Type Here to Get Search Results !

1 Peter 5 Five Holy Bible Questions & Answers in Tamil | 1 பேதுரு நிருபம் கேள்விகளும் பதில்களும் | Jesus Sam

============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
ஐந்தாம் அதிகாம் (5) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Five (5)
Bible Questions & Answers
=============


1) கிறிஸ்துவின் பாடுளுக்குச் --------- , இனி வெளிப்படும் -------- பங்காளியுமாயிருக்கிற நான்.
Answer: சாட்சியும், மகிமைக்கு
    1 பேதுரு 5:1

2) மந்தையை எப்படி மேய்க்க வேண்டும்?
Answer: கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்
    1 பேதுரு 5:2

3) எப்படி கண்காணிப்பு செய்ய வேண்டும்?
Answer: சுதந்திரத்தை அறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக
    1 பேதுரு 5:3

4) பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது எதைப் பெறுவீர்கள்?
Answer: மகிமையுள்ள வாடாத கிரீடம்
    1 பேதுரு 5:4

5) இளைஞர்கள் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
Answer: மூப்பருக்கு
    1 பேதுரு 5:5

6) ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து எதை அணிந்த கொள்ள வேண்டும்?
Answer: மனத்தாழ்மையை
    1 பேதுரு 5:5

7) தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்? யாருக்கு கிருபையளிக்கிறார்?
Answer: பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்
    1 பேதுரு 5:5

8) நாம் ஏன் தேவடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்க வேண்டும்?
Answer: ஏற்ற காலத்தில் தேவன் நம்மை உயர்த்தும்படிக்கு
    1 பேதுரு 5:6

9) நம்முடைய கவலைகளை ஏன் தேவன் மேல் வைக்க வேண்டும்?
Answer: அவர் நம்மை விசாரிக்கிறவர்
    1 பேதுரு 5:7

10) தெளிந்து புத்தியுள்ளவர்களாயிருங்கள், --------- .
Answer: விழித்திருங்கள்
    1 பேதுரு 5:8

11) எதிராளியாகிய பிசாசானவன் எப்படி சுற்றித்திரிகிறான்?
Answer: கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான்
    1 பேதுரு 5:8

12) எதில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க்க வேண்டும்?
Answer: விசுவாசத்தில்
    1 பேதுரு 5:9

13) கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மை எதற்கு அழைக்கிறார்?
Answer: நித்திய மகிமைக்கு
    1 பேதுரு 5:10

14) சகல கிருபையும் பொருந்தியவர் யார்?
Answer: தேவன்
    1 பேதுரு 5:10

15) கொஞ்சக் காலம் பாடநுபவிக்கிற உங்களை தேவன் என்ன செய்வார்?
Answer: சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்
    1 பேதுரு 5:10

16) நீங்கள் நிலைகொண்டி நிற்கிற கிருபை எப்படிப்பட்டது?
Answer: தேவனுடைய மெய்யான கிருபை
    1 பேதுரு 5:12

17) உண்மையுள்ள சகோதரன் யார்?
Answer: சில்வான்
    1 பேதுரு 5:12

18) 1 பேதுரு நிருபத்தை பேதுரு யாருடைய கைளில் கொடுத்து அனுப்பனார்?
Answer: சில்வான்
    1 பேதுரு 5:12

19) பேதுரு தனது குமாரன் என்று யாரைச் சொலலுகிறார்?
Answer: மாற்கு
    1 பேதுரு 5:13

20) ----------, ---------- உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
Answer: பாபிலோனிலுள்ள சபையும். என் குமாரனான மாற்கும்
    1 பேதுரு 5:13

21) ஒருவயொருவர் எப்படி வாழ்த்துதல் செய்ய வேண்டும்?
Answer: அன்பின் முத்தத்தோடு
    1 பேதுரு 5:14

22) கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவக்கும் --------- உண்டாவதாக.
Answer: சமாதானம்
    1 பேதுரு 5:14

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.