Type Here to Get Search Results !

1 Peter 1 One Bible Questions & Answers | 1 பேதுரு கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
ஒன்றாம் அதிகாம் (1) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter One (1)
Bible Questions & Answers
=============

1. அப்போஸ்தலனாகிய பேதுரு எந்த தேசங்களில் சிதறியிருக்கிறவர்களுக்கு எழுதுகிறார்?
Answer: பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா
    1 பேதுரு 1:1

1. பேதுரு நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
Answer: தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு
    1 பேதுரு 1:2

2. ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்டது யார்?
Answer: பரதேசிகள்
    1 பேதுரு 1:2

3. ---------, ------- உங்களுக்குப் பெருகக்கடவது.
Answer: கிருபையும், சதாமானமும்
    1 பேதுரு 1:2

4. சுதந்தரம் எப்படிப்பட்டது?
Answer: அழியாதது, மாசற்றது, வாடாதது
    1 பேதுரு 1:4

5. சுதந்தரத்திற்கு எதுவாக உண்டானது என்ன?
Answer: ஜீவனுள்ள நம்பிக்கை
    `1 பேதுரு 1:4

6. ஆண்டவர் நம்மை மறுபடியும் எப்படி ஜெநிப்பித்தார்?
Answer: மிகுந்த இரக்கத்தினாலே
    1 பேதுரு 1:4

7. சுதந்தரம் எங்கு வைக்கப்பட்டிருக்கிறது?
Answer: பரலோகத்தில்
    1 பேதுரு 1:5

8. கொஞ்சக்காலம் எப்படி துக்கப்படுவீர்கள்?
Answer: பலவிதமான சோதனைகளினாலே
    1 பேதுரு 1:6

9. பொன் எதினாலே சோதிக்கப்படும்?
Answer: அக்கினியினால்
    1 பேதுரு 1:7

10. பொன்னைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றது எது?
Answer: உங்கள் விசுவாசம்
    1 பேதுரு 1:7

11. உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு என்ன உண்டாகும்?
Answer: புகழ்ச்சியும், கனமும், மகிமையும்
    1 பேதுரு 1:7

12. இயேசுவினிடத்தில் எப்படி அன்புகூருகிறீர்கள்?
Answer: காணாதிருந்தும்
    1 பேதுரு 1:8

13. இயேசுவினிடத்தில் எப்படி விசுவாசம் வைக்கிறீர்கள்?
Answer: அவரை தரிசியாதிருந்தும்
    1 பேதுரு 1:8

14. உங்கள் விசுவாசத்தின் பலன் என்ன?
Answer: ஆத்தும ரட்சிப்பு
    1 பேதுரு 1:9

15. தீர்க்கதரிசிகள் எதைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
Answer: கிருபையைக் குறித்து
    1 பேதுரு 1:10

16. எதைக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்?
Answer: இரச்சிப்பை
    1 பேதுரு 1:10

17. கிறிஸ்துவுக்கு உண்டாகும் எவைகளை முன்னறிவித்தார்கள்?
Answer: பாடுகளையும், பின்வரும் மகிமையையும்
    1 பேதுரு 1:11

18. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டது என்ன?
Answer: பரிசுத்த ஆவி
    1 பேதுரு 1:12

19. உற்றுப்பார்க்க அசையாயிருந்தது யார்?
Answer: தேவதூதர்கள்
    1 பேதுரு 1:12

20. நீங்கள் எந்த அரையைக் கட்ட வேண்டும்?
Answer: உங்கள் மனதின் அரையை
    1 பேதுரு 1:13

21. எதின் மேல் பூரண நம்பிக்கையாய் இருக்க வேண்டும்?
Answer: கிருபையன்மேல்
    1 பேதுரு 1:13

22. உங்களை அழைத்தவர் ------------- இருக்கிறது போல, நீங்களும் உங்கள் -------------- பரிசுத்தராயிருங்கள்
Answer: பரிசுத்தராயிருக்கிறதுபோல, நடக்கைகளெல்லாவற்றிலேயும்
    1 பேதுரு 1:15

23. பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் எப்படி நடக்க வேண்டும்?
Answer: பயந்து நடக்க வேண்டும்
    1 பேதுரு 1:17

24. குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டி யார்?
Answer: இயேசு
    1 பேதுரு 1:19

25. எதினால் மீட்கப்பட்டீர்கள்?
Answer: இயேசுவின் விலையேறேப் பெற்ற இரத்தத்தினால்
    1 பேதுரு 1:19

26. எது தேவன் மேல் இருக்க வேண்டும்?
Answer: விசுவாசமும், நம்பிக்கையும்
    1 பேதுரு 1:21

27. என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான அழிவில்லாத வித்து எது?
Answer: தேவ வசனம்
    1 பேதுரு 1:23

28. மாம்சமெல்லாம் எப்படி இருக்கிறது?
Answer: புல்லைப்போல்
    1 பேதுரு 1:24

29. புல்லின் பூவைப் போல் இருப்பது எது?
Answer: மனுஷருடைய மகிமை
    1 பேதுரு 1:24

30. புல் ---------, அதின் பூவும் ---------- .
Answer: உலர்ந்தது, உதிர்ந்தது
    1 பேதுரு 1:24

31. எது என்றைன்றைக்கும் நிலைத்திருக்கும்?
Answer: கர்த்தருடைய வசனம்
    1 பேதுரு 1:25

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.