TELC Order of Sevice
தெய்வீக ஆராதனை முறைமைகள்
1. ஆரம்பம்
பிதா குமாரர் பரிசுத்த ஆவியானவர் - நம் அனைவரையும் -ஆசீர்வதித்து பாதுகாப்பாராக!
2. ஜெபம்
3. பாடல்
திருத்துவ திருநாளுக்கு பின்வரும் பத்தாம் ஞாயிறு ஆகிய இந்த நாள் ஆராதனைக்கு ஆரம்பமாக ......... எண்ணுள்ள பாடலை நாம் அனைவரும் சேர்ந்து பாடுவோமாக!
4. சங்கீதப் பகுதி
இந்த திருநாளுக்குரிய சங்கீதப்பகுதியை நாம் அனைவரும் எழந்து நின்று முறை முறையாக வாசிப்போம். இந்த திருநாளுக்குரிய சங்கீத பகுதி ....
5. பாடல்
6.தொடக்க திருப்புகழ்
ஆ.ந: கர்த்தரை எல்லாக் காலத்திலும் / ஸ்தோத்தரிப்பேன்
சபை: அவர் துதி எப்போதும் / என் வாயிலிருக்கும்
ஆ.ந: என்னோடே சேர்ந்து கர்த்தரை / மகிமைப்படுத்துங்கள்
சபை: நாம் ஒருமித்து அவர் நாமத்தை / உயர்த்துவோம்
ஆ.ந: கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்தறியுங்கள்
சபை: அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கும் மனிதன் பாக்கியவான்
6. பாடல்
7. ஆராதனை நடத்துபவர் பீடத்தை நோக்கி நின்றுபாடுவது.
ஆராதனை நடத்துபவர்
பிதாவுக்கும்.குமாரருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் மகிமை உண்டாவதாக.
சபை: ஆதியிலும் இப்போதும் எப்போதுமுள்ள சதா காலங்களில் இருக்கிறபடியே! ஆமென்.
8. பாவத்தை அறிக்கையிடுதலும்!
பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சுதலும்.
a. ஆராதனை நடத்துபவர்
அன்புக்குரியவர்களே நாம் நம்முடைய பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டு. நமது இருதயத்தை திறந்து நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து ஆத்தும பசிதாகத்தோடு, முழங்காற் படியிட்டு, ஆயக்காரரைப் போல், கடவுளே பாவியாகிய என்மேல் கிருபையாய் இரங்கியருளும்! என் பாவங்களை எல்லாம் மன்னித் தருளும் என்று அவருடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் மன்றாடுவோமாக!
[அல்லது]
b. ஆராதனை நடத்துபவர்
அன்புக்குரியவர்களே இறைவனின் அருளைப் பெற தகுதியற்றவர்களாகிய நாம் நம்முடைய பாவக்குற்றங்களை உணர்ந்து கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்துவோமாக! அவருடைய சகாயத்தையும், கிருபையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள நாம் ஆயக்காரரைப் போல கடவுளே! பாவிகளாகிய எங்களுக்கு இரங்கியருளும் என்று கெஞ்சிக் கேட்போம் வாருங்கள்.
9. ஆராதனை நடத்துபவர் சபையின ரோடு முழங்காற்படியிட்டு மன்றாடுவது.
கிருபையும் இரக்கமுள்ள பராபரரே! நாங்கள் பாவிகளாய் பிறந்து மனதினாலும், வாக்கினாலும், செய்கையினாலும் மிகுதியான பாவங்களை செய்து உமது நித்திய தண்டனைக்கே தகுதியுள்ளவர் களாய் இருக்கிறோம். என்பதை ஒப்புக் கொள்கிறோம். கடவுளே பாவிகளாகிய எங்களிடம் கிருபையுள்ளவராயிரும்.
கர்த்தாவே நாங்கள் மெய்யான விசுவாசமும் சுத்த இதயமும் உள்ளவர்களாய் உமக்கு ஊழியம் செய்யும்படி எங்கள் பாவ குணத்தை மாற்றி எங்களை சுத்திகரித்தருளும்.
தந்தையாகிய கடவுளே எல்லாவற்றையும் படைத்தவரே உம்முடைய மக்களாகிய எங்களுக்கு இரங்கும் | இரங்கும்! எங்களிடம் கிருபை கூர்ந்து எங்களுக்குத் துணை செய்தருளும்,
கிறிஸ்துவே உலக மீட்பரே கெஞ்சிக்கேட்கிற எங்களுக்கு இரங்கும் இரங்கும் எங்களிடம் கிருபை கூர்ந்து எங்களுக்காக பரம தந்தையிடம் வேண்டுதல், செய்தருளும்.
தூய ஆவியானவரே ஒன்றான சகாயரே! உம்முடைய மக்களாகிய எங்களுக்கு இரங்கும் ! இரங்கும். எங்களிடம் கிருபை கூர்ந்து எங்களுக்கு துணை செய்தருளும்! ஆமென்.
ஆராதனை நடத்துபவரும் / சபையினரும் முழங்காலில் நின்று பாடுவது.
பலி பீடத்தை நோக்கி சொல்வது
கர்த்தாவே எங்களுக்கிரங்கும் கிறிஸ்துவே எங்களுக்கிரங்கும் கர்த்தாவே எங்களுக்கிரங்கும்
10. பாவ மன்னிப்பு கூறுதல்
சபையாரை பார்த்து சொல்வது
ஆராதனை நடத்துபவர் எழுத்து நின்று சபையினரை நோக்கி சொல்லுவது
கடவுள் நமக்கு இரங்னார். அவர் தம்முடைய ஒரே பேரான குமாரரிடம் விசுவாசம் கொள்ளும் எவனும் கெட்டழிந்து போகாமல் நித்திய வாழ்வைப் பெறும்படி அவரைத் தந்தருளினார். இந்த அளவுக்கு அவர் உலகத்தின் மீது அன்பு கூர்ந்தார். அவருடைய திருப்பெயரை நாம் அனைவரும் எழுந்து நின்று புகழ்ந்து துதிப்போம், வாருங்கள்.
அல்லது
கடவுள் நம்மிடம் மனவுருக்கமுள்ளவராயிருக்கிறார். மலைகள் விலகினாலும் குன்றுகள் நிலைமாறினாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை மாறாமலும் இருக்கும் என்று அவர் சொல்லுகிறார். அவருடைய திருப்பெயரை நாம் அனைவரும் எழுந்து நின்று புகழ்ந்து துதிப்போம் வாருங்கள்.
11. உன்னதத்துதி
பலிபீடத்தை நோக்கி பாடுவது
ஆராதனை நடத்துபவர்
உன்னதங்களில் இருக்கிற பராபரருக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனிதர் பேரிலே பிரியமும் உண்டாவதாக.
ஞானப்பாட்டு : 2
சபை:
1. உம்மைத் துதிக்கிறோம் ! யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமிமைக்காக கர்த்தா தோத்திரஞ் சொல்லுகிறோமே.
2. கிறிஸ்தே இரங்கும் குமாரரே! கடன் செலுத்தி உலகின் பாவத்தை நீக்கிடும் தேவாட்டுக்குட்டி எங்கள் மனு. கேளும் பிதாவினது ஆசனத்தோழா இரங்கும்.
3. நித்ய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவி யோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப் படுகிறீர், உன்னத கர்த்தரே! ஆமென்.
[அல்லது]
ஆராதனை நடத்துபவர்
உன்னத பரனுக்கே, மிக மகிமை உம் சமாதானம் உலகினில் பெருக, கடவுளின் பிரியமிதே என்றென்றும் நீசராம் மானிடர் மேல் துலங்க.
சபையார்:
1. துதிக்கிறோம் உம்மை - வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் - உமை மா அரசே ! தோத்திரம், உம் மாட்சிமைக்கே - பரனே துந்துமி மாட்சிமைக்கே - பிதாவே
2.சுதனே இரங்கும் ! புவியோர் கடனை சுமந்ததை தீர்த்த- தூய செம்மறியே சுத்தா ஜெபங்கேளும். பரன் வலத் தோழா ஜெபங்கேளும் - கிறிஸ்தே
3.நித்ய பிதாவின் மகிமையில் நீரே நிமலா வியினோ - ஆளுகிறீரே நிதமே! அர்ச்சனையே - உன்னத நேயருக் கர்ச்சனையே ஆமென்.
[அல்லது]
திருவிருந்து மற்றும் பண்டிகை நாட்களில்
ஞானப்பாட்டு: 1
ஆராதனை நடத்துபவர்
தெய்வன்புக்காக உன்னத - கர்த்தாவுக்கு புகழ்ச்சி
சபையார்:
1. என் பாவக்கேட்டை நீக்கின - அது மகா திரட்சி மெய் சமாதானம் என்றென்றைக்கும் - மனிதர் மேல் பிரியமும் - உண்டாம். இரக்கம் பெற்றோம்.
2. மாறாமல் ஆண்டிருக்கிற மகத்துவப் பிதாவே துதியோடும்மைக் கும்பிட பணிகிறோம் கர்த்தாவே அளவில்லாப் பலமாய் - நீர் நினைத்த யாவுஞ் செய்கிறீர்! மா பாக்கியர் அடியார்
3 ஆ! இயேசு தெய்வ மைந்தரே- கடன்களைச் செலுத்தி கெட்டோரை மீட்ட மீட்பரே - மாசற்ற ஆட்டுக்குட்டி, மா கர்த்தரே! தயாபரா, அடியார் சத்தங் கேட்டெல்லா சபைக்கும் நீர் இரங்கும்.
4.மெய்யாக தேற்றும் உன்னத. தெய்வாவி நீர் அன்பாக இரங்கி, கிறிஸ்து தாமுற்ற சாவால் பிரியமாக மீட்டோரை சாத்தான் கண்ணியில் விழாதே காத்து துன்பத்தில் ஜெயிக்கப் பண்ணும். ஆமென்.
பாடுகளின் நாட்களில்
ஞானப்பாட்டு : 48
வாழ்த்துதலும் - சிறப்பு இறைவேண்டுதலும்.
ஆராதனை நடத்துபவர்
கர்த்தரானவர் உங்களோடிருப்பாராக.
சபையார்: அவர் உமதாவியோடும் இருப்பாராக.
ஆராதனை நடத்துபவர்
பிரார்த்தனை செய்வோமாக!
சர்வத்திற்கும் வல்ல அனாதி பராபரரே! ஒருவரும் சேரக்கூடாத வெளிச்சத்தில் வாசமாயிருக்கிறவரே தேவரீர் உம்முடைய ஒன்றான குமாரரைக்கொண்டும் பரிசுத்த ஆவியான வரைக்கொண்டும் உம்மை மனிதராகிய எங்களுக்கு தயவாய் வெளிப்படுத்தின கிருபைக்காக உமக்கு தாழ்மையாய் தோத்திரம் செலுத்துகிறோம்.
நாங்கள் உம்மையும், உம்முடைய திருச்சித்தத்தையும் நன்றாய் அறிந்து கிறிஸ்துவுக்குள் உமக்கு பிரியமான ஊழியம் செய்து எங்களின் ஆயுளின் முடிவு பரியந்தம் உம்முடைய கிருபையிலும் இரக்கத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து நித்திய ஜீவனுக்கு பங்காளிகளாய் போவதற்கு தேவரீர் கிருபை செய்ய வேண்டுமென்று உம்முடைய நேசக்குமாரராகிய எங்கள் நாதர் இயேசுக் கிறிஸ்துவின் மூலமாய் உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம் சுவாமி! ஆமென்.
12. பழைய ஏற்பாட்டுப்பகுதி
ஆராதனை நடத்துபவர்
இந்த அருமையான நாளுக்குரிய பழைய ஏற்பாட்டுப்பகுதி.இப்பகுதியை வாசிக்க கவனமாய் கேட்போம்
(பழைய ஏற்பாட்டு பகுதியை வாசிக்கக் கேட்ட பின்பு)
ஆராதனை நடத்துபவர்.
இருந்தவரும் இருக்கிறவரும் வர இருக்கிறவருமாகிய எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்
சபையார்: மாட்சிமையுள்ள தேவரீர் பரிசுத்தர் வல்லமையுள்ள தேவரீர் பரிசுத்தர் என்றென்றுமுள்ள தேவரீர் பரிசுத்தர், பரிசுத்தர் ஆமென்
13. நிரூப பகுதி ஆராதனை நடத்தியவர்
இந்த.......அருமையான திருநாளுக்குரிய நிருபப்பகுதி....... இப்பகுதியை வாசிக்க மிக கவனமாய் கேட்போம்.
(நிருப பகுதி வாசிக்கப்பட்டு முடித்த பின்பு)
ஆராதனை நடத்துபவர்
வாசிக்கப்பட வேண்டிய நிருப பகுதி வாசிக்கப்பட்டு முடிந்தாயிற்று. நாம் நம்முடைய நித்திய ஜீவனை அடையும்படிக்கு கர்த்தர் தாமே இந்த திருவார்த்தைகளை நம் முடைய இருதயங்களில் நித்திய ஜீவனுக்கென்று நிலைத்திருக்கச் செய்வாராக.
14. திருத்தல படி வாக்கியம்
(சபையார் எழந்து நிற்க ஆராதனை நடத்துபவர் அந்தந்த நாளுக்குரிய படி வாக்கியத்தை பாடுவார்)
சபையார்
அல்லேலூயா..... அல்லேலூயா..... அல்லேலூயா
ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் நாட்களில் ஆமென்..... ஆமென்.... ஆமென்
15. நற்செய்திப் பகுதி
ஆராதனை நடத்துபவர்
இந்த அருமையான நாளுக்குரிய நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை வாசிக்க மிகவும் கவனமாய் கேட்போம். அது......... அவர்கள் எழுதிய......நற்செய்தி நூல்..... அதிகாரத்தில் வசனம் ............முதல் வசனம் வரை எழுதியிருக்கிறது.
(நற்செய்தி பகுதியை வாசித்த பின்பு)
ஆராதனை நடத்துபவர்
பராபரனுடைய நல்ல வார்த்தைக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
சபையார்:
கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
16. விசுவாச அறிக்கை
ஆராதனை நடத்துபவர்
நாம் உலகமெங்குமுள்ள எல்லா கிறிஸ்தவ திருச்சபையோடு: எல்லா விசுவாசிகளோடும் ஒன்றிசைந்தவர்களாய் நம்முடைய விசுவாச அறிக்கையை தெய்வ பயத்தோடு அறிக்கை செய்வோமாக.
(A) பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய பராபரரை விசுவாசிக்கிறேன். அவருடைய ஒரே பேரான குமாரரும் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாக உற்பவித்து கன்னி மரியாள் அவர்களிடத்தில் பிறந்து பொந்தியு பிலாத்துவின் கீழ் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடத்தில் இருந்து உயிர்த்தெழந்தார். பரமண்டலத் திற்கு ஏறி சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய பராபரருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரை யும், மரித்தோரையும் நியாயத்தீர்ப்பளிக்க வருவார். பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். பொதுவான பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும் பாவ மன்னிப்பும் சரீர உயிர்த் தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.
(B) திருவிருந்து ஆராதனையின் போதும் பண்டிகை நாட்களிலும் நிசேயா விசுவாச பிரமாணம் அறிக்கையிடப்பட வேண்டும்.
நிசேயா விசுவாச அறிக்கை
ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன் / இவர் வானத்தையும், பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லா வற்றையும் படைத்தவர். எல்லாம் வல்ல பிதாவுமானவர்.
ஒரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். இவர் கடவுளுடைய ஒரே பேரான குமாரன். எல்லா காலங்களுக்கும் முன்பே பிதாவினின்று பிறந்தவர். உண்டாக்கப் பட்டவரல்லர் பிறந்தவரே கடவுளினின்று கடவுள் ஜோதியினின்று ஜோதி மெய்யான கடவுளினின்று மெய்யான கடவுள் பிதாவோடு ஏக வஸ்துவானவர் இவரைக் கொண்டு எல்லாம் உண்டாயின இவர் மனிதராகிய நமக்காகவும், நமது இரட்சிப்பின் நிமித்தமாகவும் பரலோகத்தில் இருந்து இறங்கி பரிசுத்த ஆவியினால் /கன்னி மரியாளிடத்தில் பிறந்து மனிதரானார். பொந்தியு பிலாத்துவுன் கீழ் நமக்காக சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். வேத வாக்கியங்களின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு ஏறி பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோருக்கும் மரித்தோருக்கும் நியாயத்தீர்ப்பளிக்க மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய இராஜ்ஜியத்திற்கு முடிவு இல்லை.
பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். இவர் ஆண்டவரும் உயிர்ப்பிக்கிறவருமாமே இவர் பிதாவினின்றும். குமாரனின்றும் புறப்படுகிறவர் பிதாவோடும் குமாரனோடும் ஒரே நிலையில் தொழுது மகிமைப்படுத்தப்படுபவர். தீர்க்க தரிசிகளைக் கொண்டு பேசினவரும் இவரே பரிசுத்தமும் பொதுமான ஒரே அப்போஸ்தல திருச்சபையும் உண்டென்று விசுவாசிக்கிறேன்,பாவ மன்னிப்பிற்காக ஒரே ஞானஸ்நானம் உண்டென்று ஒப்புக்கொள்ளு கிறேன். மரித்தோரின் உயிர்த்தெழுதலையும் வரும் நித்திய ஜீவனையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆமென்.
ஆராதனை நடத்துபவர்
சபையாரை நோக்கி சொல்வது.
நாம் அறிக்கை செய்த இந்த விசுவாசத்திலே நாம் உயிருள்ள வரை நாம் உறுதியாய் நிலைத்திருக்க மூவொரு இறைவன், பிதா குமாரர் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவருக்கும் உதவியும் திருபையும், ஒத்தாசையும், தயவும், இரக்கமும் பாராட்டுவாராக. ஆமென்.
17. நன்றி ஏறெடுத்தல் விண்ணப்பம்
18 .அருளுரை ஆயத்தப்பாடல்
அருளுரைக்காகவும் ஆண்டவருடைய நாமம் மகிமைப்படும் படியாகவும் கீர்த்தனை எண் ... என்ற கீர்த்தனையை நாம் பாடுவோம்.
19. அருளுரை
நம்முடைய பரம தந்தையாகிய பராபரரிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும், தூய ஆவியனவரிட மிருந்தும், நமக்கு சமாதானமும், அன்பும், ஆசீர்வாதமும் ஐக்கியமும் உண்டாவதாக!
சபை: ஆமென்
(அருளுரைப் பகுதி வாசிக்கப்படும்)
ஜெபம்
வாரும் பரிசுத்த ஆவியானவரே உம்மை விசுவாசிக்கிற எங்கள் உள்ளத்தில் நீர் தங்கியிருந்து அதை உமது அன்பினால் நிரப்பியருளும். பற்பல மொழிகள் பேசும் பற்பல நாட்டினரை ஒரே பற்றுறுதி உடையவர்களாய் இருக்கும்படி கூட்டிச் சேர்த்திருக்கிற தேவரீர் உமது உண்மைமையக் கொண்டு எங்களை உமக்கென்று அர்ப்பணிக்க உதவிபுரிந்துருளும், உமது வசனம் என் கால் ளுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது என்று வாசிக்கிறபடி எங்களை வழிநடத்தும். பரிசுத்தமாக்கும்.
உமது வசனமே சத்தியம் ஸ்வாமி! ஆமென்
20. அறிவிப்புகள்
(திருமண அறிவிப்புகள் மற்றும் இதர அறிவிப்புகள்)
21. பாடல்
(காணிக்கை சேகரிப்பு)
ஆராதனை நடத்துபவர்
முகமலர்ந்து கொடுக்கிறவனிடம் கடவுள் பிரியமுள்ளவராய் இருக்கிறார் நமக்கு சகாயம் வாய்க்கும் போதெல்லாம் யாவருக்கும் குறிப்பாக விசுவாச வீட்டாருக்கும் நன்மை செய்வோமாக! ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர்கள் ஆண்டவருக்கு கடன் கொடுப்ப வராவர். வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ஆகவே உற்சாகத்தோடு முகமலர்ச்சியோடு ஆண்டவருக்கு காணிக்கைகளை படைப்போமாக.
காணிக்கை சேகரித்தபின் ஏறெடுக்கும் ஜெபம்.
ஆண்டவரே உமக்கு சொந்தமானதையே உமக்கு காணிக்கையாக படைக்கிறோம். உற்சாகமாய் கொடுக்கிறவர் களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்று வாசிக்கிறபடி இந்த காணிக்கையையும் எங்களையும் உமக்கென்று அர்ப்பணிக் கிறோம். எங்களையும், இந்த காணிக்கையையும், ஏற்றுக்கொள்ளும் ஆசிர்வதித்தருளும் சுவாமி! ஆமென்.
22. விரிவான மன்றாட்டு
ஆராதனை நடத்துபவர்
எல்லாம் வல்ல நித்தியக் கடவுளே எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் உமது முன்னிலையில் விண்ணப்பம் செய்ய வருகிறோம். எங்கள் பரம தந்தையே எல்லாரையும் மீட்க வல்ல உமது பரிசுத்த வார்த்தையை உம்முடைய ஊழியர் திருச்சபையில் கலப்பின்றி போதிக்கவும் கிருபையின் சாதனங்களை அவர்கள் ஒழுங்காக வழங்கவும் அவர்களுக்கு தேவரீர் துணை செய்தருள வேண்டு மென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம்.
23. ஆண்டவர் கற்பித்த மன்றாட்டு
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக! உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக! உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக அன்றன்று வேண்டிய எங்கள் ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். எங்கள் பாவக்கடன் களை எங்களுக்கு மன்னியும் எங்களை சோதனைக்குப்பட பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்தருளும் இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே சுவாமி. ஆமென்.
24. வாழ்த்துதலும் ஆரோனின் ஆசீர்வாதமும்
ஆராதனை நடத்துபவர்
கர்த்தரானவர் உங்களோடிருப்பாராக
சபை:
அவர் உமதாவியோடும் இருப்பாராக
ஆராதனை நடத்துபவர்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னை காக்கக் கடவர்
கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரகாசிக்கப்பண்ணி உன் மேல் கிருபையாயிருக்க கடவர்
கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல்
பிரசன்னமாக்கி உனக்கு சமாதானம் கட்டளையிடக் கடவர்
சபையார்: ஆமென்..... ஆமென்.... ஆமென்
[அல்லது]
ஆராதனை நடத்துபவர்
1. கர்த்தரானவர் நம்மை ஆசீர்வதித்து நம்மை காப்பாராக.
2. கர்த்தரானவர் தமது திருமுகத்தை நம்மேல் பிரகாசிக்கச் செய்து நம்மிடம் கிருபையுள்ளவராய் இருப்பாராக.
3. கர்த்தரானவர் தமது திருமுகத்தை நமக்கு பிரசன்னமாக்கி நமக்கு சமாதானம் தந்தருளுவாராக!
சபை: ஆமென்! ஆமென்! ஆமென்!
[அல்லது]
ஆராதனை நடத்துபவர்
நம்முடைய பிதாவாகிய தேவனின் அன்பும்
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும்
தூய ஆவியானவருடைய ஆசீர்வாதமும், வழிநடத்துதலும், பாதுகாப்பும், பராமரிப்பும், ஐக்கியமும், ஆரவணைப்பும், சமாதானமும் நம் அனைவரோடும் கூட என்றென்றும் சதாகாலங்களிலும் இருந்து நம் அனைவரையும் ஆசீர்வதித்து பாதுகாப்பதாக. ஆமென்.
மங்கல பாடல்
ஏன ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி, என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே - ஸ்வாமி ஆமென்.
சுவாமி கிருபையாயிரும், கிறிஸ்துவே கிருபையாயிரும்,சுவாமி கிருபையாயிரும். ஆமென்.
பிறகு குரு சபையினரை நோக்கிச் சொல்வது:
அன்புக்குரியவர்களே, நாம் கடவுளின் வார்த்தையைக் கேட்டோம்.
தாங்கள் பாவம்செய்ததற்காக வருந்தி மனமாற்றமடைகிற விசுவாசிகளுக்குக் கடவுள் இயேசு கிறிஸ்துவினிமித்தம் அவர்கள் செய்த எல்லாப் பாவங்களையும் தாம் வாக்களித்தப்படி மன்னிக்கிறார். அப்படி வருந்தாமலும் மனமாற்றமடையாமலும் பாவத்திலும் அவிசுவாசத்திலும் நிலைத்திருப்பவர்களுக்கோ கடவுள் அவர்களுடைய பாவங்களை மன்னியாமல், அவற்றை அவர்கள் மீது சுமத்துகிறார். ஆகையால், இப்போது நீங்கள் கடவுள் முன்னிலையில் உங்களைத் தாழ்த்தி, நீங்கள் பாவம் செய்ததற்காக வருந்தி விசுவாசமுள்ள இருதயத்தோடு உங்கள் பாவங்களை அவரிடம் அறிக்கை செய்யுங்கள்.
சபையினர் முழங்காலில் நின்று சொல்வது :
இரக்கமுள்ள கடவுளே, ஏழைப் பாவியாகிய நான் உமது முன்னிலையில் பணிந்து, உம்முடைய கிருபையையும் பொறுமையையும் நாடி வருகின்றேன். நான் நினைவினாலும் வார்த்தையினாலும் செய்கையினாலும் பற்பல வகைகளில் பாவம் செய்தேனென்று மனம் வருந்தி அறிக்கை செய்கிறேன். தயவுள்ள பிதாவே, பாவியாகிய நான் நரகத்தில் அழிந்து போவது நியாயமாயினும் தேவரீர் என்னை உமது சமுகத்தினின்று விலக்கி விடாதேயும்; என் மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் முன்னிட்டு, நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை மீட்டருளும். நான் பாவம் செய்ய மீண்டும் சோதிக்கப்படும்போது, அதற்குச் சம்மதியாமல், அதை அருவருக்கவும், உமக்குப் பிரியமான பிள்ளையாய் நடக்கவும், உம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எனக்குப் புத்தியையும் பலத்தையும் தந்தருளும். இனி நான் சாகும் வேளையில் உமது மோட்ச இராச்சியத்தை அடைவதற்கு என்னை ஆயத்தப் படுத்தியருளும், சுவாமி. ஆமேன்.
1. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்ப் பாவமன்னிப்பை அறிவிக்கும் நாளில் குரு சபையினரை நோக்கி:
நீங்கள் இயேசுகிறஸ்துவின் வழியாய் பாவமன்னிப்பை நாடி. உண்மையான மனத்தோடு உங்கள் பாவங்களை அறிக்கை செய்திருந்தீர்களானால், நான் இயேசு கிறிஸ்துவின் கட்டளைப்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் திருப்பெயரால் உங்களுக்குப் பாவ மன்னிப்பை அறிவிக்கிறேன்.
(பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்பவர் ஆமேன் என்று சொல்வார். வரிசையில் வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பாவமன்னிப்பை அறிவித்து முடித்தபின், குரு அவ்வரிசையிலுள்ளோருக்குக் கூறுவது). கர்த்தாவின் சமாதானத்தோடு போவீர்களாக. இனிப் பாவம் செய்யாதிருங்கள்.
(அல்லது)
கர்த்தாவின் சமாதானம் உங்களோடு இருப்பதாக. ஆமென்.
2. எல்லோருக்கும் பொதுவாகப் பாவமன்னிப்பு அறிவிக்கும் நாளில் குரு சபையினரை நோக்கிச் சொல்வது:
நீங்கள் இயேசுகிறிஸ்துவின் வழியாய்ப் பாவ மன்னிப்பை நாடி, உண்மையான மனத்தோடு உங்கள் பாவங்களை அறிக்கை செய்திருந்தீர்களானால், நான் இயேசுகிறிஸ்துவின் கட்டளைப்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் திருப்பெயரால் உங்கள் எல்லாருக்கும் பாவமன்னிப்பை அறிவிக்கிறேன்.
சபை: ஆமேன்.
குரு: கர்த்தாவின் சமாதானம் உங்களோடிருப்பதாக.
சபை: ஆமேன்.
குருவும் சபையினரும் சேர்ந்து ஜெபிப்பது
எல்லாம் வல்ல கடவுளே, உமக்கு விரோதமாக மிகுதியான பாவங்களைச் செய்த நாங்கள் நித்திய தண்டனைக்கே உரியவர்களாயிருந்தும், தேவரீர் உம்முடைய ஒரே குமாரன் எல்லாப் பாவிகளுக்காகவும் சம்பாதித்த பாவமன்னிப்பும் நித்தியமான மெய்வாழ்வும் எங்களுக்கு கிடைத்ததென்று இப்போது எங்களுக்கு உறுதியளித்ததற்காக உம்மை முழு மனத்தோடும் தோத்திரிக்கிறோம். நாங்கள் இனிப் பாவம் செய்யாதபடி தேவரீர் எங்களைக் காக்கவும் நேர்மையோடும் உண்மையோடும் உமக்கு ஊழியம் செய்யும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களுக்குப் பலம் அளிக்கவும் வேண்டுமென்று உம்முடைய ஒரே குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் வேண்டிக்கொள்கிறோம், சுவாமி. வழியாக உம்மை
சபை: ஆமேன்
III. திருவிருந்துக்கான தோத்திர பலி அறிவுரையும் பணிந்து மன்றாடுதலும்
(சபையினர் தத்தம் இடங்களில் நிற்க, குரு அவர்களை நோக்கிச் சொல்வது)
அன்பார்ந்தவர்களே, ஆண்டவரின் பரிசுத்த இராப்போசனத்தைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகும் படியும், அதைப் பெற்றுப் பயனடையும் படியும், இராப்போசனக் கட்டளையைக் கொண்டு நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள்.
இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம் என்றும், இது பாவ மன்னிப்புக்கென்று சிந்தப்படுகிற என்னுடைய இரத்தம் என்றும் இயேசு கிறிஸ்து திருவாக்கு அருளினார். இந்த வார்த்தைகள் உணர்த்துகிறபடி கிறிஸ்துதாமே இந்த ஞான திரவியத்தோடு கூட இருந்து, தமது திரு சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அப்பத்தோடும் இரசத்தோடும் உங்களுக்குப் புசிக்கவும் பருகவும் கொடுக்கிறார். அவருடைய திருச் சரீரமும் திரு இரத்தமும் உங்களுக்குப் பாவமன்னிப்பு அருளப்படும் என்பதை முத்திரையிட்டு உறுதிப்படுத்துகின்றன. இதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். மேலும், நீங்கள் இதை வாங்கிப் புசியுங்கள்; இதிலுள்ளதை எல்லோரும் பருகுங்கள்; என்னை நினைவு கூரும்படி இப்படிச் செய்யுங்கள் என்று இயேசு கிறிஸ்து கட்டளையிட்டார். ஆகையால், நாம் நிலையான மெய்வாழ்வை அடைவதற்கேதுவான ஆகாரமாக அவர் நமக்குக் கொடுத்திருக்கிற அவருடைய திருச்சரீரத்தையும் திருஇரத்தத்தையும் உட்கொண்டு, அப்படி உட்கொள்ளுவதன் வழியாக அவர் நமக்காகப் பட்டபாடுகளையும், அவரது மரணத்தையும் அறிவித்து,நம்மை மீட்டுக்கொண்ட அவரை, அவர் மீண்டும் வருமட்டும் நாம் நினைவில் வைத்துத் தோத்தரிக்க வேண்டும்.
இந்தக் காரணங்களினிமித்தம் நாம் இத்திருவிருந்தில் அடிக்கடி பங்கு கொள்ளுவோமாக.
இவ்வாறு நாம் செய்வோமானால், நாம் நமது விசுவாசத்தில் உறுதியாக நிற்போம். நித்தியமான மெய்வாழ்வை அடைய ஆன்ம பலம் பெறுவோம். அன்பும் பொறுமையும் உடையவர்களாய் வாழ்ந்து, நற்செயல்களைச் செய்து, ஆன்ம வாழ்க்கையில் தேர்ச்சி பெறுவோம்.
அன்பார்ந்தவர்களே, நம்முடைய அன்புள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தமது பரிபூரண ஆசீர்வாதத்தோடு இப்போது நம்மிடம் வருகிற படியால், நாம் அவருடைய கிருபையின்பேரில் பசி தாகமுள்ளவர்களாய் ஜெபம் செய்வோமாக.
(குரு பீடத்தை நோக்கி முழங்காலில் நிற்க, சபையாரும் முழங்காலில் நின்று அவரோடு சேர்ந்து சொல்வது)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் என் இருதயத்திற்குள் வர நான் தகுதியற்றவன்(ள்). நான் தகுதியுள்ளவனா(ளா)வதற்கு உம்முடைய சகாயமும் கிருபையும் எனக்குத் தேவை. தேவரீர் பாவியாகிய என்னையும் உமது விருந்தில் பங்குகொள்ள இப்போது அழைக்கிறீர். நான் இந்த உமது ஞான திரவியத்தில் புசித்துப் பருகும் உமது திரு சரீரத்தினாலும் திரு இரத்தத்தினாலும் எனக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்று வாக்களிக்கிறீர். இந்த உமது ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டேன். இந்த வார்த்தைகளை நம்பியே நான் வருகிறேன். வேறெந்த நம்பிக்கையோடும் நான் வரவில்லை. அன்புள்ள ஆண்டவரே, உமது வார்த்தையும் நிலையான வாக்குறுதியும் உண்மையானவை என்பதை அறிந்திருக்கிறேன். இதைக் குறித்துச் சந்தேகப்படாமல், இதையே நம்பி உமது விருந்தில் புசித்துப் பருகுவேன். உமது வார்த்தையின் படியே நீர் எனக்குச் செய்தருளும், ஆமேன்.
(திருவிருந்தில் பங்குப் பெறுவோர் தூய இருதயத்தை நீர் என்னும் 170-ம் ஞானப்பாட்டை அல்லது இந்நேரம் வந்தென்னை சுத்தம் செய்யும் என்னும் 183-ம் ஜெபமாலைப் பாடலைப் பாடுவார்கள்).
1. தூய இருதயத்தை நீர் கர்த்தாவே என்னில் சிருஷ்டியும் திட ஆவியைத் தேவரீர் என் உள்ளத்தில் புதுப்பியும்.
2. ஆ. உம்முடைய முகத்தை விட்டென்னை நீர் தள்ளாமலும், என்னிடத்தில் தேவாவியைப் பேர்த் தெடுக்காமலுமிரும்.
3. மீண்டும் உமதிரட்சிப்பின் சந்தோஷத்தைத் தந்தருளும்; இனிப் புதிய ஆவியின் உற்சாகம் என்னைத் தாங்கவும்.
தேவ துதியும் பரிசுத்தர் என்னும் பாட்டும்
(குரு சபையினரை நோக்கி)
குரு: கர்த் த ரா ன வர் உங்களோடி ருப் பா ரா க.
சபை: அவர் உ ம தா வி யோ டும் இருப்/ பா ரா க.
குரு: உங்கள் இரு தயங் களை உ யர்த்துங் கள்.
கர்த் த ருக் கு நே ராக உயர்த் துகி றோம்.
குரு: நம் மு டை ய கர்த் த ரா கிய ப ரா ப ர னைத் தோத் திரிப் போம் வாருங் கள்.
அ து வே தகு தியு ம் செம்மையு மா மே.
குரு பீடத்தை நோக்கித் திரும்பி:
பரிசுத்தமுள்ள கர்த்தரும் சர்வ வல்லமையுள்ள பிதாவுமாகிய அனாதி பராபரனே,
நாங்கள் எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ் து வின் மூ லம்,
உம் மை எக்காலத்திலும் எவ்விடத்திலும் தோத் திரிப்பது
மெய்யாகவே பயனுள்ளதும் தகுதியும் நேர்மையும் செம்மையுமாமே.
உமது மகத்துவத்தைத் தேவதூதர்கள் புகழ்ந்து,
பிரதான தூதர்கள் பணிந்து, வல்லமைகள் வணங் கி,
வானங் களோடும் எல்லா வான சேனை க ளோ டும் மோ ட்ச சே ரா பீன் களும்
ஒன் றா ய்க் களி த்து த்து திக் கி றார்கள்.
எங்கள் துதியும் உம்மிடம் ஏற அருள் கூர்ந்தருளுமென்று கெஞ்சி,
அவர் களோடு நாங் களும் சொல் வதாவது:
சபையார்:
சே னை களுடைய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர், பரிசுத்தர்
வானமும் பூமியும் உம்முடைய மகிமையால் நிறைந்திருக்கின்றன.
உன் ன தங் களில் ஓசியன்னா; கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர்
ஆசீர்வ திக் கப் பட் டவர்; உன் னதங்களில் ஓ சி யன்னா.
திருநிலைப்படுத்துதல்
(சபையார் முழங்காலில் நிற்க குரு இராப்போசனக் கட்டளையைப். பாடுவது)
நம் மு டைய நாதர் இயேசு கிறி ஸ்து
தாம் காட்டிக் கொடுக் க ப் பட்ட அன்றி ராத்திரியில்
அப்பத்தை எடுத்து, தோத்திரம் செய் து
அதைப் பிட்டுத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்து:
நீங்கள் இதை வாங்கிப் புசியுங் கள்
இது உங்களுக் காகக் கொடு க்கப் படு கிற
என்னு டைய சரீரமா யிருக் கிறது.
என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்களென்று
திரு வாக் குஅ ரு ளி னார்.
உணவு அருந்திய பின்பு அவர் அவ்வாறே
பாத்திரத்தை எடுத்து தோத்திரம் செய் து
அவர்களுக்குக் கொடுத்து இதி லுள்ள தை
எல் லோரும் பரு குங் கள்;
இந்தப் பாத்திரம் பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய
புதிய உடன்படிக் கையா யிருக்கிறது. +
இதை நீங்கள் பருகும் போதெல்லாம்
என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்று
திரு வாக்கு அருளினார்.
ஆ மேன், ஆ மேன், ஆஆஆஆ........... மேன்.
குரு:
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பி தா வே.
உம் முடைய நா மம் / பரி சுத் தப் படு வ தா க.
உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே
செய்யப்படுகிறது/போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக.
அன்றன்று வேண்டிய எங்கள் அப்பத்தை இன்று எங்களுக்குத் தந்தருளும்.
எங்களிடம் கடன்பட்டவர்களுக்கு /நாங்கள் மன்னித்திருக்கிறது போல
எங்கள் பாவக் கடன்களை/ எங்களுக்கு மன்னித் தருளும்.
எங்களை சோதனைக் குட்படப்பண் ணாதிரும்.
தீமையினின்று எங்களை இரட்சித்தருளும்.
சபை: ஆ ஆ ஆ ஆ மேன்.
(எல்லாரும் முழங்காலில் நின்று, பாவத்தை சுமந்த என்று தொடங்கும் 47-ஆம் ஞானப்பாட்டை பாடுவார்கள்)
1. பாவத்தை சுமந்த
தேவ ஆட்டுக்குட்டி அடியாருக்கிரங்கும்.
2. பாவத்தை சுமந்த
தேவ ஆட்டுக்குட்டி, அடியாருக்கிரங்கும்.
3. பாவத்தை சுமந்த
தேவ ஆட்டுக்குட்டி,
நீர் சமாதானந் தாரும். ஆமென்.
குரு:
கர்த் தா வின் ச மா தா னம் உங்க ளோ டி ருப் ப தா க.
சபை: ஆ ஆ ஆ ஆ மேன்.
கர்த்தாவின் சமாதானம் உங்களோடு இருப்பதாக
பரிமாறுதல்
(விருந்தினர் இப்போது பீடத்திற்கு வந்து முழங்காலில் நிற்பார்கள். குரு அப்பத்தை எடுத்து எல்லா விருந்தினரையும் நோக்கி)
"இதை வாங்கி உண்ணுங்கள். இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான † திருச் சரீரம்".
(குரு அப்பத்தை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்போது சொல்வது) இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான திருச்சரீரம்.
அல்லது
இது உனக்காக ஒப்புக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் மெய்யான திருச்சரீரம்.
(குரு பாத்திரத்தை எடுத்து எல்லோரையும் நோக்கிச் சொல்வது) எல்லோரும் இதிலுள்ளதைப் பருகுங்கள். இது பாவ மன்னிப்புக் கென்று சிந்தப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான † திரு இரத்தம்.
(குரு இரசத்தை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்போது சொல்வது:) இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான *திரு இரத்தம்.
அல்லது
இது உனக்காகச் சிந்தப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான †திரு இரத்தம்.
(குறிப்பு: குரு அப்பத்தையும் இரசத்தையும் பரிமாறும்போது சபையார் இராப்போசனத்தைப் பற்றிய பாடல்களைப் பாடலாம்.)
(ஒவ்வொரு பந்திக்கும் அப்பமும் இரசமும் பரிமாறினபின் குரு சொல்வது)
சிலுவையில் அறையுண்டு மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக ஈடு செலுத்தின அருட் சாதனங்களாகிய தம்முடைய திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் இப்போது உங்களுக்குப் புசிக்கவும் பருகவும் கொடுத்தார். நீங்கள் நித்யமான மெய்வாழ்வை அடையும்படி மெய்யான விசுவாசத்தில் உறுதியாக நிற்க, அவர் இவற்றைக்கொண்டு உங்களுக்குத் திடமளித்து (t) உங்களைக் காத்தருள்வாராக.
அல்லது
இயேசுகிறிஸ்து உங்களுக்குப் பாவமன்னிப்பை சம்பாதிப்பதற்காக சிலுவையில் ஒப்புக்கொடுத்த தம்முடைய திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் இப்போது உங்களுக்குப் புசிக்கவும் பருகவும் கொடுத்தார். நீங்கள் நித்தியமான மெய் வாழ்வை அடையும்படி மெய்யான விசுவாசத்தில் உறுதியாக நிற்க, அவர் இவற்றைக்கொண்டு (+) உங்களுக்குத் துணை செய்வாராக.
திருவிருந்து பரிமாறினபின் செய்யும்
தோத்திர ஜெபம்
(சபையார் பொருத்தமான பாடலின் சில கவிகளைப் பாடுவார்கள்.)
குரு சபையாரை நோக்கி:
கர்த்தரைத் துதியுங்கள்,ஏனெனில் அவர் / நல்லவர்/ *(அல்லே லூயா)
அவர் கிருபை என்றும் உள்ளது *(அல்லே லூயா)
(ஒருசந்தி நாள்களில் அல்லேலூயா என்பதைப் பாடாமல் விட வேண்டும்.)
பிரார்த் தனை செய்/ வோ மா க.
குரு பீடத்தை நோக்கி நின்று பாடுவது:
எல்லாம் வல்ல பராபரனே, உம்முடைய ஒரே குமாரனாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் திருச்சரீரமும் திரு இரத்தமுமாகிய இந்த ஆத்தும ஆகாரத்தினாலே தேவரீர் எங்கள் ஆன்மப் பசி தாகத்தைத் தீர்த்ததற்காக உமக்குத் தோத்திரம். செலுத்துகிறோம்.
இதைக்கொண்டு நாங்கள் தேவரீரைப் பற்றிக் கொள்ளும் உறுதியான விசுவாசமும், பிறரிடம் கொள்ளும் உண்மையான அன்பும் உடையவர்களாய் வாழும்படி செய்தருள வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். சுவாமி,
அல்லது
வல்லமையுள்ள பிதாவே, தேவரீர் உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எங்களுக்கு ஆறுதலும் பாக்கியமும் உண்டாக இந்தப் பரிசுத்த விருந்தை அளித்ததற்காக உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் இம்மையிலே உம்மை நினைவு கூரும்படி இந்த நற்கருணை விருந்தில் பங்கு கொள்வது போல மறுமையில் தேவரீர் எங்களுக்கு ஆயத்தம் செய்திருக்கிற மகா மகிமையான விருந்திலும் பங்கு கொள்ள அருள் புரிய வேண்டுமென்று இயேசு கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சிக் கேட்கிறோம். ஸ்வாமி
சபையார்: ஆ......மேன்.
வாழ்த்துதலும், ஆசீர்வாதமும்
குரு: கர்த்த ரானவர் உங்களோடிருப் பாரா க
சபை: அவர் உமதாவியோடும் இருப்பாராக
குரு: கர்த்தரானவர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காப்
பாராக. கர்த்த ரானவர் தமது திருமுகத்தை உன் மேல்
பிரகாசிக்கச் செய்து உன்னிடம் கிருபையுள்ளவராயிருப்பாராக.
கர்த்தரானவர் தமது திருமுகத்தை உனக்குப் பிரசன்ன
மாக்கி உனக்குச் சமாதானம் தந்தருளு வாரா க
சபை: ஆமேன், ஆமேன், ஆ ஆ ஆ ஆ மேன்.
T. தியாகராஜன்
இறையியல் மாணவர்.
TTS MADHURAI
CALL.9655972484

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.