Type Here to Get Search Results !

Daniel Twelve 12 Question With Answer | தானியேல் வினாக்களும் விடைகளும் | Book of DANIEL Quiz in Tamil | Jesus Sam

=============
தானியேல் பனிரெண்டாம் (12) அதிகாரம்
விவிலியா வினாக்களும் விடைகளும்
Book of DANIEL Quiz Question & Answer
==============
01. ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி யார்?
A) மிகாவேல்
B) காபிரியேல்
C) தானியேல்
Answer: A) மிகாவேல்;
(தானியேல் 12:1)

02. பெரிய அதிபதியாகிய மிகாவேல் எழும்பும்போது ஞானவான்கள் எப்படி இருப்பார்கள்?
A) நட்சத்திரங்களைப் போல
B) ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போல
C) மின்னலின் பிரகாசத்தைப் போல
Answer: B) ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போல
(தானியேல் 12:3)

03. பெரிய அதிபதியாகிய மிகாவேல் எழும்பும்போது அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் எப்படி இருப்பார்கள்? 
A) நட்சத்திரங்களைப் போல
B) ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போல
C) மின்னலின் பிரகாசத்தைப் போல
Answer: A) நட்சத்திரங்களைப் போல
(தானியேல் 12:3)

04. தானியேல் புத்தகத்தை புதைபொருளாக வைத்து வைத்து, புத்தகத்திற்கு முத்திரை போட்டது யார்?
A) தானியேல்
B) மேதியனாகிய தரியு
C) நேபுகாத்நேச்சார்
Answer: A) தானியேல்
(தானியேல் 12:4)

05. பெரிய அதிபதியாகிய மிகாவேல் எழும்பும் காலத்தில் அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், _______ பெருகிப்போகும்.
A) பாவம்
B) ஆலயம்
C) அறிவு
Answer: C) அறிவு
(தானியேல் 12:4)


06. சணல் வஸ்திரம் தரித்து ஆற்றின் தண்ணீர்கள் மேல் நின்றவர் யார்?
A) மிகாவேல்
B) இயேசு கிறிஸ்து
C) காபிரியேல்
Answer: B) இயேசு கிறிஸ்து
(தானியேல் 12:6)

07. ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றது யார்?
A) தானியேல்
B) சணல் வஸ்திரம் தரித்தவன்
C) மிகாவேல்
Answer: B) சணல் வஸ்திரம் தரித்தவன்
(தானியேல் 12:7)

08. "ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்" இது எத்தனை நாட்களை குறிக்கிறது?
A) இரண்டு வருஷம்
B) இரண்டரை வருஷம்
C) மூன்றரை வருஷம்
Answer: C) மூன்றரை வருஷம்
(தானியேல் 12:7)

09. பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படும் காலம் முதல் முடிவுகாலம் வரை உள்ள நாட்கள் எத்தனை?
A) ஆயிரத்து நூற்றுத் தொண்ணூறு
B) ஆயிரத்து முன்னூற்று முப்பத்தைந்து
C) ஆயிரத்து முன்னூற்று தொண்ணூறு
Answer: A) ஆயிரத்து நூற்றுத் தொண்ணூறு
(தானியேல் 12:11)

10. எத்தனை நாள் மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்?
A) ஆயிரத்து நூற்றுத் தொண்ணூறு
B) ஆயிரத்து முன்னூற்று முப்பத்தைந்து
C) ஆயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து
Answer: B) ஆயிரத்து முன்னூற்று முப்பத்தைந்து
(தானியேல் 12:12)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.