Type Here to Get Search Results !

Acts 24 Twenty Four Bible Quiz in Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 24 வினா விடைகள் | Bible Questions & Answers | Jesus Sam

==============
Book of ACTS Chapter Twenty Four (24)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து நான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. எத்தனை நாளுக்கு பின் அனனியாவும், மூப்பரும் தேசாதிபதியினிடத்திற்கு வந்தார்கள்?
A) மூன்று நாள்
B) ஐந்து நாள்
C) ஏழு நாள்
Answer: B) ஐந்து நாள்
    (அப்போஸ்தலர் 24:1)

02. தேசாதிபதியிடம் பிராது பண்ணின நியாயசாதுரியன் பெயர் என்ன?
A) அனனியா
B) பொர்கியுபெஸ்து
C) தெர்த்துல்லு
Answer: C) தெர்த்துல்லு
    (அப்போஸ்தலர் 24:1)

03. உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு நாங்கள் சுருக்கமாய் சொல்லுவதை நீர் பொறுமையாய் கேளும் என்றது யார்?
A) பவுல்
B) தெர்த்துல்லு
C) லீசியா
Answer: B) தெர்த்துல்லு
    (அப்போஸ்தலர் 24:4,2)

04. நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளி என்று யாரை சொன்னார்கள்?
A) பவுல்
B) பெஸ்து
C) லீசியா
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 24:5)

05. இவைகள் யதார்த்தந்தான் என்றது யார்?
A) பவுல்
B) பிரதான ஆசாரியர்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (அப்போஸ்தலர் 24:9)


06. பவுல் பேசும்படி சைகை காட்டியது யார்?
A) சேனாபதி
B) பிரதான ஆசாரியன்
C) தேசாதிபதி
Answer: C) தேசாதிபதி
    (அப்போஸ்தலர் 24:10)

07. பவுல் தேசாதிபதியிடத்தில் தான் எருசலேமிற்கு வந்து எத்தனை நாளாயிற்று என்றார்?
A) இரண்டு நாள்
B) ஒன்பது நாள்
C) பன்னிரண்டு நாள்
Answer: C) பன்னிரண்டு நாள்
    (அப்போஸ்தலர் 24:11)

08. தர்ம பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கையை செலுத்தவும் வந்தது யார்?
A) பவுல்
B) பிலிப்பு
C) பர்னபா
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 24:17)

09. பேலிக்ஸின் மனைவி பெயர் என்ன?
A) தாமரி
B) துருசில்லாள்
C) பிரிஸ்கில்லா
Answer: B) துருசில்லாள்
    (அப்போஸ்தலர் 24:24)

10. துருசில்லா ஒரு _________ .
A) யூத ஸ்திரீ
B) ரோமானிய ஸ்திரீ
C) கிரேக்க ஸ்திரீ
Answer: A) யூத ஸ்திரீ
    (அப்போஸ்தலர் 24:24)


11. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தை குறித்து பவுலிடம் கேட்டது யார்?
A) லீசியா
B) துருசில்லா
C) பேலிக்ஸ்
Answer: C) பேலிக்ஸ்
    (அப்போஸ்தலர் 24:24)

12. பவுல் நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து பேசுகையில் பயந்தது யார்?
A) பேலிக்ஸ்
B) பொர்கியுபெஸ்து
C) துருசில்லாள்
Answer: A) பேலிக்ஸ்
    (அப்போஸ்தலர் 24:25)

13. பவுலை விடுதலையாக்க அவனிடம் பணத்தை எதிர்பார்த்தது யார்?
A) லீசியா
B) பொர்கியுபெஸ்து
C) பேலிக்ஸ்
Answer: C) பேலிக்ஸ்
    (அப்போஸ்தலர் 24:26)

14. பேலிக்ஸ்க்கு பதிலாக தேசாதிபதியாக வந்தது யார்?
A) லீசியா
B) பொர்கியுபெஸ்து
C) தெர்த்துல்லு
Answer: B) பொர்கியுபெஸ்து
    (அப்போஸ்தலர் 24:27)

15. எத்தனை வருடத்திற்கு பின் பொர்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்?
A) இரண்டு வருஷம்
B) ஒன்பது வருஷம்
C) பனிரெண்டு வருஷம்
Answer: A) இரண்டு வருஷம்
    (அப்போஸ்தலர் 24:27)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.