Type Here to Get Search Results !

Daniel Nine 9 Question & Answer | தானியேல் கேள்விகளும் பதில்களும் | Book of DANIEL Quiz in Tamil | Jesus Sam

===========
தானியேல் ஒன்பதாம் (9) அதிகாரம்
தானியேல் வினா விடைகள்
Book of Daniel Quiz in Tamil
=============
01. தரியுவின் தகப்பன் பெயர் என்ன?
A) அகாஸ்வேரு
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: A) அகாஸ்வேரு
    (தானியேல் 9:1)

02. எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எத்தனை வருஷங்கள் ஆகும்?
A) எழுபது வருஷம்
B) நூற்று இருபது வருஷம்
C) நானூறு வருஷம்
Answer: A) எழுபது வருஷம்
    (தானியேல் 9:2)

03. தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் _______ காக்கிறவர்.
A) நீதியையும்
B) மகத்துவத்தையும்
C) கிருபையையும்
Answer: C) கிருபையையும்
    (தானியேல் 9:4)

04. தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய __________ செவிகொடாமற்போனோம்.
A) சீஷர்களுக்கு
B) ஊழியக்காரர்களுக்கு
C) ராஜாக்களுக்கு
Answer: B) ஊழிக்காரர்களுக்கு
    (தானியேல் 9:6)

05. எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் _____, _____ உண்டு.
A) அன்பும், சந்தோஷமும்
B) இரக்கங்களும், மன்னிப்புகளும்
C) பலியும், காணிக்கையும்
Answer: B) இரக்கங்களும், மன்னிப்புகளும்
    (தானியேல் 9:10)



06. _________ நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்த தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது.
A) தாவீதின்
B) சாமுவேலின்
C) மோசேயின்
Answer: C) மோசேயின்
    (தானியேல் 9:13)

07. எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் _________ .
A) பெரியவர்
B) மகத்துவமுள்ளவர்
C) நீதியுள்ளவர்
Answer: C) நீதியுள்ளவர்
    (தானியேல் 9:14)

08. அந்திபலியின் நேரமாகிய வேளையிலே தானியேலைத் தொட்டது யார்?
A) தேவன்
B) தேவ தூதன்
C) காபிரியேல்
Answer: C) காபிரியேல்
    (தானியேல் 9:21)

09. நீ மிகவும் பிரியமானவன், ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது. யார் யாரிடம் சொன்னது?
A) தேவன் - தானியேல்
B) தேவ தூதன் - தானியேல்
C) காபிரியேல் - தானியேல்
Answer: C) காபிரியேல் - தானியேல்
    (தானியேல் 9:23)

10. உன் ஜனத்தின் மேலும் உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எத்தனை வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?
A) ஐம்பது
B) எழுபது
C) தொண்ணூறு
Answer: B) எழுபது
    (தானியேல் 9:24)



11. எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் எத்தனை வாரம் செல்லும்?
A) ஏழு வாரமும், முப்பது வாரமும்
B) ஏழு வாரமும், அறுபத்து இரண்டு வாரமும்
C) ஏழு வாரமும், தொண்ணூறு வாரமும்
Answer: B) ஏழு வாரமும், அறுபத்து இரண்டு வாரமும்
    (தானியேல் 9:25)

12. எத்தனை வாரங்களுக்கு பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்?
A) ஏழு
B) அறுபத்து இரண்டு
C) தொண்ணூறு
Answer: B) அறுபத்து இரண்டு
    (தானியேல் 9:26)

13. நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் அழித்துப்போடுவது யார்?
A) மேசியா
B) வரப்போகிற பிரபுவின் ஜனங்கள்
C) பாழாக்குகிறவன்
Answer: B) வரப்போகிற பிரபுவின் ஜனங்கள்
    (தானியேல் 9:26)

14. மேசியா வாரத்தின் பாதி சென்றபோது எதை ஒழியப்பண்ணுவார்?
A) இரக்கத்தையும், மன்னிப்பையும்
B) பிரிவினையையும், யுத்தங்களையும்
C) பலியையும், காணிக்கையையம்
Answer: C) பலியையும், காணிக்கையையும்
    (தானியேல் 9:27)

15. அறுவறுப்பான செட்டைகளோடே வந்து இறங்குபவன் யார்?
A) சாத்தான்
B) பாழாக்குகிறவன்
C) அந்திக்கிறிஸ்து
Answer: B) பாழாக்குகிறவன்
    (தானியேல் 9:27)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.