Type Here to Get Search Results !

Daniel Eleven 11 Quiz Question Answer | தானியேல் கேள்வி பதில்கள் | Book of DANIEL Bible Study | Jesus Sam

===========
தானியேல் பதினொன்றாம் (11) அதிகாரம்
வேதாகம வினா விடைகள்
Book of DANIEL Question & Answer
============
01. ஐசுவரியத்தினால் சகலரையும் கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாக எழுப்பினவன் யார்?
A) மேதியானாகிய தரியு
B) பெர்சியாவின் இரண்டாம் ராஜா
C) பெர்சியாவின் நாலாம் ராஜா
Answer: C) பெர்சியாவின் நாலாம் ராஜா
(தானியேல் 11:2)

02. பராக்கிரமமுள்ள ராஜா என்பது யாரைக் குறிக்கிறது?
A) மகாஅலெக்சாந்தர்
B) செலூக்கஸ் நிக்கனோர்
C) தால்மேயஸ் லாகஸ்
Answer: A) மகாஅலெக்சாந்தர்
(தானியேல் 11:3)

03. யாருடைய ராஜ்யம் வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்?
A) மேதிய ராஜ்யம்
B) பராக்கிரமமுள்ள ராஜ்யம்
C) பெர்சிய ராஜ்யம்
Answer: B) பராக்கிரமமுள்ள ராஜ்யம்
(தானியேல் 11:3,4)

04. தென்றிசை ராஜா என்பது யாரைக் குறிக்கிறது?
A) தால்மி வம்சத்தார்
B) அலெக்சாந்தர் வசம்சத்தார்
C) செலூக்கஸ்; வம்சத்தார்
Answer: A) தால்மி வம்சத்தார்
(தானியேல் 11:5)

05. வடதிசை ராஜா என்பது யாரைக் குறிக்கிறது?
A) தால்மி வம்சத்தார்
B) அலெக்சாந்தர் வசம்சத்தார்
C) செலூக்கஸ்; வம்சத்தார்
Answer: C) செலூக்கஸ்; வம்சத்தார்
(தானியேல் 11:6)


06. தென்றிசை ராஜாவின் குமாரத்தி சம்பந்தம்பண்ண எந்த ராஜாவிடம் வருவாள்?
A) வடதிசை ராஜா
B) பராக்கிரமமுள்ள ராஜா
C) பெர்சியாவின் ராஜா
Answer: A) வடதிசை ராஜா
(தானியேல் 11:6)

07. தென்றிசை ராஜகுமாரத்தியின் வேர்களின் கிளையாகிய ஒருவன் வடதிசை ராஜாவின் வெள்ளி, பொன் பாத்திரங்களையும், அவர்களின் தெய்வங்களையும் எங்கு கொண்டு போவான்?
A) ரோம்
B) கிரேக்கு
C) எகிப்து
Answer: C) எகிப்து
(தானியேல் 11:8)

08. எந்த ராஜா அநேகமாயிரம் பேரை மடிவிப்பான்.  ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்?
A) தென்றிசை ராஜா
B) பராக்கிரமமுள்ள ராஜா
C) வடதிசை ராஜா
Answer: A) தென்றிசை ராஜா
(தானியேல் 11:11,12)

09. துண்டரிக்காரர் என்பது யாரைக் குறிக்கிறது?
A) எகிப்தியர்
B) கொள்ளைக்காரர்
C) இஸ்ரவேலர்
Answer: B) கொள்ளைக்காரர்
(தானியேல் 11:14)

10. கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பது யார்?
A) தென்றிசை ராஜா
B) பெர்சியாவின் ராஜா
C) வடதிசை ராஜா
Answer: C) வடதிசை ராஜா
(தானியேல் 11:15)


11. சிங்காரமான தேசம் என்பது எந்த தேசத்தை குறிக்கிறது?
A) சீரியா தேசம்
B) இஸ்ரவேல் தேசம்
C) எகிப்து தேசம்
Answer: B) இஸ்ரவேல் தேசம்
(தானியேல் 11:16)

12. அநேக தீவுகளை பிடித்தான் என்பது எந்த தீவுகளை குறிக்கிறது?
A) சீரியாவை சுற்றியுள்ள தீவுகள் 
B) இஸ்ரவேலை சுற்றியுள்ள தீவுகள்
C) எகிப்தை சுற்றியுள்ள தீவுகள்
Answer: C) எகிப்தை சுற்றியுள்ள தீவுகள்
(தானியேல் 11:18)

13. சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவான். சேனாபதி யாரை குறிக்கிறது?
A) ரோம சாம்ராஜ்யம்
B) எகிப்து சாம்ராஜ்யம்
C) சீரிய சாம்ராஜ்யம்
Answer: A) ரோம சாம்ராஜ்யம்
(தானியேல் 11:18)

14. சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தை கட்டிக்கொண்டது யார்?
A) அந்தியோகஸ் தியோஸ்
B) அந்தியோகஸ் எப்பிபேனஸ்
C) தல்மேயஸ் பிலோபீட்டர்
Answer: B) அந்தியோகஸ் எப்பிபேனஸ்
(தானியேல் 11:21)

15. கித்தீமீன் கப்பல்கள் என்பது எந்த பேரரசின் கப்பல்கள்?
A) ரோம பேரரசின் கப்பல்கள்
B) எகிப்து பேரரசின் கப்பல்கள்
C) சீரியா பேரரசின் கப்பல்கள்
Answer: A) ரோமபேரரசின் கப்பல்கள்
(தானியேல் 11:30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.