============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
நான்காம் அதிகாம் (4) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Four (4)
Bible Questions & Answers
=============
1) கிறிஸ்து நமக்காக எதிலே பாடுபட்டார்?
Answer: மாம்சத்திலே
1 பேதுரு 4:1
2) கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், அப்படிப்பட்ட சிந்தையை எப்படி தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஆயுதமாகத் தரித்துக்கொள்ள வேண்டும்
1 பேதுரு 4:1
3) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைக்காமல் இருப்பான்?
Answer: மனுஷனுடைய இச்சைகளின்படி
1 பேதுரு 4:2
4) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைப்பான்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி
1 பேதுரு 4:2
5) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எவைகளை விட்டோய்ந்திப்பான்?
Answer: பாவங்களை
1 பேதுரு 4:2
6) நாம் சென்ற வாழ்நாட் காலத்தில் யாருடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டோம்?
Answer: புறஜாதியாருடைய இஷ்டப்படி
1 பேதுரு 4:3
7) புறஜாதியாருடைய இஷ்டப்படி என்ன செய்து வந்தோம்?
Answer: காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச் செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையை செய்து வந்தோம்
1 பேதுரு 4:3
8) ஆச்சரியப்பட்டு தூஷிப்பது யார்?
Answer: துன்மார்க்கர்
1 பேதுரு 4:4
9) யாருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
Answer: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு
1 பேதுரு 4:5
10) எல்லாவற்றிற்கும் ------- சமீபமாயிற்று
Answer: முடிவு
1 பேதுரு 4:7
11) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, எதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஜெபம்பண்ணுவதற்கு
1 பேதுரு 4:7
12) ஒருவரிலொருவர் எப்படிப்பட்ட அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 4:8
13) திரளான பாவங்களை மூடுது எது?
Answer: அன்பு
1 பேதுரு 4:8
14) ஒருவரையொருவர் எப்படி உபசரிக்க வேண்டும்?
Answer: முறுமுறுப்பில்லாமல்
1 பேதுரு 4:9
15) ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: நல்ல உக்கிராணக்காரர் போல
1 பேதுரு 4:10
16) தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுப்பது யார்?
Answer: நல்ல உக்கிராணக்காரன்
1 பேதுரு 4:10
17) போதிக்கிறவன் எப்படி போதிக்க வேண்டும்?
Answer: தேவனுடைய வாக்கியங்களின் படி
1 பேதுரு 4:11
18) உதவி செய்கிறவன் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: தேவன் தந்தருளும் பெலத்தின்படி
1 பேதுரு 4:11
19) எல்லாவற்றிலேயும் யார் மூலமாய் யார் மகிமைப்படும்படி செய்ய வேண்டும்?
Answer: இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படி
1 பேதுரு 4:11
20) உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் இருப்பது என்ன?
Answer: பற்றி எரிகிற அக்கினி
1 பேதுரு 4:12
21) எது வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழுங்கள்?
Answer: கிறிஸ்துவின் மகிமை
1 பேதுரு 4:13
22) எதற்காக சந்தோஷப்பட வேண்டும்?
Answer: கிறிஸ்துவினுடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால்
1 பேதுரு 4:13
23) யாருடைய நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்?
Answer: கிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தம்
1 பேதுரு 4:14
24) தேவனுடைய ஆவியாகிய எது உங்கள் மேல் தங்கியிருக்கிறது?
Answer: கர்த்தருடைய ஆவியானவர்
1 பேதுரு 4:14
25) உங்களால் மகிமைப்படுவது யார்?
Answer: தேவனுடைய ஆவியானவர்
1 பேதுரு 4:14
26) எப்படி பாடுபடுகிறவனாய் இருக்கக் கூடாது?
Answer: கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொணடவனாயாவது.
1 பேதுரு 4:15
27) ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் எப்படி இருந்து, யாரை மகிமைப்படுத்த வேண்டும்?
Answer: பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
1 பேதுரு 4:16
28) நியாயத்தீர்ப்பு எங்கு துவங்குங்காலமாயிருக்கிறது?
Answer: தேவனுடைய வீட்டிலே
1 பேதுரு 4:17
29) நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், -------- ---------- எங்கே நிற்பான்?
Answer: பக்தியில்லாதவனும். பாவியும்
1 பேதுரு 4:18
30) யார் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்கள்
1 பேதுரு 4:19
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.