Type Here to Get Search Results !

James 5 Five questions with answers | யாக்கோபு 5 பைபிள் வினா விடைகள் | bible quiz questions tamil | Jesus Sam

============
யாக்கோபு எழுதிய திருமுகம்
ஐந்தாம் அதிகாம் (5) கேள்வி பதில்கள்
Book of JAMES Chapter Five (5)
Bible Questions & Answers
=============


1. ஐசுவரியவான்கள் மேல் வருவது எது?
Answer: நிர்ப்பந்தங்கள்
    யாக்கோபு 5:1

2. அழிந்து போவது எது?
Answer: ஐசுவரியம்
    யாக்கோபு 5:2

3. யாருடைய வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின?
Answer: ஐசுவரியவான்கள்
    யாக்கோபு 5:2

4. எது துருப்பிடித்தது?
Answer: பொன்னும், வெள்ளியும்
    யாக்கோபு 5:3

5. கடைசி நாட்களில் ஐசுவரியவான்கள் எதை சேர்த்தார்கள்?
Answer: ஐசுவரியத்தை
    யாக்கோபு 5:3

6. வயல்களை அறுத்தவர்களுடைய கூக்குரல் யாருடைய செவிகளில் பட்டது?
Answer: சேனைகளுடைய கர்த்தரின்
    யாக்கோபு 5:4

7. ஐசுவரியவான்கள் --------- வாழ்ந்து, ---------- உழன்றீர்கள்.
Answer: சம்பிரமமாய், சுகபோகத்தில்
    யாக்கோபு 5:5

8. நீதிமானை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து கொலை செய்தது யார்?
Answer: ஐசுவரியவான்கள்
    யாக்கோபு 5:6

9. ஐசுவரியவானோடே எதிர்த்து நிற்காதவன் யார்?
Answer: நீதிமான்
    யாக்கோபு 5:6

10. முன்மாரி பின்மாரி வருமளவும் நீடிய பொறுமையோடே காத்திருப்பவன் யார்?
Answer: பயிரிடுகிறவன்
    யாக்கோபு 5:7

11. நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் ------ ஸ்திரப்படுத்துங்கள்
Answer: இருதயங்களை
    யாக்கோபு 5:8

12. நாம் நியாயந்தீர்க்கப்படாதபடி என்ன செய்ய வேண்டும்?
Answer: ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்
    யாக்கோபு 5:9

13. வாசற்படியில் நிற்பது யார்?
Answer: நியாயாதிபதி
    யாக்கோபு 5:9

14. யாரை திருஷ்டாந்தமாக வைக்க வேண்டும்?
Answer: கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளை
    யாக்கோபு 5:10

15. யாரை பாக்கியவான்களென்கிறோம்?
Answer: பொறுமையாயிருக்கிறவர்களை
    யாக்கோபு 5:11

16. வேதத்தில் பொறுமைக்கு உதாரணமாக கூறப்பட்டது யார்?
Answer: யோபு
    யாக்கோபு 5:11

17. மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவர் யார்?
Answer: கர்த்தர்
    யாக்கோபு 5:11

18. வானத்தின் பேரிலும், பூமியின் பேரிலும், வேறெந்த ஆணையினாலாவது --------- பண்ணாதிருங்கள்
Answer: சத்தியம்
    யாக்கோபு 5:12

19. எதற்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்ல வேண்டும்?
Answer: ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு
    யாக்கோபு 5:12

20. உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் --------- .
ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் -------------- .
Answer: துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்
    மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்
    யாக்கோபு 5:13

21. ஒருவன் வியாதிப்பட்டால் யாரை வரவழைக்க வேண்டும்?
Answer: சபையின் மூப்பர்கள்
    யாக்கோபு 5:14

22. யார் கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணெய் பூசி, ஜெபம் பண்ண வேண்டும்?
Answer: சபையின் மூப்பர்கள்
    யாக்கோபு 5:14

23. எது மிகவும் பெலனுள்ளதாயிருக்கும்?
Answer: நீதிமான் செய்யும் கூக்கமான ஜெபம்
    யாக்கோபு 5:16

24. நம்மைப் போல பாடுள்ள மனுஷன் யார்?
Answer: எலியா
    யாக்கோபு 5:17

25. மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபித்தது யார்?
Answer: எலியா
    யாக்கோபு 5:17

26. எலியாவின் ஜெபத்தினால் எத்தனை நாள் மழை பெய்யவில்லை?
Answer: மூன்று வருஷமும் ஆறு மாதமும்
    யாக்கோபு 5:17

27. யார் ஜெபித்த போது, எது மழையைப் பொழிந்தது, எது தன் பலனைத் தந்தது?
Answer: எலியா ஜெபித்தபோது, வானம் மழையைத் தந்தது, பூமி தன் பலனைத் தந்தது
    யாக்கோபு 5:18

28. யார் ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவான்?
Answer: தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன்
    யாக்கோபு 5:20

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.