Type Here to Get Search Results !

Daniel Ten 10 Question Answer in Tamil | தானியேல் வினாக்களும் விடைகளும் | Book of DANIEL Study | Jesus Sam

===========
தானியேல் பத்தாம் (10) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
DANIEL Question & Answer in Tamil
============
01. சத்தியமும் நீடிய யுத்தத்திற்கு அடுத்ததுமான காரியம் யாருக்கு வெளிப்பட்டது?
A) தரியு
B) தானியேல்
C) கோரேஸ்
Answer: B) தானியேல்
(தானியேல் 10:1)

02. கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் தானியேலுக்கு வெளிப்பட்ட காரியத்தைக் குறித்து தானியேல் எத்தனை நாள் துக்கித்துக்கொண்டிருந்தான்?
A) மூன்று நாள்
B) மூன்று வாரம்
C) மூன்று மாதம்
Answer: C) மூன்று வாரம்
(தானியேல் 10:2)

03. மூன்று வாரம் ருசிகரமான அப்பம், இறைச்சி, திராட்சைரசத்தை புசிக்காமலும், பரிமளதைலம் பு+சாமலும் இருந்தது யார்?
A) கோரேஸ்
B) பெல்தெஷாத்சார்
C) தானியேல்
Answer: C) தானியேல்
(தானியேல் 10:3)

04. முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே தானியேல் இருந்த பெரிய ஆற்றங்கரையின் பெயர் என்ன?
A) ஆவிலா
B) இதெக்கேல்
C) உலாய்
Answer: B) இதெக்கேல்
(தானியேல் 10:4)

05. தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தது யார்?
A) மிகாவேல்
B) சணல் வஸ்திரம் தரித்த புருஷன்
C) காபிரியேல்
Answer: B) சணல் வஸ்திரம் தரித்த புருஷன்
(தானியேல் 10:5)


06. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் சரீரம் எப்படி இருந்தது?
A) படிகப்பச்சையைப் போல
B) துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போல
C) மின்னலின் பிரகாசத்தைப்போல
Answer: A) படிகப்பச்சையைப் போல
(தானியேல் 10:5,6)

07. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் முகம் எப்படி இருந்தது?
A) எரிகிற தீபம் போல
B) மின்னலின் பிரகாசத்தைப் போல
C) படிகப்பச்சையைப் போல
Answer: B) மின்னலின் பிரகாசத்தைப் போல
(தானியேல் 10:5,6)

08. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் கண்கள் எப்படி இருந்தது?
A) எரிகிற தீபம் போல
B) மின்னலின் பிரகாசத்தைப் போல
C) படிகப்பச்சையைப் போல
Answer: A) எரிகிற தீபம் போல
(தானியேல் 10:5,6)

09. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் புயங்களும், கால்களும் எதைப்போலிருந்தது?
A) எரிகிற தீபம் போல
B) துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போல
C) மின்னலின் பிரகாசத்தைப் போல
Answer: B) துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போல
(தானியேல் 10:5,6)

10. தரிசனத்தில் பெலனற்று உருவம் மாறி வாடிப்போனது யார்?
A) கோரேஸ்
B) நேபுகாத்நேச்சார்
C) தானியேல்
Answer: C) தானியேல்
(தானியேல் 10:8)


11. தானியேலைத் தொட்ட மனிதனோடு பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி எத்தனை நாள் எதிர்த்து நின்றான்?
A) பதினொரு நாள்
B) இருபத்து ஒரு நாள்
C) நாற்பது நாள்
Answer: B) இருபத்து ஒரு நாள்
(தானியேல் 10:13)

12. பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?
A) மிகாவேல்
B) மனுஷ ரூபமான ஒருவன்
C) காபிரியேல்
Answer: A) மிகாவேல்
(தானியேல் 10:16)

13. தரிசனத்தினால் தானயேலின் ______ புரண்டன.
A) கைகள்
B) மூட்டுகள்
C) கால்கள்
Answer: B) மூட்டுகள்
(தானியேல் 10:16)

14. தரிசனத்தில் பெலனற்ற தானியேலை தொட்டு திடப்படுத்தியது யார்?
A) மிகாவேல்
B) மனுஷ ரூபமான ஒருவன்
C) காபிரியேல்
Answer: B) மனுஷ ரூபமான ஒருவன்
(தானியேல் 10:18)

15. நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திருமபிப் போகிறோன்.  நான் போனபின்பு, ______ தேசத்தின் அதிபதி வருவான்.
A) கிரேக்கு
B) பாபிலோன்
C) இஸ்ரவேல்
Answer: A) கிரேக்கு
(தானியேல் 10:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.