=========
புதிய ஏற்பாடு: பொருளடக்கம்
விசேஷங்கள்
========
இவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், போதனைகளையும் வெளிப்படுத்துகின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய இந்நான்கு சுவிசேஷங்களும் ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதில்லை. மாறாக ஒன்றொடொன்று இணைந்தே உள்ளன. ஒவ்வொரு சுவிசேஷமும் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பாகங்களையும் வெளிப்படுத்துகின்றன. சுவிசேஷங்களைப் படிக்கும்போது யாருக்காக இவை எழுதப்பட்டன என்பதைக்கூட நாம் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.
==============
மத்தேயு எழுதின சுவிசேஷம்
==============
ஆசிரியர்: ஆயக்காரனாக இருந்த மத்தேயு; 12 அப்போஸ்தலர்களில் ஒருவராகவும் இருந்தார் காலம்: கி.பி. 65-க்கும் கி.பி.70-க்கும் நடுவில்
நோக்கம்: இயேசு கிறிஸ்துவே மேசியா என்று யூதர்களுக்கு வெளிப்படுத்துவதே இப்புத்தகத்தின் நோக்கமாகும்.
புத்தகப் பகுப்பு:
1. இயேசுவின் பிறப்பும், ஆரம்ப நாட்களும்
மத்தேயு 1:1-2:28
2. இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
மத்தேயு 3:1-4:11
3. கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்
மத்தேயு 4:12-18:35
4. யூதேயாவிலே இயேசுவின் ஊழியம்
மத்தேயு 19:1-20:34
5. எருசலேமில் ஊழியம்
மத்தேயு 21:1-25:46
6. இயேசுவின் பாடுகள்
மத்தேயு 26:1-27:66
7. இயேசுவின் உயிர்த்தெழுதலும் சீஷர்கள் அனுப்பப்படுதலும்
மத்தேயு 28:1-20
மத்தேயு நற்செய்தியில் 28 அதிகாரங்களும், 1071 வசனங்களும், 19 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
==============
மாற்கு எழுதின நற்செய்தி
==============
ஆசிரியர்: மாற்கு (யோவான் என்னும் மறுபெயர் கொண்டவர்) காலம்: கி.பி. 50-க்கும் கி.பி.60-க்கும் நடுவில்
நோக்கம்: புறஜாதியாருக்கு இயேசுகிறிஸ்துவை மனிதகுமாரனாக அறிமுகப்படுத்துதல் அல்லது வெளிப்படுத்துதல் மற்றும் விசுவாசிகளுக்கு பாடுகளால் பூரணரான கிறிஸ்துவை சுட்டிக்காட்டுதல்.
புத்தகப் பகுப்பு:
1. இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
மாற்கு 1:1-13
2. கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்
மாற்கு 1:14-6:29
3. இதர பகுதிகளில் ஊழியங்கள்
மாற்கு 6:30-9:32
4. கலிலேயாவில் கடைசி ஊழியங்கள்
மாற்கு 9:33-50
5. யூதேயாவில் ஊழியம்
மாற்கு 10:1-52
6. பாடுகள்
மாற்கு 11:1-15:47
7. உயிர்த்தெழுதலும், அனுப்புதலும்
மாற்கு 16:1-20
மாற்கு நற்செய்தியில் 16 அதிகாரங்களும் 678 வசனங்களும், 4 ழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
==============
லூக்கா எழுதின சுவிசேஷம்
==============
ஆசிரியர்: பவுலின் நண்பனும், உடன் ஊழியனுமான வைத்தியனாகிய லூக்கா காலம்: கி.பி. 70-க்கும் கி.பி. 80-க்கும் நடுவில்
நோக்கம்: இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஒழுங்குபடுத்தி அவரை தேவகுமாரனாக புறஜாதிகளுக்கு வெளிப்படுத்துவது.
புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
லூக்கா 1:1-4
2. இயேசுவின் பிறப்பு
லூக்கா 1:5-2:52
3. ஊழியத்திற்கான ஆயத்தம்
லூக்கா 3:1-4:13
4. கலிலேயாவில் ஊழியம்
லூக்கா 4:14-9:9
5. கலிலேயாவிற்கு வெளியே ஊழியங்கள்
லூக்கா 9:10-9:50
6. யூதேயாவில் ஊழியங்கள்
லூக்கா 9:51-13:21
7. யோர்தான் சமவெளியில் ஊழியங்கள்
லூக்கா 13:22-19:27
8. இறுதி நாட்கள்
லூக்கா 19:28-24:53
லூக்கா நற்செய்தியில் 24 அதிகாரங்களும், 1151 வசனங்களும், 6 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
==============
யோவான் எழுதின சுவிசேஷம்
==============
ஆசிரியர்: யோவான் (அப்போஸ்தலர்களில் ஒருவர்) காலம்: கி.பி. 50-க்கும் கி.பி. 60-க்கும் நடுவில்
நோக்கம்: இயேசு கிறிஸ்துவைத் தேவனாக வெளிப்படுத்துவது
புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
யோவான் 1:1-18
2. இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
யோவான் 1:19-51
3. இயேசுவின் பகிரங்க ஊழியம்
யோவான் 2:1-11:57
4. பாடுகளின் வாரம்
யோவான் 12:1-19:42
5. உயிர்த்தெழுதலும் சீடர்களை அனுப்புதலும்
யோவான் 20:1-21:25
யோவான் நற்செய்தியில் 21 அதிகாரங்களும், 878 வசனங்களும், 6 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
==============
அப்போஸ்தலர் நடபடிகள்
==============
ஆசிரியர்: மருத்துவனாகிய லூக்கா காலம்: கி.பி. 63
நோக்கம்: திருச்சபை வளர்ச்சி
புத்தகப் பகுப்பு:
1. பாலஸ்தீனாவில் திருச்சபை வளர்ச்சி
அப்போஸ்தலர் 1:1-12:25
2. அந்தியோகியாவிலிருந்து ரோமாபுரி வரை திருச்சபை வளர்ச்சி
அப்போஸ்தலர் 13:11-28:30
அப்போஸ்தலர் நடபடிகளில் 28 அதிகாரங்களும், 1007 வசனங்களும், 15 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
===========
ரோமர் நிருபம்
==========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 57
மூன்றாவது மிஷனரிப் பயணத்தின் போது எழுதப்பட்டது.
புத்தகப்பகுப்பு:
1. முகவுரை
ரோமர் 1:1-1:15
2. நீதிமானாக்கப்படுதலின் அவசியம்
ரோமர் 1:16-3:20
3. நீதிமானாக்கப்படுதல் விசுவாசமார்க்கத்தால் மட்டும்
ரோமர் 3:21-4:25
4. நீதிமான்களாக்கப்பட்டவர்களுக்குரிய பதவிகள்
ரோமர் 5:1-8:39
5. நீதிமானாக்கப்படுதல் – இஸ்ரவேலரைப் பொருத்தமட்டில்
ரோமர் 9:1-11:36
6. நீதிமானாக்கப்படுதல் – நடைமுறை வாழக்கையில்
ரோமர் 12:1-15:13
7. முடிவுரையும் வாழ்த்துகளும்
ரோமர் 15:14-16:26
ரோமர் நிரூபத்தில் 16 அதிகாரங்களும், 433 வசனங்களும், 38 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
==============
1 கொரிந்தியர்
==============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 55
புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
1 கொரிந்தியர் 1:1-9
2. சபையில் பிரச்சனைகள்
1 கொரிந்தியர் 1:10-6:20
3. விவாகத்தைப் பற்றி வழிகாட்டும் யோசனைகள்
1 கொரிந்தியர் 7:1-40
4. நடைமுறை வாழ்க்கைக்கான அறிவுரைகள்
1 கொரிந்தியர் 8:1-11:1
5. ஆராதனை தொடர்பான கட்டளைகள்
1 கொரிந்தியர் 11:2-34
6. ஆவிக்குரிய வரங்கள்
1 கொரிந்தியர் 12:1-31
7. அன்பே பெரியது
1 கொரிந்தியர் 13:1-13
8. சபை நடவடிக்கை
1 கொரிந்தியர் 14:1-40
9. உயிர்த்தெழுதல் தொடர்பான போதனைகள்
1 கொரிந்தியர் 15:1-58
10. முடிவுரை (நடைமுறை தகுதி)
1 கொரிந்தியர் 16:1-24
1 கொரிந்தியர் நிருபத்தில் 16 அதிகாரங்களும், 437 வசனங்களும், 9 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
==============
2 கொரிந்தியர்
==============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 55
புத்தகப்பகுப்பு:
1. பவுல் தனது அழைப்பையும், ஊழியங்களையும் பற்றி விவரித்தல்
2 கொரிந்தியர் 1:1-7:16
2. கொடுத்தலைப் பற்றிய போதனை
2 கொரிந்தியர் 8:1-9:15
3. பவுலின் அப்போஸ்தல பதவியைப் பற்றிய தர்க்கம்
2 கொரிந்தியர் 10:1-13:14
2 கொரிந்தியர் நிருபத்தில் 13 அதிகாரங்களும், 257 வசனங்களும், 7 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
===========
கலாத்தியர்
===========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 51-க்கும் 53-க்கும் நடுவில்
புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
கலாத்தியர் 1:1-9
2. பவுல் தனது அப்போஸ்தல பதவியை வெளிப்படுத்துதல்
கலாத்தியர் 1:10-2:21
3. விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்
கலாத்தியர் 3:1-4:31
4. நீதிமானாக்கப்படுதல் – அனுதின வாழ்க்கையில்
கலாத்தியர் 5:1-6:10
5. முடிவுரை
கலாத்தியர் 6:11-6:18
கலாத்தியர் நிருபத்தில் 6 அதிகாரங்களும், 1149 வசனங்களும், 4 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
=========
எபேசியர்
=========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 60
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
எபேசியர் 1:1,2
2. கிறிஸ்துவின் மகிமை
எபேசியர் 1:3-14
3. பவுலின் ஜெபம்
எபேசியர் 1:15-23
4. தேவனுடைய திட்டத்தை நோக்கிய படிகள்
எபேசியர் 2:1-3:21
5. தேவனுடைய நோக்கம் – நடைமுறை வாழ்க்கையில்
எபேசியர் 4:1-6:20
6. முடிவுரை
எபேசியர் 6:21-24
எபேசியர் நிருபத்தில் 6 அதிகாரங்களும், 155 வசனங்களும், 3 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன
=========
பிலிப்பியர்
=========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 60
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
பிலிப்பியர் 1:1,2
2. துதியும், ஜெபமும்
பிலிப்பியர் 1:3-11
3. பவுலின் தனிப்பட்ட விஷயங்கள்
பிலிப்பியர் 1:12-26
4. புத்திமதிகள்
பிலிப்பியர் 1:27-2:18
5. சுவிசேஷத்தின் பங்காளிகள்
பிலிப்பியர் 2:19-30
6. எச்சரிப்புகள்
பிலிப்பியர் 3:1-4:1
7. இறுதியான புத்திமதிகளும் முடிவுரைகளும்
பிலிப்பியர் 4:2-23
பிலிப்பியர் நிருபத்தில் 4 அதிகாரங்களும், 104 வசனங்களும், 1 பழைய ஏற்பாட்டு மேற்கோளும் உள்ளன.
============
கொலேசெயர்
============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 60
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
கொலோசெயர் 1:1-14
2. கிறிஸ்துவின் மேன்மை
கொலோசெயர் 1:15-23
3. சபைக்கான பவுலின் பாடுகள்
கொலோசெயர் 1:24-27
4. கிறிஸ்துவுக்குள்ளான சுயாதீனமும் தவறான போதனைகளுக்கு எதிரான எச்சரிப்பும்
கொலோசெயர் 2:8-23
5. பரிசுத்த ஜீவியத்திற்கான பிரமாணங்கள்
கொலோசெயர் 3:1-4:6
6. முடிவுரை
கொலோசெயர் 4:7-18
கொலோசெயர் நிருபத்தில் 4 அதிகாரங்களும், 95 வசனங்களும் உள்ளன.
==============
1 தெசலோனிக்கேயர்
==============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 51
புத்தகப்பகுப்பு:
1. வாழ்த்துரை
1 தெசலோனிக்கேயர் 1:1-9
2. அப்போஸ்தல பதவியின் தர்க்கம்
1 தெசலோனிக்கேயர் 2:1-3:13
3. சபைக்கான புத்திமதிகள்
1 தெசலோனிக்கேயர் 4:1-5:22
4. முடிவுரை
1 தெசலோனிக்கேயர் 5:23-28
1 தெசலோனிக்கேயர் நிருபத்தில் 5 அதிகாரங்களும், 89 வசனங்களும் உள்ளன.
==============
2 தெசலோனிக்கேயர்
==============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 51
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
2 தெசலோனிக்கேயர் 1:1-12
2. உபதேசங்கள்
2 தெசலோனிக்கேயர் 2:1-17
3. கட்டளைகளும், முடிவுரையும்
2 தெசலோனிக்கேயர் 3:1-18
2 தெசலோனிக்கேயர் நிருபத்தில் 3 அதிகாரங்களும், 47 வசனங்களும் உள்ளன.
============
1 தீமோத்தேயு
============
1, 2 தீமோத்தேயுவும், தீத்துவும் போதக நிருபங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சபைப் போதகர்களுக்கு அவசியமான ஆலோசனைகள் இதில் பெரும்பான்மையாகக் காணப்படுவதே இதன் காரணம்.ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல்
காலம்: கி.பி. 63-க்கும் கி.பி.65-க்கும் இடையில்
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரையும், வாழ்த்துக்களும்
1 தீமோத்தேயு 1:1,2
2. கள்ளப் போதகர்களுக்கு எதிரான எச்சரிப்பு
1 தீமோத்தேயு 1:3-11
3. பவுலின் வாழ்க்கையில் வெளிப்பட்ட தேவ கிருபை
1 தீமோத்தேயு 1:12-17
4. கட்டளையின் நோக்கம்
1 தீமோத்தேயு 1:18-20
5. சபை நடத்துவது தொடர்பான போதனை
1 தீமோத்தேயு 2:1-3:16
6. கள்ளப் போதகர்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் விதம்
1 தீமோத்தேயு 4:1-16
7. சபை மக்களிடத்தில் நடந்துகொள்ளும் விதம்
1 தீமோத்தேயு 5:1-6:2
8. இதர விஷயங்கள்
1 தீமோத்தேயு 6:3-6:19
9. முடிவுரை
1 தீமோத்தேயு 6:20-22
1 தீமோத்தேயு நிருபத்தில் 6 அதிகாரங்களும், 113 வசனங்களும் உள்ளன
==============
2 தீமோத்தேயு
=============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 63-க்கும் கி.பி.65-க்கும் இடையில்
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
2 தீமோத்தேயு 1:1-14
2. தீமோத்தேயுவை குறித்த பவுலின் கரிசனை
2 தீமோத்தேயு 1:5-14
3. பவுலின் நிலைமை
2 தீமோத்தேயு 1:15-18
4. தீமோத்தெயுவிற்கான சிறப்பான ஆலோசனைகள்
2 தீமோத்தேயு 2:1-26
5. கடைசிக் காலத்தைப் பற்றிய முன்னறிவிப்பு
2 தீமோத்தேயு 3:1-17
6. பவுலின் இறுதி வார்த்தைகள்
2 தீமோத்தேயு 4:1-8
7. முடிவுரையும், வாழ்த்துக்களும்
2 தீமோத்தேயு 4:9-22
2 தீமோத்தேயு நிருபத்தில் 4 அதிகாரங்களும், 83 வசனங்களும் உள்ளன.
=====
தீத்து
======
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி. 63-க்கும் கி.பி 65-க்கும் இடையில்
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
தீத்து 1:1-4
2. மூப்பர்களைப் பற்றியப் போதனை
தீத்து 1:5-9
3. தவறான போதகர்களைப் பற்றிய எச்சரிக்கை
தீத்து 1:10-16
4. சபையைப் பற்றிய போதனை
தீத்து 2:1-15
5. விசுவாசிகளின் பொறுப்புகள்
தீத்து 3:1-8
6. ஆவிக்குரிய கடமைகள்
தீத்து 3:9-11
7. முடிவுரை
தீத்து 3:12-15
தீத்து நிருபத்தில் 3 அதிகாரங்களும், 46 வசனங்களும் உள்ளன
===========
பிலேமோன்
===========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் காலம்: கி.பி 60
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
பிலேமோன் 1:1-3
2. நன்றியும் ஜெபமும்
பிலேமோன் 1:4-7
3. ஒநேசிமுவிற்கான பரிந்துரை
பிலேமோன் 1:8-12
4. வாழ்த்தும் ஆசீர்வாதமும்
பிலேமோன் 1:22-25
பிலேமோன் நிருபத்தில் ஒரு அதிகாரமும் 25 வசனங்களும் உள்ளன
=========
எபிரெயர்
=========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பவுல் என்று பொதுவாக நம்பப்படுகிறது காலம்: கி.பி. 70-க்கு முன்
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
தேவனுடைய மேன்மையும் இறுதியுமான வெளிப்பாடு
எபிரெயர் 1:1-4
2. இயேசு கிறிஸ்துவின் மேன்மை
எபிரெயர் 1:5-7:28
3. கிறிஸ்துவின் ஊழியம்
(பழைய ஏற்பாட்டு ஆசாரியனோடு உள்ள தொடர்பில்)
எபிரெயர் 8:1-10:39
4. விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டியதின் அவசியம்
எபிரெயர் 11:1-12:29
5. முடிவுரை
எபிரெயர் 13:1-25
எபிரெயர் நிருபத்தில் 13 அதிகாரங்களும், 303 வசனங்களும், 28 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன
=============
பொதுவான நிருபங்கள்
============
யாக்கோபு, I & II பேதுரு, I & II & III யோவான், யூதா ஆகிய நிருபங்கள் பொதுவான நிருபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திருச்சபை தந்தையருள் ஒருவரான யூசிபிஸ் என்பவரே இப்பெயரை இவைகளுக்குச் சூட்டினார்
யாக்கோபு
============
ஆசிரியர்: இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு காலம்: கி.பி. 50
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
யாக்கோபு 1:1
2. சோதனைகள்
யாக்கோபு 1:2-18
3. மெய் பக்தி
யாக்கோபு 1:19-2:13
4. மெய் விசுவாசம்
யாக்கோபு 2:14-26
5. மெய் வாழ்க்கை
யாக்கோபு 3:1-12
6. மெய் ஞானம்
யாக்கோபு 3:13-18
7. மெய் மனந்திரும்புதல்
யாக்கோபு 4:1-12
8. மெய் அடைக்கலம்
யாக்கோபு 4:13-17
9. மெய் நம்பிக்கை
யாக்கோபு 5:1-11
10. மெய் சாட்சி
யாக்கோபு 5:12
11. மெய் குணமாகுதல்
யாக்கோபு 5:13-18
12. மெய் ஊழியம்
யாக்கோபு 5:19,20
யாக்கோபு நிருபத்தில் 5 அதிகாரங்களும், 108 வசனங்களும், 2 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
=======
1 பேதுரு
=======
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுரு காலம்: கி.பி. 67 – கி.பி. 68
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
1 பேதுரு 1:1,2
2. துதி
1 பேதுரு 1:3-12
3. பரிசுத்தத்திற்கான அழைப்பு
1 பேதுரு 1:13-2:12
4. அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிதல்
1 பேதுரு 2:13-3:7
5. பல்வேறு பொறுப்புகளும், கடமைளும்
1 பேதுரு 3:8-5:11
6. இந்நிருபத்தின் நோக்கமும், முடிவுரையும்
1 பேதுரு 5:12-14
1 பேதுரு நிருபத்தில் 5 அதிகாரங்களும், 105 வசனங்களும், 5 பழைய ஏற்பாட்டு மேற்கோள்களும் உள்ளன.
=======
II பேதுரு
=======
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுரு காலம்: கி.பி. 67 – கி.பி. 68
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
2 பேதுரு 1:1,2
2. கிருபையில் வளருதல்
2 பேதுரு 1:3-11
3. சத்தியத்தின் மேலுள்ள ஆதாரம்
2 பேதுரு 1:12-21
4. கள்ளப் போதகருக்கு எதிரான எச்சரிப்பு
2 பேதுரு 2:1-22
5. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
2 பேதுரு 3:1-18
2 பேதுரு நிருபத்தில் 3 அதிகாரங்களும், 61 வசனங்களும் உள்ளன.
=========
1 யோவான்
=========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான் காலம்: கி.பி.85
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
(கிறிஸ்து பிறப்பின் மெய்மை)
1 யோவான் 1:1-4
2. கிறிஸ்தவ வாழ்க்கையும் பிதா குமாரனோடு உள்ள ஐக்கியமும்
1 யோவான் 1:5-2:28
3. கிறிஸ்தவ வாழ்க்கையும், தெய்வீக சுவிகார புத்திரமும் அனுபவமும்
1 யோவான் 2:29-4:6
4. கிறிஸ்தவ வாழ்க்கையும், கிறிஸ்துவுக்கு ஒப்பான வாழ்க்கையும்
1 யோவான் 4:7-5:12
5. முடிவுரை
1 யோவான் 5:13-21
1 யோவான் நிருபத்தில் 5 அதிகாரங்களும், 105 வசனங்களும் உள்ளன.
==========
2 யோவான்
==========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான் காலம்: கி.பி. 85-க்கும் கி.பி. 95-க்கும் இடையில்
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
2 யோவான் 1:1-3
2. பாராட்டு
2 யோவான் 1:4
3. அலோசனைகளும் எச்சரிப்புகளும்
2 யோவான் 1:5-11
4. முடிவுரை
2 யோவான் 1:12,13
2 யோவான் நிருபம் ஒரு அதிகாரமும், 13 வசனங்களும் கொண்ட நிருபமாகும்.
==========
3 யோவான்
==========
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான் காலம்: கி.பி. 85-க்கும் கி.பி. 95-க்கும் இடையில்
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
3 யோவான் 1:1,2
2. பாராட்டு
3 யோவான் 1:3-8
3. கடிந்துகொள்ளுதல்
3 யோவான் 1:9,10
4. ஊக்குவித்தல்
3 யோவான் 1:11
5. முன்மாதிரி
3 யோவான் 1:12
6. முடிவுரை
3 யோவான் 13,14
3 யோவான் நிருபம் ஒரு அதிகாரமும், 14 வசனங்களும கொண்ட நிருபம் ஆகும்.
=====
யூதா
=====
ஆசிரியர்: இயேசு கிறிஸ்துவின் சகோதரனாகிய யூதா காலம்: கி.பி. 65-க்கும் கி.பி. 80-க்கும் இடையில்
புத்தகப் பகுப்பு:
1. வாழ்த்துரை
யூதா 1,2
2. நிருபத்தின் நோக்கம்
யூதா 3,4
3. கள்ளப் போதகருக்கு எதிரா எச்சரிப்பு
யூதா 5-16
4. விசுவாசிகளுக்கான புத்திமதி
யூதா 17-23
5. முடிவுரை
யூதா 24,25
யூதா நிருபம் ஒரு அதிகாரமும் 25 வசனங்களும் கொண்ட நிருபமாகும். இதில் 1 பழைய ஏற்பாட்டு மேற்கோள் உள்ளன.
=============
வெளிப்படுத்தின விசேஷம்
=============
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய யோவான் காலம்: கி.பி. 95
புத்தகப் பகுப்பு:
1. முன்னுரை
வெளிப்படுத்தல் 1:1-8
2. இயேசுவின் நிலைமை
வெளிப்படுத்தல் 1:19,20
3. ஏழு சபைகளுக்கான தூதுகள்
வெளிப்படுத்தல் 2:1-3:22
4. பரலோக சிங்காசனம்
வெளிப்படுத்தல் 4:1-11
5. ஏழு முத்திரைகளால் மத்திரையிடப்பட்ட புத்தகம்
வெளிப்படுத்தல் 5:1-5
6. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்
வெளிப்படுத்தல் 5:6-14
7. ஏழு முத்திரைகள்
வெளிப்படுத்தல் 6:1-8:1
8. ஏழு எக்காளங்கள்
வெளிப்படுத்தல் 8:2-11:19
9. பல்வேறு நிகழ்வுகள்
வெளிப்படுத்தல் 12:1-14:20
10. ஏழு கோபகலசங்கள்
வெளிப்படுத்தல் 15:1-16:21
11. மகா பாபிலோன்
வெளிப்படுத்தல் 17:1-19:5
12. ஆட்டுக்குட்டியானரின் கல்யாணம்
வெளிப்படுத்தல் 19:6-10
13. கிறிஸ்து திரும்பி வருதல்
வெளிப்படுத்தல் 19:11-21
14. ஆயிர வருட அரசாட்சி
வெளிப்படுத்தல் 20:1-6
15. சாத்தானின் முடிவு
வெளிப்படுத்தல் 20:7-10
16. வெள்ளை சிங்காசனம்
வெளிப்படுத்தல் 20:11-15
17. புதிய வானமம், புதிய பூமியும் (புதிய எருசலேம்)
வெளிப்படுத்தல் 21:1-22:21
வெளிப்படுத்தின விசேஷத்தில் 22 அதிகாரங்களும் 404 வசனங்களும் உள்ளன.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.