லூக்கா 11:17)

05. தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த வீடும் _____ .
A) கெட்டுபோம்
B) பாழாய்போம்
C) விழுந்துபோம்
Answer: C) விழுந்துபோம்
    (லூக்கா 11:17)


06. இந்த பொல்லாத சந்ததியாருக்கு இயேசு கொடுத்த அடையாளம் எது?
A) ஏசாயா தீர்க்கதரிசியின் அடையாளம்
B) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
C) தானியேல் தீர்க்கதரிசியின் அடையாளம்
Answer: B) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
    (லூக்கா 11:29)

07. யோனா எந்த பட்டணத்தாருக்கு அடையாளமாக இருந்தார்?
A) நினிவே
B) தர்ஷிஸ்
C) கப்பர்நகூம்
Answer: A) நினிவே
    (லூக்கா 11:30)

08. தென்தேசத்து ராஜஸ்திரி யாருடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்?
A) சவுல்
B) தாவீது
C) சாலொமோன்
Answer: C) சாலொமோன்
    (லூக்கா 11:31)

09. சரீரத்தின் விளக்கு எது?
A) கண்
B) காது
C) வாய்
Answer: A) கண்
    (லூக்கா 11:34)

10. இயேசுவை தன்னோடு பகற்போஜனம் பண்ண வேண்டுமென்று அழைத்தது யார்?
A) சதுசேயன்
B) பரிசேயன்
C) வேதபாரகன்
Answer: B) பரிசேயன்
    (லூக்கா 11:37)


11. இயேசு போஜனம் பண்ணுகிறதற்கு முன் கைகளுவாததைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?
A) பரிசேயன்
B) சதுசேயன்
C) வேதபாரகன்
Answer: A) பரிசேயன்
    (லூக்கா 11:38)

12. ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய பூண்டுகளில் தசமபாகம் கொடுத்தது யார்?
A) சதுசேயர்கள்
B) பரிசேயர்கள்
C) நியாயசாஸ்திரிகள்
Answer: B) பரிசேயர்கள்
    (லூக்கா 11:42)

13. ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை விரும்பியது யார்?
A) பரிசேயர்கள்
B) நியாயசாஸ்திரிகள்
C) வேதபாரகர்கள்
Answer: A) பரிசேயர்கள்
    (லூக்கா 11:43)

14. சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறது யார்?
A) பரிசேயர்கள்
B) நியாயசாஸ்திரிகள்
C) பிரதான ஆசாரியன்
Answer: B) நியாயசாஸ்திரிகள்
    (லூக்கா 11:46)

15. பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டது யார்?
A) ஆபேல்
B) சகரியா
C) யோவான்ஸ்நானன்
Answer: B) சகரியா
    (லூக்கா 11:50)


16. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் ----------- ; தேடுங்கள் அப்பொழுது ---------- ; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு ---------.
Answer: கொடுக்கப்படும், கண்டடைவீர்கள், திறக்கப்படும்
    லூக்கா 11:9

17. இயேசுவைப் பார்த்து: உம்மைச் சுமந்த கர்ப்பமும், நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளது என்று சொன்னது யார்?
Answer: ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ
    லுக்கா 11:27

18. விளக்கைக் கொழுத்தி, மரக்காலின் கீழ் வைக்காமல், எங்கே வைப்பார்கள்?
Answer: விளக்குத தண்டின்மேல் வைப்பார்கள்
    லூக்கா 11:33

19. எப்பொழுது சகலமும் சுத்தமாகும்?
Answer: உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுக்கும்போது
    லூக்கா 11:41

20. பிதாக்கள் கொலை செய்த தீர்க்கதரிசிகளுக்கு கல்லறைகளை கட்டுகிறது யார்?
Answer: நியாயசாஸ்திரிகள்
    (லுக்கா 11:46,47)

20. அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டது யார்?
Answer: நியாயசாஸ்திரிகள்
    (லூக்கா 11:52)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.