============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
மூன்றாம் அதிகாம் (3) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Three (3)
Bible Questions & Answers
=============
Answer: சொந்தப் புருஷருக்குக்
1 பேதுரு 3:1
2. மனைவிகள் எப்படி நடக்க வேண்டும்?
Answer: பக்தியோடு கூடய கற்புள்ள நடக்கை
1 பேதுரு 3:1
3. புறம்பான அலங்கரிப்பு எத?
Answer: மயிரைப் பின்னுதல், பொன்னாபரணங்களை அணிதல், உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துதல்
1 பேதுரு 3:3
4. மனைவிக்கு எப்படிப்பட்ட அலங்காரம் தேவையில்லை?
Answer: புறம்பான அலங்காரம்
1 பேதுரு 3:3
5. அழியாத அலங்காரம் எது?
Answer: சாந்தமும் அமைலும்
1 பேதுரு 3:4
6. இருதயத்தில் மறைந்திருக்கும் குணம் என்ன?
Answer: சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
1 பேதுரு 3:4
7. தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது எது?
Answer: அழியாத அலங்காரமாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள அவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்
1 பேதுரு 3:4
8. தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தது யார்?
Answer: பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகள்
1 பேதுரு 3:5
9. புருஷனை ஆண்டவனே என்று அழைத்த அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தது யார்?
Answer: சாராள்
1 பேதுரு 3:6
10. நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தால், யாருக்குப் பிள்ளைகயாயிருப்பீர்கள்?
Answer: சாராள்
1 பேதுரு 3:6
11. பெலவீன பாண்டம் யார்?
Answer: மனைவிகள்
1 பேதுரு 3:7
12. புருஷர்கள் தங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு மனைவியோடு எப்படி வாழ வேண்டும்?
Answer: விவேகத்தோடு
1 பேதுரு 3:7
13. நாம் நித்திய ஜீவனாகிய ------- சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள்
Answer: கிருபையைச்
1 பேதுரு 3:7
14. எதற்கு எதை சரிக்கட்டாம் இருக்க வேண்டும்?
Answer: தீமைக்கு தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும்
1 பேதுரு 3:9
15. நாம் எதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்கள்?
Answer: ஆசீர்வாதத்தை
1 பேதுரு 3:9
16. நாவையும், உதடுகளையும் எதற்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: பொல்லாப்புக்கு நாவையும், கபடத்துக்கு தன் உதடுகளையும்
1 பேதுரு 3:10
17. யார் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்
1 பேதுரு 3:10
18. எதை விட்டு நீங்கி, எதைச் செய்து, எதைத்தேடி பின்தொடரக்கடவன்?
Answer: பொல்லாப்பை விட்டு நீங்கி,
நன்மை செய்து,
சமாதானத்தைத் தோடி
1 பேதுரு 3:11
19. கர்த்தருடைய கண்கள் யார்மேல் நோக்கமாயிருக்கிறது?
Answer: நீதிமான்கள் மேல்
1 பேதுரு 3:12
20. கர்த்தருடைய செவிகள் எதற்கு கவனமாயிருக்கிறது?
Answer: நீதிமான்களின் வேண்டுதலுக்கு
1 பேதுரு 3:12
21. கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாயிருக்கிறது?
Answer: தீமைசெய்கிறவர்களுக்கு
1 பேதுரு 3:12
22. எதினிமித்தம் பாடுபட்டால் நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்?
Answer: நீதியினிமித்தம்
1 பேதுரு 3:14
23. எதற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருக்க வேண்டும்?
Answer: பயமுறுத்தலுக்கு
1 பேதுரு 3:14
24. எதைக் குறித்து சந்தோஷத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல ஆயத்தமாயிருக்க வேண்டும்?
Answer: நம்பிக்கையைக் குறித்து
1 பேதுரு 3:15
25. அக்கிரமக்காரரென்று நம்மைக் குறித்து சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு எப்படி இருக்க வேண்டும்?
Answer: நல்மனசாட்சியுடையவர்களாயிருக்க வேண்டும்
1 பேதுரு 3:16
26. எது மேன்மையாயிருக்கும்?
Answer: நன்மை செய்து பாடநுபவிப்பது
1 பேதுரு 3:17
27. அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 3:18
28. கிறிஸ்து யாரை யாரிடத்தில் சேர்க்கும்படி பாடபட்டார்?
Answer: நம்மை தேவனித்தில் சேர்க்கும்படி
1 பேதுரு 3:18
29. கிறிஸ்து ----------- கொலையுண்டு, ----------- உயிர்ப்பிக்கப்பட்டார்.
Answer: மாம்சத்திலே, ஆவியிலே
1 பேதுரு 3:18
30. கிறிஸ்து ஆவியிலே யாருக்குப் பிரசங்கித்தார்?
Answer: காவலிலுள்ளவர்களுக்கு
1 பேதுரு 3:18,19
31. நோவாவின் பேழையிலே எத்தனைபேர் காக்கப்பட்டார்கள்?
Answer: எட்டுபேர்
1 பேதுரு 3:20
32. தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருப்பது எது?
Answer: ஞானஸ்நானம்
1 பேதுரு 3:21
33. கிறிஸ்து எங்கு தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்?
Answer: பரலோகத்தில்
1 பேதுரு 3:22
34. பரலோகத்தில் கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருக்கிறவைகள் எவை?
Answer: தேவதூதர்கள், அதிகாரங்கள், வல்லமைகள்,
1 பேதுரு 3:22
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.